சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை! - விளக்கமெல்லாம் வேற லெவல்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

மோடி, அமித் ஷா இருவரையும் அடிக்கடி ரகசியமாகச் சந்திப்பார் எடப்பாடியார்.

? சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனால் என்ன நடக்கும்?

சிபிஐ ரெய்டு நடக்கும். கட்சித் தாவல் நடக்கும். கர்நாடகா புகழேந்தி நீக்கப்படுவார். மன்னார்குடி உறவினர்கள் இரண்டாகப் பிரிவார்கள்.

BaaluElango

சசிகலா: பழனிசாமி அண்ணே, நான் இல்லாதபோது என்ன என்னவெல்லாம் பேசினீங்க. இப்ப பேசுங்க பார்ப்போம்.

எடப்பாடி: அதெல்லாம் நிஜம்னு நினைச்சிட்டிங்களா சின்னம்மா.சும்மா... சும்மா.

Kirachand4

வாசகர் மேடை! - விளக்கமெல்லாம் வேற லெவல்!

சிம்பிளா சொல்லணும்னா... ஜெயலலிதா இறந்தபின்பு என்ன நடந்ததோ அதெல்லாம் மறுபடியும் நடக்கும். அதாவது எல்லோரும் சசிகலா காலில் விழுந்து பதவியைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

RahimGazzali

‘அப்போலோ மருத்துவமனையில் அம்மாவுக்கு இட்லி ஊட்டிவிட்டதே சின்னம்மாதான்’னு திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி கொடுப்பார்.

balasubramni1

மோடி, அமித் ஷா இருவரையும் அடிக்கடி ரகசியமாகச் சந்திப்பார் எடப்பாடியார்.

RajaAnvar_Twits

அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணி வைத்து, `தியாக வாழ்க்கை' வாழ்ந்த சசிகலாவுக்கு மோடி அரசு `பாரத ரத்னா' விருது வழங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

RamAathiNarayen

சிறையில் இருந்து நன்னடத்தையால் விடுதலையாகி வரும் பெண்களுக்கு, சின்னம்மா பெயரில் விருது வழங்கப்படும்.

sankariofficial

தினசரி ‘நமது எம்.ஜி.ஆர்’ செய்தித்தாளைப் பார்த்தால்தான் யார் யார் அமைச்சர் என்பது தெரியவரும்.

manipmp

அ.தி.மு.க-வில்... `ஒற்றைத் தலைமை முறை' மீண்டும் வரும்!

KrishnaratnamVC9

‘வெற்றிநடை போடும் சின்னம்மாவே’ என்று விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கும்.

amuduarattai

ராமதாஸ்: இதுவும் பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றிகள் வரிசையில் வரும்.

pbukrish9

சாக்கடை ஜலம் என்று அவமரியாதை செய்த துக்ளக் குருமூர்த்தி மீது அவதூறு வழக்கு பாயும்!

vvenraman

சர்தார் படேல் சிலை போல் ஸ்ரீரங்கத்தில் காவிரி நடுவில் பிரமாண்ட சிலை ஜெயலலிதாவுக்கு அமையும்.

ravindran.kannan.505

? வாசகர் கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்?

அழகிரி: தென்பாண்டி சீமையிலே... தேரோடும் வீதியிலே...

ஸ்டாலின்: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்...

BaaluElango0

வாசகர் மேடை! - விளக்கமெல்லாம் வேற லெவல்!

ஸ்டாலின்: அஞ்சா நெஞ்சன்னு அடைமொழி வச்சிருக்கீங்க, தனிக்கட்சி ஆரம்பிக்க அஞ்சுறீங்களே!

அழகிரி: நீங்களும்தான் தளபதின்னு அடைமொழி வச்சிருக்கீங்க இதுவரை எந்த நாட்டுக்கும் தளபதி ஆகவே இல்லையே!

balasubramni1

அழகிரி: ‘நாம்’ என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்னு நம்ம அப்பா சொன்னதை மறந்துட்டீயா தம்பி..?!

ஸ்டாலின்: ‘தம்பி’ன்னு சொன்னாலும் ஒட்டும்ணே... ‘அண்ணன்’னு சொன்னாதான் ஒட்டாது..!

LAKSHMANAN_KL

? உங்களுக்கு வந்ததில் சிறப்பான ஒரு வாட்ஸ்அப் வதந்தியைச் சொல்லுங்களேன்.

கொரோனா காலத்துல ‘ஒவ்வொரு வீட்டிலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வளர்க்கணும், அது கொரோனா எதிர்ப்பு சக்திக்கு நல்லது’ன்னு இன்று வாட்ஸப்ல ஒரு மெசேஜ் வந்திருக்கு. அது உண்மையா வதந்தியான்னு தெரியாம குழம்புறேன் சார்.

Kirachand4

‘உங்கள் பிரைவசியைக் காப்பதே எங்கள் கடமை’ன்னு வாட்ஸப்பே வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வச்சதுதான் சிறப்பான வதந்தி ஸ்டேட்டஸ்.

balasubramni1

‘இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 500 ரூபாய் ரீசார்ஜ் செய்யப்படும்’. ஆனால் நடந்தது என்னவோ, ‘பா.ஜ.க-வில் சேர்ந்ததற்கு நன்றி’ என மெசேஜ் வந்தது.

vigneshmos

‘வாட்ஸ் அப்பில் வரும் செய்தியில் ஏதேனும் போலியான தகவலாக இருக்கும் பட்சத்தில் அது சிவப்பு நிற டிக் ஆக மாறும்’ என்ற வதந்தி.

RajaAnvar_Twits

இன்று சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்வதால் பலவிதமான மின்கதிர்கள் வெளியேற இருக்கின்றன. அதனால் இன்று இரவு 12 மணிக்கு மேல் வாட்ஸப் உபயோகிக்க வேண்டாம். இப்படிக்குநாசா (நம்ம மைண்ட் வாய்ஸ்: அட நாசமாப் போனவனே).

Harivikram_1986

இந்திய எல்லைக்குள் சீனா கட்டியிருக்கும் வீடு விலைக்கு வருவதாகவும். முதலில் வாங்கும் ஐம்பது நபர்களுக்கு மூன்று லட்சம் தள்ளுபடி எனவும் இன்று காலையில் ஒரு வாட்ஸ் அப் வதந்தி. அதிர்ச்சியாகி வாட்ஸ்அப்பை அன் இன்ஸ்டால் செய்துவிட்டேன்.

pachaiperumal23

அப்துல்கலாம் அய்யாவிற்காக அவர் இறந்த அன்று அமெரிக்கக் கொடி வெள்ளை மாளிகையில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

selvachidambara

? ஆளாளுக்குச் சொல்றாங்களே, இந்த ‘வேற லெவல்’னா என்னப்பா?

பாராளுமன்றத்தை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டுவிட்டு, அந்தப் பக்கமே தலைவைத்துக்கூடப் படுக்காத பிரதமர் மோடி வேற லெவல்தான்.

Kannarka

தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட இரண்டு மாசமா கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் வெற்றிபெறத் துடிக்கும் விவசாயிகளின் விடாமுயற்சி வேற லெவல்தான்.

Kirachand4

கொடுத்த பொங்கல் பரிசு ரூ.2,500 திரும்பவும் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வரும்னு சொன்ன ஆளுங்கட்சி அமைச்சர் தில் இருக்கே... வேற லெவல்..!

Malli_official

தனிச்சிறையில் இருந்தவர்க்குக் கொரோனா வருவதெல்லாம் வேற லெவல்...

sankariofficial

வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், மாட்டுப் பொங்கல்னு பார்த்த நமக்கு பி.ஜே.பி சார்பாக நடந்த பொங்கல் விழாவுல குஷ்பு செஞ்சு காட்டிய பஞ்சுப் பொங்கல்தாங்க அந்த வேற லெவல்.

pbukrish

மொக்கைப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்து, மீடியாவிடம் `படம் வேற லெவல்' என்று அடித்துவிடுவதெல்லாம் வேற லெவல்!

parath.sarathi

ஓசி சிக்கன் ரைஸுக்காக `அமித்ஷா பிஏவுக்கு போன் போடட்டா, ஆயிரம் பேர் ரெடியா இருக்காங்க, மதக்கலவரம் வரும்’ என்று அலப்பறையைக் கூட்டிய பா.ஜ.க பிரமுகரின் அடாவடித்தனம் வேற லெவல்.

parama.paramaguru.3

? இளையராஜாவும் ரஹ்மானும் ஒரு படத்துக்குப் பின்னணி இசை அமைத்தால் அந்தப் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

பாட்டுக்கு நாம் அடிமை

BaaluElango

தென்றலும் புயலும்..!

maathorubhagan

புயலில் ஒரு ஞானி!

absivam6

`இளையமான்’னு வைங்க.

Avenger1603

வந்தா ராஜா அல்லது ரஹ்மானாதான் வருவேன்..!

LAKSHMANAN_KL

பாட்டு ஒன்று தாளம் இரண்டு

PG911_twitz5

வாசகர் மேடை! - விளக்கமெல்லாம் வேற லெவல்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் தானே தனிக்கட்சி தொடங்கும் அர்ஜுனமூர்த்திக்குத் தேர்தலில் என்ன சின்னம் ஒதுக்கலாம், ஏன்?

? சட்டசபை, நாடாளுமன்றம் எல்லாம் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் செயல்பட்டால் எப்படி இருக்கும்?

? வாசகர் கேள்வி : தனது பேரைச் சொல்லி அரசியல் ஆதாயம் தேடுபவர்களைப் பற்றி எம்.ஜி.ஆரின் மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்கும்? - மா.தருண், புதுக்கோட்டை

? எடப்பாடி பயோபிக் எடுத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் கேரக்டர்களில் யார் யார் நடிக்கலாம்?

? ‘நானும் விஞ்ஞானிதான்’ என்று நீங்கள் உணர்ந்த வினோதமான தருணம் எது?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com