சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: குட்டிஸ்டோரி... ஜாலி ஸ்டோரி!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

அன்று: மச்சி, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ எடுடா. இன்று: செல்ஃபி

? மோடி - ராகுல் - கெஜ்ரிவால் மூவரும் சந்தித்தால்

என்ன பேசுவார்கள்?

எம். விக்னேஷ், மதுரை

கெஜ்ரிவால்: வெற்றி மேல் வெற்றி

மோடி : வெற்றிகரமான தோல்வி

ராகுல் : என்னவோ பேசுறீங்க... ஒண்ணும் புரியல.

என்.உஷாதேவி, மதுரை

கெஜ்ரிவால்: உங்களை மாதிரி நானும் மூன்று தடவை முதல்வராகிட்டேன்...

மோடி: அப்போ, அடுத்து என்னை மாதிரி பிரதமராகப் போறீங்களா...?

ராகுல்: அதுமட்டும் கெஜ்ரிவாலால முடியாது... ஏன்னா அவருக்கு உங்களை மாதிரி வெறும் வாய்ல வடை சுடத் தெரியாது!

மலர்சூர்யா

வாசகர் மேடை: குட்டிஸ்டோரி... ஜாலி ஸ்டோரி!

மோடி: கேட்கிறாங்கல்ல... சொல்றது.

ராகுல்: ஏன்... உங்கள கேக்கலயா? நீங்க சொல்றது.

கெஜ்ரிவால்: நான் சொல்ல ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க. பேசாம இருங்க.

Adhirai Yusuf

மோடி: தம்பி டூர் போலாமா?

ராகுல்: இருக்குற கம்பெனியையும் வித்துட்டிங்க. அப்புறம் எப்படிப் போறதாம்?

கெஜ்ரிவால்: தம்பி கவலைப்படாதிங்க. இன்னும் போர் விமானமும், ராக்கெட்டும் நம்மகிட்டதான் இருக்கு.

Bhuvan Jagadeesh

? பாய் பெஸ்ட்டி - சிறுகுறிப்பு வரைக

செலவு செய்வதில் கர்ணன்!

அன்பு காட்டுவதில் கண்ணன்!

கூடப் பிறக்காத அண்ணன்!

Ravikumar Mgr

ஒளவையும் அதியமானும்போல இருக்க வேண்டும்...

Laviher3

எந்த நேரம் கூப்பிட்டாலும் போன் எடுப்பவன்

என்ன சொன்னாலும் செய்பவன்

என் ரகசியங்களைக் காப்பவன்

நான் மொக்கை ஜோக் சொன்னாலும் ரசிப்பவன்

எந்த நிலையிலும் எல்லை தாண்டாதவன்

லவ் ஆனாலும், பிரேக்கப் ஆனாலும் ட்ரீட் கேட்காதவன்.

roadoram

‘பாய் பெஸ்ட்டி எனப்படுபவன் ‘ஆண் நண்பன்’ என்பதைவிட ‘நண்பனாக இருக்கும் ஆண்.’

manipmp

காதலனிடம் சொல்ல முடியாத விஷயங்களையும் பாய்பெஸ்ட்டியிடம் பகிர்கிறாள், பேரன்பின் எல்லா வடிவங்களிலும் கசிந்து நிரம்புகிறான். தந்தை, சகோதரன், கணவன், காதலன் என்ற நிலைகளின் வரையறை அவனிடம் இல்லை. பெண்மையின் புகார்களுக்கு, சார்தலுக்கு, ஆறுதல் பகிரும், இளைபாற்றும் அவளின் சுய நிழல் அவன்.

narumpunalbala8

ஊருக்குப் போனா பேக் தூக்கணும்

காலேஜ் போனா புக்க தூக்கணும்

சினிமாவுக்குப் போனா தண்ணிபாட்டில் தூக்கணும். இப்படியான தூக்குதுரையே பாய் பெஸ்ட்டி.

HariprabuGuru

ரெய்டு நடத்த வரும் இன்கம்டாக்ஸ் ஆபீஸர்தான் வில்லன் என்றால், ஹீரோக்கள் என்ன பன்ச் பேசுவார்கள்?

கண்ணீர் பன்ச்: நீ இன்கம் டாக்ஸ் ஆபீஸரா இருக்கலாம், இங்க பல பேரோட இன்கம் தெரியுமாடா உனக்கு?

SowmyRed

நீ இன்கம் டாக்ஸ் ஆபீஸரா இருக்கலாம்... ஆனா, உன்னோட `அவுட்கோயிங்’ என் கையில இருக்கு!

M benet Jayasingh புது டெல்லி

கண்ணா வாழ்க்கைங்கிறது ஒரு வட்டம். இன்னைக்கு மேலே இருக்கிறவன் ஒரு நாள் கீழே வருவான். அப்போ இதே மாதிரி அவங்க வீட்லேயும் ரெய்டு நடக்கும். அதுக்காக ஐ ஆம் வெயிட்டிங்.

muthiah.kannan.7

நீ வருவன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் எல்லாப் பணத்தையும் வட்டிக்கு விட்டுட்டேன்!

kaviprasath1029

வாசகர் மேடை: குட்டிஸ்டோரி... ஜாலி ஸ்டோரி!

“டூ லேட்! நான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எப்பவோ ஆதரவு தெரிவிச்சுட்டேன்!”

ravikumar.krishnasamy

அதிகமா சொத்து சேர்த்து வச்சிருந்தா சோதனை செய்வீங்களாமே, எங்க சோதனை செஞ்சுபாருங்க, என் சொத்து எல்லாம் சேர்ந்து உன்னை சின்னாபின்னமாக்கிடுவாங்க. என் சொத்து யாருன்னு பார்க்கறியா, என் பின்னால் நிற்கிற ரசிகர்கள்தான்..!

saravankavi

என்கிட்ட கறுப்புப்பணம் இல்லேன்னு சொல்லல. இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்.

parveenyunus

யாரைக் கேட்கிறாய் வரி... எங்களோடு படப் பிடிப்பு வந்தாயா, இரவும் பகலும் மேக்கப் போட்டு நடித்தாயா, விமர்சனக் கணையை எதிர் கொண்டாயா... உனக்கு எதற்குக் கொடுக்கணும் வரி?

mrs_vetti

தூக்கி அடிச்சிருவன் பாத்துக்க!

soundhar10

கொரோனா வைரஸ்க்கே பயப்படாதவன்

உன் கையில் இருக்கும் கோப்புக்கா பயப்படப் போறேன்.

balasubramni1

ஹீரோ: ஒண்ணும் கெடைக்கலல்ல, எடுத்த பொருள எடுத்த எடத்துலே வச்சுட்டு திரும்பிப் பாக்காமப் போய்டு.

இன்கம்டாக்ஸ்: டேய்...! நான் ஐ.டி ரெய்டு!

ஹீரோ: நான் ஆளும் கட்சி சைடு!

நீ இன்கம் டா.

அன்வ்பர் ஹூசைன்

? 90ஸ் கல்லூரி வாழ்க்கை, 2k கல்லூரி வாழ்க்கை - என்ன வித்தியாசம்?

அன்று: மச்சி, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ எடுடா.

இன்று: செல்ஃபி

venkat

செல்போனுக்கு டவர் கிடைக்குதான்னு தேடுனா 90’s...

அதே செல்போனுக்கு wifi கிடைக்குதான்னு தேடுனா 2ks!

sudarvizhie

90 ஸ் சினிமா பார்க்க திருட்டு விசிடி...

2k இருக்கவே இருக்கு Tamil Rockers...

ஃBorejerry

90’s - assignment எழுத library போய் notes எடுத்தோம்..

2k’s - Google search..

just copy paste

poiyilpulavar

வாசகர் மேடை: குட்டிஸ்டோரி... ஜாலி ஸ்டோரி!

90ஸ் - அய்யோ... வீட்டில் இன்ஜினியரிங் சேர்த்து விடமாட்றாங்க

2k - அய்யோ... வீட்டில் இன்ஜினியரிங் சேரச் சொல்றாங்க

புல்லாங்குழல் @காற்றின்

மொழிபெயர்ப்பு

96 படம் vs ஆதித்யவர்மா படம்

mrs_vetti

90ஸ்ல பஸ்டே கொண்டாடுனாங்க

2kல கிஸ்டே கொண்டாடுறானுங்க

Akku_Twitz

90kids:

இடைவேளைகளில்

கல்லூரி ஆசிரியர்களிடம் கிரிக்கெட் ஸ்கோர் கேட்டோம்.

2k kids: க்ளாஸ் நடக்குறப்போவே மொபைல்ல மேட்ச் லைவ் ஓடுது!

kaviprasath

? தமிழ் சினிமாக்கள் ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

“நீங்க ஒரு ஐந்து தமிழ்ப் படங்களுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தால், நாங்க ஒரு ஐந்து ஹாலிவுட் நடிகர்களுக்குக் கலைமாமணி விருது கொடுப்போம் எனப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடலாம்”

S.Prabhu Senthilkumar சென்னை

ஒவ்வொரு படத்துக்கும் ஒரு நம்பர் கொடுத்து அதற்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி அதிக மிஸ்டுகால் வாங்கின படத்தைச் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கலாம்!

அப்புறம் ஜாஸைவிட சுறா அதிக ஓட்டு வாங்கும்.

இளையநிலா

ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் சொல்லி ஆஸ்கார் பெயரில் விருது வழங்கச்சொல்லலாம்.

rizriza1017

அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்ததுபோல தமிழகத்தைத் தூக்கி அமெரிக்காவில் வைத்துவிட்டால் அனைத்து ஆஸ்கர் விருதையும் நாமே பெறலாம்.

sriram_m20

படத்துக்குப் பேரு ஆஸ்கர்னு வைங்கப்பா. ஏதாச்சும் ஒரு அவார்ட் வாங்குனாகூட ஆஸ்கர் அவார்ட் வாங்கிருச்சுன்னு சொல்லிடலாம்!

sudarvizhie

ஆஸ்கர் விருதுகள் தமிழக அரசு மூலம் வழங்கப்பட வேண்டும்.

saravankavi

ஆஸ்கருக்குப் போட்டியாகத் தமிழில் ஓர் அமைப்பைத் தொடங்கி தமிழ்ப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆங்கிலப் படங்களுக்கும் போனாப்போகுதுன்னு ரெண்டு விருதைக் கொடுத்துட்டுப் போகலாம். அவர்கள் தமிழ் விருது கிடைக்கவில்லை என்று புலம்பட்டும்.

p_jegatha

ஒரே வழி... டி.என்.பி.எஸ்.சி தேர்வு வழி.

கலியமூர்த்தி, சென்னை

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: குட்டிஸ்டோரி... ஜாலி ஸ்டோரி!

? தர்ம சங்கடம் என்பதற்கு ஒரு ஜாலியான உதாரணம் சொல்லுங்க...

? ஒரே ஒருநாள் நீங்கள் முதல்வரானால் என்ன செய்வீர்கள்?

? காங்கிரஸும் பா.ஜ.க-வும் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?

? தனியார் சேனல்கள் இல்லாத தூர்தர்ஷன் நாள்கள்... உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகின்றன?

? கமல் தயாரிப்பில் ரஜினி ஹீரோ... என்ன டைட்டில் பொருத்தமாக இருக்கும்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com