கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: பாட்டு பட்ட பாடு!

எடப்பாடி, ட்ரம்ப்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி, ட்ரம்ப்

இதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க எடப்பாடி.

? எடப்பாடியும் ட்ரம்பும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?

“கபசுரக் குடிநீர், நிலவேம்புக் கசாயம் குடிச்சா கொரோனா வராது... அதுலயும் ஏழைன்னா கண்டிப்பா வராது ஜி”

“நாங்கல்லாம் எப்பவும் டெட்டால், லைசால் தான் குடிக்குறது... அக்காமாலாவைவிட நல்லாத்தான் இருக்கு.”

Ravikumar MGR

ட்ரம்ப் : இக்கட்டான சூழலை எப்படிச் சமாளித்தீர்கள்?

எடப்பாடி : பால் பாக்கெட் போட்டுதான்.

Ramesh Elamathy

எடப்பாடி: எனக்கே தெரியாமல் எங்கள் கட்சி செல்லூர் ராஜு கிட்ட நீங்க பேசியிருக்கீங்க ட்ரம்ப்.

ட்ரம்ப்: இதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க எடப்பாடி.

ட்ரம்ப்: நீங்க கிருமி நாசினியை உடம்பில் ஊசி மூலம் செலுத்தலாம்னு சொன்னதை வெச்சுதான்.

amudu gurusamy

எடப்பாடி, ட்ரம்ப்
எடப்பாடி, ட்ரம்ப்

“என்ன எடப்பாடி சார், லாஸ் ஏஞ்சல்ஸ் என்று சொல்லக்கூடத் திணறினீர்களாமே?”

``நான் திணறியது இருக்கட்டும், நீங்கள் இதைத் திணறாமல் சொல்லுங்கள் பார்ப்போம்... கபசுரக் குடிநீர்.”

(யாருகிட்ட ?!)

இளையநிலா

எடப்பாடி: சார் தமிழ்நாடு சார்பாக உங்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்னு இருக்கோம்.

ட்ரம்ப்: என்ன பட்டம்?

எடப்பாடி: `அமெரிக்காவின் செல்லூர் ராஜு’ங்கிற பட்டம்தான் சார்.

பாலசுப்ரமணி

? கருத்துகள் சொல்லிக் குவிக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு அடைமொழி ப்ளீஸ்!

பேசாத பேச்செல்லாம் பேச வந்தாய்.

JaNeHANUSHKA

ராஜேந்திர வாயாலஜி.

syedbuhari.vm

சயின்டிஸ்ட் செகண்ட் கிரேட்

NedumaranJ

கருத்தானந்தா

ARiyasahmed

அரியவகை அறிவாளி

karthik_thinks

? பழைய ஹிட் பாடல்களில் மிக மோசமாகப் படமாக்கப்பட்ட பாடல் என நீங்கள் நினைப்பது எது?

`3’ படத்தில் `கொலைவெறி’ பாடல். பாட்டுக்கு இருந்த எதிர்பார்ப்பு காட்சியமைப்பில் இல்லை எனப் பேசப்பட்டது.

Thaadikkaran

அதையேன் கேக்குறீங்க. கண்ணே என் கண்மணியே பாட்ட நீங்களே ஒருவாட்டி பாருங்க.

kanapraba

சிம்பு
சிம்பு

எந்தவித சந்தேகமும் இல்லாமல் - சின்னப்புறா ஒன்று (அன்பே சங்கீதா படம்). தேங்காய் சீனிவாசன் பியானோ வாசிக்கற அழகே அழகு.

vbss75

என் உயிர்த்தோழன் படத்தில் வரும் அடி ஏ ராசாத்தி...

urs_venbaa

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. ‘ஒருதலை ராகம்’ சங்கர் முகத்துல கொஞ்சம்கூட எக்ஸ்பிரசன் இருக்காது...

Ntramesh_kpm

என்னடா பண்ணி வச்சிருக்கீங்கன்னு கேட்க வைக்கும் கொத்து பரோட்டா போடப்பட்ட அருமையான இளையராஜா பாடல்கள்...

* ஆனந்தகும்மி - ஓ.. வெண்ணிலாவே... வா ஓடி வா...

* வாழ்க்கை - மெல்ல மெல்ல என்னைத் தொட்டு...

* இன்று நீ நாளை நான் - பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.

absivam

‘செல்வி’ படத்தில் வரும் `இளமனது பலகனவு’ அருமையான பாடல்... இரு நாய்கள் டூயட் பாடுவதுபோல் அமைந்திருக்கும்.ரொம்ப அநியாயம் சார்!

prabacurrenn

நினைவெல்லாம் நித்யா படத்தில் வரும் `ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை எஸ்.பி.பி & ஜானகி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பாடிருப்பாங்க. அப்படிப்பட்ட பாடலைப் படமாக்கிய விதம் நின்னுக்கோரி வர்ணம் கவுண்டமணி காமெடி ரேஞ்சுலதான் இருக்கும்.

ival__nila

தருவியா தரமாட்டியா தரலைன்னா உன்பேச்சு கா... சாணக்கியா படத்தில் வருகிற இந்தப் பாடலில் சரத்குமார், நமீதா இருவரும் பள்ளிச் சீருடையில் ஆடுவதைப் பார்த்து என் இதயம் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நின்று பின் இயங்கியது.

pachaiperumal23

கவிதை அரங்கேறும் நேரம், பல கதைகள் உரு மாறும் காலம்... மொட்டை மாடியில் செய்ய வேண்டிய warm-up excercise எல்லாம் செட்டில் செய்து பார்க்கும்படி இல்லை.

prabhu65290

? லாக்-டௌனை வைத்துப் படம் எடுப்பதாக இருந்தால் எந்த இயக்குநர் என்ன டைட்டில் வைப்பார்?

செல்வராகவன் : மூன்றாம் உலகம்

சந்தோஷ், சென்னை

கமல்: கொரானா இருக்கிறான்

R. Kaliamoorthy சென்னை

VVV

(வீட்டிலிரு...

விலகியிரு...

விருப்பம்போலிரு)

STR @ சிம்பு இயக்கத்தில்

கிரன்கப் அன்ஜலின்

பார்த்திபன் - ஒத்த வைரஸ்

நளி2K20

கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள்

டி ராஜேந்தர்: ஒரு தலை சோகம்

கதிஜா ஹனிபா திருச்சி

`அந்த லாக்டௌன் நாட்கள்’ - கே. பாக்கியராஜ்

Viji Kumaran

வீ.சேகர்: கூடாமல் வாழ்ந்தால் கோடி நன்மை

urs_venbaa

வெங்கட்பிரபு: வுகான் 430000

pbukrish

சிறுத்தை சிவா: விலகியிரு (வி சென்டிமென்ட்படி)

parama.paramaguru

ஹரி: போதும்டா சாமி

KarthikMSomasundaram

? கிரிக்கெட் வீரர்களில் மிகவும் ஸ்டைலான ஆட்டக்காரர் என்றால் யார்? ஏன்?

வேறொரு கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான போட்டியின்போது அந்தக் கல்லூரி மாணவி ஒருவர் தன் டிபன் பாக்ஸில் தோசையும் கறிக்குழம்பும் கொண்டுவந்து கொடுத்து ‘நீங்க நல்லா ஸ்டைலா ஆடுறீங்க’ன்னு சொன்னதால... (1998)

SeSenthilkumar

ஸ்மிரிதி மன்தனா

இன்செட் அவுட் ஷாட்டை இவங்க ஸ்டைலிஷா அடிக்கிறத பார்க்குறதே க்ளாஸா இருக்கும்.

RamuvelK

சௌம்யா சர்கார்

பௌன்சர்க்கு பால் வரும்போது அடிக்கும் பெரிஸ்கோப் ஸ்டைல்.

ரொம்ப அசால்ட்டா டீல் பண்ணுவாரு...

ரசிச்சுப் பார்ப்பேன்.

Algebraiway

அசாருதீன் - இந்தியா.

இரண்டு கைகளின் மணிக்கட்டுகள் மட்டுமே அசையுமாரு இவருடைய பேட்டிங் இருக்கும். தரையோடு தரையாக பந்து பவுண்டரி செல்லும். இரண்டு ஃபீல்டர்களுக்கு நடுவில் பந்தை அடித்து விளையாடுவதில் இவர்தான் கில்லி.

altaappu

விவியன் ரிச்சர்ட்ஸ்..‌. பப்புல்கம் மென்னுகிட்டே ஹெல்மெட் போடாம ஆடுறது செம ஸ்டைல்.

Ntramesh_kpm

ஸ்ரீகாந்த், ஓப்பனிங் இறங்கி அவுட் ஆவதைப் பற்றி பயமே இல்லாமல் ஃபோர், சிக்ஸ், விளாசும் துணிச்சலான அணுகுமுறைக்காக.

ARiyasahmed

சௌரவ் கங்குலி. இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கும் ஸ்டைல். செம சூப்பர்.

மகிழி M.நிஃமத் அலி அடியக்கமங்கலம்

ஆண்ட்ரூ ரசல்... அவரது அதிரடி பேட்டிங்க்காகவும், ஹேர் ஸ்டைலுக்காகவும்!

SriRam_M_20

கிரிக்கெட் வீரர்கள்
கிரிக்கெட் வீரர்கள்

எங்க அப்பாவும் ஸ்டைலான ஃபிளேயர்தான் ஆனா பால அடிக்கமாட்டாரு; என்னைத்தான் அடிப்பாரு புஹாஹாஹாஹா...

sheik_twitts

பென் ஸ்டோக்ஸ் தான். ஆள் பார்க்க கார்ட்டூன் கேரக்டர் மாதிரி இருப்பார், டாட்டூ வேற. நல்ல பேட்டிங், பௌலிங்.

se_balamurugan

ஜி.ஆர். விஸ்வநாத். பாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக இவர் அடிக்கும் ஸ்கொயர் கட் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும்.கமென்டேட்டர்கள் புகழக் கேட்டிருக்கிறேன்.

parveenyunus

வாசிம் அக்ரம் - கன்ட்ரோல்டு வேகத்தில், அட்டகாசமான லைன் அண்ட் லென்த்துடன், இடது கையால் ஸ்டைலாக அவர் பந்து வீசும் அழகு இருக்கே... வேற லெவல்..!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி-11,

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை
வாசகர் மேடை

? ஐபிஎல் முடியும் தருவாயை எட்டிவிட்டது (நடந்திருந்தால்). யார் வெற்றி பெற்றிருப்பார்கள். என்ன பேசியிருப்பார்கள்?

? டாஸ்மாக்கைத் திறக்காமல் கஜானாவை நிரப்ப தமிழக அரசுக்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்...

? கிரிக்கெட் வீரர்கள் டிக்டாக் வீடியோக்கள் போடும் இந்த நேரத்தில் எந்தெந்த இந்திய வீரர்களுக்கு எந்தெந்த தமிழ்ப் பாட்டுகள் பொருத்தமாய் இருக்கும்?

? உங்கள் அலுவலக வீடியோ மீட்டிங்கில் நடந்த குபீர் சம்பவம் ப்ளீஸ் (சுருக்கமாக)

? கமலுக்கு ட்வீட், ரஜினிக்கு கேட். தமிழின் பிற முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு எது அரசியல் அடையாளமாக இருக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com