
விஜய் படம் என்றாலே ஒன்லைன்தான் இருக்கும். அதையும் சொல்லிவிட்டால் படம் ஓடாது விகடனாரே.
? நிலவில் குடியேறும் வாய்ப்பு வந்தால் முதலில் என்ன செய்வீர்கள்?
ஒன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து ‘நிலா நிலா ஓடி வா’ என்ற பாடலை நீக்க ஏற்பாடு செய்வேன்.
கே.எம்.ரவிச்சந்திரன், மதுரை
நிலாவுல குளிர் அதிகம்ங்கிறதனால டீக்கடை ஆரம்பிப்பேன்.
R.அருண்குமார், கும்பகோணம்
வீட்டு மொட்டை மாடியில் நின்று பூமியை ஆசை தீரப் பார்ப்பேன்.
ஜெ.ஜான்சி சுப்புராஜ் கடலூர்
பாட்டியிடம், ‘‘உங்களை மிஞ்சும் அளவுக்கு பூமியில் ஒருவர் வடை சுடுகிறார்’’ என்ற தகவலைத் தெரிவிப்பேன்.
selvin.mjs
முதல்ல ஒரு கல்யாணம்... இரண்டாவதா நிலவுல குடித்தனம்.
ranjanikovai
இடத்தை ஆக்கிரமிச்சு ‘ஃபிளாட் பார் சேல்’னு போர்டு வச்சிருப்பேன்.
karuva_official
நிலாக் கவிஞர்களை எல்லாம் அங்க ஒரு நிலவறை கட்டி அடச்சி வச்சிடுவேன்.
its_priyasagi
கூடவே ஒரு புல்டோசர் கொண்டு போகணும். நிறைய மேடு பள்ளம் இருக்கும்னு ஹாலிவுட் படத்துல பார்த்திருக்கேன்... எல்லாம் நிரவி சமமாக்கணும்.
tamilrasanai
ஓடிடி சேனல் ஒண்ணு ஆரம்பித்து, பூமியில் வரும் படங்களை (கண்டிப்பா ‘பூமி’ படம் இல்லை) எல்லாம் நிலவில் ரீலீஸ் பண்ணி கல்லா கட்டுவேன்.
poonasimedhavi

? விஜய்சேதுபதி ஹீரோவாகவும் விஜய் வில்லனாகவும் நடித்தால் அந்தப் படத்தின் ஒன்லைன் சொல்லுங்கள்...
பட்டணத்தில் டாக்டர் விஜய் நடத்திவரும் மருத்துவமனையில் நடைபெறும் ஊழலை, கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி வந்து வார்டு பாயாக வேலையில் சேரும் விஜய் சேதுபதி கண்டுபிடித்து நீதியை நிலை நாட்டுகிறார்!
ஜெ.ஜான்சி சுப்புராஜ், கோண்டூர்
விஜய் படம் என்றாலே ஒன்லைன்தான் இருக்கும். அதையும் சொல்லிவிட்டால் படம் ஓடாது விகடனாரே.
Shivan_11
ஒரு நல்ல போலீஸ், ஒரு கெட்ட போலீஸ். நல்ல போலீஸ் கெட்ட போலீசா மாறிட்டு வராரு. கெட்ட போலீஸ் நல்ல போலீசா மாறிட்டு வராரு. இதுக்கு நடுவுல கெட்ட போலீசைக் கொலை பண்ண ஒரு நல்ல ரவுடியும், நல்ல போலீசைக் கொலை பண்ண ஒரு கெட்ட ரவுடியும் வராங்க. மீதியை ஸ்பாட்ல டெவலப் பண்ணலாம்.
HariprabuGuru
விவசாயத்தை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் மான்ஸ்டர் விஜய்க்கும், நேர்மையான விவசாயி விஜய்சேதுபதிக்கும் இடையே நடக்கும் போர்..!
LAKSHMANAN_KL
கத்தி முனையில் விஜய் கடத்தி வைத்திருக்கும் தன் காதலியான தனலட்சுமியை மீட்க வருகிறார் ராம் ஆகிய விஜய் சேதுபதி.
balasubramni1
சுந்தர் ராமசாமி (‘சர்கார்’ விஜய்) பின்னர் மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாக எண்ணி, கடைசி விவசாயி (விஜய் சேதுபதி) அவரை எதிர்க்கிறார். கார்ப்பரேட் கிரிமினல் vs கடைசி விவசாயி.
HastroFidal
டபுள்ஸ்: ஒரு விஜய் வில்லன், இன்னொரு விஜய் ஹீரோ. ஒரு விஜய்சேதுபதி ஹீரோ, இன்னொரு விஜய்சேதுபதி வில்லன். இரண்டு ஹீரோக்களும் சேர்ந்து இரண்டு வில்லன்களையும் எதிர்க்கிறார்கள்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்

? எடப்பாடி இந்தியப் பிரதமராகவும், மோடி தமிழக முதல்வராகவும் பதவிகளை மாற்றிக்கொண்டால் என்ன நடக்கும்?
எடப்பாடி வித வித கோட் அணிந்து உலகம் சுற்றியிருப்பார். மோடி அம்மா உணவகங்களில் அனைவருக்கும் காலை மாலை இலவச டீ தர உத்தரவிட்டிருப்பார். வேறு எந்த மாற்றமும் நடந்திருக்காது.
எஸ்.விஜயலெட்சுமி கண்ணதாசன், சென்னை
எடப்பாடி சேலத்திலிருந்து சென்னை வழியாக புதுடெல்லிக்கு எட்டுவழிச் சாலை அமைக்க ஆணை இடுவார்.மோடி மும்மொழித் திட்டத்தை ஆதரித்து சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றுவார்.
R Padmanabhan
“டுமில் நாட்டுக்கோ வண்க்கோம்”னு சட்ட சபைலயும், “கவலையே படாதீங்ண்ணா”ன்னு மக்களவையிலும் மொழிப் பரிமாற்றம் நடக்கும்!
iyyanars
டெல்லியில் ஜெயலலிதாவுக்கு நினைவிடமும் சென்னை மெரினாவில் ராமர் கோயிலும் கட்டப்படும்.
எம்.சேவியர் பால், கோவை
தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ சேகுவாரா என்ற பட்டத்தை மோடி-அமித் ஷாவுக்கு தமிழக அமைச்சர்களும், கிருஷ்ணன்-அர்ஜுனன் என்ற பட்டத்தை எடப்பாடி-ஓ.பி.எஸ்க்கு ரஜினியும் கொடுப்பார்கள்.
RahimGazzali
விவசாயிகளின் போராட்டத்தை ‘நான் விவசாயி மகன்’னு சொல்லி எடப்பாடிநிறுத்தியிருப்பாரு. மோடி முதுகை வளைச்சு கும்பிடு போடப் பழகியிருப்பாரு.
MUBARAKAM12
நம் காமெடியன்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் டெல்லி அளவில் ட்ரெண்டிங் ஆவார்கள். மோடி தமிழ் பேசக் கற்றுக்கொண்டு விடுவார்.
ParveenF7
நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா சிலையும், மெரினாவில் சாவர்க்கர் சிலையும் நிறுவப்படும்.
pbukrish
‘‘ஆக, இன்னும் ஆறுமாதத்தில் மோடியின் ஆட்சி கலையும்’’ என்று சொல்லும் ஸ்டாலினையும், மயிலுடன் இருக்கும் எடப்பாடியின் ட்விட்டர் போட்டோவையும், கேட்டும், பார்த்தும் மகிழலாம்.
pachaiperumal23
தமிழக அரசுப் பேருந்து சேவை தனியார்வசம் போகும்.
டெல்லிக்குப் பாலம் கட்டும் கான்ட்ராக்ட் சம்பந்தி வசமாகும்!
parath.sarathi
? காதலர் தினத்தன்று உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் சொல்லுங்களேன்...
அப்படி ஓரு தினம் இருப்பதே ‘காதலர் தினம்’ படம் வந்தபோதுதான் தெரியும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
அன்றுதான்... எங்களின் அன்பு மூத்தமகள் பிறந்தாள். மற்றபடி காதலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
ரா. சுந்தரமூர்த்தி, பிரிதிவிமங்கலம்
பத்தாவது படிக்கும்போது பாபுனு என்னோட classmate ஒரு லெட்டர் தர வந்தான்... கோவமா வாங்கி அங்கே கிழிச்சி எறிஞ்சிட்டு, அவன் போனதும் கிழிச்சிப் போட்ட லெட்டர் துண்டெல்லாம் பொறுக்கிட்டு வந்து சேர்த்து வச்சி படிச்சிட்டேன்.
ananthi.ramakrishnan.1
திருமணம் முடிந்து வந்த முதல் காதலர் தினம். மனைவிக்கு ஆசையாக அழகிய மஞ்சள் நிற ரோஜா ஒன்று கொடுத்தேன். வாங்கிக் கொண்டவர் என்னைச் செல்லமாகக் கிள்ளியபடி சொன்னார், ‘சகோதரிக்குத்தான் மஞ்சள் ரோஜா கொடுக்கணும். காதலிக்கு சிவப்பு ரோஜா கொடுக்கணும்.’ நான் அசடு வழிந்தேன்.
LAKSHMANAN_KL
காதலர் தினத்தன்று யாரோ ஒரு பெண் எனக்கு கால் செய்து ராங்காகப் பேச, உடனே என் காதலி, என் மேல் நம்பிக்கை இல்லை என்று அழ, தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமி போல ‘நீ கேட்ட நான் கொடுத்துவிட்டேன்’ என்று எனது எல்லா பாஸ்வேர்டுகளையும் என் காதலியிடம் கொடுத்தது.
SriRam_M_20
பிப்ரவரி 14 அன்று லீவ் எடுத்துட்டா நமக்கும் ஆள் இருக்குன்னு நினைச்சுக்குவாங்கன்னு லீவ் எடுத்ததைத் தவிர வேறு சுவையானது எதுவும் இல்லை சாரே..!
KarthikeyanTwts
? வாசகர் கேள்வி: இந்தப் பொருள் ரேஷன் கடையில் மானிய விலையில் கிடைத்தால் நல்லது என்று நீங்கள் நினைப்பது..?
தினமும் சாப்பிட வேண்டிய மாத்திரைகள்.
வைரபாலா, மன்னார்குடி
கொசுவத்தி காயில்
நவோதயா செந்தில், புதுச்சேரி
அந்த உளுத்தம்பருப்ப திரும்பக் கொடுத்தாலே நிறைய பேர் வீட்டில் வாரம் ஒருமுறையாவது இட்லி, தோசை சாப்பிடலாமே.
புனிதா, வேளாங்கண்ணி.
வாரம் ஒரு முறை சிக்கனும் மாதம் ஒரு முறை மட்டனும் மானிய விலையில் ரேஷன் கடையில் வழங்க வேண்டும்.
கண்ணன்செழியன், போடிநாயக்கனூர்
சுகர், பி.பி போன்ற பொதுவான நோய்களின் மருந்துகளை மானிய விலையில் கிடைக்கச் செய்யலாம்.
என்.ரம்யா, பெங்களூரு.
சானிட்டரி நாப்கின்
எஸ்.மாலதி, கடலூர்
புத்தகங்கள்
நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
110 ரூபாய்க்கு வெளியே விற்கும் பாமாயில் 25 ரூபாய்க்குத் தருவதுபோல 90 ரூபாய் விற்கும் பெட்ரோலை 20 ரூபாய்க்குத் தரலாம்.
கு.வைரச்சந்திரன், திருச்சி
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள்.
muthiah.kannan.7?
இந்தக் கேள்விக்கான பதில்கள் பிரசுரமாவதற்குள் ரேஷன் கடைகள் தனியார் மயமாகாமல் இருந்தாலே மகிழ்ச்சி.
IamUzhavan
பாதாம், பிஸ்தா பருப்பு வகைகள்... நான் சாப்பிட்டதே இல்லை.
vigneshmos
வஞ்சிரம் மீன்
பா.சுமதி, கோவூர்

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? 40 ப்ளஸ் அங்கிள்ஸ் தங்களை ‘யூத்’ என்று காட்டிக்கொள்வதில் உங்களுக்கு எரிச்சலூட்டும் விஷயம் எது?
? வேல், பங்காரு அடிகளார் என்று ஆன்மிக ரூட் பிடிக்கும் தி.மு.க-வில் உதயநிதி ஒரு பக்திப்படம் நடிப்பதாக இருந்தால் அதற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?
? நீங்கள் வாசித்ததில் உங்கள் நினைவில் நிற்கும் கவிதை நான்கு வரி சொல்லுங்களேன்...
? வாசகர் கேள்வி : டைரக்டர் விசு படங்களைத் தற்போது ரீமேக் செய்தால், அவர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம்... ஏன்?
- கிருஷ்ணா ரத்னம்
? மோடிக்கு ராகுல் ஒரு பரிசு தர வேண்டும் என்றால் என்ன தரலாம், ஏன்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com