பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: சிக்கன் புரபோசல்!

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
நித்யானந்தா

ஓவியங்கள்: பிரவீன்

? உலக சினிமா ஆர்வலர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் என்னென்ன?

`நியூஸ் ரீல்’ ஓடிக்கொண்டிருக்கும்... இது `கொரிய’ படத்தின் அப்பட்டமான காப்பி என்று சொல்வார்கள். எந்தப் படம் வந்தாலும் அதோட ரெபரன்ஸைச் சொல்லி டார்ச்சர் பண்ணுவானுங்க. நிம்மதியா படம் பார்க்கவே முடியாது.

SowmyRed

மூன்றுமணி நேரப் படத்தில் மூன்று செகன்ட் காட்சி பொருந்திப்போனாலும் இது அப்பட்டமான காப்பி என அடித்துப் பேசுவார்கள்!

Umar Mydeen

 உலக சினிமா
உலக சினிமா

அல்டரா ஸ்லோ மோஷனில் ஓடும் உலகப் படங்களை கிளாசிக் படங்கள் எனப் பாராட்டுவது.

MSR Sriram

நாமே சப் டைட்டில் படிச்சு குத்துமதிப்பா யோசிச்சிட்டு இருப்போம். இவுங்க இந்த இடத்தில என்ன சொல்றார் தெரியுமான்னு வைவா ரேஞ்சுக்குக் கேள்வி கேட்பாங்க!

சப்பாணி

நான் தமிழ்ப்படமே பார்க்கிறது இல்லைன்னு பெருமையாச் சொல்றது..

பனங்காட்டு நரி

“இந்த ஜோக்கர் படத்துல ‘வக்கீன் ஃபீனிக்ஸ் தட் பர்ட்டிக்குலர் சீன்ல இன்னும் கொஞ்சம் டெப்தா நடிச்சிருக்கலாம்ல!”ன்னு ஆரம்பிப்பாங்க பாருங்க...

Jeevagan Mahendhiran

? கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாராம். கமல், ரஜினி இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு நச் வசனம் சொல்லுங்களேன்.

கமல்: அரசியல்னா என்ன தெரியுமா? கேமரா இல்லாட்டியும் நடிக்கிறது.

ரஜினி: கமல்... ஆன்மீக அரசியல்னா என்ன தெரியுமா? கட்சி ஆரம்பிக்காமலே ஃப்ளாஷ் நியூஸ்ல வர்றது.

P.M.ANWAR HUSSAIN

ரஜினி: போடா ஆண்டவனே நம்ம பக்கம்.

கமல்: மாமே, அது ஆண்டவன் இல்ல, `ஆள்பவன்.’

ரமேஷ்.ஏ

கமல்: போர் வரட்டும்னு சொன்னீங்களே...

ரஜினி: ஆமாம்...

கமல்: போருக்கு முன்னே முரசொலி கேட்குமே, பரவாயில்லையா...

Adhirai Yusuf

ரஜினி, கமல்
ரஜினி, கமல்

கமல்: பாருங்க... நான் கட்சி ஆரம்பித்து அரசியல் பேசாமல் நிம்மதியா இருக்கேன்.

ரஜினி: நானும்தான்... அரசியல் பேசிக்கொண்டே கட்சி ஆரம்பிக்காமல் நிம்மதியா இருக்கேன்.

புகழ்

வில்லனிடம்

கமல்: நிரீஷ்வரவாத ராஜநீதியும், ஆன்மீக பேரரசியலும் இணைந்து செல்வம் சேர்ப்பது கண்டு அஞ்சும் பழைய அரசன் மகனை துவம்சம் செய்வோம்!

ரஜினி: அன்பு அதிகமா ஆஷே கம்மியா இருந்தா, நிம்மதி தானா வரும்.

Bhakthi Veeran

ரஜினி: அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்...

கமல்: அது கண்ணாடி ரஜினி!

Ramuvel

Kanthasamy

கமல்: சொல்லத்தான் நினைக்கிறேன்...

ரஜினி: சொல்லித்தான் தவிக்கிறேன்...

சரவணன். M

ரஜினி : கமல் ஜீ, நீங்க எப்போதுமே யாருக்கும் புரியாத மாதிரியே பேசுறீங்க, ஏன்?!

கமல்: எனக்குப் புரியறது உங்களுக்குப் புரியலைன்னா அதுக்கு உங்க புரிதல் காரணமே அன்றி என் அறிதல் காரணமல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் ரஜினி.

சுனா.பானா

ரஜினி: நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.

கமல்:அது அரசியலுக்கு ஓகே. ஷூட்டிங்கிற்கு இப்ப வாங்க!

manipmp

? காதலர் தினத்துக்கு வித்தியாசமான ஒரு லவ் புரபோசல் வசனம் சொல்லுங்களேன்.

அமேசானும் ஆடம்பரப் பொருள்களுமாய் காலம் முழுவதும் கட்டுண்டு கிடப்போம் வா.

Pachai Perumal A

அடுத்த காதலர் தினத்தையும் நீ என்னோடும் நான் உன்னோடும் கொண்டாடணும்.

M. கருணாகரன், சென்னை

நான் பிரதமர் ஆனால் இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தி அல்லது லக்ஷ்மி படத்திற்கு பதில் உன் புகைப்படத்தைப் போடுகிறேன்.

Sriram Murugan

சிக்கன் புரபோசல்
சிக்கன் புரபோசல்

பத்திரிகையாளர்போல்

உன் பதிலுக்குக் காத்திருக்கிறேன்

நீயோ பிரதமர்போல்

என்னை ஏன் சந்திக்க மறுக்கிறாய்?

பாலசுப்ரமணி

வீட்டில் இருந்து லவ் செய்வோம் - பா.ஜ.க-வும் இந்து மக்கள் கட்சியும் காதலர் தினத்தில் வெளியே வந்தாலே கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க.

M Sriram

நான் தாமரையாகவும் நீ தமிழகமாகவும் உள்ள நம் காதல் எப்போது மலரும் என் அன்பே!

கருப்பு குல்லா

விரைவாக என்னை ஏற்றுக்கொண்டுவிடு... உன் அப்பன் குடியுரிமைச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்குள் உன் இதயத்தில் குடியேறி விடுகிறேன்.

Enos Ibrahim

நீ கோழிக்கறி, நான் பாஸ்மதி அரிசி. வா சேர்ந்து பிரியாணி செய்வோம்.

Pavithra Pandiyaraju

? பா.ஜ.க தலைவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார், ஏன்?

அமைச்சர் ராசேந்திர பாலாஜி, ஹெச்.ராஜாவுக்கே `செக்’ வைக்கும் விதமாகப் பேசிவருவதால்!

ட்விட்டர் போராளி

ஹெச்.ராஜா. நோட்டாவையே வெல்ல முடியாவிட்டாலும், ஜே.பி.நட்டா ரேஞ்சுக்குப் பேசுவார்.

மநீதன்

நிர்மலா சீதாராமன். இந்திய பொருளாதாரத்தை உச்சத்துக்குக் கொண்டு போனவங்க.

ஒரு தல இராவணன்

தமிழகத்தில் பி.ஜே.பி-யில் உள்ள அனைத்துத் தலைவர்களும் பொறுப்பாளர்களும்தான். வேறென்ன, கட்சி வேரூன்ற விடாமல் தடுத்து, தமிழகத்தைக் காப்பாற்ற வந்தவர்கள் இவர்கள்தான்.

Anbu Bala

வாசகர் மேடை: 
சிக்கன் புரபோசல்!

பொன்னார்- தமிழகத்து அரசியலில் நாராயணசாமி இல்லாத குறையைத் தீர்த்ததால்.

SriramMurugan20

சுப்பிரமணியன் சுவாமி! - நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் தாலி எடுத்துக் கொடுக்கப் போனவர், தாலி கட்டத் தயாரான அந்த ‘வெகுளித்தனத்துக்காக..!’

Laks Veni

? நித்யானந்தா பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? நித்யானந்தா பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

நான் சிவனேன்னுதானேடா இருந்தேன்?!

செ. செந்தில்குமார்

The monk who bought his ferrari.

manikandan

“அனுபவி நித்தி அனுபவி”

எமகாதகன்

வணக்கம்டா மாப்பிளை கைலாசாவிலிருந்து...

PrabuG

நித்யானந்தா
நித்யானந்தா

E=MC 2

கயத்தை சத்யா

திருவண்ணாமலை To “தீவென்னவிலை”

பொறியாளர் கோகுல்ராம் சதாசிவம்

மறைந்தும் மறையாமலும்

S கருணாகரன் சென்னை

சூரியனையும் நிறுத்துவோம்

ravichandran

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

காதல் ரெய்டு செய்வாயா?
காதல் ரெய்டு செய்வாயா?

? ரெய்டு நடத்த வரும் இன்கம்டாக்ஸ் ஆபீஸர்தான் வில்லன் என்றால், ஹீரோக்கள் என்ன பன்ச் பேசுவார்கள்?

? பாய் பெஸ்ட்டி - சிறுகுறிப்பு வரைக

? தமிழ் சினிமாக்கள் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

? 90ஸ் கல்லூரி வாழ்க்கை, 2k கல்லூரி வாழ்க்கை - என்ன வித்தியாசம்?

? மோடி - ராகுல் - கெஜ்ரிவால் மூவரும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com