
குச்சிமிட்டாய் ஜெயக்குமார், குருவிரொட்டி பன்னீரு!
? புறநானூறு சொல்லி பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு புதுக்குறள் ஒன்று சொல்லுங்களேன் பார்ப்போம்!
ஹோட்டல் சாப்பாடும் அதற்கான ஜிஎஸ்டியும்
தீரா இடும்பை தரும்.
இரா. கமலக்கண்ணன், சித்தோடு.
தனித்தனியே பிரித்துவைத்த வங்கியெல்லாம்
தமிழச்சிநீ சேர்த்து மகிழ்!
எஸ்.ஏ. வாசுதேவன், கோவிலம்பாக்கம்.
வரிஏய்ப்பு செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
ரெய்டு செய்து விடல்!
absivam

ஜிஎஸ்டியில்வந்த பணம் பத்தாதபோது சிறிது
ஆர்பிஐ ரிசர்விலும் கைவைக்கப்படும்.
mekalapugazh
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ஜிஎஸ்டியால் சுட்ட வடு.
manipmp
திருக்குறளைவிட சேக்கிழார் எழுதிய `கம்பராமாயணத்தில்’ இருந்து சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.
Ramesh46025635
மந்தநிலை வந்தாலும் எந்தநிலை வந்தாலும்,
திசைதிருப்ப உண்டு மதம் என்னும் மிருகம்.
smhrkalifa
நிறைகுடம் தளும்பாது ஆனால்
நிர்மலா நிர்வாகம் தளும்பி விடும்.
AmbrosePravin
வயலில் இறங்க வேண்டிய யானை
வங்கியில் நுழைய லாமா..?
Govindasamy Kalaimani
எட்டுத் தொகைபாடி என்னபயன் - நல்ல
பட்ஜெட் அமையா விடின்.
Gaffor Ali
? ஸ்போர்ட்ஸ் படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?
சொந்தக் காசிலேயே வீரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துதரும் கோச்...
இரா. கமலக்கண்ணன், சித்தோடு
மேட்ச் ஃபைனலின் போது கோச் ஒன்று காணாமல்போய் விடுவார்... அல்லது, மிகுந்த உடல் வலியுடனோ, மன வலியுடனோ தான் காணப்படுவார்.
எஸ்.ஏ. வாசுதேவன், கோவிலம்பாக்கம்.

தோற்பதுபோல வந்து கடைசி நிமிஷத்தில் ஏற்படுத்தும் அற்புதங்கள். ஏன் நல்லா விளையாடுறவன் முதல்ல இருந்தே ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இந்த ஸ்போர்ட்ஸ் படங்களோட க்ளைமேக்ஸ் பார்த்தா ஏதோ அதிர்ஷ்டத்துல ஜெயிச்ச மாதிரியே வைக்குறாங்க! ‘கில்லி’ விஜய்ல ஆரம்பிச்சு, ‘கராத்தே கிட்’ வரைக்கும் ஒரே கான்செப்ட்!
kaattuvaasi
பணக்காரவீட்டுப் பிள்ளை ஜெயிக்கவேண்டு மென வில்லன் கோச் கங்கணம் கட்டித் திரிவது.
pachaiperumal23
என்னதான் செமி ஃபைனலில் தோற்றாலும் ஃபைனலில் ஜெயித்துக்காட்டும் வீரம்.
Gopi_Ontheway
பார்வையாளர் மாடத்துல லவ்வரையோ, வேண்டியவங்களையோ பார்த்திட்டாக்கூட அடிஷனல் கோல் கிடைக்கும் என்பது எழுதப்படாத விதி... தலைவிதி.
Jerry Darvey

ஒரே அணியில் ஈகோ பிடித்தவர் ஒருவர் இருப்பார், அவர் எதிர் அணிக்கு உதவுவது போலவே இருக்கும், கடைசியில் திருந்திவிடுவார், டெம்ப்ளேட்!
Jaleel Shahul Hameed
ஒருத்தன் வாழ்நாள் பூரா ட்ரெயினிங் பண்ணுவான், ஒரு வெங்கலக் கோப்பைகூடக் கிடைக்காது. ஆனா ஹீரோ நாலுநாள் ட்ரெயினிங் ஆய்ட்டு கப் ஜெயிப்பார் பாருங்க... எ.கா. பத்ரி பாக்ஸர், மான்கராத்தே பாக்ஸர்.
Manikandan Thirunavukkarasu
? ஃபாரின் டூர் போகும் எடப்பாடி, இந்தியா திரும்பும்போது என்ன வாங்கி வரலாம்? ஜாலி ஐடியாக்கள் ப்ளீஸ்...
முதல்வர் நாற்காலியை OPS அசைக்காமல் இருக்கவும்,
‘ஜெ’வின் மருத்துவமனை நாள்களை விவரிக்கும் அமைச்சர்களின் நாக்கை ஒட்டவும்,
`தரமான ஃபாரின் பசை’ வாங்கி வரட்டும் EPS.
த. இராஜ வேல், தேனி.
பார்த்த கணத்தில் ஸ்லீப்பர் செல்லை
அடையாளம் காட்டும் ஹைடெக் ஃபைண்டர்.
இ.எம்.எஸ். பாலகுமாரன், போரூர்.
பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா உருவம் பொறித்த டி-ஷர்ட்கள் வாங்கி வரலாம்.
amuduarattai
அண்ணன் ஜெயக்குமாருக்குக் குச்சி மிட்டாயும், தலைவர் ஓ.பி.எஸ்ஸுக்குக் குருவி ரொட்டியும் வாங்கி வரலாம்.
Pethusamy

விஜயபாஸ்கருக்குக் கணக்குவழக்கெலாம் டயரியில் எழுதி மாட்டாம இருக்க ஒரு ஆப்பிள் லேப்டாப் வாங்கிட்டு வரலாம்...
johnwick194
பன்னீர்க்கு மினி ஜெ. ஸ்டேட்சூ... தங்கமணிக்கு கோல்டு ரிமோட் ஸ்விட்ச்... வேலுமணிக்கு டைமண்ட் வாட்ச்... ஜெயக்குமார்க்கு பிளாட்டினம் ஃபிஷ்... திண்டுக்கல் சீனிவாசனுக்கு சில்வர் போன்சாய் ட்ரீ...!
Raja90881339
திரும்பி வரும் வரை மீண்டும் தர்மயுத்தம் செய்யாமல் இருந்த ஓபிஎஸ்ஸின் மனதைரியத்தைப் பாராட்டி, தான் அணிந்திருந்தது போலவே ஒரு கோட் சூட் வாங்கி வந்து பரிசளிக்கலாம்..!
Pamaran Paramaguru
சிங்கிள் சிங்கமாகக் களத்தில் நின்று கலக்கும் சின்ன ஓபிஎஸ் அவர்களின் மனதைரியத்தைப் பாராட்டி ஒரு ஃபாரின் சென்ட் பரிசாக வாங்கி வரலாம்.
ரம்யா ரவிக்குமார்
டெலஸ்கோப் வாங்கிட்டு வந்து செல்லூர் ராஜுக்குத் தந்தா அவரோட ஆராய்ச்சிக்கு உதவியா இருக்கும்.
Ravikumar Mgr
? பள்ளிப்பருவம்... கல்லூரிப்பருவம்...குடும்பத்தலைவன் - ஆண்களின் வாழ்க்கையை மூன்றே வார்த்தைகளில் விளக்குக.
பள்ளிப்பருவம் - திரியர்ஸ்
கல்லூரி - அரியர்ஸ்
குடும்பத்தலைவன் - வொரியர்ஸ்
மல்லிகா குரு, மேற்கு மாம்பலம்.
சிக்கன் பிரியாணி
சிக்கன் நூடுல்ஸ்
உப்புமா
malarsoorya
கார்ட்டூன்சேனல்
மியூசிக்சேனல்
நியூஸ்சேனல்
AmbikaArun
1.முத்தமிழ் மன்ற உறுப்பினர். 2.கவுன்சிலர். 3.கவர்னர்.
Balumarappan2

பள்ளிப்பருவம் - அப்பாவின் பேச்சைக் கேட்பது.
கல்லூரிப்பருவம் - காதலியின் பேச்சைக் கேட்பது.
குடும்பத் தலைவன் - மனைவி, குழந்தைகளின் பேச்சைக் கேட்பது. ஒரே கஷ்டம்ப்பா!
imayavan340
எப்பவும் படிப்பா, என்ன வாழ்க்கை இதுன்னு நார்மலா நினைச்சா பள்ளி மாணவன்.
என்ன வாழ்க்கைடா இதுன்னு சந்தோஷமா இருந்தா கல்லூரி மாணவன்.
என்னடா வாழ்க்கை இதுன்னு சோகமா தோணுச்சுன்னா அவன் குடும்பத்தலைவன்.
saravankavi
“குச்சி மிட்டாய் குருவி ரொட்டி, KFC சிக்கன், BP & SUGAR TABLETS!”
Srs Ramasubramanian
? ‘35 வயதுவரை இளைஞரணியில் சேரலாம்’ என்று தி.மு.க-வில் புதிய விதி உருவாக்கப்பட்டுள்ளது. தி.மு.க-விலும் அ.தி.மு.க-விலும் வேறு என்னென்ன விதிகளைக் கொண்டுவரலாம்?
ஒவ்வொருவரும் ஒரு ஸ்லீப்பர் செல்லை எதிர்க்கட்சியில் உருவாக்க வேண்டும்.
manipmp
சினிமாவில ஒரு சீன்லயாச்சும் தலை காட்டின ஆளுக்குத்தான் பதவின்னு ஒரு ரூல் கொண்டு வரலாம்.
ItsJokker
சயின்டிஸ்ட், ஹிஸ்டோரியன், ஜியோகரபி, மேத்ஸ் இத்யாதி என எல்லா கேட்டகரிக்கும் ஒதுக்கீடு ஃபிக்ஸ் பண்ணி, சேர்த்துக்கொள்ளலாம். ஏன்னா, திடீர்னு தெர்மாகோல் சயின்ஸ், சேக்கிழார் காவியம் போன்றவற்றைத் தவிர்த்து intel கட்சி மதிப்ப தேத்திக்கலாம் இல்லியா?
Sowmya Red
கட்சில சேர்ந்தா, குறிப்பிட்ட வருஷத்துக்கு வேற கட்சிக்குத் தாவக்கூடாதுன்னு ஒரு விதியை கண்டிப்பா எல்லாக் கட்சியுமே சேர்க்கலாம்.. ஏன்னா, ஒரு நாள் செய்தி பார்க்கலைன்னாலும், இப்ப யாரு எந்தக் கட்சில இருக்காங்கன்னு தெரியமாட்டேங்குது.
ரம்யா ரவிக்குமார்
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தன் கட்சி ஆள்களைத் தக்கவைத்துக்கொள்ள
டி.டி.வி தினகரனுக்கு ‘நச்’ ஐடியாக்கள் கொடுங்களேன்!
? விஜய் ஹீரோ... விஜய் சேதுபதி வில்லன்...
இந்தப் படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?
? ரவிசாஸ்திரிக்குப் பதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராகலாம் என்றால் அவர் யார்? ஏன்?
? ‘காலை வணக்கம் உறவே’ மாதிரியான காலாவதி கமென்ட்களை இன்னமும் பயன்படுத்துபவர்களுக்கு ஜாலியாக என்ன தண்டனை கொடுக்கலாம்?
? நம் ஃபாரின் முதல்வர் எடப்பாடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.