பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: உத்தம வில்லன்கள்

கார்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி

மணமக்களுக்கு வாழ்த்து சொல்வதற்குள் நம்மளை கீழ எறக்கி விட்டுடுவாங்க பாருங்க, அதான்...

? சினிமா வில்லன்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன?

ஹீரோவைவிட பலசாலியாக இருந்தும் அடிபடுவது.

கலை

எப்படியும் தோற்கப்போறோம்னு தெரிஞ்சும் கடைசி வரைக்கும் பந்தாவா கெத்தோட இருக்கிறது.

Venkidakrishnan.G, கோவை

ஹீரோங்கற முகமூடி இல்லாது வெளிப்படையாக இருக்கிற நேர்மை.

umakrishh

எவ்வளவோ வசதி இருந்தும் பாழடைந்த வீட்டிலோ பழைய தொழிற்சாலை குடோனிலோ குடியிருக்கும் எளிமை. இந்த எளிமை ரொம்பப் பிடிக்கும்.

jerry.darvey

வாசகர் மேடை: 
உத்தம வில்லன்கள்
வாசகர் மேடை: உத்தம வில்லன்கள்

எல்லாப்படங்களில் தோற்றுக்கொண்டே இருந்தாலும் தாழ்வுமனப்பான்மையில் சிக்கிக்கொள்ளாத அந்தப் பேராண்மை.

mekalapugazh

அடியாட்கள் ஐம்பது அறுபது பேருக்கு சாப்பாடு போட்டுப் பராமரிக்கும் அந்தக் கருணையுள்ளம்.

pachaiperumal23

தன்னைப்பற்றி அரசாங்கத்துக்கோ போலீஸுக்கோ ஹீரோ எழுதிப்போடும் புகார் மனுக்களை, கையில் வைத்து ஹீரோவிடம் காட்டி, `நீ எங்கே கம்ப்ளைன்ட் எழுதிப்போட்டாலும் என் கைக்குத்தான் வரும்’ என்ற உண்மையைச் சொல்வது ரொம்பப் பிடிக்கும்.

bestguypsu1

? பிரபல அரசியல்வாதிகள், சினிமாப் பிரபலங்களின் பாஸ்வேர்டு என்னவாக இருக்கும்? உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்க.

ஈபிஎஸ் - கூவத்தூர் (koovathur)

கே.லக்‌ஷ்மணன், திருநெல்வேலி

எஸ்.வி.சேகர் - Chipsekar

mekalapugazh

டைரக்டர் ஷங்கர் - Budget_400Cr

bestguypsu1

டி டி வி பாஸ்வேர்டு இருபது ரூபாய் நோட்டு.

HariprabuGuru

நிர்மலா சீதாராமன் - I hate Onion.

gZfD4jzeG3j4ZHM

வடிவேலு - ஆஹான்

Ramji_Aero

நடிகர் விஜய் - கேக்கல

KrishnaratnamVC

ராஜேந்திரபாலாஜி - மோடி எங்கள் டாடி

pbukrish

கமல் - Bdug%$-63bxhdg€£_÷

altaappu

சீமான் : puhahahahha

ஸ்டாலின்: CM_dreamer

உதயநிதி ஸ்டாலின்: DeputyCM_dreamer

chithradevi_91

இளையராஜா - சரிகமபதநி

RavikumarMGR

Sellur Raju: password

ARUN_VALAN_J

தமிழக அமைச்சர்கள் பாஸ்வேர்டு

2016 வரை - அம்மா

2017 - சின்னம்மா

2017 முதல் தற்போது வரை - மோடி & அமித்ஷா.

2021 முதல் - அப்போது யார் கட்டுப்பாட்டில் இருப்பார்களோ அவர்/அவர்கள் பெயர்கள்.

saravankavi

ராகவா லாரன்ஸ் - காஞ்சனா_4 (kaanchanaa_4)

laks.veni

? சூர்யாவும் கார்த்தியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

Pethusamy

இணைந்த கைகள்

சு.சுஸ்ருதா, மொரப்பூர்

கார்த்தி
கார்த்தி

சிங்கப்பையா

maddy.prabu

இரட்டை கதிரே

awesomearuna

எஸ்கே (என்கிற) சிவக்குமார்! [எஸ் _ சூர்யா ; கே _ கார்த்தி]

Balu_Marappan

? திருமண விழாக்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

மணமக்களுக்கு வாழ்த்து சொல்வதற்குள் நம்மளை கீழ எறக்கி விட்டுடுவாங்க பாருங்க, அதான்...

வே.புனிதா, வேளாங்கண்ணி

பந்தியில் சாப்பிடும்போது வீடியோ எடுப்பது...

மலர்சூர்யா

சாப்பிடுவதற்காக நாம் ஒரு சேர் பின்னாடி நிற்பதோ / நாம் சாப்பிடும்போது நம் சேருக்குப் பின்னால் ஒருவர் நிற்பதோ!

umar.farook.71

எங்க வேலை பாக்குற.. எவ்வளவு சம்பளம்... அடுத்து உனக்கு எப்ப கல்யாணம் என்பது போன்ற, உறவினர்களிடம்/நண்பர்களிடம் இருந்து வரும் கேள்வி நச்சரிப்புகள்.

elaiya.raja.923

முதல் நாள் ரிசப்ஷன்ல நிறைய ஐட்டம் போட்டுவிட்டு, காலை கல்யாணத்தன்று குறைச்சுடுவாங்க. நம்ம நேரம், நாம காலையில் போயிருப்போம்.

vc.krishnarathnam

ஆடம்பரத் திருமணத்தில் உறவுகளை வரவேற்கக்கூட ஆளில்லாமல் வாசலில் தலையாட்டி பொம்மையை நிற்கவைத்துப் பன்னீரைத் தெளிக்கவைத்து வரவேற்பது.

sheriff.sheriff.5454

அப்புறம் என்னப்பா, அடுத்து நீதான?

sathyathetruth

மாப்ள வீடா, பொண்ணு வீடான்னு கேக்குறது. சோறு திங்க வந்தது ஒரு குத்தமாடா...

Kundhavai6

எக்ஸ்ட்ரா இன்னொரு தாம்பூலப்பை கேட்டா, பிச்சைக்காரன் மாதிரியே பாக்குறது. இதுக்காக மண்டபத்துக்குள்ள மறுபடியும் போய்ட்டு வர்றது எரிச்சலா இருக்கும்.

jill_online

பல வருஷம் கழிச்சுப் பாக்குற சொந்தக்காரங்க, உங்க புள்ளயா இது, இவ்ளோ பெருசா வளர்ந்துட்டான்னு சொல்றது...

பல வருஷம் கழிச்சுப் பாத்தா வளர்ந்து இருக்காம அவங்க பாத்தப்ப இருந்த மாதிரியேவா இருப்பாங்க?

Akku_Twitz

பந்திக்கு முந்துறது. தாலி கட்டிட்டு திரும்பிப்பாக்கும்போது ஒரு பய இருக்க மாட்டான்.

macchu

சாம்பார் ஊற்றிய உடனே அடுத்த பந்திக்கு இடம்பிடிக்க பின்னாடி வந்து நின்றுகொள்வது.

M__karthika

திருமண நிகழ்வுகளைப் பார்க்க விடாமல் முழுமையாக மேடையை மறைத்து நிற்கும் போட்டோ வீடியோ கிராபர்கள்.

ival__nila

கல்யாணப் பெண்ணைவிட ஓவர் மேக் அப் மற்றும் நகைகளுடன் சுற்றி வரும் உறவுக்காரப் பெண்மணிகள்.

muthiah.kannan.7

? பிரியாணியைப் பற்றி நச்சென்று நாலு வரியில் ஒரு கவிதை...

மட்டனுக்கு திண்டுக்கல் போணும்

சிக்கனுக்கு ஹைதராபாத் போணும்

அப்பப்ப பிரியாணி சாப்பிட

பாய்வீட்டுப் பக்கத்துல குடி போணும்!

அஜித், சென்னை

பேரோ பிரியாணி

களவாட வைக்கும் களவாணி

மதங்களை இணைக்கும் பாலம் நீ

தேர்தல் நேர ஹீரோ நீ!

parath.sarathi

வாழ்ந்து முடிந்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதே பிரியாணி!

nivya.bala

புகைபிடித்தல்

உடல் நலத்திற்குக் கேடு

‘தம்’ பிரியாணி விதிவிலக்கு!

Adhirai Yusuf

இன்று பிராணியாக இருப்பது

நாளை பிரியாணி ஆகிறது!

enos.ibrahim

பாய் வீடானாலும், பாஸ்கர் வீடானாலும், பாதிரியார் வீடானாலும் உன்னால் எந்த மதத்தடையும் இன்றி உள்ளே நுழைய முடியும்.

krishna.moorthy.54584982

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: 
உத்தம வில்லன்கள்

? உலக சினிமா ஆர்வலர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் என்னென்ன?

? காதலர் தினத்துக்கு வித்தியாசமான ஒரு லவ் ப்ரபோசல் வசனம் சொல்லுங்களேன்.

? கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாராம். கமல், ரஜினி இருவரும் பேசிக்கொள்ளும் ஒரு நச் வசனம் சொல்லுங்களேன்.

? பா.ஜ.க தலைவர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர் யார், ஏன்?

? நித்யானந்தா பற்றி ஒரு வெப் சீரிஸ் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com