Published:Updated:

வாசகர் மேடை: வாத்தி கம்மிங்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

மாஸ்டர் (வாத்தி கம்மிங்: வாத்தியாருக்கு செட்டான பாடல்)

? பழைய படங்களைத்தான் ரீமேக் செய்ய வேண்டுமா? எம்.ஜி.ஆர் இன்றைய படங்களில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும் என்றால் எந்தப் படம் பொருத்தமாக இருக்கும்?

‘லிங்கா’ படம் அப்படியே எம்.ஜி.ஆருக்கு மிகப் பொருத்தமான படம்... அவருடைய வள்ளல் குணத்திற்கு ஏற்ற படம் என்பதால்.

haary.prasath

கமல் நடித்த ‘அவ்வை சண்முகி’ படம்.கமலைப்போல எம்ஜியாருக்கும் பெண் வேடம் போட்டால் அழகாய் இருப்பார். அவரது அழகை ரசிப்பதற்காகவே ஜனங்க கூட்டமா தியேட்டருக்கு வருவாங்க!

ramkumar.kumar.92317

அஜித் நடித்த ‘வாலி.’ கதாநாயகனாகவே இதுவரை நாம் பார்த்து வந்த எம்.ஜி.ஆரை, இதில் இரட்டை வேடத்தில் ஒருவர் நாயகனாகவும் மற்றொருவர் வில்லனாகவும் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும்.

மை.சத்திய பாரதி, தூத்துக்குடி.

விக்ரம் வேதா...

மாதவன் ரோல் எம்.ஜி.ஆருக்கும்

விஜய்சேதுபதி ரோல் சிவாஜிக்கும் இருந்தா செமயா இருக்கும்.

Ntramesh_kpm

பாட்ஷா. அந்த பிஜிஎம்மிற்கு இவர் ஹைஸ்பீடில் நடந்துவர விசில் சத்தம் நிச்சயம் காதைக் கிழிக்கும்.

pachaiperumal23

வாத்தி கம்மிங்!
வாத்தி கம்மிங்!

ஏழாம் அறிவு - போதிதர்மர், நவயுக இளைஞன் என்ற இரு வேடங்களில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடித்தால் இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமாக இருக்கும். கொரோனாவை எம்ஜிஆர் குணமாக்கியது போல் மக்கள் உணர பெரும் வாய்ப்பாக இருக்கும். அடுத்து வரும் எலெக்‌ஷனில் வெற்றி உறுதி.

JaNeHANUSHKA

‘மைதிலி என்னைக் காதலி’யில நடிக்க வைக்கலாம். என்ன ஒரு பிரச்னைன்னா, நாயகியைத் தொடாம நடிக்கணும்னு சொன்னா காண்டாகிடுவாரு, நானும் உந்தன் உறவை பாட்டுக்கு எல்லாம் அதகளம் பண்ணிடுவாரு, என்னாசை மைதிலியே பாட்டுக்கு கேட்கவே வேண்டாம், தியேட்டரே ஆடும்.

shanmug50545515

மாஸ்டர் (வாத்தி கம்மிங்: வாத்தியாருக்கு செட்டான பாடல்)

balasubramni1

? கொரோனா பத்தி ஒரு நாலு வரி கானா எடுத்து விடுங்க, பார்ப்போம்.

விதவிதமா சோப்பு சானிட்டைசர் கண்ணாடி

கொரோனா வந்து நின்னுது என் முன்னாடி

போதாத காலம் இதுனு ஜக்கம்மா சொன்னாடி

என் அக்கா பொண்ணு அஞ்சலை

அவ லாக்டௌன் கண்டு அஞ்சலை

shanmug50545515

நடுக்கடலுல கப்பல இறங்கித் தள்ள முடியுமா? கைகழுவுனா கொரோனாவக் கொல்ல முடியுமாம்!

இறந்த பின்னே கருவறைக்குச் செல்ல முடியுமா? விலகி இருந்தா கொரோனாவ வெல்ல முடியுமாம்!

RavindranRasu

மாட்டிக்கிட்டாரு மாட்டிக்கிட்டாரு

மூக்கில மாஸ்க்கத்தான்...

சொல்லிகிட்டாரு

சொல்லிகிட்டாரு

ஆல் இஸ் வெல்லுதான்...

மாமன் பாரு

மாமன் பாரு

ஜிம்முபாடிதான்

வூட்ல இரு

விழித்திருன்னாரு

எடப்பாடிதான்...

SENTHIL_WIN

ஒய் திஸ் கொல வெறி டி

WFH போரு போரு, wife டார்ச்சர் மோர்...

PM கிவிங் டாஸ்க் டாஸ்க்

My face -ல மாஸ்க்...

ஒய் திஸ் கொல வெறி டி

vrsuba

? டாஸ்மாக், தியேட்டர் இல்லாமல்கூட தமிழர்கள் இருந்துவிட்டார்கள். வேறு எது இல்லாமல்போனால் நம் மக்கள் தாங்கவே மாட்டார்கள்?

வேறென்ன...

டி.வியில வரும் நம்ம வடிவேலண்ணே காமெடிதான்.

johnbritto.johnbritto.315

மொபைல் போன்தான். தடைபோட்டா பாதிக்கு மேல செத்துப் போயிருவாங்க.

pachaiperumal23

ஞாயிற்றுக் கிழமையானால் நீந்துவன; பறப்பன; ஓடுவன.

skkaran14321700

வாசகர் மேடை: வாத்தி கம்மிங்!

உப்புமா சாப்பிட்டுப் போற உசுரு கொரோனாவாலேயே போகட்டும்னு நக்கல் பேச்சு இல்லாம இருக்க முடியாது.

NedumaranJ

சார்ஜ் போடப் போகும்போது கரன்ட் இருக்கணும், பக்கத்து வீட்டுல சண்டை நடக்கும்போது சத்தம் இல்லாமல் இருக்கணும்.

Thaadikkaran

இலவசம்.

NedumaranJ

? இன்டர்நெட் மட்டும் கண்டுபிடிக்கப் படாமல் இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும்?

எதையும் கூகுளில் தேடாமல் சொந்த மூளையைக் கசக்கிப் பிழிந்து கண்டுபிடிக்கும் திறமையைப் பலரும் வளர்த்திருப்பார்கள்.

க.அய்யனார், தேனி.

டிவி ஆன்டெனாவையும் ரேடியோ ட்யூன்ரோலையும் திருகித்திருகி கைவலித்திருக்கும்.

ஏ.முருகேஸ்வரி, தென்காசி

ஷங்கர் எந்திரனுக்கு பதில் ‘வசீகரனும் அற்புத விளக்கும்’ படம் எடுத்திருப்பார்.

Adhirai Yusuf

தியேட்டர்ல வரிசையில் நின்னு டிக்கெட் வாங்கி படம் பார்த்திருப்போம்.

poonasimedhavi

கொரோனாத் தொற்று எண்ணிக்கைகளை இப்படி கிரிக்கெட் ஸ்கோர் போல பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

VijiKumaran1

காதலர்கள் இன்னும் பக்கம் பக்கமாகப் பிழையான தமிழில் காதல் கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார்கள்.

pachaiperumal23

கூகுள் மேப் இல்லாமல், “தோ கிலோமீட்டர் ஹே” என்று சுற்றிக்கொண்டு இருந்திருப்போம்.

RamuvelK

அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிந்திருப்போம். கையெழுத்து அழகாய் இருந்திருக்கும். முகம் பார்த்துப் பேசிக்கொண்டிருப்போம்.

குறைந்தது ஐம்பது போன் நம்பர்கள் மனப்பாடமாய் இருக்கும். புத்தகங்கள் கூடுதலாய் விற்றிருக்கும். மரணத்துக்கு இணையத்தில் ரிப் போடாமல் நேரில் போவோம்.

chithradevi_91

டெய்லி 100 மெஸ்ஸெஜுகள் தீர்ந்து 12 மணி எப்போ ஆகும் எனக் காத்துக் கொண்டிருப்பார்கள் காதலர்கள்.

Thaadikkaran

? ஒருநாள் முதல்வரைப்போல் நம் அரசியல் தலைவர்கள் ஒருநாள் நடிகரானால் என்ன செய்வார்கள்?

ராஜேந்திர பாலாஜி: மோடி வந்து கிளாப் போர்டு அடிச்சால்தான் சூட்டிங் வருவேன் என்று அடம்பிடிப்பார்.

balasubramni1

வைகோ - கேப்டன் பிரபாகரன் ரீமேக்ல வைகோ ஹீரோவா அந்த க்ளைமாக்ஸ் கோர்ட் சீன்ல பின்னிப்பெடல் எடுத்துடுவாரு. அவரோட உணர்ச்சிப்பிழம்பான வாதம் கேட்டு ஜட்ஜ் அய்யா ரிசைன் பண்ணிட்டு ஓடிடுவாரு.

shanmug50545515

வாசகர் மேடை: வாத்தி கம்மிங்!

தியாகத்தலைவி தீபா ஒரு நாள் வெளியே வருவார்!

(ஏம்ப்பா பகலிலேயே படமெடுக்கணுமா?)

suwloYfhHuwsTn7

ஜெயக்குமார் நடிகரானால் சொந்தக் குரலிலே பாடல்களையும் பாடுவார். விஜய்க்கு ஸ்க்ரோல் போடுவதுபோல, ‘`இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் ஜெயக்குமார்”னு போடலாம். சில்லறை சிதறும்.

absivam

எச் ராஜா ஹீரோன்னு அறிவிப்பு வந்திருக்கும். ஷூட்டிங்கில் பார்த்தால் அவரது அட்மின் நடித்துக் கொண்டிருப்பார்.

parveenyunus

இபிஎஸ் பிடல்காஸ்ட்ரோ வேடத்திலும், ஓபிஎஸ் சேகுவேரா வேடத்திலும் சட்டசபைக் கூட்டத்தொடருக்கு வருவார்கள்!

pbukrish

நடிப்பு வரலைன்னா அதுக்குக் காரணம் நேருதான்னு சொல்லுவாங்க...

HariprabuGuru

மோடி இந்தி தசாவதாரத்தில் நடிக்கலாம், கமல் போட்ட கெட்அப் களைவிட அதிகமாகப் போட்டுவிட்டார் என்பதால்.

h_umarfarook

மணிரத்னம் பட வசனங்களைப் போல் சின்னச்சின்ன வசனங்கள் எழுதினாலும் அதில் பாதியை மட்டும் ஷூட்டிங்கில் பேசிவிட்டு மீதியை டப்பிங்கில் சரி செய்வார் ஸ்டாலின்.

க.அய்யனார், தேனி

மோடி, “வேலைக்காரன் 2” படத்துல நடிப்பார்... எல்லாரையும் மிரட்டிக் கைதட்டி விளக்கு ஏற்றவைப்பார். அதைச் செய்யாத பணக்கார வில்லன் களுக்கு gst அதிகம் போட்டு ஏழையாக்கி டுவார்! அட, படத்துலதாங்க.

KarthikMSomasundaram

நாலு தென்னந்தோப்பு வைச்சிருக்கிற மாதிரி ஏதாவது பண்ணையார் ரோல் கிடைக்குமா எனக் காத்திருப்பார் ஜிகே வாசன்.

umar.farook

வாசகர் மேடை

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: வாத்தி கம்மிங்!

? டிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா முதல் சுயச்சார்பு இந்தியா வரை ஏகப்பட்ட இந்தியாக்களை அறிவித்துள்ள மோடி, அடுத்ததாக என்ன இந்தியாவை அறிவிப்பார்?

? ரஜினி ஒரு டி.வி சீரியலில் நடித்தால் அதற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

? இன்ஸ்டாகிராமில் உங்களை ரொம்பவும் வெறுப்பேற்றும் விஷயம் என்ன?

? பெண் பார்க்க வந்தபோது/போனபோது உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்க (ஆண், பெண் இரண்டு பேரும்)

? தியேட்டரில் படம் பார்ப்பது, ஓ.டி.டியில் படம் பார்ப்பது - ஜாலியான வித்தியாசம் சொல்லுங்க

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com