
விஜய்க்கு ‘அடிமைப்பெண்’ எம்ஜிஆர் கெட்டப். அஜித்துக்கு ‘தெய்வமகன்’ சிவாஜி கெட்டப்.
? கமல், விக்ரம், சூர்யா ஆகியோர் பல கெட்டப்களில் நடித்துவிட்டார்கள். விஜய்க்கும் அஜித்துக்கும் பொருத்தமான, வித்தியாசமான கெட்டப்கள் என்றால் எதைச் சொல்வீர்கள்?
அஜித்: ஸ்டீபன் ஹாக்கிங் போல ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து வலம்வரும் கெட்டப் போடலாம்.
விஜய்: ‘ஜோக்கர்’ பட ஹீரோ போல முக அமைப்பை மாற்றி ஒரு படத்தில் நடிக்கலாம்.
amuduarattai8
Face off படத்தை ரீமேக் செய்து அஜித் விஜய்யின் முகத்துடனும், விஜய் அஜித்தின் முகத்துடனும் நடித்தால் அட்டகாச மெர்சலா இருக்கும்.
அஜித், சென்னை
விஜய்க்கு ‘அடிமைப்பெண்’ எம்ஜிஆர் கெட்டப். அஜித்துக்கு ‘தெய்வமகன்’ சிவாஜி கெட்டப்.
ரிஃபாத்துன்னிஷா, திருமங்கலக்குடி

? ஒருவேளை ரோபோக்களின் கையில் உலகம் போய்விட்டால் என்ன ஆகும்?
ரோபோ சங்கர் ஏதாவது ஒரு நாட்டின் அதிபராய் அறிவிக்கப்படுவார்.
சாமந்தி, வேலூர்
சாதி, மதம் ஒழிந்து ரெட் சிப், கிரீன் சிப், புளூ சிப் என்று ரோபோக்கள் பிரிந்து சண்டை போட்டுக்கொள்ளும்.
வீரா தமிழன்
மாணவ ரோபோக்கள் ஹியூமன் சயின்ஸைப் படிக்க ஆர்வம் காட்டும்..!
எல்.மகாலட்சுமி, திருநெல்வேலி
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ரோபோக்கள் பற்றிய திரைப்படம் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகும். வில்லன் வேடத்தில் மனிதர்கள் நடித்திருப்பார்கள்.
saravankavi9
கிரிச்சு கிரிச்சுன்னு ஒரே சத்தமா இருக்கும்...
Hariprabu
Guru
ராகவா லாரன்ஸ் போல், இயக்குநர் ஷங்கர் 3.ஓ, 4.ஓ, 5.ஓ என்று தொடர்ச்சியாக ரோபோக்களை வைத்துக் கல்லா கட்டுவார்!
RavindranRasu
இறப்பே இருக்காது. யாராவது டிஸ்மாண்டில் செய்தால்தான் உண்டு.
urs_venbaa
‘ஒரு வேளை மனிதர்களின் கையில் உலகம் போய்விட்டால் என்ன ஆகும்’ என்று வாசகர் மேடையில் கேள்வி கேட்கப்படும்.
balasubramni16

? மறுபடியும் சசிகலா. எடப்பாடியும் பன்னீரும் சந்தித்தால் என்ன பேசுவார்கள்?
இபிஎஸ்: அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தரப் பகைவரும் இல்லை.ஓபிஎஸ்: ஆனா நிரந்தரத் தலைவலி உண்டு சசிகலா: நிரந்தரத் தலைவியும் உண்டு.
கார்த்திக், காஞ்சிபுரம்
என்ன இது புதுசா?!
பேச்செல்லாம் கிடையாது.ஸ்ட்ரெய்ட்டா பாதத்தில் சரணாகதிதான்!
Kozhiyaar5
ஈபிஎஸ்: எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. ஓபிஎஸ்: எது நடக்கிறதோ அது சுமாராக நடக்கிறது. சசிகலா: எது நடக்க விருக்கிறதோ அது மோசமா நடக்கப்போகுது.
RavikumarMGR
எடப்பாடி: கட்சி வேலையா எங்கயோ அவசரமா போற மாதிரி தெரியுது. பன்னீர்: கட்சி வேலையா... சசிகலாவோட ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷனுக்குப் போய்ட்டிருக்கேன்.
RamuvelK

டைம் மெஷினில் கடந்தகாலத்துக்குப் போய் ஒரே ஒரு சம்பவத்தை மாற்ற வேண்டும் என்றால் எதை மாற்றுவீர்கள்?
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பின் இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்ததற்கு பதிலாக முதலில் பேட்டிங் தேர்வு செய்யச் சொல்லி கங்குலிக்குச் சொல்லியிருப்பேன்.
அஹமத் ப்ராஹிம்
2019-ம் வருடம் இந்தியாவில் ஏர்போர்ட்டுக்கு லாக் போட்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுத்திருப்பேன்.
சாலக்குடி பிந்தூப்ரியன், கேரளா
டைம் மெஷினில் சென்று டைம் பாஸ் வார இதழை மீட்டு வந்து விகடன் வாசகர்களை வாரந்தோறும் குதூகலிக்கச் செய்வேன்.
எம் விக்னேஷ், மதுரை
சென்னையில் பி.இ பட்டதாரி ஆகி, நியூசிலாந்து சென்று மேற்படிப்பை முடித்து வேலையில் அமரும் வேளையில் ஃபைபர் போட்டில் இருந்து கடலில் தவறி விழுந்து இறந்த 26 வயது மகனைக் காத்திருப்பேன்.
பி. பழனி, முகப்பேர்
பாலித்தீன் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை உருவாக்கியவரைக் கண்டுபிடித்து, அவற்றை அழித்துவிடும்படி செய்வேன். இயற்கை பழைய நிலைக்குத் திரும்பும்.
இந்திராணி தங்கவேல், சென்னை.
2004-ம் வருடத்திற்குப் பின்னோக்கிப் போய் ஒன்றுமறியா பிஞ்சுக் குழந்தைகள் மடிந்த கும்பகோணம் பள்ளித் தீவிபத்தை இல்லாமல் செய்துவிடுவேன்.
டி. பசுபதி, ஊஞ்சவேலாம்பட்டி.
இளவரசி டயானா மரணத்திற்குக் காரணமான விபத்தை ரத்து செய்வேன்.
லி.சீனிராஜ், தொம்பக்குளம்.
2019-ம் ஆண்டு சீனாவிற்குச் சென்று, முதல் கொரோனா நோயாளியைப் பிடித்து 15 நாள் தனிமைப்படுத்தி வேறு யாருக்கும் பரவாமல் செய்துவிடுவேன்.
RahimGazzali
காந்தியைக் கொல்ல முயலும் கோட்சேவின் துப்பாக்கியில் குண்டுகள் இல்லாமல் செய்திடுவேன்!
absivam
சீமான் அவர்களுடன் இலங்கை சென்று கறி இட்லி ருசித்து வருவேன்.
pachaiperumal23
? கலைமாமணி, இப்போ இலக்கியமாமணி. இதுபோல் அரசியல் தலைவர்களுக்கும் விருதுகள் தருவது என்றால் யாருக்கு எந்த விருது தரலாம்?
எதிர்பாராமல் முதல்வர் ஆகி இப்போ எதிர்கட்சித் தலைவராகி யுள்ள இ.பி.எஸ்.க்கு ‘அதிர்ஷ்ட மாமணி’ விருது கட்டாயம் தரணும்.
ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்
தமிழக மக்களை வாய்விட்டு சிரிக்க வைத்து, நோய் விட்டுப் போக வைக்கும் சீமானுக்கு ‘மருத்துவ மாமணி’ விருது வழங்கலாம்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
வாயாலேயே எதையும் சமாளிக்கும் மோடிக்கு ‘அல்ட்டா, உல்ட்டா' விருது தரலாம்..!
பெ.பச்சையப்பன், கம்பம்.
மநீம கட்சியை விட்டுச் சென்றவர்கள் அனைவரும், அதற்குக் காரணமாக கமலைச் சொல்வதால், தோப்பை தனிமரம் ஆக்கியவர் விருது கமலுக்குத் தரலாம்.
amuduarattai
தினமும் ஆடியோ ரிலீஸ் செய்யும் சசிகலாவுக்கு ‘ஆடியோ மணி’ விருது தர வேண்டும்...
RavikumarMGR
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்க்கு ‘அரசியல் கூட்டாளி மணி’ விருது தரலாம்.
Paa_Sakthivel
கமல் - அவர் மட்டுமே கட்சியில் இருப்பதால் அவருக்கு ‘தனி மாமணி’ விருது வழங்கலாம்.
IamUzhavan

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? மோடியும் ஸ்டாலினும் சந்தித்தபோது இருவரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?
? இது இளையராஜா பாட்டு, இது கண்ணதாசன் எழுதியது, இது வைரமுத்து எழுதியது என்று சில பாடல்களைக் கேட்டு ரசித்திருப்போம். ஆனால் அது அவர்களுடையதாக இருக்காது. அப்படி நீங்கள் இனிமையாக ஏமாந்த பாடல்கள் பற்றிச் சொல்லுங்கள்...
? அதிகம் சினிமா நட்சத்திரங்களைக் கொண்ட தமிழக பா.ஜ.க., ஒரு திரைப்படம் தயாரித்தால் யார் யார் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்?
? தமிழர்கள் - 50 வருடங்களுக்குப் பிறகு ஒரே வரியில் அடையாளப்படுத்துவது என்றால் எப்படிச் சொல்வார்கள்?
? தாலாட்டுப் பாடல்களையே மறந்துவிட்ட சூழலில் டிரெண்டியாக நாலு வரியில் ஒரு தாலாட்டுப்பாடல் சொல்லுங்கள்...
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,
அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com