சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: பொருளாதாரம் நிமிர்ந்தாச்சு!

நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
News
நித்தியானந்தா

வாசகர் மேடை

?சரிந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தை நிமிர்த்த மோடிக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு ஜாலி அட்வைஸ் கொடுங்களேன்!

பொருளாதாரம் சரியவே இல்ல, நல்லா நிமிர்ந்திடுச்சின்னு பார்லிமென்ட்ல ஒரு மசோதா தாக்கல் பண்ணிடுங்க. ஒரு பய வாய் தொறக்க மாட்டான்.

Sundar

யாகம் செய்து பொருளாதாரம் சரியாமல் பார்த்துக்கொள்ளலாம்..!

Thaadikkaran

அம்பானியைப் பிரதமராகவும் அதானியை நிதி அமைச்சராகவும் நியமித்து அவர்கள் சொத்தை யெல்லாம் நாட்டுடைமையாக் கிவிடலாம். மோடி டூரிஸ்ட் கைடாகி நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்தலாம். நிர்மலா சீதாராமன் அகில இந்திய அளவில் வெங்காய மண்டி வைத்து வியாபாரத்தைப் பெருக்கலாம்.

chithradevi

பொருளாதாரம் நிமிர்ந்தாச்சு!
பொருளாதாரம் நிமிர்ந்தாச்சு!

சொத்துக்குவிப்பு வழக்கு புகழ் நீதிபதி குமாரசாமியிடம் ஆலோசனை கேட்டு, பொருளாதாரக் கணக்கு வழக்கை சரி செய்யலாம்..!

KLAKSHM

எலுமிச்சம்பழத்தை நாட்டின் நாலு பக்கத்திலும் வைக்கச் சொல்லணும்.

RockingHaneefa

ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிவதுதான் நாடு வல்லரசாக முன்னேறுகிறது என்பதற்கான ஆதாரம் என மக்களை நம்ப வைக்கலாம்.

S.கருணாகரண், சென்னை.

ஒண்ணும் சொல்றதுக்கில்லை. சொன்னால் மட்டும் கேட்கவா போறாங்க.

UDAYAKUMARKR

திரையரங்குகளில் மீண்டும் தேசிய கீதம் கட்டாயம் என்று சொல்லலாம். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்கக் கூடாது!

இளையநிலா

பைசா கோபுரம் மேலும் சாயாமல் இருக்க அதன் எதிர் திசையில் பெரிய பள்ளம் பறிச்சாங்களாம். அதைப்போல இன்னொரு பெரிய பள்ளத்தை நோண்டினா பொருளாதாரம் மேலும் சரியாது.

vishwan216

இயக்குநர் விக்ரமனை நிதியமைச்சர் ஆக்கிட்டா ஒரே பாட்டுல உயர்த்திடுவாரு...

கி.செளமியா, வந்தவாசி.

? அதென்னவோ உப்புமா என்றாலே பலருக்கும் வெறுப்பு. உப்புமாவை நேசிப்பவர்கள் மட்டும் அதன் சிறப்பை இரண்டே வரிகளில் சொல்லவும்.

தொட்டுக்கொள்ள சர்க்கரை, சாம்பார், சட்னி போன்ற சைடிஷ் இல்லாவிட்டாலும், அப்படியே சாப்பிடலாம்...!

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

சீனியோடு ஸ்வீட் டிஷ்ஷாகவும், இட்லிப்பொடியுடன் கார டிஷ்ஷாகவும் சாப்பிடலாம். டூ இன் ஒன் டிஷ்.

சேதுராமன்

வாசகர் மேடை: பொருளாதாரம் நிமிர்ந்தாச்சு!

வாழ்க்கைமாதிரிதான் உப்புமா இருக்கும். அதுமேல சர்க்கரையைத் தூவி அதைக் கேசரியா நினைச்சு சாப்பிடப் பழகிக்கணும்.

ckcbe

காசில்லாத நேரத்துல உப்புமாதான் சார் கடவுள்.

antojeyas

ஆபீசுக்கு எடுத்துட்டுப் போனா எவனும் கை வைக்க மாட்டான். எல்லாம் எனக்கே... எனக்கே..!

bommaiya

சைடிஷ் இன்றி உப்புமாவைத் தனியாகவும் சாப்பிட்டுவிடலாம்.

முதல் நாளே மாவு அரைத்து வைக்க வேண்டும் (அ) ஒரு மணி நேரம் பிசைந்து வைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின்றி பிரெட் & ஜாம்போல டக்கென்று தயார் செய்யக்கூடிய ஓர் உணவு உப்புமா.

vaira.bala.12

வாழ்க்கையே வெறுத்து இருக்கும்போது உப்புமா சாப்பிட்டால் `உப்புமாவைவிட வாழ்க்கை நல்லா தானே போய்க்கிட்டு இருக்கு’ன்னு எண்ணம் தோணும்.

abiramisree

உப்புமாவில்தான் எத்தனை விதம், வெள்ளை ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, பென்ஸ் ரவா உப்புமா, அவல் உப்புமா, ராகி அவல் உப்புமா, அரிசி உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, வெஜிடபிள் உப்புமா...

இந்த லிஸ்ட் போதுமா,இன்னும் கொஞ்சம் வேணுமா.

sri.vidya.

? உங்கள் சுட்டிக்குழந்தைகள் செய்த, ரசிக்கும்படியான குறும்பை நான்கே வரிகளில் சொல்லவும்.

நான்: குட்டி 3-ஐ ஏன்டா தப்பா E மாதிரி போட்டிருக்க?

மகள்: நான் கரெக்டா போட்டேன். ஆனா அது திரும்பிக்கிச்சு.

மைதிலி சதாசிவம்

ஒரு வயசு இருக்கும்போது இட்லிக்கு வைத்திருந்த மாவை ஃபுல்லா தரையில் தோசை சுட்டு வச்சிருந்தா... கோவமா ரெண்டு அடி போடலாம்னுதான் போனேன் ஒரு சிரிப்பு... கோவம்லாம் அவுட்

M_karthika

விநாயக சதுர்த்தி பூஜையில கொழுக்கட்டை, சுண்டல் வகைகள், மோதகம், அதிரசம் மற்றும் பழங்களும் இருக்க... அதனூடே ஒரு கிரேப் வாட்டரும் இருக்க,

`அப்பா... இவ்வளவும் சாப்பிட்டா பிள்ளையாருக்கு வயிறு வலிக்கும்ல, அதான் வைச்சேன்’னு மூணு வயசுல எங்க ஹரிணி சொல்ல, வாய்விட்டுச் சிரித்தோம்!

மதுரை முருகேசன்

சுட்டிக்குழந்தைகள்
சுட்டிக்குழந்தைகள்

சூர்யா - தமன்னா பாலைமணலில் ஆடிய டூயட் பார்த்துட்டு, `டேய் சூர்யா, மணல்ல வெளாடாதடா, அம்மா அடிப்பாங்க’ என்றது.

umakrishh

டி.வி, போன் பாத்தா கண்ணு கெட்டுடும். அந்தக் காலத்துல எங்களுக்கு எதுவுமே இல்லன்னு சொல்லச் சொல்ல... `நீ ஏம்மா இப்ப கண்ணாடி போட்டிருக்க’ன்னு கேட்டுச்சு எங்க வீட்டு வாண்டு!

வே.புனிதா வேளாங்கண்ணி, வேலூர்

தொட்டில்ல ஆட்டிவிட்டு தூங்கிருச்சான்னு பார்க்கும்போது தூங்காம நம்மளப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க...

balasubramni1

? நித்தியானந்தா அட்டகாசங்கள் குறித்து ஒரு காமெடி கமென்ட் ப்ளீஸ்...

நான் என்பது நீ என்று ஆன பிறகு, என்னை நானே பிடித்து எப்படி போலீஸுக்குக் கொடுப்பது?!

ravikumar.krishnasamy

நல்லதோ, கெட்டதோ... வாழ்ந்தா இவர மாதிரி வாழணும்.

mano red

அமெரிக்காவுக்குத்தான் இனி விசா கிடைக்காதாமே...கைலாசாவுக்காவது கிடைத்தால் போதுமென இளைஞர்களை ஆன்மிகம் பக்கம் திருப்பியவர் நித்தி.

mekalapugazh

நித்தியானந்தா
நித்தியானந்தா

கதவைத்திற தீவு வரட்டும்

bommaiya

ஓடினேன், ஓடினேன், வாழ்க்கை யின் ஓரத்திற்கே ஓடினேன், அங்கே தனி நாடு இருந்தது.

mohanramko

? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் கௌதம் மேனன் திரைப்பட டைட்டில்களின் ஒரே கண்டிஷன். அடுத்த படத்துக்கு கௌதம் மேனனுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் திரைப்பட டைட்டில் என்ன?

வீணையடி நான் உனக்கு

jerry.darvey

செறி எயிற்று அரிவை

Pethusamy

பேசுவது கிளியா... பெண்ணரசி மொழியா...

RavikumarMGR

தீப்பிணி தீண்டல் அரிது

mekalapugazh

இசையில் தொடங்குதம்மா

Dhviya S

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: பொருளாதாரம் நிமிர்ந்தாச்சு!

? எப்போதாவது வித்தியாசமான புத்தாண்டு சபதம் எடுத்திருக்கிறீர்களா? என்ன சபதம்?

? ஆக்‌ஷன் படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம்?

? கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்... நாளைய கண்டுபிடிப்பு என்னவாக இருக்கும்?

? ‘இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று நீங்கள் 2019-ல் ஆச்சர்யப்பட்டது எதை?

? சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டு முதல்வரானால் என்ன நடக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை,ஆனந்த விகடன்,757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com