சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: இங்கிட்டு சசிகலா... அங்கிட்டு மோடி!

வனிதா
பிரீமியம் ஸ்டோரி
News
வனிதா

அந்தத் தீவில் 90s-ல் பிறந்த சிங்கிள்களைக் குடியமர்த்தி மிங்கிள் ஆக வைப்பேன்.

? கைலாசா போல் உங்களுக்கும் ஒரு தீவு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

என்ன... வழக்கம்போல் வீட்டுமனையாக மாற்றி விற்றுவிடுவோம்.

 கதிஜா ஹனிபா, திருச்சி

IPL நடத்திட்டாப் போச்சு.

 இராம. பூர்விதா, சென்னை

``ஒரே தீவு ஒரே மனிதன்’’ என்ற முழக்கத்தை முன்வைத்து, நான் மட்டுமே அந்தத் தீவில் வசிப்பேன்.

PG911_twitz

அந்தத் தீவில் 90s-ல் பிறந்த சிங்கிள்களைக் குடியமர்த்தி மிங்கிள் ஆக வைப்பேன்...அப்படியாவது 90S kids-க்கு நல்ல வாழ்க்கை அமைந்தால் மகிழ்ச்சிதான்.

ranjanikovai

இருக்கிற கடனுக்கு உடனே தீவை விற்கணும். இல்லாட்டி வாடகைக்காவது விடணும்!

absivam

என்னைத் தொடர்பு கொள்ள...

www.tivu.ownerbalu

BaaluElango0

அந்தத் தீவிலாவது கொரோனா இல்லாமல் இருக்குமாங்கறதைச் சொல்லுங்க, அப்புறம் என்ன செய்யலாங்கிறதைப் பார்த்துக்கலாம்!

sudarvizhie

இனிமேல் கட்சிக்காரங்களை ‘கட்டுப்பாட்டில்’ வைக்க ‘ரிஸார்ட்’ போக வேண்டாம், அதற்காக எங்கள் தீவு வாடகைக்கு விடப்படும் என்று எல்லா டி.விகளிலும் விளம்பரப்படுத்துவேன்.

krishmaggi

? நம்பிக்கை - மூடநம்பிக்கை: ஜாலியான உதாரணங்களுடன் விளக்குங்களேன்.

நம்பிக்கை - தடுப்பூசி போட்டா கொரோனா வாராது என மனம் ஆறுதல் அடைவது.

மூடநம்பிக்கை - வாசலில் விளக்கு ஏத்துறதும், தட்டை வைத்துத் தட்டினால் கொரோனா ஓடி விடும் என்பதும்.

 ராகவ்

சீமானின் விருப்ப உணவு ஆமைக்கறி என்பது நம்பிக்கை; ஆனா பிரபாகரனுக்கே துப்பாக்கி சுடச் சொல்லித்தந்தவர் சீமான் என்பதை நம்பினால் அது மூடநம்பிக்கை.

 சாலக்குடி பிந்தூ ப்ரியன், கேரளா

நம்பிக்கை - கிருமிநாசினிகள் கிருமிகளை அழிக்கும் என்பது.

மூடநம்பிக்கை - 99.9 சதவிகிதம் கிருமிகளை அழிக்கும் என்பது.

 எம் விக்னேஷ், மதுரை

பணக்காரனாவேன் - நம்பிக்கை.வாஸ்து, யாகங்கள், கோவில்கள் விசிட், ஜோசியர்கள் விசிட்களில் பணவிரயம் - மூடநம்பிக்கை.

 குமுதாசலம், சேலம்

``கடவுள் இருக்கிறார்’’ - நம்பிக்கை. ``நானே கடவுள்’’ - மூடநம்பிக்கை.

 ச.பிரபு, குற்றாலம்

நம்பிக்கை - காதலி மனைவியாவாள் என நம்புவது.

மூடநம்பிக்கை - மனைவி காதலியாகவே இருப்பாள் என நம்புவது.

 பெ.பாண்டியன்

நம்பிக்கை - மாதந்தோறும் `மன் கி பாத்'ல ஜி பேசுவார்னு நம்புறது.

மூடநம்பிக்கை - என்னிக்காவது ஒருநாள் ஜி பிரஸ்மீட்டுல பேசுவார்னு நம்புறது.

 எல்.மதி, திருநெல்வேலி

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தொண்டர்களை நம்புவது நம்பிக்கை!அவர்களையே சசிகலாவும் நம்புவது மூடநம்பிக்கை!

 ஏ.முருகேஸ்வரி, தென்காசி

தான் சொல்வதை எல்லாம் தம்பிகள் நம்புவார்கள் என்று சீமான் நினைப்பது நம்பிக்கை.

தான் சொல்வதை எல்லோரும் நம்புவார்கள் என்று சீமான் நினைப்பது மூடநம்பிக்கை.

SowThanishka

வாசகர் மேடை: இங்கிட்டு சசிகலா... அங்கிட்டு மோடி!

? யார் யாருக்கோ போன் செய்து பேசும் சசிகலா, மோடிக்கு போன் செய்தால் அந்த உரையாடல் எப்படி இருக்கும்?

சசிகலா: தென்னகத்து மம்தா பானர்ஜி நான்தான் ஜி

மோடி: நல்லவேளை எச்சரிச்சீங்க, மைண்ட்ல வெச்சுக்கறேன். மன் கி பாத், மன்னார்குடி மாஃபியா கி பாத்

 சண்முகவடிவு, கங்காபுரம்

சசிகலா: எப்போ போன் பண்ணாலும் கட் பண்றீங்களே, ஏன்?

மோடி: என்னை வெச்சு ஒரு ஆடியோ ரிலீஸ்க்கு ரெடி ஆகலாம்னு பார்த்தீங்களா?

 கற்பகம், ஈரோடு

சசிகலா: வணக்கம் ஜி! நான் சசிகலா பேசுறேன்..!

மோடி: ஓ... சசி ஜி! திருவள்ளுவர் என்ன சொல்றார்னா, இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்! ஓ.. போனை வச்சிட்டீங்களா..?

 ஏ.எம்.அகஸ்தீசன், தென்காசி

தமிழகத்தில் `ஜி’யைவிட ஜிபி.முத்துவுக்கே ரசிகர்கள் அதிகம்! எனவே சசிகலா அவருக்கு போன் செய்து பேசினால் ஆடியோ பெரிய அளவில் ரீச் ஆகும்.

pbukrish

இந்த நாலு வருஷத்துல ஒண்ணும் மாறல... நான் உள்ள ஊதுபத்தி உருட்டினேன். நீங்க ஊருக்குள்ள இருந்தே உருட்டிட்டு இருந்திருக்கீங்க.

Timonoffcl

மோடி: வெளியே எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே எப்படி நீங்கள் இருக்கீங்க?சசி: நீங்க எப்படி வெளிநாடு போகாமல் இருக்க முடியுதோ அதுமாதிரிதான்.

SuperSt00211789

மோடி: அதுசரி... கூவத்தூர்ல என்ன நடந்துச்சு சசிகலா ஜி..?!

சசிகலா: என்ன நடந்துச்சு... எப்பவும்போல எல்லாமே தவழ்ந்துச்சு..!

LAKSHMANAN_KL/

ஜி... ஹமாரே முதுகு மே குத்த இடம் நஹி, ஐயம் பாவம்.

ARiyasahmed

? கிளப் ஹவுஸில் எட்டிப்பார்த்தீர்களா? அந்த அனுபவத்தை நாலே வரியில் ஜாலியாகச் சொல்லுங்களேன்...

ஒரு படத்துல ரஜினி சொல்வாரே, ``தமிழனுக்கு பேசலைனா மண்டை வெடிச்சிடும்!’’ அதற்கு உதாரணம்தான் கிளப் ஹவுஸ். விடிய விடிய பேசறானுங்க..! யய்யாடி..!

absivam

கிளப்புக் கடை மாதிரி எல்லாம் கிடைக்கிறது, யாரு வேணாலும் சட்ட சபையில் நடப்பதுபோல கையைத் தூக்கிட்டுப் பேச வேண்டியதுதான்.

Vanni_Radha

அட இருங்கப்பா, முதல்ல இந்த இன்ஸ்டாகிராம், ட்விட்டர், அப்புறம் அதோட ஸ்பேஸ்ன்னு ஒண்ணு ஒண்ணா கத்துக்கிறதுக்கே நாக்குத் தள்ளுது... இதுல கிளப் ஹவுஸ் அப்படின்னு ஒண்ணா... முடியலடா சாமி!

valarselvan

32 வருஷத்துக்கு முன்பு வந்த கரகாட்டக்காரன் படத்தைப் பற்றியே நாலரை மணி நேரம் கிளப் ஹவுஸ்ல அரட்டை அடிக்கறாங்கன்னா... கிளப் ஹவுஸ் வருங்காலத்தில் எவ்வளவு நேரத்தை சாப்பிடப்போகிறது என்று புரிஞ்சுக்கங்க!

h_umarfarook

வாசகர் மேடை: இங்கிட்டு சசிகலா... அங்கிட்டு மோடி!

? ஜெ.தீபா பயோபிக்கில் நடிக்க எந்த நடிகை பொருத்தமாக இருப்பார்?

வனிதா விஜயகுமார்

 பிரகாஷ், பொள்ளாச்சி

ஆர்த்தி

 கருணா, சென்னை

விந்தியா (முகஜாடை ஓ.கே. கலருக்கு மட்டும் கொஞ்சம் மேக்கப் தேவைப்படும்)

 எம்.கலையரசி, சேலம்.

இப்போ அவங்க இருக்கிற நிலைமைல அவங்களே நடிக்கலாமே...

 ரகுநாத், மதுரை

நடிகை ராதா ஜெ.தீபாவின் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துவார்.

 ஜெ.ஜான்சி சுப்புராஜ், கடலூர்

ஏன் இதையும் நாங்களேதான் கூற வேண்டுமா? அவங்க இதையும் சொல்ல மாட்டாங்களாமா...?

SowThanishka

நித்யா மேனன்னு பதில் பிரசுரம் செய்தால் உயிரை மாய்த்துக்கொள்ள ஜெ.தீபா கட்சியிலே சென்று சேருவோம்! -இப்படிக்கு, க்யூட் நித்யா மேனன் சர்வலோக பேரவை!

absivam

பயோபிக்கெல்லாம் எடுக்கற அளவுக்கு அவ்வளவு வரலாறா அவங்களுக்கு இருக்கு...?

nanbanvela

வாசகர் மேடை: இங்கிட்டு சசிகலா... அங்கிட்டு மோடி!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? விஜய் 65 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து படத்தின் ஒன்லைனைச் சுருக்கமாகச் சொல்லுங்க.

? இதுவரை விளம்பரங்களில் நடிக்காத கவுண்டமணி எந்த விளம்பரத்தில் நடிக்கலாம்?

? 2020 லாக்டௌன், 2021 லாக்டௌன் - என்ன வித்தியாசம்?

? அணிலால் மின்தடை ஏற்படுவதுபோல் நம் வாழ்க்கையில் என்னென்ன வினோதக் காரணங்களைச் சொல்லலாம்?

? ஒருவேளை ஸ்டாலினுக்குப் பதில் அழகிரி தி.மு.க தலைவர் ஆகியிருந்தால்...?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com