
வாசகர் மேடை
? உங்களுடைய இளவயது வெர்ஷனை இப்போ சந்திக்க முடிந்தால், அவருக்கு என்ன அட்வைஸ் சொல்வீர்கள்?
தப்பித்தவறி இன்ஜினீயரிங் மட்டும் படிச்சுடாதடா!
உமர் அஹமத்
எவன் எது சொன்னாலும் உன்னை மாத்திக்காதே. ஆனால், உன்னுடைய செயலுக்கு அடுத்தவர் காரணமெனச் சொல்லாதே. நம் விருப்பப்படி வாழ்ந்தோம் என்ற திருப்திதான் எல்லாவற்றையும்விட மகிழ்வானது. மகிழ்ச்சி முக்கியம் பிகிலு!
புகழ்
பெரிய மீசை வச்சிருக்கிறவனெல்லாம்... பெரிய ரவுடினு நம்பிடாதே. ரொம்ப பயந்தவன்தான் பெரிய பெரிய மீசைய வச்சிகிட்டு பயத்தைப் போக்கிட்டு இருக்கானுக..!
மாதொருபாகன்
இவ்வளவு நேரமெல்லாம் கண்ணாடி முன்னாடி நின்னுட்டு டைம் வேஸ்ட் பண்ணி மேக்கப் போட்டுகிட்டிருக்காதே. எப்படியும் அழகான பையன் உனக்குக் கிடைக்கப்போறதில்லை.
பாரதிப்ரியை
உன் மீது உயிரையே வைத்திருந்த உன் தந்தையை இன்னும் சற்று அன்பாக நடத்தியிருக்கலாம். நடத்தியிருந்தால் அவர் இறப்புக்குப் பின் கடந்த 30 ஆண்டுகளாக அதை நினைத்து மனதுக்குள் அழாமல் இருந்திருக்கலாமே என்று அறிவுறுத்தியிருப்பேன்.
vaira.bala
எந்தக் காரணத்துக்காகவும் இ.எம்.ஐ மட்டும் போட்டுவிடாதே. கையில பணம் இருந்தா பொருள் வாங்கு, இல்லையா வாங்கவே வேண்டாம். மாசாமாசம் நரக வேதனை!
நா.இரவீந்திரன்
‘மார்க் முக்கியமில்லை, படிப்பதைப் புரிந்து படி’ன்னு சொல்வேன். எஸ்.எஸ்.எல்.சி-யில் ஸ்கூல் ஃபர்ஸ்ட். ப்ளஸ் டூவில் மூன்றாமிடம். கல்லூரியில் டிஸ்டிங்ஷன். ஆனாலும், அரைத்த மாவை அரைக்கும் வேலைக்குதான் சேர முடிந்தது.
சுனா.பானா
? சசிகலா சிறையைவிட்டு வெளியில் வந்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?
சிறையில் ஒரு செல் காலியாகும்.
வாழவந்தார்
சசி: இந்த மெட்ரோ ரயில் என்ன வெல, அந்த VR மால் என்ன வெல OMR-ல இருக்கிற இந்த மெரினா மால் என்ன வெல?
TTV: அக்கா, நீங்க விடுதலையாயிட்டீங்கதான். ஆனா, முன்ன மாதிரி நாம எதையும் வெலைக்கு வாங்க முடியாது.
பொம்மையா முருகன்

100 வருடங்களுக்குப் பிறகு, தியாகச் செம்மல் அடைபட்டிருந்த இடம் என வரலாறு திரிந்து அந்தச் சிறைக்கூடமே சுற்றுலாத் தலம் ஆகும்!
தஞ்சை ப்ரணா
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை வலுப்படுத்தி, 2021-ல் முதல்வர் பதவியைக் கைப்பற்றுவார். 2021-ல் நிகழப்போகும் அற்புதம், அதிசயம் இதுதான்.
ஜெ.கண்ணன், சென்னை 600101
சசிகலாவின் கடந்தகால வரலாறுகள் மீண்டும் மேடைதோறும் பேசப்படும்.
அவ்வை கே.சஞ்சீவிபாரதி, கோபி
‘சின்னம்மா மகாராஷ்டிரா முதல்வராகணும்னு ஆசைப்பட்டால் எங்க எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுப்பாங்களான்னு தலைமைதான் முடிவெடுக்கும்’ அப்படின்னு திண்டுக்கல் சீனிவாசன் சொல்வார்.
திருமாளம் எஸ்.பழனிவேல்
சமாதி உறுதியாக இருக்கிறதா எனத் தட்டிப் பார்த்து உறுதி செய்யலாம்.
mohanram.ko
? உங்கள் வட்டார வழக்கில் இருக்கும் ரகளையான ஒரு சொல்லை அர்த்தத்தோடு சொல்லுங்களேன்?
“காஸ் சிலிண்டரை நாங்கள் வண்டியில் கொழுத்திப்போட்டுக் கொண்டுபோவோம்...”
நாகர்கோவில் வட்டாரவழக்கில் ‘கொழுத்தி’ என்பது கொக்கி போன்ற பகுதியில் ஒரு பொருளை மாட்டிவைப்பதாகும்.
ஆன்றனி அரசு
மறுமாத்து - வெஞ்சனத்துக்கு மாற்றா தொட்டுக்கிறது (எ.கா) வெங்காயம், பச்சைமிளகாய் #மதுரை
Ashok
வெசாலக்கெளம வெசனத்தோடு வெசயா பன்னாடி ஊட்டுக்கு பொஸ்பா போனாளே... வியாழக்கிழமை கவலையோடு வேகமாகப் பண்ணையார் வீட்டுக்கு புஷ்பா போனாள்.
Valar Selvan
சேலத்துக்கு மாற்றலாகிப் போன புதுசுல தனுஷின் ‘சுள்ளான் ‘ படம் வந்த நேரம், அங்க இருக்குறவங்க ‘சூளான்’ புடுங்குதுனு சொல்வாங்க. சுள்ளானை ஏன் சூளான்னு சொல்றாங்கன்னு யோசிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது ‘கொசு’வாம் !
nedumaran jagadees
மிர்ஸே! அனைவரையும் எந்த வயதினரையும் அழைக்கப்பயன்படுத்துவர். ஆங்கில ‘மிஸ்டர்’ தான் அது. புதுவையில் ‘மிர்ஸே’ என்று பிரெஞ்சு மொழியில் அழைப்பார்கள்.
ரவிசங்கர்
வாங்கித் தின்னவரோடு - சூடு சொரணை இல்லாம எல்லார்கிட்டேயும் வாங்கித் திங்குறது.
ட்விட்டர் தாதா
அன்டிக்குது = சுடுது, பத்திக்குது
ஆர்.புனிதா, சோளிங்கர்
குன்னுவத்தி - தொட்டதற்கெல்லாம் சிணுங்கும் மற்றும் சோம்பேறித்தனமாக இருக்கும் சிறுமிகளைப் பார்த்து சொல்லும் சொல்..
வல்லகி, கோவை
? 80ஸ் ஹீரோயின், இப்போ இருக்கும் ஹீரோயின் ரெண்டு வித்தியாசம் சொல்லுங்க!
கோயில், டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டியூட்டில் தான் அன்றைய ஹீரோயின்களுக்கு காதல் மலரும். இப்போது டிஸ்கொதே, ரெஸ்டாரன்ட்டில்
சப்பாணி
அன்றைய ஹீரோயின்ஸ் இன்றைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய ஹீரோயின்ஸ் அன்றைய ஹீரோக்களுக்கு காதலியாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கருப்பு குல்லா

80’ ஹீரோயின்கள் பெயர்கள் பெரும்பாலும் தமிழில் இருந்தது. இன்றோ தமிழால் உச்சரிக்க முடியாமல் அந்நிய மொழியில் இருக்கிறது.
கெத்சி ஆக்னஸ் லயோலா, சென்னை
80-ல் எல்லோரும் 10 வருடங்கள் ஹீரோயினாக இருப்பார்கள். இப்போது ஒருசிலரைத் தவிர எல்லோரும் ஒருசில படங்களில் மட்டுமே ஹீரோயினாக இருக்கிறார்கள்.
Bharath Chandran
? உங்கள் நட்புவட்டத்தில் இருக்கும் ‘அப்டேட்டே ஆகாத’ நண்பர் செய்யும் அட்டூழியங்களைச் சொல்லுங்களேன்!
‘மகாராஷ்டிரா அரசியல்ல நம்ம நாட்டாமைக்கு செம வாய்ஸ் இருக்கு போல!’னு சொல்லி, ‘சரத் பவாரை’யே சரத்குமாரா ஆக்கி சாய்ச்சவன் ‘அவன்..!’
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி-11
மெசேஜ் அனுப்ப வேண்டியது, டெலிவரி ஆகாத மெசேஜ்க்கு ரிப்ளே பண்ணலேனு கோவிச்சுக்க வேண்டியது.
சாமந்தி, வேலூர்

என் பையன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் 39,000 கொடுத்து oneplus7 போன் வாங்கி கொடுத்தான் என்று பெருமை பேசிய நண்பன், மற்றொரு நண்பரோடு பேசுவதற்கு போன் நம்பர் எழுதி வைத்திருந்த டயரியைத் தேடிக்கொண்டு இருந்தான். அவன் அப்டேட்டை என்னவென்று சொல்வது!
ஸ்ரீதரன், சென்னை
‘இன்று இரவு மட்டும் உங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வையுங்கள். இல்லையெனில் வெடித்துவிடும்’ங்குற மாதிரி, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த வாட்ஸ் அப் வதந்தியையெல்லாம் ஷேர் பண்றாய்ங்க மைலார்ட்!
M__karthika
ஃபேஸ்புக்கில ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்துட்டு, ‘மாம்ஸ்... ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்திருக்கேன்... அக்செப்ட் பண்ணு’ன்னு சொன்னா, ‘இதுக்கு எதுக்குடா ரெக்வெஸ்ட்? ஆல்ரெடி நாம ஃப்ரெண்ட்ஸ்தானே’ அப்படிங்கிறான்!
Sivakum31085735
செய்தித்தாள் வந்ததும் அவசரமா விளையாட்டுப் பக்கத்துக்குப் போய் இன்று எத்தனை மணிக்கு கிரிக்கெட் தொடங்கும் என்று பார்ப்பாரு பக்கத்து அறை நண்பர்.
drkandaraghav
ஏ.டி.எம்மில் பணம் எடுத்த பிறகு, ‘யுவர் ட்ரான்சாக்ஷன் கம்ப்ளீட்டட்’ என்று வந்த பிறகும், கார்டு சொருக வேண்டிய இடத்தில் பச்சை லைட் எரிந்த பிறகும் விடாமல், கேன்சல் பட்டனையும் க்ளியர் பட்டனையும் இரண்டு மூன்று தடவை மாறிமாறி அழுத்திவிட்டு வெளியில் வந்த பிறகும் மெஷினை எட்டிப்பார்ப்பது.
thanganagenthiran.thangarasu
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? அதென்னவோ உப்புமா என்றாலே பலருக்கும் வெறுப்பு. உப்புமாவை நேசிப்பவர்கள் மட்டும் அதன் சிறப்பை இரண்டே வரிகளில் சொல்லவும்.
? உங்கள் சுட்டிக்குழந்தைகள் செய்த, ரசிக்கும்படியான குறும்பை நான்கே வரிகளில் சொல்லவும்.
? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் கௌதம் மேனன் திரைப்பட டைட்டில்களின் ஒரே கண்டிஷன். அடுத்த படத்துக்கு கௌதம் மேனனுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் திரைப்பட டைட்டில் என்ன?
? நித்தியானந்தா அட்டகாசங்கள் குறித்து ஒரு காமெடி கமென்ட் ப்ளீஸ்...
? சரிந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்த மோடிக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு ஜாலி அட்வைஸ் கொடுங்களேன்!
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com