கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: ஆமா, அவர் என்ன ஆனார்?

உலகம் சுற்றும் வைரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
உலகம் சுற்றும் வைரஸ்

ஓவியம்: சுரேஷ்

? ‘ஆமா இவர் என்ன ஆனார்?’ என்று நீங்கள் எந்தப் பிரபலத்தைப் பற்றி யோசிப்பீர்கள்?

பாலாஜி சக்திவேல். வழக்கு எண்ணுக்குப் பிறகு இவருடைய படங்கள் வராதிருப்பது தமிழ் சினிமாவின் சோகம்.

pachaiperumal23

C.R.சரஸ்வதி. அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு சொல்லி இட்லிக்கு பிராண்ட் அம்பாசிடராய் மாறியவர்.

Thaadikkaran

வாசகர் மேடை: ஆமா, அவர் என்ன ஆனார்?

காவிரிப் பிரச்னை வரும்போதெல்லாம் `பங்காரப்பா’ நினைவு வரும். சம்பந்தமே இல்லாமல் இப்போதும் அவர் நினைவே வந்தது.கூகுள் செய்துபார்த்து 2011-ல் அவர் இறந்ததை அறிந்தேன்.

selvachidambara

எனக்குப் போட்டின்னா அது சூப்பர்ஸ்டார் தான்னு சொன்ன பவர் ஸ்டார்... ஆளே காணோம்!

prabhu65290

`எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் அனைவரையும் ஈர்த்த இயக்குநர் எம்.சரவணன்.

balasubramni1

பாதி உறக்கத்திலிருந்து திடீர்னு முழித்து பேட்டி கொடுத்துவிட்டு, மீண்டும் உறங்கும் பேபிம்மா தீபா.

RamuvelK

2020 அமோகமாகவும் செழிப்பாகவும் இருக்கும் எனச் சொன்ன ஜோதிடத் திலகங்கள் தான்.

parveenyunus

குல்பி ஐஸ் விற்பவரை. இரவு பன்னிரண்டு மணிக்கு எங்கள் தெருவுக்கு ரெகுலராக வருவார்.

pachaiperumal

சேலம் முன்னாள் கலெக்டர் ரோகிணி.

vrsuba

‘இதயம்’ புகழ் நடிகை ஹீரா..!

KLAKSHM1418425

தேசியக் குடியுரிமைச் சட்டம் குறித்து மோடியைவிட அதிகமாகப் பேசிய அமித்ஷா, கொரோனா வந்ததும் காணாமல்போய்விட்டாரே. ‘ஆமா, இவர் என்ன ஆனார்?’

- ஏ.முருகேஸ்வரி, தென்காசி - 627 862

ஹரீஸ் ராகவேந்திரா

சக்கரை நிலவே சக்கரை நிலவே!

pasumpon.elango

வேறு யாரு, நம்ம காமெடி கிங் கவுண்டமணி தான்.

ravichandran.ravichandran

? கைதட்டுவது, விளக்கேற்றச் சொல்வது ஆகியவற்றையெல்லாம் அறிவிப்பதற்கு முன்பு மோடி என்ன நினைப்பார்?

முதலில் மக்களைக் கைதட்டச் சொல்லுவோம். தட்டினால் அவர்கள் நமக்கு அடிமை. இல்லை என்றால்....

kumarfaculty

இந்த வாரம் என்ன சொல்லி என்டர்டெய்ன்மென்ட் செய்யலாம்னு நினைப்பார்.

manipmp

எதைச் சொன்னாலும் நமக்கு முட்டுக் கொடுக்க ஆள் இருக்கு, அது வரைக்கும் நமக்குக் கவலையில்ல..!

Ramesh46025635

இப்படி சென்டிமென்டா சொல்லித்தான் இப்போதைக்கு நிலைமையைச் சமாளிக்கணும்!

balebalu

லைட்டா ஒரு சிரிப்பு சிரிச்சிருப்பாரு...

saravankavi

நானென்ன வெச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்... எனக்கு வேற என்ன பண்ணுறதுன்னு தெரியல.

i_MOmuS

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

? கொரோனா காலங்களை வைத்துப் படம் எடுத்தால் என்ன டைட்டில் வைப்பீர்கள்?

S.S. JAYAMOHAN சென்னை

வீட்டைத் தாண்டி வருவாயா

p_jegatha

நல்லா இருந்த ஊரும் நாலு எவர்சில்வர் தட்டும்

pachaiperumal

உள்ளே போ

manipmp

ராக்கம்மா கையத்தட்டு

SeSenthilkumar

முப்பொழுதும் என் வீட்டினிலே

Sundara

துண்டுபட்டால் உண்டு வாழ்வு

KLAKSHM

? உறவினர்கள், பழைய பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் வாட்ஸப் குரூப்பில் எரிச்சலூட்டும் மொக்கைச் செய்திகளைப் படிக்கும்போது எப்படி இருக்கும்?

வாட்ஸப் அப்டேட் பண்ணினா மட்டும் பத்தாது, நீயும் அப்டேட் ஆகுன்னு சொல்லணும் போல இருக்கும்..!

Thaadikkaran

உண்மையில் பிஸியா இருக்கிற நேரத்துல இதுபோல் செய்திகள் வந்தால் எரிச்சலா இருக்கும். ஆனா இப்போ சும்மா இருக்கிறதனால பொழுதுபோக்க, காமெடிக்கு இவங்க உதவுறாங்களேன்னு அவ்வளவு கோபம் வர்றதில்லை!

balebalu

பல்ல ஒடைக்கணும்னு தோணும்! என்ன பண்றது, பல்லக் கடிச்சிக்கிட்டு Wow! Super-னு Reply பண்ணிடுவேன்.

Sundara81219931

`படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை போல’ எனத் தோன்றுகிறது.

துடுப்பதி வெங்கண்ணா

அந்த மொக்கைச் செய்தி சுற்றிவரும் கால இடைவெளி வைத்து, சாந்தமா, எரிச்சலா, கோபமான்னு முடிவு செய்யப்படும்.

ravikumar.krishnasamy

கூட்டணி தர்மத்துக்காக இதையெல்லாம் வாசிக்கிறேன்னு மனசுக்குள் பேசிக்குவேன்.

balasubramni1

“அடேய்... உன்னையாடா இத்தனைநாள் விவரமானவன்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்”னு.

SENTHIL_WIN

இந்தச் செத்துப்போன செய்தியைப் போட்டுவிட்டு அவன் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி திரிஞ்சிட்டு இருப்பான்னு தோணும்.

manipmp

இவங்க எப்படி காஸ்மிக் கதிர்கள் பத்தியெல்லாம் தெரிஞ்ச விஞ்ஞானியா மாறினாங்க?

Aruns212

நம்மளை மோடி கைதட்ட, விளக்கேத்தச் சொன்னப்போ எப்படி இருந்துச்சோ அப்படி இருக்கும்.

SENTHIL_WIN

? இத்தனை நாள் வீட்டுல இருந்திருக்கீங்க. சொல்லுங்க, மனைவி என்பவர்...

எங்க வீட்டு அட்மின்.

manisuji12?

‘Working for Home’

krishna.moorthy

எத்தனை டிபி ஹார்டு டிஸ்க் மூளைக்குள் இருக்குன்னே தெரியலை, நாம சொன்னது எல்லாம் தேதி வாரியாக ஞாபகத்தில் இருக்கும்!

umar.farook.71

Big Boss

jerry.darvey.7

இன்னும் ஊரடங்கு ஒரு பதினெட்டு நாள் இருக்கே

அதற்குப் பிறகு கேட்கக்கூடாதா?

anbu.bala.11

வேறு என்ன, `சிங்கப்பெண்’தான்..!

nandhu

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: ஆமா, அவர் என்ன ஆனார்?

? “டெக்னாலஜி எவ்வளவு முன்னேறினாலும் போன்ல இன்னும் இந்த வசதி வரலையேப்பா” என நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்?

? ஊரடங்கு முடிந்ததும் முதலில் நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது? ஏன்?

? மாஸ்க் மாட்டியபடி அனைத்துக்கட்சிக் கூட்டம் காணொலியில் நடந்தால் யார், என்ன பேசுவார்?

? மிச்சமிருக்கும் க்வாரன்டீன் நாள்களை இவர் வீட்டில் கழிக்கலாம் என்றால், எந்தப் பிரபலத்தின் வீட்டுக்குச் செல்ல விரும்புவீர்கள், ஏன்?

? வொர்க் ஃப்ரம் ஹோம் - அலுவலகத்தில் வேலை. நச்சென ஒரு வித்தியாசம் சொல்லுங்கள்.

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com