
பிளிப்கார்ட் அதிரடி ஆப்பர். இன்று இரவு 12 மணி வரை 32 ஜீபி மெமரி கார்டு ரூ.1-க்குக் கிடைக்கும்.
? விஜய் படத்தை அஜித்தும் அஜித் படத்தை விஜய்யும் ரீமேக் செய்து நடிக்கலாம் என்றால் எந்தப் படங்களை இருவரும் தேர்ந்தெடுக்கலாம்?
குஷி - அஜித்
காதல் மன்னன் - விஜய்
ஆதிரை வேணுகோபால், சென்னை
விஜய் - காதல் கோட்டை
அஜித் - துப்பாக்கி
S.விஜயலக்ஷ்மி, சென்னை
தீனா - விஜய்
காதலுக்கு மரியாதை - அஜித்
(உண்மையிலே பாசில் முதலில் காதலுக்கு மரியாதை படத்திற்குக் கேட்டது அஜித்தைத்தான்)
H Umar Farook

அஜித்: சுறா
விஜய்: பரமசிவன்
Kavi Prasath
பிகில் ராயப்பன் அஜித்!
வீரம் விநாயகம் விஜய்!
பிரபு கிரிஷ்
? வாட்ஸப்பில் உங்களுக்கு வந்த மரண ரோஃபல் ஃபார்வேர்டு ஒன்றைச் சொல்லுங்கள்.
பிளிப்கார்ட் அதிரடி ஆப்பர். இன்று இரவு 12 மணி வரை 32 ஜீபி மெமரி கார்டு ரூ.1-க்குக் கிடைக்கும்.
புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு
இந்தக் குழந்தை சேஃப்டி பின்னை விழுங்கி விட்டது. ஆபத்தான நிலையில் உள்ளது. அதனால் இந்த மெசேஜை நீங்கள் ஃபார்வேர்டு செய்தால் வாட்ஸப் கம்பெனிக்காரன் பத்துப் பைசா தருவான் என்று வரும் எரிச்சல் மெசேஜுகள்.
பொ.பாலாஜி கணேஷ்

பட்டேல் சிலையின் உச்சியில் ஒரு கேமிரா, ஒரு பீரங்கி இருக்கு! அந்த கேமரா வழியாக பாகிஸ்தானைப் படம் எடுத்து, சரியான நேரத்தில் பிரதமர் அந்த பீரங்கி மூலம் பாகிஸ்தானில் குண்டு போடுவார் என்று வாட்ஸப்பில் உலா வந்த தகவல்!
BALEBALU
இந்த சையின்ஸ் டெக்னாலஜிலாம் நாங்க அப்பவே கண்டுபிடிச் சிட்டோம்.
அப்புறம் ஏண்டா முன்னாடியே சொல்லல?
அப்பவே கண்டுபிடிச்சிட் டோம்னு இப்பதான் கண்டுபிடிச்சோம்.
செளதனிஷ்
முழங்காலுக்குக் கீழ் தேங்காய் எண்ணெயைத் தடவினால் டெங்கு கொசு கடிக்காது, முடிந்த வரை அனைவருக்கும் பகிருங்கள், பலரின் உயிரைக் காப்பாத்துங்கள்.
ஏன், முட்டிக்கு மேலே கொசு
கடிக்காதா, இல்லை பறக்காதா?
M.Sriram
? இந்திய அரசியல்வாதிகளில் ஒருவருக்கு நோபல் பரிசு தரலாம் என்றால் யாருக்குத் தரலாம், ஏன்?
ராஜ்நாத் சிங். ரஃபேல் விமானத்துக்கு எலுமிச்சம்பழம் வைத்ததற்காக.
வெண்பா
கமல் - தான் போடும் ட்வீட்களைப் புரிந்து கொள்வதற்காக, மக்களை டிக்ஷனரியும் கையுமாக அலையவிட்டதற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசை ‘மய்ய’ நாயகனுக்கு வழங்கலாம்!
மயக்குநன்

வெள்ளை அறிக்கை என்றால் வெள்ளையா இருக்கும், பச்சை அறிக்கை என்றால் பச்சையா இருக்கும் என்ற ஒப்பற்ற தத்துவத்தைக் கண்டுபிடித்த ராஜேந்திர பாலாஜிக்கே நோபல் பரிசு தரணும்!
இளையநிலா
வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே ரவீந்திரநாத் குமார் எம்.பி என்று கல்வெட்டில் பொறித்த ஞான சிருஷ்டிக்காக.
பெ.பச்சையப்பன், கம்பம்
நோபல் பரிசு மன்மோகன் சிங்குக்குக் கொடுக்கலாம். அமைதியாக எல்லாக் காரியங்களையும் சாதித்தார்.அதனால் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்
எஸ்.மோகன், கோவில்பட்டி
ஜோதிராதித்ய சிந்தியா- 18 வருடங்களாக காங்கிரஸில் இருந்து ‘அறுவடை’ செய்தது போதாதுன்னு, இப்போது பா.ஜ.க-வில் சேர்ந்து ‘அறுவடை’ செய்யக் காத்திருக்கும் இவருக்கு வேளாண் துறைக்கான நோபல் பரிசு பார்சல்..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி
ப.சிதம்பரத்துக்கு ஒன்றும் தெரியாது, `ஜெட்லி’க்கு ஒன்றும் தெரியாது, நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றும் தெரியாது என்று எல்லோரையும் பற்றித் தெரிந்த சுப்ரமணியன் சுவாமிக்குப் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு.
சம்பத் குமாரி, திருச்சி
சிறந்த மொழிபெயர்ப்புக்கான நோபல் பரிசை அட்மின் புகழ் ஹெச்.ராஜாவுக்கு வழங்கலாம்.
வெ.கார்த்திக்
? ஐ.பி.எல் விளையாட தோனி சென்னை வந்துவிட்டார். அவரை வரவேற்று ஒரு நச் ஸ்லோகன் சொல்லுங்கள்.
யாரு வேணும்னா மேட்ச் ஆரம்பிக்கலாம், ஆனா match finisherனா அது தல தோனிதான்.
sundar
கேப்டன்களின் கேப்பிட்டலே!
MSD இதயவன்
யாரு அடிச்சு பால் ஸ்டேடியம் விட்டு வெளியே போய் விழுதோ அவரு பேருதான் தோனி.
வீணா போனவன்

சென்னைன்னா போராட்டம்... தோனின்னா ஃபோர்(four)ஆட்டம்!
Ramkumar Kumar
“உன் வழி, தோனி வழி!”
அ. முஹம்மது நிஜாமுத்தீன்
? மொபைல் போனில் புதிதாக ஒரு ஆப்ஷனைச் சேர்க்கலாம் என்றால் நீங்கள் என்ன சேர்ப்பீர்கள்?
உண்மை தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்கன்னு வர வாட்ஸப் மெசேஜ் ஆட்டோ டெலிட் ஆகுற மாதிரி ஒரு ஆப் இருந்தா மிகச்சிறப்பு.
தூயோன்
ஈ.வி.எம்.மில் நாம் ஓட்டு போட்டவுடன் இந்தக் கட்சிக்குத்தான் நம் ஓட்டு போய்ச் சேர்ந்தது என மொபைலில் தெரிவிக்கும் ஒரு ஆப்ஷன்.
பர்வீன் யூனுஸ்
கூகுள் வாய்ஸை நம்ம பக்கத்து வீட்டுப் பொண்ணு பேசுற மாறி வைக் கணும். யாரோ பேசுற மாறி இருக்கு...
Algebra
சொல்லச் சொல்ல கேட்காமல் அடம் செய்து மொபைல் போனைச் சிறு குழந்தைகள் விளையாடக் கையில் வாங்கும்போதே தானாகவே ஆஃப் ஆகும் ஆப்ஷன்.
வைரபாலா
“ஐ போன்” முதல் “ஆன்ராய்டு” மொபைல் வரை அனைத்திற்கும் ஒரே சார்ஜர் பின் ஆப்ஷன்!
பிரபு கிரிஷ்
பைக் மோடு மாதிரி ஃபேமிலி மோடுன்னு ஒரு ஆப்ஷன் கொண்டு வரணும். ஃபேமிலியோடு இருக்கும்போது செலக்ட் பண்ணி வச்சிருக்கற காண்டாக்டின் போன் மெசேஜ் மட்டும்தான் வரணும்.
கார்த்திகா
ஆட்டோ கேப்சரிங் மோடு(எ.கா- டிரைவிங் மோடு) வச்சு எமர்ஜென்சில(எ.கா - விபத்து நேர்ந்தால்) தானாகவே அருகில் இருக்கும் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளும் மாதிரியான ஆப்ஷனைச் சேர்க்கலாம்
புல்லட் பாண்டி
போன் கீழே விழும்போது ஏர் பலூன் விரிஞ்சு போனுக்கு ஒண்ணும் ஆகாத மாதிரி ஆப்ஷனைச் சேர்க்கலாம்.
கார்த்திகா
நாம என்னவெல்லாம் பண்ணியிருக்கோம்னு நம்ம மொபலை நோண்டுற பொண்டாட்டிகிட்ட இருந்து விடுதலை கிடைக்கிற மாதிரி... பொண்டாட்டி நோண்டும்போது அவ கண்ணுக்கு எதுவும் தெரியாத மாதிரி ஒரு ஆப்ஷன்.
மா.பெனட் ஜெயசிங்
ரசிகர்களுக்கு
“தல’’ டீமுக்கு “தளபதி” இளம் வீரர்களுக்கு “அண்ணாத்த”
ரசிகை களுக்கு
“காதல் மன்னன்” மொத்தத்தில் “மக்களின் செல்வனே”
balebalu
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? தனி மனிதராக கொரோனா பிரச்னையைச் சமாளிக்க நீங்கள் எடுத்த சீரியஸான நடவடிக்கைகள் என்னென்ன?
? பா.ஜ.க-வின் புதிய தமிழகத் தலைவர் முருகன், முதலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்று நினைக்கிறீர்கள்?
? குட்டிக்கதைகள் சொல்வதில் ரஜினிக்கும் விஜய்க்கும் ஆர்வம் அதிகம். அஜித் குட்டிக்கதை சொன்னால் அது எப்படி இருக்கும்?
? பேங்க், வாராக்கடனை மையமாக வைத்து ஒரு படம் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
? ‘குடி, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என்று மதுபான பாட்டில்களில் இருந்த வாக்கியத்தை மாற்றியிருக்கிறது தமிழக அரசு. வேறு எந்த அரசு அறிவிப்பை, எப்படி மாற்றலாம்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.
ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com