Published:Updated:

வாசகர் மேடை: இந்தியா எத்தனை இந்தியாவோ!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

வாசகர் மேடை

? டிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா முதல் சுயச்சார்பு இந்தியா வரை ஏகப்பட்ட இந்தியாக்களை அறிவித்துள்ள மோடி, அடுத்ததாக என்ன இந்தியாவை அறிவிப்பார்?

Where is India?

மாணிக்கம் திருப்பூர்

குச் நஹி பாரத்

gulammohideen.

க்ளீன் போல்டு இந்தியா

NaniBala

கொண்டைக்கடலை இந்தியா

balasubramni1

ஒரு-தரம் இந்தியா,

ரெண்டு-தரம் இந்தியா,

மூணு-தரம் இந்தியா.

pbukrish

மோடி
மோடி

பிம்பிலிக்கி பிலாக்கி இந்தியா

ARiyasahmed

‘வைரல்’ இந்தியா..!

laks veni facebook

யாரோ இந்தியா

mano red

? ரஜினி ஒரு டி.வி சீரியலில் நடித்தால் அதற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

சித்தப்பா

கதிஜா ஹனிபா, திருச்சி

யாரடி நீ சந்திரமுகி

S. பிரபுராஜா மதுரை

போர் வரட்டும்

sowmya red

69 வயதினிலே

umar.

“நான் வருவேன் என நினைத்தாயோ”

govindasamy.

சீரியலுக்கு வருவது உறுதி.

karthik.partee?com

யார் நீங்க

manidhanaininai

‘முட்டு’க்காளை

San8416/sta

`தண்ணி’ காட்டு ராஜா!

ThangababuK

இவன் தந்திரன்

dhinazsiva

படையப்பா குடும்பத்தார்

Thaadikkaran

கேட்டைத் தாண்டி வருவாயா?

pachaiperuma

பாட்ஷா ஸ்டோர்ஸ்

ஜெ.ஜான்சி சுப்புராஜ், கடலூர்

? இன்ஸ்டாகிராமில் உங்களை ரொம்பவும் வெறுப்பேற்றும் விஷயம் என்ன?

இன்ஸ்டாகிராம்தான்

SJB06228690

ஒரே போட்டோவுக்கு 10 அல்லது 15 ஹேஷ்டாக்குகள் போடப்படுவது!

SriRam

நம்மை யாரும் பாலோ பண்ணாதது

poonasimedhavi

இன்ஸ்டாகிராமானது பேஸ்புக் பேமிலி ஆப்-ஆக இருப்பதால் நமது story-ல் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் ஆட்டோமேடிக்காக facebook story-ல் save ஆவது...

gmuruganandi

காஸ்ட்லியான ஹோட்டல்களுக்குப் போய் விதவிதமாக ஆர்டர் பண்ணி, தின்பதோடு இல்லாமல் அதைப் போட்டோ எடுத்து போஸ்ட் போடுறது.

Aruns212

நம்ம அக்கவுன்ட்ல ஒரு நோட்டிபிகேஷன்கூட இருக்காது.

Ntramesh_kpm

? பெண் பார்க்க வந்தபோது/போனபோது உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க (ஆண், பெண் இரண்டு பேரும்)

சாப்பிட்டுட்டு, பிறகு பெண்ணைப் பார்க்கலாம் என்று பெண்ணின் அப்பா சொன்னபோது... No.. No... பெண்ணைப் பிடித்திருந்தால்தான்... நாங்கள் கைநனைப்போம் என்று கெத்தாக என் அப்பா கூற... நான் மௌனமாக ரூமிலிருந்து எட்டிப் பார்த்த பெண்ணை ரசித்துக்கொண்டிருந்தேன்.

jeya.sampath

என்னுடன் பேச வேண்டும் என்ற ஆசையில் நான் பி. ஏ. படித்திருக்கிறேன் எனத் தெரிந்தும் “என்ன படிச்சிருக்கே?” என்று கேட்டதற்கு என் அண்ணன் முந்திக்கொண்டு பி.ஏ என்று சொல்ல, என் கணவர் முறைத்தது இன்றும் என் நினைவில் உள்ளது.

usha.muthura

நான் லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணினேன். எங்க வீட்டுல இருந்து பொண்ணு கேக்கப் போகும்போது பொண்ணுகிட்ட அட்ரஸ் கேட்டுக் கேட்டுப் போனோம். அதுக்கு எல்லாரும் `ஏன்டா அந்தப் புள்ள வீடுகூடத் தெரியல உனக்கு’ன்னு கேட்டு மொறச்சாங்க.

AsalManiklp

நண்பனுக்குப் பெண் பார்க்கப் போனபோது அந்த வீட்டில திடீர்னு நல்ல தண்ணி வந்துருச்சு. குடும்பமே குடத்தைக் கழுவித் தண்ணி பிடிக்கிறதிலயே குறியா இருந்தாங்க.

tus/1264809244718624769

பந்தம் பேசினதுக்கப்புறம்தான் அவங்க வீட்ல கைநனைக்கணும்னு பேசிட்டுத்தான் போனோம். இருந்தாலும் வெள்ளையப்பமும், கடலைக்கறியும் அவங்க கொடுத்தவுடனேயே நான் பட்டுனு வாங்குனதும், எங்க அக்கா சட்டுனு என்னை முறைச்சதும்.

RamuvelK

`இது ஒரிஜினல் முடியா இல்ல விக் வச்சிருக்கீங்களா? உங்களைத் தனியா பேசக் கூப்பிட்டதே இதைக் கேட்கதான்’ என்றாளே அந்தப் பெண்... சத்திய சோதனை.

PG911_twitz

? தியேட்டரில் படம் பார்ப்பது, ஓ.டி.டியில் படம் பார்ப்பது - ஜாலியான வித்தியாசம் சொல்லுங்க

சைடிஷ் மட்டும் சாப்பிட்டுட்டுப் பார்த்தால் தியேட்டர்; மெயின் டிஷ்ஷும் சேர்த்து சாப்பிட்டுட்டுப் பார்த்தால் ஓ.டி.டி.

Dhanalakshmi

தியேட்டரில் படம்பார்த்துவிட்டு வெளியே வந்தால் மீடியாகாரங்க விமர்சனம், புரொமோஷனுக்காக மைக்கை மூஞ்சிக்கு நேரா குத்திக் கேப்பாங்க.

ஓ.டி.டியில் இந்தத் தொல்லையில்லை.

கிரன்ஃப் அன்ஜலின்

வாசகர் மேடை
வாசகர் மேடை

தியேட்டரில் படம் பார்த்தா ஒரே இன்டர்வெல்; ஓ.டி.டியில் பார்த்தா ஒவ்வொரு வேலைக்கும் இன்டர்வெல்.

நளி2K20

நான் பாத்ரூம் போறேன். திரும்ப வர்ற வரைக்கும் பாஸ்லதான் இருக்கணும்னு தியேட்டர்ல சொல்லமுடியாதே.

IamUzhavan

ஓ.டி.டி-ல பார்க்கும்போது நம்ம இஷ்டத்திற்கு எப்படி வேணாலும் படுத்திட்டுக்கூட பார்க்கலாம். ஆனா, தியேட்டர்ல அப்படிப் படுக்க முடியாது..!

nandhu

முத்த காட்சிகள் வந்தா தியேட்டர் அலரும்.. OTT’ல சத்தமில்லாம ஓடும்..!

nandhu

தியேட்டர்ல பட இடைவேளையில் பேமிலிக்கு பாப்கார்ன், ஐஸ்கிரீம் செலவே 4 மடங்கு டிக்கெட் விலைக்கு ஆகும். வீட்டுல “தண்ணியக்குடி... தண்ணியக்குடி”ன்னு முடிச்சிடலாம்!

absivam

தியேட்டருக்குப் போனா ரெண்டு மணி நேரத்துல படம் முடிஞ்சு வெளிய வந்துரலாம்!

ஓ.டி.டி-யில்... ரிவர்ஸ் பண்ணி ஃப்ரீஸ் பண்ணி படம் பாக்குறதுக்கு ரெண்டு நாள் ஆகுது!

prabacurren

தியேட்டர் - ஒருங்கிணைவோம் வா.

ஓ.டி.டி - நமக்கு நாமே.

KLAKSHM

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்துவதற்கும் பின்பு எடுப்பதற்கும் ஆகும் நேரம் படம் பார்ப்பதில் பாதி நேரமாக இருக்கும். இது சென்னை தியேட்டர் அனுபவம். ஓ.டி.டி-யில் அந்தத் தொல்லை இல்லை.

anbu.bala.

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: இந்தியா எத்தனை இந்தியாவோ!

* ஊரடங்கு காலத்தில் பலவற்றை மிஸ் செய்திருப்பீர்கள். ஊடரங்கு முடிந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் எதையெல்லாம் மிஸ் செய்வீர்கள்?

* டிரம்ப் இந்தியாவின் பிரதமரானால் என்ன என்ன மாற்றங்கள் நடக்கும் ?

* ஓராண்டு ஆட்சி முடித்து மக்களுக்கு மோடி கடிதம் எழுதியிருக்கிறார். மோடி ஆட்சி குறித்து மக்களாகிய நீங்கள் நாலு வரியில் கவிதை எழுதுங்க, பார்ப்போம்.

* விஜய், அஜித் இருவரும் யாராவது ஒருவர் பயோபிக் படத்தில் நடிக்கலாம் என்றால் விஜய், அஜித் யார் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிக்கலாம்?

* ஜெயலலிதாவின் நேரடி வாரிசு ஆகியுள்ள ஜெ.தீபா தமிழகத்தின் முதல்வராகிவிட்டால் என்ன நடக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com