Published:Updated:

``விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" - கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

வடபழஞ்சி
News
வடபழஞ்சி

ரயில் தண்டவாளத்தின் கீழே பாலம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் பாறைகளாகவே இருந்ததால் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து வெடிகள் வைத்து பாறைகளை உடைக்க முயன்றிருக்கின்றனர்.

Published:Updated:

``விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" - கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

ரயில் தண்டவாளத்தின் கீழே பாலம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் பாறைகளாகவே இருந்ததால் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து வெடிகள் வைத்து பாறைகளை உடைக்க முயன்றிருக்கின்றனர்.

வடபழஞ்சி
News
வடபழஞ்சி

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகிலுள்ள ஊர் வடபழஞ்சி. இங்கு மதுரை-தேனி ரயில் நிறுத்தம் இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலகட்டத்தில் இங்கு ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் ரயில் தண்டவாளத்தின் கீழே பாலம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் பாறைகளாகவே இருந்ததால் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து வெடிகள் வைத்து பாறைகளை உடைக்க முயன்றிருக்கின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் இதன் அதிர்வால் சுவர்களில் விரிசல் ஏற்பட, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினர். இதனால் பாதியிலேயே கைவிடப்பட்ட அந்தப் பணியால், பெரிய பள்ளம் உருவாகி, மக்களை அச்சுறுத்திவருகிறது. இதனால் ரயில்வே கேட் அமைத்துத் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை முன்வைத்துவருகின்றனர்.

``விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" - கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய வடபழஞ்சி கிராம மக்கள், ``மதுரை-தேனி-மதுரை ரயில் தண்டவாளம் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாகச் செல்கிறது. அங்கெல்லாம் தண்டவாளம் ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது. நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி ஆகிய ஊர்களில் இருக்கும் ரயில் நிறுத்தங்களில் மக்கள் அதிகமாகப் புழங்குவதால் ரயில்வே கேட் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த கிராமத்திலும் மக்கள் வியாபாரத்துக்காகவும், வேலைகளுக்காகவும் செல்வார்கள். அருகில் செந்தாமரை கல்லூரி, காமராசர் பல்கலைக்கழகம் அமைந்திருப்பதால் மாணவர்களும் வந்து செல்வார்கள். எனினும், இந்த நிறுத்தத்தில் ரயில்வே கேட் அமைக்கப்படவில்லை.

``விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" - கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

ரயில் தண்டவாளத்தின் கீழே போகும் சாலை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் பிரதான சாலை. ரயில் தண்டவாளத்தின் கீழே பாலம்கட்ட அந்தப் பகுதியைத் தோண்டினர். அப்போது அங்கு பாறைகள் இருந்ததால் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து வெடிகளை வைத்து பாறைகளை உடைக்க முயன்றனர். இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக அருகிலிருந்த கட்டடங்களின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் ஏற்கெனவே இருந்த சாலையின் நடுவாகப் பாலம்கட்ட முயற்சி நடைபெற்றது. அப்படியானால் குடியிருப்புக் கட்டடங்கள் அகற்றப்படவேண்டிய நிலை ஏற்படும். எனவே, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த உதயகுமார் என்பவரிடம் மனு கொடுத்தோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை. இதையடுத்து, வடபழஞ்சி கிராம மக்களும் அதன் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பின்னர், காவல்துறை உதவியுடன் மீண்டும் பணியைத் தொடங்கினர். ஆனால் தோண்டத் தோண்டப் பாறைகளே இருந்ததால், பாலம் கட்டும் பணியைக் கைவிட்டுவிட்டுச் சென்றனர். இப்போது பெரிய வாகனங்கள் இந்த சாலையில் செல்ல சிரமமாக இருக்கிறது" என்றனர்.

அந்தப் பகுதியில் கடை நடத்திவரும் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``ரயில் தண்டவாளம் அமைக்கப் பணிகள் தொடங்கப்பட்டபோது, ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொன்னோம். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். ஆனால் தண்டவாளத்துக்குக் கீழே அந்தப் பாலம் கட்ட திட்டம் போட்டுப் பணி தொடங்கிய பின்னர், பாறைகள் இருந்ததால் மூன்று முறை வந்த கான்ட்ராக்டர்களும் மேற்கொண்டு பணியில் ஈடுபடவில்லை. அதோடு தோண்டப்பட்ட இடம் மூடப்படாததால் காலப்போக்கில் பள்ளமாக மாறியது.

``விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" - கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி அத்துடன் குப்பைகளாகக் காட்சியளிக்கிறது. சுமார் 15 அடிக்கு மேல் ஆழம் இருக்கும். இதனால் அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் பல நேரங்களில் விபத்துக்குள்ளாகும் ஆபத்தும் இருக்கிறது. ஒருநாள் ஆட்டோ ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அது பகல் வேளை என்பதால் எங்களால் காப்பாற்ற முடிந்தது. இரவு வேளைகளில் வாகனங்களும், வெளியூரிலிருந்து தேர்வெழுத மாணவர்களும் வந்திறங்குகின்றனர். அவர்களுக்குப் பெரும்பாலும் பள்ளம் குறித்துத் தெரிவதில்லை. இதனால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு இந்தக் குப்பைகள் நிறைந்த தண்ணீர் அருகே இருக்கும் கோயிலின் அருகே உள்ள குளத்து நீருடன் கலக்கிறது. இதனால் நீரும் மாசுபடுகிறது, அதைப் பயன்படுத்தவும் முடியாத நிலை இருக்கிறது. அதோடு மழைக்காலங்களில் நீர் தேங்கி, நோய்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

``விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே கேட்டையாவது அமையுங்க!" - கோரிக்கை முன்வைக்கும் வடபழஞ்சி மக்கள்

அதனால் குப்பைகளை அகற்றும்படி மனு கொடுத்தோம். ஆனால் ஒருவேளை மீண்டும் அந்தப் பாலம் கட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கிறோம். ஆனால் ரயில்வே கேட்டை கண்டிப்பாகப் போட வேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆட்சியரும் ஒப்புதல் வழங்கினார். ஆனால் பத்து மாதங்கள் ஆகியும் இன்னும் ரயில்வே கேட் அமைக்கப்படவில்லை" என்றார்.

விபத்துகளைத் தவிர்க்கக் குறைந்தபட்சம் ரயில்வே கேட்டையாவது அமையுங்கள் என்று கோரிக்கைவைக்கின்றனர் வடபழஞ்சி மக்கள்.