
வாசகர் மேடை
? தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் தவிர வேறு என்ன பட்டம் கொடுக் கலாம்?
ஸ்டைல் சாம்ராட்
MuthuVelKumar1
பொலிட்டிக்கல் ஸ்டார். தூரத்தில் இருக்கும். ஆனா எவ்வளவு தூரம்ன்னு தெரியாது.
skkaran_68
நான்தான் ரஜினிகாந்த்
forgjeryda

பனிக்குகை பாபா
rajasingh.jeyakumar.9
ஆன்மிக சூப்பர் ஸ்டார்.
BANUMATHI K. BABU
சென்னை
? சசிகலா - ஜெ.தீபா இருவரும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?
சசிகலா : என்னடிம்மா இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சுட்டே?
தீபா: என்ன ஆன்ட்டி, இவ்வளவு சீக்கிரம் ரிலீஸ் ஆயிட்டீங்க...
mgr007
தீபா : அக்கா ஜெயில்ல எப்படிக்கா நேரம் போச்சு.
சசி : வெளிய உனக்கு எப்படி நேரம் போச்சு.
தீபா : தூங்கிக் கழிச்சேன்ங்கா.
சசி : அதேதான் நானும்.
pachaiperumal23
சசி: ஏன்றி தீபா சென்னாகிதீரா ?
தீபா : பரப்பன அக்ர காரத்துல கன்னடம் கத்தாச்சு, அடுத்து திகார் போயி இந்தி கத்துக்கோங்க.
ARiyasahmed

சசிகலா : உன் எதிர்காலத் திட்டம் என்ன?
தீபா : அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
CpsWriter
சசி: எல்லாரும் நமக்கு துரோகம் பண்ணினாங்க தீபா.
தீபா: விடுங்க. நாம அனைத்து இந்திய அண்ணா திராவிட எம்.ஜி.ஆர் ஜெயலலிதா கழக சசி தீபா பேரவை. அப்படின்னு ஒரு கட்சி தொடங்கலாம்.
AjithSkit
தீபா : அக்கா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
சசி : என்ன?
தீபா : அத்தை அப்போலோல இட்லி சாப்பிட்டாங்களா இல்லையா?
ARiyasahmed
? கடவுள் சோஷியல் மீடியாவுக்கு வந்தால் என்ன நினைப்பார்?
கடைசியில் நம்மளையும் லைக்ஸுக்காக ஏங்க விட்டுட்டாங்களே என்று புலம்புவார்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
ஏதாவது நியாயமா பேசினா பிளாக்பண்ணப்படுவார். ஆன்டி இந்தியனாவார்.
umakrishh
ஹூம்... இவ்ளோ பவர் இருந்தும் என்ன பிரயோஜனம்... ஞான திருஷ்டியால் ஃபேக் ஐடிகளைக் கண்டுபிடிக்க முடியலையே..?!
KLAKSHM14184257
அவரும் ஒரு ஃபேக் ஐடி தொடங்கியிருப்பார்.
YAADHuMAAGE
என் Twitter ஐடிக்கு 1000 Followers வந்ததுக்கு வாழ்த்தலாமே Friends என்று tweet போடுவார்.
ManivannanVija2
இதை 16 பேருக்கு அனுப்பினா நல்லது நடக்கும். இல்லைன்னா கடவுள் தண்டிப்பார் என்று தனக்கு வந்த வாட்ஸப் பார்வேர்டு மெசேஜை யார் யாருக்கு அனுப்புவது என யோசிப்பார்!
h_umarfarook

Face app-ல தன்னைத்தானே மாத்திப் பார்ப்பார்.
ஆர்.சுந்தரராஜன் சிதம்பரம்.
எனக்கு சம்ஸ்கிருதம் மட்டும்தான் தெரியும்னு உங்ககிட்ட நான் எப்போடா சொன்னேன் மானிடப்பதர்களேன்னு கேள்வி கேட்பார்.
pbukrish
இவ்வளவு நாளா கடவுள் எடுத்த அவதாரங்களின் ஸ்டில் போட்டோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு லைக் அள்ளுவார்
poonasimedhavi
மாஸ்க் மாட்டாம போனா மீடியாவிலே போட்டுடுவாங்கன்னு மாட்டிகிட்டுதான் தரிசனம் தருவாரு.
eromuthu
என்னடா இது. நம்ம கடவுள்ன்னுகூட பார்க்காமல் இந்த அடி அடிக்கறாங்க என்று நினைப்பார்.
RahimGazzali
யாராச்சும் எது சொன்னாலும் எது நடந்தாலும் நம்மளைக் கருத்து சொல்லச் சொல்லி சாவடிப்பானுங்களே...
saravankavi
தல ரசிகர்னு சொல்லலாமா தளபதி ரசிகர்னு சொல்லலாமான்னு குழப்பமடைந்திருப்பார்.
urs_venbaa
`இனிமேல் ரஜினிகாந்த் மேலே கையைக் காட்டுவதற்குப் பதிலாக நம்மளை டேக் மென்ஷன் பண்ணுவாரோ?' என்று நினைக்கலாம்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
? வீட்டையே ஆபீஸாக மாற்றியதை போல ஆபீஸையே வீடாக மாற்றினால் என்ன நடக்கும்?
`பேமிலி ப்ரம் ஆபீஸ்' அவ்வளவுதான்!
நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.
முதலில் மின் இணைப்பை கமர்ஷியல் இணைப்பிலிருந்து டொமஸ்டிக் இணைப்பிற்கு மாற்றவேண்டும். இல்லை யெனில் ஆபீஸ் முதலாளி போண்டி ஆகிவிடுவார்.
venkat
மேனேஜர் கோபப்பட்டு நம்மைத் திட்ட, நம் கூடவே இருக்கும் அப்பத்தா அதுபொறுக்காமல் வெகுண்டெழுந்து மேனேஜர் சட்டையைப் பிடித்து உலுக்கலாம்.
pachaiperumal23
உங்களை வெச்சு எப்படித்தான் ஆபீஸ்ல வேலை வாங்குறாங்களோ என்று மனைவி திட்டுவதை மேனேஜரும், உன்னை வெச்சு எப்படித்தான் குடும்பம் நடத்துறாங்களோ என்று மேனேஜர் திட்டுவதை மனைவியும் தங்கள் காதால் கேட்டுக்கொள்வார்கள்.
balasubramni1
நம்ம பாஸுக்கும் நம்ம பிக்பாஸ் மனைவிக்கும் சண்டை மூட்டி விட்டுட்டு நாம சந்தோஷமாக இருக்க வேண்டியதுதான்.
SriRam_M_20

? என்னென்னமோ செய்து தாமரையை மலரவைக்கப் படாதபாடு படுகிறார்கள் பா.ஜ.க-வினர். நீங்களும் அவங்களுக்கு ஒரு சிறப்பான யோசனையைச் சொல்லலாமே!
கைலாசா மாதிரி ஒரு நாட்டை வாங்கி அதுக்குத் தமிழகம்னு பேர வெச்சு, அங்க தாமரையை மலர வைக்க வேண்டியது தான்.
அ.வேளாங்கண்ணி,
சோளிங்கர்
ராஜேந்திர பாலாஜியைத் தமிழக பா.ஜ.க தலைவராக அறிவித்தால், மற்ற கட்சிகளுக்கு ‘பால்’ ஊத்தி, தாமரையை மலர வெச்சிடுவாரு.
laks.veni
தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க-வினர் (ஹெச்.ராஜா, நாராயணன் போன்றோர்) வாய் திறக்காமல் இருந்தாலே போதும், தாமரை மலர வாய்ப்புண்டு.
UDAYAKUMARKR202
நாங்க ஆலோசனை சொல்வோமாம். இவங்க ஆட்சி அமைப்பாங்களாம். என்ன விகடனாரே, எங்களுக்கே ஸ்கெட்சா?!
balasubramni1
வடிவேலு பாணில சொல்லுணும்னா, டிஸ்டன்ஸ்தான் காரணம். தென்கோடில இருக்குற தமிழ்நாட்டை அப்படியே தூக்கி உ.பி பக்கத்துல வெச்சுரலாம்.
San8416
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்றால், காதலை என்னவென்று சொல்லலாம்?
? தனியார் ரயில் வரப்போகிறது. நீங்கள் ஒரு ரயில் வாங்கினால் என்னவெல்லாம் செய்வீர்கள்?
? ரஜினி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் எப்படியிருக்கும்?
? ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பிரச்னையைத் தீர்க்க ஒரு ஐடியா சொல்லுங்க.
? தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதை வைத்து ஒரு படம் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com