
எப்படி ஒத்த செங்கல்லை வெச்சு ஆட்சியைப் பிடிச்சோம் பாத்தீங்களா!
ஐ.பி.எல் பார்க்கிறேன் பேர்வழி என உங்கள் வீட்டில் நடக்கும் கூத்துகள் என்னென்ன?
ஓரிரு மேட்ச் தவிர, யாரு ஜெயிப்பாங்கன்னு 10 மணிக்கே தெரிஞ்சாலும், கடைசி பால் வரை பார்த்து நம்ம தூக்கத்தையும் கெடுப்பது.
ஸ்வாதி சுசீ, சென்னை
தோனி கேப்டன் பதவியை ஜடேஜாகிட்ட கொடுத்தார்னு சொன்னாங்க, என்னப்பா டீம்ல தோனி விளையாடுறார்னு எங்க சித்தப்பா கேட்டார்.
balasubramni1
சாப்பிட்ட கையை எழுந்து போய் கழுவினால் சி.எஸ்.கே விக்கெட் விழுந்துவிடும் என்பதால், சாப்பிட்ட கையைக்கூடக் கழுவாமல் உட்கார்ந்திருப்பது.
amuduarattai
டெய்லி இரவு உணவு Swiggy/Zomato!
vrsuba
மேட்ச் பார்த்து முடிச்சு அப்பறம் போடுற ஹைலைட்ஸையும் பார்க்குறான் என் மகன்.
Vasanth920
அடுத்த பால் என்ன ஆகும்னு வீட்டுக்குள்ளேயே பெட் வச்சுக்குவோம்! ஹி ஹி!
KRavikumar39

ஸ்டாலின் - மோடி சந்திப்பின்போது அவர்கள் என்ன பேசினார்கள் என்று நமக்குத் தெரியும். ஆனால் அவர்கள் மைண்ட்வாய்ஸ் என்ன பேசியிருக்கும்?
ஸ்டாலின்: எப்படி ஒத்த செங்கல்லை வெச்சு ஆட்சியைப் பிடிச்சோம் பாத்தீங்களா!
மோடி: ஒத்த செங்கல் தானேன்னு விட்டுட்டு வந்தது தப்பாப்போச்சு!
நா.இரவீந்திரன்
ஸ்டாலின்: தினமும் பத்து பதினைந்து கட்டணத்தை உயர்த்திட்டு நீங்க நிம்மதியா இருக்கீங்க, ஒரே ஒரு கட்டணத்தை உயர்த்திட்டு நான் படற பாடு இருக்கே..!
A ஆசிக் ஜாரிஃப்,
ஆனைமலை
ஸ்டாலின்: ஆங்கிலேயர் ஆட்சியில்கூட இவரைப் போன்ற ஒற்றை அதிகாரம் கொண்டவர்கள் எவரும் இல்லையே!
மோடி: கண்ணனூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் இவர் பேசியதைப் பார்த்தால் இவர்தான் நமக்கு முதல் எதிரிபோல் தெரிகிறதே!
க.ரவீந்திரன், ஈரோடு
மோடி: குஜராத் மாடல்னு பேசி நாம பிரதமரான மாதிரி, திராவிட மாடல்னு பேசி இவரும் பிரதமராயிடுவாரோ?
ஸ்டாலின்: வளர்ச்சியே இல்லாத குஜராத் மாடலைப் பற்றிப் பேசி இவர் பிரதமர் ஆகும் போது வளர்ச்சி மிகுந்த திராவிட மாடலைப் பற்றிப் பேசி நான் பிரதமராக முடியாதா?
PG911_twitz
மோடி: இன்னும் நாம போகாம இருக்குற நாட்டுக்கு எல்லாம் போயிட்டு வந்துடுவாரோ?
ஸ்டாலின்: இவர் இன்னும் போகாம இருக்குற நாடுகள் எல்லாம் எதுன்னு கேட்டுடலாமா?
saravankavi
ஸ்டாலின்: இந்தியில பேசச் சொல்லிடுவாரோ..!
மோடி : எந்தத் திருக்குறளைச் சொன்னா ஜி.எஸ்.டி பணத்த கேக்காமப் போவார்..!
YAADHuMAAGE
ஜி: நீங்களெல்லாம் நினைச்ச நேரத்துக்கு ‘டெல்லி’ வந்துட்டுப் போயிடுறீங்க. ஆனா, நான் தமிழ்நாட்டுக்கு வர்றதை நினைச்சாலே...
DevAnandR155
ஜி: தமிழகத்தில் ராமர் கோயில் கட்ட இடம் கேட்கலாமா...
ஸ்டாலின்: டெல்லியில் பெரியார் சிலை வைக்க இடம் கேட்கலாமா...
manipmp
நெல்சன் - ரஜினி இணையும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும்?
சூப்பர் ஒன்!
நா.இரவீந்திரன்
வார்!
இர.செல்வநிகிலா
லீடர்
சி. கார்த்திகேயன், சாத்தூர்
வினோதன்
ப.சோமசுந்தரம், சென்னை
ப்ரீஸ்ட் - இது ஒரு ஆன்மிக டார்க் காமெடி ஆக்ஷன் மூவி.
ச.பிரபு, குற்றாலம்
`அத்தை மகளுக்குக் கட்டிய தாலி’ என்றா வைக்கப் போகிறார்கள்..?
‘நெக்ஸ்ட்... ரெஸ்ட்... பூஸ்ட்’ என்றுதான் வைப்பார்கள்..!
மணிமேகலை பாலு.
ரஜினி படம்னாலே கண்ணுக்கும் காதுக்கும் விருந்துதானே!
பேசாம FEAST-ன்னு பேரு வெச்சுட்டாப் போச்சு.
லீலாராம், தக்கலை
தவறு செய்யும் அமைச்சர்களை இலாகா மாற்றுவதைப்போல் இன்னும் என்னென்ன ஈஸியான தண்டனைகள் கொடுக்கலாம்?
உதயநிதி படம் ரிலீஸ் ஆகும் போது அவரது கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கும் செலவை ஏற்க வேண்டும்.
parveenyunus
‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தைப் படித்துவிட்டு வரச் சொல்லி அதிலிருந்து பரீட்சை வைக்கலாம்...பாஸாகும்வரை திரும்பத் திரும்ப அதே பரீட்சைதான்..!
பெ.பச்சையப்பன், கம்பம்.
சட்டசபையில் கடைசி பெஞ்சில் போய் உட்காரச் சொல்லிக் கடும் தண்டனை தரலாம்!
absivam
கவர்னர் பதவி கொடுத்துட லாம். ஓ சாரி... அது வேற கட்சியோட கொள்கையாச்சே.
SowThanishka
மாணவன் தவறு செய்தால் பெற்றோர்களை வரவழைத்து அட்வைஸ் செய்யும் தலைமையாசிரியர் போல, சம்பந்தப்பட்ட அமைச்சரின் பெற்றோர்களைக் கோட்டைக்கு வரவழைத்து முதலமைச்சர் அட்வைஸ் செய்யலாம்.
PG911_twitz
சென்னையில் பீக் அவரில் முக்கியமான சிக்னலில் நின்று போக்குவரத்தைச் சரிசெய்யச் சொல்லலாம்.
அ.பச்சைப்பெருமாள்,
சென்னை
கமல் போடும் தமிழ் ட்வீட்களுக்குப் பொழிப்புரை எழுதச் சொல்லலாம்.
பர்வீன், சென்னை
ஒரு நாள் முழுக்க மொபைல் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் எனலாம்.
ஈனோஸ் இப்ராஹீம்.,
சென்னை
காங்கிரஸில் தற்போது எத்தனை கோஷ்டி உள்ளதென எண்ணி வரச் சொல்லலாம்.
urs_venbaa
எதிர்க்கட்சியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு எம்.எல்.ஏ-வைக் கட்சிக்கு அழைத்து வரச் சொல்லலாம்.
SriRam_M_20

எந்நேரமும் ஹெட்செட் மாட்டிக்கொண்டு இருப்பவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம்?
கமகம பிரியாணி செய்து விட்டு, சாப்பிடக் கூப்பிடக் கூடாது.
எஸ். மோகன்,
கோவில்பட்டி
நாமளும் ‘வாலி’ அஜித் போல், அவர்கள் முன்னால் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தலையை வேகமாக ஆட்டலாம்.
Dr. செல்வகணேஷ், தென்காசி
RRR-ல் ஜூனியர் என்.டி.ஆர் புலியிடம் நேருக்கு நேராக `ஆ...’ எனக் கத்துவது போல் கத்த வேண்டியதுதான்.
பா து பிரகாஷ்,
தஞ்சாவூர்
உக்கிரமான வெயில் காலம் ஆகையால் ‘பளிச்’சென்று முகத்தில் தண்ணீர் அடித்தால் ‘கூலாக’ நம் பக்கம் திரும்புவார்களே...
கே.முருகன், சேலம்.
அவர்கள் பக்கத்தில் JBL ஸ்பீக்கர் வைத்து அதில் அனிருத் பாடல்களை ஹைடெசிபலில் அலற விடலாம்.
parveenyunus
மனைவியிடமிருந்து வந்த 30 மிஸ்டு கால்ஸை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் காட்டலாம். பேய்க்கே பீதி காட்டின ஃபீல் வந்திடும்.
manipmp
கொரியன் செட்ல மரிக்கொழுந்தே மல்லிகைப் பூவே பாட்டை பக்கத்தில் உட்கார்ந்து போட்டால் போதும். பையன் தன்னால வழிக்கு வந்திடுவான்.
urs_venbaa
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com
1. கவர்னரின் குடைச்சல்களை எதிர்கொள்ள ஸ்டாலின் என்ன செய்யலாம்?
2. விஜய்யின் ‘பீஸ்ட்’ படமே விஜயகாந்த் படம்தான் என்கிறார்கள். அதே விஜயகாந்த் சாந்தமாக நடித்த சின்னக்கவுண்டரை ரீமேக் செய்தால் யாரை நடிக்க வைக்கலாம்?
3. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத திருவிழா சம்பவம் ஒன்றைச் சொல்லுங்கள்.
4. செல்போன் இருந்திருந்தால் இந்தப் படமே வந்திருக்காது என்று எந்தப் படத்தைச் சொல்வீர்கள்?
5. இன்ஸ்டாகிராம் அட்ராசிட்டிகள் பற்றி ரெண்டு வார்த்தைகள்...
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!