
வாசகர் மேடை
? ஒரு புதிய ஆக்ஷன் படத்துக்கு ஹீரோவுக்கான வித்தியாசமான பன்ச் டயலாக்குகள் சொல்லுங்களேன்...
நான் அடுத்தவன் பத்த வைக்கிற கற்பூரம் இல்லடா. தானாவே பத்திக்கிற பாஸ்பரஸ்.
Sundar140
ஒத்த அடி அடிச்சா மொபைல் ஹேங் ஆகிற மாதிரி மூளை ஹேங் ஆகிடும்.
manipmp
நீ 1/4 என்றால் நான் 1/2...
நீ 1/2 என்றால் நான் 1...
நீ 1 என்றால் நான் 2..!
(இப்படியே வரிசையாகச் சொல்லிக்கொண்டே, ஹீரோ ஃபைட் செய்கிறார்)
Raja90881331
நான் சிரிக்கும்போது எடப்பாடி
கோபப்பட்டேன்... நீ டெட்பாடி.
முற்போக்கு எழுத்தாளன்
? கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் ரொம்பவே மிஸ் பண்ணிய பிரபலம் யார், ஏன்?
நா.முத்துக்குமார் - ஒருத்தன் கடன வாங்கிட்டு கொடுக்காம செத்துப்போனா எந்த அளவு மிஸ் பண்ணுவமோ அந்த அளவு. இந்தாள் பாட்டுல்லாம் இப்ப கேட்டாலும் அநியாயமா ஏமாத்திட்டுப் போயிட்டியேன்னு இருக்கும்.
venkime1
கலைஞர்தான்... இருக்கற வரை அருமை தெரியல. ரொம்பவே இன்மை உணர்கிறேன்.
umakrishh

சந்தேகத்துக்கு இடமின்றி வடிவேலு அண்ணன்தான். பலரோட stressbuster-ஆக இருந்தவரு இருக்குறவரு. அவர நேர்ல பாக்குற வாய்ப்பு கிடைச்சா கோபமா சட்டையைப் பிடிச்சு ஏன் இத்தனை நாளா நடிக்கலைன்னு கேட்கணும்.
RajiTalks
என் அப்பாதான், பஸ்ஸு விட்டு இறங்கியதும் ஊர் எல்லையில இருந்து தாத்தா வீட்டுக்குப் போகுற வரைக்கும், குட்டி நீ இன்னார் மகன் தானேன்னு பாக்குற எல்லாரும் பாசம் காட்டுவாங்க! எனக்கு எங்க அப்பாதான் பிரபலம் அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்.
Prakatalks
மஹான் கவுண்டமணி. தனித்துவமான அவரது அரசியல் பஞ்ச் போன்று சொல்ல இப்போது யாருமில்லை.
RedManoRed
ஹீத் லெட்ஜர் , ஜோக்கர் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களில் நடித்திருப்பார்.
SriramMurugan20
இயக்குநர், ஒளிப்பதிவாளர் திரு. ஜீவா அவர்கள். “Feel Good Movies” என்று சொல்லப்படக்கூடிய `Genre’, ஜீவாவின் மறைவுக்குப் பிறகு காணாமல் போய்விட்டது.
deepaku11
சின்னத்திரையில் சிவகார்த்திகேயனை. இப்போல்லாம் டி.வி சேனல்ல பார்த்து ரசிக்க ஒன்றுமில்லாமல் போய்விட்டது. மனுஷன் ஹியூமர் ஹில். அவரின் இடம் இன்னமும் வெற்றிடமே.
vrsuba
சச்சின். ஏன்னா அவரு இல்லாத கிரிக்கெட் பார்க்கப் பிடிக்கல.
pbukrish
? ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால் உங்கள் வாழ்க்கையில் நடந்த விசித்திரமான காமெடி..?
ஆதார் கார்டில் என் பெயர் மூர்த்தி (MURTHI) யை மூத்ரி (MUTHRI) யாக்கி நாறடித்துவிட்டார்கள்.
எம்.ஆர்.மூர்த்தி, மும்பை.
+2 படிக்கும்போது ஆங்கிலப் பாடத்தைப் பத்தி பத்தியா ஒவ்வொருவரும் படிக்கணும். என்னைப் படிச்சுக்காட்டச் சொல்லி என் நண்பன் அப்படியே தங்லீசில் எழுதிப்பான். வகுப்பறையில் வாசிச்சப்ப ‘குட்டியூண்டு’ன்னு சொல்ல, ஒரே சிரிப்பு. அவன் படிச்சது ‘Couldn’t.’
SeSenthilkumar
தில்லியில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் பக்கத்துப் பெண்ணிடம் கால்குலேட்டர் இரவல் வாங்கினேன். 3 மணிக்குத் திரும்பத் தருகிறேன் என்பதற்கு “தீன் பஜே தேதுங்கா’’ என்று சொல்ல வேண்டும். அவசரத்தில் “தீன் பச்சே” என உளற, “நீ அவளுக்கு 3 குழந்தை கொடுப்பியா’’ என்று ஆபீஸே சிரித்தது.
Sundar140
என் பெயர் முருகானந்தி (முருக ஆனந்தி).ஆங்கிலத்தில் Muruganandi என்று எழுதுவேன்...தெரியாதவர் படிக்கும்போதோ, தொலைபேசியிலோ முருகனாண்டி என்று அழைப்பர்... அதுபோக நான் பேசினால் சார்கிட்ட phone குடும்மா என்று குழம்புவர்... எப்படியோ தமிழ்க்கடவுளின் ஆசி எப்போதும் உண்டுபோல!
gmuruganandi
கல்கத்தா சென்ற என் கணவரிடம் பாட்டிக் சில்க் புடவை வாங்கி வர குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் பாட்டிக்குப் புடவை வாங்கி வந்தார்.
lalinama1
என் தம்பி சிறுவயதில், அம்மா நானும் பாலமித்ரா புத்தகத்திற்கு சாந்தாவைக் கட்டவா எனக் கேட்டது.
anamica.tamil
Angel என்பதை Angle என்று எழுதி காதலியிடம் பலமுறை பல்பு வாங்கியிருக்கிறேன்.
balasubramni1
Cook வந்துவிட்டார் என்பதற்கு பதிலாக குக்கர் வந்துவிட்டார் என்பார் என் நண்பர்.
Laviher3
முதலில் நான் ஓட்டர் ஐடி எடுக்கும்போது முகமது கஸ்ஸாலி என்ற என் பெயரை முகமது கல்யாணி என்று போட்டுவிட்டார்கள். அதைப் பார்த்த எனக்கு கடுப்பும் சிரிப்பும் ஒரே நேரத்தில் வந்தது.
RahimGazzali
? முப்படைகளுக்கும் பொறுப்பாக ஒரு தளபதியை நியமித்துவிட்டார்கள். ஒருவேளை மோடியே தளபதி பொறுப்பேற்றால் என்ன செய்வார்?
“நான்காம் படையாக கௌவ் ஃபோர்ஸ் (மாட்டுப்படை) உருவாக்குவார். அப்புறம் ராணுவத்துக்குள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்து ப்ளாக் ஷீப்களைக் களையெடுப்பார்.”
S பிரபு செந்தில்குமார், சென்னை
முதல் வேலையாக, வடகொரியா அதிபர் கிம் ஜோங் போல, தனது கெட்டப்பை மாற்றிக் கொள்வார்.
G.K.Senthil Kumar
5 லட்ச ரூபாய்க்கு ஒரு மிலிட்டரி டிரஸ் பார்சல்ல்ல்.
RamuvelK
“உலகின் மிக உயரமான போர்க்களமான சியாசின் பனிமலையில் இராணுவத் தளபதியுடன் ஒரு நாள்” என்ற நிகழ்ச்சி டிஸ்கவரி சேனலில் ஒளிப்பாகும்.
புல்லாங்குழல் @காற்றின் மொழிபெயர்ப்பு

இந்தியப் பசுக்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும். சிறப்பாகச் செயல்படும் பசுக்களுக்கு உயரிய விருதுகள், பதக்கங்கள் வழங்கப்படும். அப்படி என்ன என்ன சிறப்பான செயல்பாடுகள் என்றெல்லாம் கேட்கக்கூடாது.
saravankavi
இத படிக்கும் போது காமெடி நடிகர் சந்தானம் சொன்ன டயலாக்தான் ஞாபகம் வருது. ராணுவத்துல அழிஞ்சவனவிட ஆணவத்துல அழிஞ்சவந்தான் அதிகம்னு சொல்லுவார். இங்க இராணுவமும் ஆணவமும் ஒண்ணா சேர்ந்தா... நான் என்னத்தச் சொல்ல...
thangaraja85
பாகிஸ்தான் அதிபருடன் டின்னர் வித் இளநீர். இடம்: மாமல்லபுரம், தமிழ்நாடு. (‘இரு நாடுகளின் நல்லுறவுக்காக’ என்று தெரியப்படுத்தப்படும்)
BaluMarappan2
உள்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் போராட்டங்களுக்கு பாகிஸ்தான் ராணுவம்தான் உதவுகிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்து அறிவிப்பார்.
saravanan.kavi.3
கொஞ்சம் கொஞ்சமாக முப்படைகளையும் தனியார் மயமாக்கிவிடுவார்..!
parama.paramaguru.3
தனக்கு ஒத்துவராத மாநிலங்களின் மீது படையெடுத்து, பிஜேபி-யில் சேர்த்துவிடுவார். ஒரே துப்பாக்கி! ஒரே கட்சி!
ravikumar.krishnasamy
ராணுவ வீர்களைக் கப்பல் படைக்கும், கப்பல் படை வீரர்களை விமானப் படைக்கும், விமானப் படை வீரர்களை ராணுவத்திற்கும் மாற்றி புதிய இந்தியாவை உருவாக்குவார்.
UDAYAKUMARKR202
ராணுவ வீரர்கள் எப்படி பயப்படாமப் போர் புரியனும்னு “exam warriors” போல ஏதாச்சும் ரிலீஸ் பண்ணுவாப்ல.
karthickpk1907
? நயன்தாரா யாருடைய பயோபிக்கில் நடிக்கப் பொருத்தமாக இருப்பார்?
நடிகை ஸ்ரீதேவி
Iam_SuMu
நயன்தாரா இயற்பெயரிலே வரும் “டயானா(இங்கிலாந்து இளவரசி) மரியம் குரியன், பயோபிக்கில் நடிச்சா பொருத்தமா இருப்பாங்க.
pbukrish
கல்பனா சாவ்லா! கொஞ்சம் டிக் டிக் டிக் படம் மாதிரி மசாலா தடவி சிங்கப் பெண்ணே பாட்டைப் போட்டு பயோபிக் எடுக்கலாம்.
soundhar10
மனோரமா- ‘ஆச்சி’யின் பன்முக நடிப்பைக் காட்ட நயன்தான் சரியான ஆளு..!
கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி
பசி ஷோபா வேடத்தில் நடிக்கலாம்.
umar.farook.71
சௌந்தர்யா பயோபிக்கில் பின்னிப் பெடலெடுப்பார்.
palani.balaraman.771
‘ராணி வேலுநாச்சியார்’
IamJeevagan
மேதா பட்கர்
sorkkalanjiam
நயன்தாரா நடிக்கும் பயோபிக் - கணிதமேதை சகுந்தலா தேவி.
என்.உஷாதேவி, மதுரை
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? 2030-ல் லவ் புரபோஸல் எப்படியிருக்கும்?
? விஜய் ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன். ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு டயலாக் சொல்லுங்க.
? ஒரு மாறுதலுக்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?
? மொபைல் போன் - சிறுகுறிப்பு வரைக
? ஒரு பழைய கிரிக்கெட் வீரர் இப்போதைய இந்திய டீமில் விளையாடலாம் என்றால் யார் உங்கள் சாய்ஸ், ஏன்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com