Published:Updated:

வாசகர் மேடை: கதறும் கொரோனா!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

வாசகர் மேடை

? கொரோனா பிரச்னை முடிந்து அதைப் படமாக்கினால், அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டராக யாரை நடிக்க வைக்கலாம்?

Dr. எடப்பாடியாரை நடிக்க வைக்கலாம்.

ஹர்சிகா M, கும்பகோணம்

கமல்ஹாசன் - நோயாளியாகவும், டாக்டர், நர்ஸ், வார்டு பாய், சைன்டிஸ்ட், ஆம்புலன்ஸ் டிரைவர் வேடங்கள் மட்டுமல்ல, அந்தக் கொரோனா வைரஸாகவும் சேர்த்தே நடிச்சுக் கொடுத்துடுவார்!

ravikumar.krishnasamy

ஜெ.தீபா... அவர்தான் வீட்டை விட்டு வெளியே வராமல் க்வாரன்டீனில் இருந்து எந்த நேரமும் தூங்குவார். இப்ப கொரோனாவிலிருந்து தப்பிக்க க்வாரன்டீனும், தூக்கமும்தான் சிறந்த மருந்து.

RahimGazzali

ராமராஜன். பாடிப் பாடியே மருந்தை மைன்ட் செட்டுக்குக் கொண்டுவந்து கண்டுபிடிக்கிறார். இதனால் மருந்துக்குக்கூட `பேச்சி’ன்னு பேர் வைக்கிறார்.

urs_venbaa

வாசகர் மேடை: கதறும் கொரோனா!

ஸ்ருதி ஹாசன். ஏழாம் அறிவுல மருந்து கண்டுபிடிக்க ஜெனிட்டிக்கா யோசிச்ச மாதிரி இதுக்கும் ஏதாவது யோசிச்சுக் கண்டுபிடிச்சிடுவாங்க.

Thaadikkaran

பாபா ராம்தேவ். நோபல் பரிசுதான் கொடுக்கல, டாக்டரா நடிச்சா ஆஸ்கர் அவார்டு கொடுக்குறாங்களான்னு பார்க்கலாம்!

pbukrish

? 2020-ம் ஆண்டுக்கு ஒரு பெயர் சூட்டுவது என்றால் என்ன பெயர் சூட்டுவீங்க?

வேணாம் அழுதிடுவேன்

சாமந்தி, வேலூர்

பூமராங் - நாம் சுற்றுச்சூழலுக்கு விளைவித்த கேட்டின் பலனை இப்போது அனுபவித்துக்கொண்டு இருப்பதால்.

ஜெ.ஜான்சி சுப்புராஜ், கடலூர்

இ-பாஸ், ஆல் பாஸ் என பாஸ்களால் மாஸ் காட்டியதால் இந்த ஆண்டு கொலபாஸ் ஆண்டு என அன்போடு அழைக்கப்படட்டும்!

absivam

`நெட்’ ஆண்டு... இணையதளம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் பாதிப் பேர் பைத்தியம் ஆகியிருப்பாங்க.

poonasimedhavi

புரோட்டா செய்வது கம்பசூத்திரமல்ல என்பதை உணர்த்திய ஆண்டு.

pachaiperumal23

பிக்பாஸ்: ஓடவும் முடியல: ஒளியவும் முடியல

balasubramni1

பரீட்சை எழுதாமலே எல்லோரும் பாஸ் ஆன ஆண்டு.

amuduarattai

கடவுள் காணமல்போன வருடம் 2020

NaniBala8

CPL 2020-Corona Premier League Year.

pbukrish

? உதயநிதி இயக்கத்தில் ஸ்டாலின் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

திராவிடன்!

நா‌.இரவீந்திரன்,

வாவிபாளையம்.

தகப்பன் சாமி

பெரியகுளம் தேவா

காத்திருந்து காத்திருந்து

காந்தி, திருச்சி

மு.க.முத்துவும் மு.க.ஸ்டாலினும் சினிமாவில நடிச்சவங்க.

SriRam_M_20

மிசாவிலிருந்து மீண்டவன்

balasubramni1

ஆகா என்ன பொருத்தம்.

? இந்தச் சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம்?

இப்போ கொரோனா நடத்துறதே பிக்பாஸ் மாதிரி தான் நடந்திட்டு இருக்கு, இதுல தனியா வேற பிக்பாஸ் நடத்தணுமா ஆண்டவர்!

bharathi.neeru

பிக்பாஸுல எலிமினேசன் டாஸ்க் மாதிரி இப்போ அட்மிசன் டாஸ்க். வெளியில இருக்கறவன அப்சர்வேசன்ல அட்மிட் பண்ணலாம். அப்சர்வேசன்ல இருக்கறவன ஐசோலேசன்ல அட்மிட் பண்ணலாம்

Elanthenral

ஊரடங்கில் அனைவருமே 100 நாள்கள் வீட்டிலேயே இருந்து பழகிட்டோம். அதனால் 100 நாள்களுக்குப் பதிலாக ஒரு வருடத்திற்கு வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையைக் கொண்டு வரலாம்.

balasubramni1

சசிகலாவை பிக்பாஸ் நடுவராகவும், அதிமுக எம்எல்ஏக்களைப் போட்டியாளர்களாகவும் வைத்து நடத்தலாம், கூவத்தூரில் நடந்ததை அப்படியே ஆவணப்படம் எடுத்துபோல இருக்கும்.

SriRam_M_20

IPL அயல் நாட்டுக்கு பேக்கப் ஆன மாதிரி, அப்படியே இந்த `பிக் பாஸ்’ஸையும் ஏதோவொரு நாட்டுல, வெளிநாட்டுக்காரங்கள வெச்சு நடத்தலாம். நாங்க சப் டைட்டில் வெச்சு சமாளிச்சுக்கிறோம்.

poonasimedhavi

வாசகர் மேடை: கதறும் கொரோனா!

அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் போன்ற கொரோனா வந்த பிரபலங்களை வைத்து பிக் பாஸ் ஷோவை ஒரு மருத்துவமனை செட்டிங்கில் நடத்தலாம். மக்களுக்கும் விழிப்புணர்வாக இருக்கும்!

prabacurren

மருத்துவ முத்தம் மாதிரி மாஸ்க் முத்தத்தைப் பிரபலப்படுத்துமாறு நடத்தலாம்...

HariprabuGuru

வீடியோ கால்ல வீட்டிலிருந்தபடியே போட்டியாளர்கள் கலந்துக்கலாம்.

- ஸ்பான்ஸர்டு பை ABCD சானிட்டைசர். கோ ஸ்பான்ஸர்டு பை அனா ஆவனா மாஸ்க்

RamuvelK

எங்கு நடத்தலாம்னு வேணா சொல்றேன்...ரஜினியின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நடத்தலாம். E பாஸ் எல்லாம் தேவையில்லை... போய்ட்டு வந்துகூட எடுத்துக்கலாம், பிரச்னை இல்லை.

ISAIYANBAN1

? கொரோனாவுக்கு வாய் இருந்தால் அது இந்தியர்களிடம் என்ன சொல்லும்?

நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரக்கூடாத நேரத்தில் கரெக்டா வருவேன்..!

SJB56856832

கொஞ்ச நஞ்சப் பேச்சாடா பேசுனீங்க...

yogbal_anima

நீ யாரா வேணா இரு, ஆனா என் முன்னாடி வாய மூடி இரு.

guruvetri1

வேணா பாருங்க, நான் வெளியேறினதுக்கு அப்புறம் தைலாபுரத்து மருத்துவரய்யா, எனது வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா வெளியேறியதுன்னு ரெண்டு பக்க அறிக்கை விடுவார்.

pachaiperumal23

செத்துக்கிட்டிருந்த பொருளாதாரத்தை நான்தான் சிதைச்சேன்னு உங்க ஜீதான் என் பேரைச் சொல்லி ஏமாத்தறார்னா, உங்களுக்காவது தெரிய வேணாம், நான் அப்பாவின்னு..?

absivam

நான் என்ன டூரிஸ்ட் விசாவிலயா வந்து இருக்கேன், பத்து நாளில் போயிடுவேன், மூணு நாளில் போயிடுவேன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

SriRam_M_20

“டேய், நான் ஒரு உயிர்க்கொல்லி வைரஸ்டா கொஞ்சமாவது அதற்கு மரியாதை கொடுத்து, கம்மியா கலாய்ங்கடா.”

நித்ய அலங்காரன், திருவையாறு

ரஜினி கட்சி தொடங்காததுக்கு என்னைக் காரணம் சொல்லிடாதீங்க.

UDAYAKUMARKR202

வாசகர் மேடை: கதறும் கொரோனா!

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சினிமாவுக்கு ஓடிடி ஒரு மாற்று. ஐபிஎல்லுக்கு ஆளே இல்லாத மைதானம். அதே போல தேர்தலுக்கு எது மாற்றாக இருக்க முடியும்?

? சென்னையில் கொரோனா எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. முழுவதும் மீண்டு விடுமென்ற நம்பிக்கையில் அதற்கு ஒரு பட்டப்பெயர் கொடுங்களேன்.

? மோடி அமெரிக்க அதிபரானால் என்ன நடக்கும்?

? கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் டாக்டர் வேடத்தில் நம் ஹீரோக்கள் நடித்தால் யாருக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

? உங்களுக்கு நிலாவுக்குச் சென்று வரும் அனுமதி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com