சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: பேயில்லாமல் நானில்லை!

விஜய், சூர்யா, ஹெச்.ராஜா
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய், சூர்யா, ஹெச்.ராஜா

வாசகர் மேடை

? தமிழக அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. ‘இது மட்டும் தமிழக அரசியலில் நடக்கவே நடக்காது’ என்றால் எதைச் சொல்வீர்கள்?

தவறுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர்கள் பதவி விலகுவது என்பது இனி நடக்கவே நடக்காது.

mekalapugazh

கொள்கை அடிப்படையிலான கூட்டணி.

amuduarattai

நடிகர் நடிகைகளின் பிரசாரம் இல்லாத

தேர்தலைக் காண்பதென்பது நடக்காத ஒன்று! “

SBuhaari

அடிமட்டத் தொண்டனுக்குத் தேர்தலில் சீட் என்பது இனி காணக் கிடைக்காது.

Ashokan Palanisamy

தி.மு.க - அ.தி.மு.க கூட்டணி.

Karthik M Somasundaram

வாசகர் மேடை:
பேயில்லாமல் நானில்லை!

? விஜய், சூர்யா, ஹெச்.ராஜா - மூன்று பேரும் ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

பேச்சு பேச்சா இருக்கணும்!

ஜெ.கண்ணன், சென்னை

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

shivaas_twitz

விஜய்யும் சூர்யாவும் நடிச்சா ‘நேருக்கு நேர்.’

ரெண்டு பேரும் சேர்ந்து ஹெச்.ராஜாகூட நடிச்சா ‘எதிரிக்கு நேர்.’

Akku_Twitz

வந்தா அட்மினாதான் வருவேன்!

Thaadikkaran

அண்ணா அகரம் அட்மின்

Mahendiran Chandrasekaran

ஃபிரெண்ட்ஸ் Vs எனிமி

உதயகுமார் க. இரா.

மூன்றாம் பொறை

Sathia Moorthi

வந்தால் பிரச்னையோடுதான் வருவேன்

Kanniya Kumar

திகிலு

Mooka Ibrahim

மூவர்கூடம்

Mohamed Humayoon

? பேய்ப்படங்களைப் பேய்கள் பார்த்தால் என்ன சொல்லும்?

யார் அந்தக் கதாநாயகி! ‘மேக் அப்’ போடாமலேயே நம்மைப்போலவே இருக்காங்களே!

கி.ரவிக்குமார், நெய்வேலி

“எப்பவும் எனக்கான பாடல் `நானே வருவேன் இங்கும்... அங்கும்...’ தானா. ஒரு `ஆலுமா டோலுமா...’ பாட்டெல்லாம் கிடையாதா..?’’ எனக் கேட்கும்!

கே.எம்.ரவிச்சந்திரன், மதுரை 1

“நல்லவேளை ஏற்கெனவே செத்துட்டேன்’’னு சொல்லி சந்தோஷப்படும்.

kaattuvaasi

எங்களை விட்டுருங்கப்பா... ஏன் இப்படி, போன உயிரைத் திரும்ப எடுக்கறீங்க..?

nellaiseemai

மச்சி... இந்தப் படத்துல பேயா வர்ற ஹீரோயின் செம்ம ஃபிகர்டா.

Pethusamy

தென்னிந்தியத் திரைப்படப் பேய்கள் சங்கம் ஆரம்பிக்கணும்.

Railganesan

எங்களை சாக்கா வெச்சு பேய்னா பயம்னு ஹீரோயின்ஸைக் கட்டிப்புடிக்கிறது, இடுப்புல ஏறி உக்கார்றது, ஆவி அவர் உடம்புல புகுந்துடுச்சின்னு அண்டால கறிச்சோத்த அள்ளித் திங்குறது, வில்லனக் கொன்னுட்டு ஆத்மா மேல பழியைப் போட்றது, எங்கள வெச்சே படம் எடுத்துக் கல்லா கட்றதுன்னு நாங்க வாழ்றோமோ இல்லயோ, நீங்க வாழ்றீங்கய்யா!

RohithR51

‘செத்த’ நேரம் சும்மா இருங்கய்யான்னு சொல்லும்.

Giri47436512

``ச்ச, நாமதானா? இருந்தாலும் திரையில பாக்க திக்குன்னுதான்யா இருக்கு...’’

atgram

நாம யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்...தண்ணி தரமாட்டோம்னு சொன்னோமா...ஹைட்ரோகார்பன் கொண்டுவந்தோமா... நம்மை படம்கிற பேர்ல கேலிக்கூத்தாக்கிட்டாங்களே..!

iyyaru_s

எங்களுக்கு கால் இல்லேங்கறதுக்காக எங்களோட கால்ஷீட்டை வாங்காமலேயே நடிக்க வச்சிடறதா..?

parveenyunus

“எங்களுக்கு வர்ற கோபத்துக்கு, நாங்களே ஒரு பேய்ப் படம் எடுக்கப்போறோம்.. அதுல, ராகவா லாரன்சுக்கு, ஒரு பாட்டு... ‘பேயில்லாமல் நானில்லை, தானே எவரும் செத்ததில்லை’ன்னு எழுதி, மெட்டுகூடப் போட்டு வச்சிருக்கோம்’’னு பேய்கள் சொல்லும்!

வி.சி. கிருஷ்ணரத்னம்

Pay இல்லாமகூட நடிச்சிடுவாரு, பேய் இல்லாம நடிக்க மாட்டார் போல ராகவா லாரன்ஸ்.

Adhirai Yusuf

``பேய்களா... நம்ம கூட்டத்துக்குப் புதுசா ஒருத்தர் வரப்போறாரு... யார் தெரியுமா..? கடன் வாங்கி இந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்!’’

Vijayalakshmi Natarajan

இனிமே இளையராஜா வழியைப் பின்பற்றி ராயல்டி கேட்க வேண்டியதுதான்.

Sathia Moorthi

? காதல் கவிதைகள்போல, பிரேக்-அப்புக்கு ஒரு ஜாலியான கவிதை சொல்லுங்க.

காதலியாய் இருந்தாய்

பாஸ்வேர்டாய் மாறினாய்

manipmp

அன்பே நான் என்ன வைகோவா, என்னுடன் கூட்டணி வைக்கத் தயங்குகிறாய்...

Thangalhaneefa

வாசகர் மேடை:
பேயில்லாமல் நானில்லை!

அவள் பறந்து போனாளே

என்னை மறந்து போனாளே

நான் பார்க்கும் போது

இன்னொரு பையனுடன்

பல்சரில் போனாளே

parveenyunus

90’s kidsக்கு ஏது காதல், ஏது பிரேக்கப்!

Arunleaks

அன்பே வேலூர் இடைத்தேர்தலா நம் காதல்...

வேண்டாம் என நிறுத்தி வைப்பதற்கு!

Thangalhaneefa

அவளைப் பிரிந்தது அவமானம்

அரசுக்கு

இனிமேல் கூடுதல் வருமானம்

balasubramni1

? ஷாப்பிங் மால்களில் உங்களை மிரட்டும் விஷயம் எது?

ஷாப்பிங் மால்னாலே உட்கார இடமின்றி நடையா நடக்கணுமே, அதுதான் என்னை ரொம்ப மிரட்டுது...

கு.ராஜசுவாதி ப்ரியா, சென்னை

எதை வாங்கப் போனோமோ அதை விட்டுட்டு மத்த எல்லாத்தையும் வாங்கிட்டு வர்ற மனைவிதான்!

PrabuG16173032

அத்தியாவசியப் பொருளை ஐந்தாவது மாடியில் வைத்து, வழியில் நமக்குத் தேவைப்படாததையும் வாங்க வைத்துவிடுவது.

M__karthika

பார்க்கிங் ஏரியாவில் நமது டிரைவிங் திறமையைச் சோதிக்கும் வகையில் ஏற்படும் டிராஃபிக்.

Aruns212

இவ்வளவு பெரிய கட்டடம் இடிஞ்சு விழுந்தா தப்ப முடியுமாங்கற நெனப்புதான் மிரட்டுதுங்க எசமான்...

mohanraj68268

ஷாப்பிங் நேரத்தைவிட அதிகமாக ஆகும் பில் போடும் கவுன்டரில் நிற்கும் நேரம்.

Anbu Bala

கமிட்டட் பசங்க, பொண்ணுங்க... அவங்கள பாத்தாலே காண்டாகுது...

சகோ

கணவர், கண்ணில் படும் பொருள்களை எல்லாம் வாங்கிக் குவிக்கும்போது...

Sakunthala R

மாச சம்பளத்த ஒரே சட்டையில price tag-ஆ பாத்தா யாருதான் பயப்பட மாட்டாங்க!

Manoj Mohanan

Bag checking ஏதோ தீவிரவாதி ரேஞ்சில் இருக்கும்!

Sri Vidya

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை:
பேயில்லாமல் நானில்லை!

? தினந்தோறும் சீரியஸான மசோதாக்களைக் கொண்டுவரும் மத்திய அரசு, மக்களை மகிழ்விக்க ஒரு ஜாலியான மசோதாவைக் கொண்டுவரலாம் என்றால், என்ன மசோதா கொண்டுவரலாம்?

? போலீஸ் சினிமாக்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

? ராணுவத்தில் வேலை பார்க்கும் மிலிட்டரி மேன் தோனிக்கு ஒரு பாட்டு டெடிகேட் பண்ணுங்க.

? வீட்டில் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டு சும்மாவே போட்டுவைத்திருக்கிற பொருள் என்ன... அதைப் பார்க்கும்போது உங்க ஃபீலிங் எப்படி இருக்கும்?

? சிம்புவும் தனுஷும் சேர்ந்து நடித்தால் அந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்?

வாசகர் மேடை:
பேயில்லாமல் நானில்லை!

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002.