
முதல்ல கைகளைத் தட்டிப் பயிற்சி எடுத்துக்கலாம். பேட்டிங், பெளலிங், பீல்டிங்குக்கு கைகளுக்கு வலிமை கூடும்.
? இந்த ஓய்வுக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி எப்படித் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
தோல்வி அடைந்த பழைய மேட்ச்களைப் பார்த்துவிட்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தவறுகளை ஆராய்ந்து வெற்றிக்குத் திட்டமிடலாம்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
மொட்டைமாடியில் ஸ்கிப்பிங், ஜம்பிங், ரன்னிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதுடன், மொட்டைமாடி சுவரின் விளிம்பில் கீழே விழாமல் வேகமாக நடக்க முயன்று (இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டுதான்) பயிற்சி பெறலாம்.
ஏ.முருகேஸ்வரி, தென்காசி
சிவாஜி கணேசனின் ‘கௌரவம்’ படத்தில் வீட்டிலிருக்கும் உறுப்பினர்களைக் கொண்டு மாதிரி கோர்ட்டை உருவாக்கி வாதாடுவதுபோல் மாதிரி மைதானத்தை உருவாக்கி விளையாடுவது போல் நினைத்துப் பயிற்சி செய்யலாம்.
க.அய்யனார், தேனி.
பிட்னஸ் முக்கியம். ஒரு படத்தில யோகிபாபுவை ஒரு பையன் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடும்போது நான் பேட்டா பாலான்னு கேப்பாரு.அதுக்கு அந்தப் பையன் ஸ்டம்பே நீதான்டாம்பான். அந்தக் கதை ஆகிடக்கூடாது.
pasumpon.elango?
உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு பந்தையும் கொரோனாவாக நினைச்சு ஒண்ணரை டன் வெயிட்டுடன் ஓங்கி அடிக்கப் பழகுங்க!
suwloYfhHuwsTn7

கைதட்டவும், விளக்கு ஏத்தவும்னு சொல்லி ட்வீட் போடணும்.
Veenaa_ponavan
பிளே ஸ்டோரில் உள்ள கிரிக்கெட் கேம் விளையாடி பாயின்ட் ஸ்கோர் பண்ணலாம்.
p_jegatha/
மூன்று வேளை சாப்பாடு, மதியம் குட்டித்தூக்கம், ஈவ்னிங்ல தியேட்டர், ஷாப்பிங், நைட்ல பார்ட்டி, அப்புறம் நல்ல தூக்கம். இது மட்டும் போதும். எப்படி விளையாடறதுன்னு கிரவுண்ட்ல விளையாடும் போது பார்த்துக்கலாம்.
SowThanishka
சென்னை 28 படம் பார்க்கவேண்டும்.
poonasimedhavi/
வாஷிங் மெஷினுக்குப் பதிலாக, கல்லில் அடித்துத் துணி துவைக்கலாம். பவுலர்களுக்கு இன்ஸ்விங்கரும், அவுட்ஸ்விங்கரும் தெறிக்கும்.
RamuvelK/
ஈகோ இருக்கறதா சொல்லப்படுகிறவங்க தங்களுக்குள் பேசி, தங்களுக்குள் இருக்கும் ஈகோவை (?) விட்டொழித்தால் future -ல டீமில் எந்தக் குழப்பமும் ஏற்படாது!
KarthiKeyanTwts
முதல்ல கைகளைத் தட்டிப் பயிற்சி எடுத்துக்கலாம். பேட்டிங், பெளலிங், பீல்டிங்குக்கு கைகளுக்கு வலிமை கூடும்.
அப்புறமா லைட் ஆப் பண்ணிட்டு கேண்டில் ஏத்திவச்சுக்கிட்டு பிராக்டிஸ் செய்யலாம். இதன் மூலம் கண்பார்வைத் திறன் அதிகரிக்கும்.
saravankavi/
? துப்புரவுப் பணியாளர்கள் - ஒரே வரியில் நெகிழும்படி கூறவும்.
உணர்ச்சிகளைத் தூரம் வைத்துத் தூய்மையின் பக்கம் நிற்பவர்கள்!
க.அய்யனார், தேனி.
இந்த மாதிரி நேரத்தில் அவர்களைப் பற்றிப் பேசிவிட்டு மறந்துவிடுகிறோம். அதுதான் நமது குறைபாடு.
pachaiperumal23
அசுத்தங்களைச் சுத்தம் செய்துவிட்டு ஆஸ்துமாவைக் கூட்டிக்கொள்ளும் சமூகத்தின் நுரையீரல்.
Ntramesh_kpm/
ஊரடங்கிலும் ஊரழுக்கை வெளுப்பவர்கள்.
fakhrudeen.
இவர்கள், அள்ளிக் கொடுப்பவர்கள் அல்லர், அள்ளித் தடுப்பவர்கள்..!
/laks.veni
குப்பை வண்டி பின்னே செல்வதே கொடுமையா இருக்க, அதிலேறிப் பயணம் செய்யும் அவர்கள் வேற லெவல்.
vrsuba/1
குப்பையிலும் துப்பாதீர்...
துப்புரவுப் பணியாளரும்
மனிதரே...
mekalapugazh
தூய்மைப்பணியாளர் எனப் பெயரளவில் கௌரவப்படுத்தப்பட்டாலும் ஊதிய அளவில் இன்னும் அகௌரவ நிலையே!
cpsenthilkumar8
ஊரே சானிட்டைசர் போட்டுக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்போது தானே ஒரு சானிட்டைசராக மாறி வெறும் கைகளால் ஊரையே சுத்தமாக்கும் கலியுக தெய்வங்கள்.
VijiKumaran1
? வேற்றுக்கிரகத்துக்குச் செல்வதாக இருந்தால் பூமியிலிருந்து எந்தப் பொருளை எடுத்துச் செல்வீர்கள்?
தாயக்கட்டையும் பல்லாங்குழிப் பலகையும்.
த.ராஜவேல் தேனி
எதுவுமே எடுக்காமதான் போகணும்... கிரகத்துக்குப் போகும்போது எந்த ‘கெரக’த்தை எடுத்துட்டுப் போறது?
safath.ahamed
இளையராஜாவின் பாடல்களை.
gangai.prabakaran
வேற்றுக் கிரகத்திற்குச் செல்வதாக இருந்தாலும் சில மதத் தலைவர்களையும், சாதிக்கொருவரையும் அழைத்துச் சென்றால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கிரகத்தை சகதியாக மாற்றிப் பொழுதுபோக்க வசதியாக இருக்கும்...!
govindasamy.kalaimani.
தலகாணி, பாய், புளிச்சோறு.
M_KAARTHIKA
சீமான் சொன்ன கதைகளை ஒரு பென் டிரைவில். பொழுது போக வேண்டாமா?
suwloYfhHuwsT
லாக்டவுன் உத்தரவால இப்பவே வேற்றுக்கிரகத்துல இருக்கிற மாதிரிதான் இருக்கு. செல்போன் இல்லைனா ஜெயில்ல இருக்கிற மாதிரிதான் இருக்கும். அதனால ஃபுல் சார்ஜ் இருக்கிற மாதிரி மொபைல் போனும் பவர் பேங்க்கும்தான் வேணும்.
SowThanishka
ஆப்பிள்... இத சாப்பிட்டுதானே உலகமே இப்படி மாறியிருக்கு.
Ntramesh_kpm
ஒரே வாரத்தில் வேற்றுக் கிரக பாஷை பேசுவது எப்படின்ற புத்தகம்.
vr suba
ரேடியோ டெலஸ்கோப் எடுத்துச்சென்று புதுப்பேட்டை தனுஷ் மாதிரி `ஹலோ! யார்னா இருக்கீங்களா? அமைதியா இருக்குது... ரொம்ப அமைதியா இருக்குது, தாங்க முடியல’ன்னு புலம்பி வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வேன்.
gmuruganandi/
கோவில்பட்டிக் கடலைமிட்டாய் ஒரு பாக்கெட். அங்க கிடைக்குமோ... என்னவோ..!
maathorubhagan
? வீட்டிலேயே இருக்கும் இந்த நாள்களில் ‘அட. இதை இவ்வளவு நாள் நாம கவனிக்கலையே?’ என்று நீங்கள் ஆச்சர்யப்பட்ட விஷயம் எது?
என் புருசனுக்கு சமைக்கத் தெரியும்ங்கறது.
Sowmya red
என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் அனைத்து மேரி பிஸ்கட்களிலும் சரியாக 17 ஓட்டைகள் இல்லாமல், சற்று முன்னே பின்னேதான் இருக்கிறது என்பதை.
amudu.gurusamy.
ஆஃபாயில் உடையாம செய்றேன் சார்! (நமக்குள்ளயும் ஒரு சமையல் மாஸ்டர் இருந்திருக்கான் பாரேன்)
pbukrish
மதிய நேரங்களில் ஒரு ஆழ்ந்த அமைதி இருப்பதை இப்போதுதான் கவனிக்குறேன்!
karthik_thinks

விகடன் வார இதழ்கள் கடையில் விற்றுத்தீர்ந்து விட்டால், இனி `விகடன் மொபைல் ஆப்’ மூலம் படித்துக்கொள்ளலாம் எனத் தெரிந்துகொண்டேன்.
pbukrish
சமைக்கும்போது நாம் கூட இருந்து ஹெல்ப் பண்ணும்போது அவர்களின் கண்ணில் தெரியும் சந்தோஷம்.
Veenaa_ponavan
போலீஸ் அடின்னா அது இப்படித்தான் இருக்கும்னு!
Ramesh46025635
ரொம்ப நாள் ஆச்சே... சொந்தங்களுக்கும் நட்புகளுக்கும் பேசுவோம் என்று எண்ணி கான்டாக்ட் லிஸ்ட் பார்க்கும்போது “அடேங்கப்பா... நம்ம மொபைல்ல இவ்வளவு கான்டாக்ட் நெம்பர்ஸ் இருக்கா...?”
saravankavi
பக்கத்து வீட்டில் புறா வளர்ப்பதை இப்போதான் கவனித்தேன்! நன்றாகப் பொழுது போகிறது, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டே!
h_umarfarook
என் ரெண்டு வயசுப் பொண்ணு என்கிட்ட வந்து பேசுறா, பேசுறா, பேசிகிட்டே இருக்கா. அவ இவ்ளோ பேசுவான்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.
thangaraja85/
? நிறைய பார்த்துவிட்டோம். இதுவரை பார்க்காத, வடிவேலு வசனத்துக்குப் பொருந்திப்போகும் ஒரு விஷயத்தைச் சொல்லுங்கள்.
இங்கு மீன்கள் விற்கப்படும் - 20th Feb - 20 % hike and Bonus கிடைச்சா போதும் மச்சி. 2nd Mar - 10 % hike மட்டும் கிடைச்சா போதும் மச்சி. 28th Mar - வேலையிலிருந்து தூக்காம சம்பளம் மட்டும் கொடுத்தால்கூடப் போதும் மச்சி (after Corona)
சிபி .பா, சென்னை
எங்கடா இருக்க. சாப்பிட வா...
உங்க பொடனிக்குப் பின்னாலதான் இருக்கேன் ஓவர் ஓவர்...
urs_venbaa/
“பி கேர்ஃபுல்! என்னைச் சொன்னேன்!”
பக்கத்துல இருக்குறவங்க தும்மினாலோ, இருமினாலோ, எனக்கு நானே சொல்லிக் கொள்வது.
safath.ahamed
ராங் நெம்பர்னா கட் பண்ண வேண்டியதுதான.அதேன் போன் போட்டா ராங்கா இருமிக் காமிக்கிறது.
mani.pmp.5
அடுத்த மாதமும் கொரோனா நிதி கேட்டு எடப்பாடியார் மோடிக்குக் கடிதம் எழுதினால் மோடியின் மனக்குரல் `சங்கமே அபராதத்தில்தான் ஓடுது.’
balasubramni1/
கொரோனாவில் தெரிந்து கொண்ட மாபெரும் உண்மை... ‘மல்லாந்து படுத்துகிட்டு விட்டத்தைப் பாக்குறது எம்புட்டு சுகமா இருக்கு.’
pachaiperumal23
5 மணிக்கு 5 நிமிடம் கை தட்டணும், 9 மணிக்கு 9 நிமிடம் டார்ச் அடிக்கணும்.
சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.
RamuvelK
இது ஒரு ரத்த பூமி. இது சாதா இரத்தம் இல்ல; கடைக்குப் போய் போலீஸ் கிட்ட அடிவாங்கி வந்த வீர ரத்தம் செல்லம்.
vigneshmos
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? பிரஸ் மீட்டில் பேச வேண்டுமென்ற மியூசிக்கல் சேர் விளையாட்டில் அடுத்து யார் வரலாம்; ஏன்?
? தமிழ்ப்படங்களில் வந்த வில்லன் கேரக்டர்களில் ஒருவருக்குக் கொரோனா வரலாமென்றால் உங்கள் சாய்ஸ் யார்; ஏன்?
? வொர்க் ஃப்ரம் ஹோமின் போது அதிகம் தொல்லை தரும் விஷயம் அல்லது நபர் யார்?
? ஐ.பி.எல் நடந்திருந்தால் இன்னேரம் 25 போட்டிகள் முடிந்திருக்கலாம். அப்போது, பெங்களூரு அணி எந்த நிலையில் இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்?
? மோடி - ட்ரம்ப் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com