சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: ரஜினிஹாசன்... கமல்காந்த்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

காலையில சாப்பிடாமப் போன இல்ல, உன் பங்கு உப்புமா அப்படியே இருக்கு. அத மொதல்ல காலி பண்ணு’’ன்னு சொல்லுவாங்க பாருங்க.

திடீரென்று உங்களுக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால் முதலில் என்ன செய்வீர்கள்?

சுகருக்காக நான்கு கிலோமீட்டர் நடப்பதை விடுத்து, நூறு கிலோமீட்டர் பறக்க வேண்டியிருக்கும்.

 பெ. பச்சையப்பன்

மிகச் சரியான நேரத்திற்கு ஆபீஸ் சென்று, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன்!

 மூ. மோகன்

எனது இறக்கைகளில் விளம்பரங்கள் எழுதிக் கொள்ள ஏஜென்சிகளை நாடுவேன்.

 மல்லிகா அன்பழகன்

வேறென்ன, எவரெஸ்ட் உச்சிக்குப் போய்ட்டு வந்துட வேண்டியதுதான்.

 கரு. பாலகிருஷ்ணன்

தெலுங்கு சினிமா ஹீரோக்களுக்கு ‘டூப்’ போடப் பறந்துவிடுவேன்!

 நா. இரவீந்திரன்

முதல்ல அது சக்தியா இல்ல வியாதியான்னு டாக்டரிடம் சென்று பார்ப்பேன்.

sasi6141_Arathu

லேண்டிங் கியர் கரெக்ட்டா வேலை செய்யுதான்னு பார்த்துப்பேன். பறக்கிறதைவிட பத்திரமா இறங்குறது முக்கியம்...

Lakshmi98598036

சக்திமான் சூட் போட்டுக்கிட்டு உயரமா பறக்கணும். “சக்தி சக்தி சக்திமான்...!”னு பேக்ரவுண்ட்ல தீம் சாங் ஓடணும். சிட்டியில நடக்கிற குற்றங்களைத் தடுக்கணும்.

IamJeevagan

‘சூரரைப் போற்று’ சூர்யா போல், ‘ஒரு ரூபாய்க்குப் பறக்கலாம்’ திட்டத்தைக் கொண்டு வந்து, நிறைய பேரைத் தூக்கிக்கொண்டு பறப்பேன்.

amuduarattai

காலை மதுரைக்குப் பறந்து இட்லி குடல் குழம்பு, மதியம் திண்டுக்கல்லுக்குப் பறந்து பிரியாணி, இரவு விருதுநகருக்குப் பறந்து பன் பரோட்டா என தினமும் வழக்கப்படுத்திப்பேன்.

bommaiya

ஒரு கமல் படத்தை ரஜினி நடித்தால் நல்லாருக்குமே என்றால், என்ன படம்?

என்ன இந்த வார வாசகர் மேடை பக்கத்தில் படம் வரைவதற்கான ஒரு பதிலைச் சொல்லணும் அவ்வளவுதானே. `தேவர் மகன்’னு போட்டுக்கங்க. சிவாஜி அமர்ந்திருக்கும் சேர் அருகில் பங்க் வைத்த ரஜினியை வரைந்திடுங்க.

 பெ. பாலசுப்ரமணி

இந்தியன். ரஜினிக்கு ‘நான் சிகப்பு மனிதன்’ மாதிரி ‘பக்காவா’ இருக்கும்.

ஏ.எம். ஷெரீஃப்

`காதலா காதலா’ படத்தில் கமல் கேரக்டரில் ரஜினியும், பிரபுதேவா கேரக்டரில் பிரபுவும் நடித்திருந்தால் படம் “கலக்கலா கலக்கலா” இருந்திருக்கும்!

 ரிஷிவந்தியா

கமல்-குஷ்பு, கவுண்டமணி, மனோ, வடிவேல், சார்லி கூட்டணியில் வெளியான ‘சிங்காரவேலன்’ படத்தில் ரஜினி நடிக்கலாம். மேற்கண்ட கூட்டணி ரஜினிக்கும் செமப் பொருத்தமாக இருக்கும், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்கூட ரஜினியை வைத்து ‘எஜமான்’ என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்தவர்தானே.

Vaigaisuresh9

ரஜினி: நானே `அண்ணாத்த’ ஈடுகட்ட அடுத்த படம் நடிச்சி கொடுக்கணுங்கிற டென்ஷன்ல இருக்கேன், இவங்க வேற.

pbukrish

வாசகர் மேடை: ரஜினிஹாசன்... கமல்காந்த்!

மழை பெய்தால் ஆளாளுக்கு மழைக்கவிதை எழுதுகிறார்கள். எங்கே, வெயிலைப் பத்தி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்!

கருவியே இல்லாமல் மண்டையைப்

பிளக்கின்றாய்

நீ காரம் இல்லை ஆனாலும்

உடம்பெல்லாம் எரிக்கின்றாய்

கட்சிகளின் நீர்மோர் பந்தலுக்கு

காரணமாகின்றாய்

பயணிகள் நிழற்குடை அமைக்கும்

கான்ட்ராக்டர்களுக்கு கல்லாவாக

இருக்கின்றாய்

வெயிலே, உன்னிடம் தப்பிக்க ஏ.சி.தான்

எனக்கு பெயிலே...

 இ.சுந்தர வடிவேல்

நீயின்றி [வெயில்] நீரில்லை...நீயின்றி உலகில்லை... நீயின்றி வைட்டமின் டி இல்லை...நீயின்றி வடகமில்லை...

 வானதி ஜவஹர்

எங்களை ஏன்

இப்படிச் சுட்டெரிக்கிறாய்

ஏ.சி கம்பெனிகாரன்கிட்ட

கமிஷன் வாங்கிவிட்டாயோ..?

 மலர்சூர்யா

வெயில்

சுடுதண்ணி

ஹிப்பாப் ஆதிண்ணா சாங்ஸ்

டிவைன்..!!!

tparaval

வெயிலே

உன்னை

அக்கினி குண்டம்

என வர்ணிக்க அஞ்சுகிறேன்

அஞ்சு கோடி

நஷ்ட ஈடு

கேட்டுவிடுவார்களே..!

ParveenF7

இது அட்டாக் போன்ற வெயில்

அட்ராக்ட் பண்ணுற வெயில்

இது தித்திக்கிற வெயில்

திட்டித் தீர்க்கிற வெயில்.

manipmp

வாசகர் மேடை: ரஜினிஹாசன்... கமல்காந்த்!

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் `நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட என்ன செய்யலாம்?

ஒரு வீக்கெண்ட் எடப்பாடிக்கு ஓ.பி.எஸ் குடும்பமும், மறுவாரம் பெரியகுளத்திற்கு எடப்பாடி குடும்பமும் விருந்துக்கு (அதாங்க பழக) போகலாம்.

 பெரியகுளம் தேவா

இரட்டை இலையின் ஒன்றில் பன்னீர்செல்வம் படத்தையும் மற்றொன்றில் பழனிசாமியின் படத்தையும் வரைந்து தங்களது சொந்தச் செலவில் விளம்பரப் படுத்தலாம்.

 மன்னார்குடி ராஜகோபால்

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என்று தனித்தனியாகக் கூறாமல்,

பி.எஸ்.பிரதர்ஸ் என்று பிரகடனம் செய்யலாம்.

 எம் விக்னேஷ்

ஒரே சமயத்தில் இருவரது வீடுகளிலும் ரெய்டு நடத்தலாம். இருவரும் இணைந்து எதிர்ப்பு அறிக்கை விடுவார்கள். இரண்டு பேரும் ஒற்றுமையா இருக்காங்கன்னு அப்ப கண்டுபிடிச்சிடலாமே?

saravankavi

‘ராயப்பேட்டை அலுவலகத்தில் மட்டுமே இனி சண்டையிட்டுக்கொள்வோம், வெளி உலகிற்குக் காட்டிக்க மாட்டோம்’னு இரண்டு பேரும் பரஸ்பர உடன்படிக்கை பண்ணிக்கிட்டு அக்ரிமென்ட் போட்டுக்கொள்ளலாம், அண்ணாமலையை சாட்சியாக வைத்து.

itz_idhayavan

ஓ.பி.எஸ் பேரவை என்று ஆரம்பித்து இ.பி.எஸ் தலைவராகவும், இ.பி.எஸ் பேரவை என ஆரம்பித்து ஓ.பி.எஸ் தலைவராகவும் செயல்படலாம்.

ParveenF7

இருவரும் ஒரே காரில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்து இறங்கலாம். (அப்பவும் முன் சீட்ல யார் உட்காருவது என்கிற பிரச்னை வரும் அதனால் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.)

pachamuthugopi

‘நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்’ என்பதற்கு உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம், சுருக்கமாகச் சொல்லுங்கள்...

வயசு 35 ஆனாலும், ஒரு முறைகூட ஓட்டு போடல. கஷ்டப்பட்டு இந்த முறை பூத் ஸ்லிப், அடையாளஅட்டை எல்லாம் எடுத்துட்டு பூத் போயாச்சு. வோட்டிங் மெஷின் முன்னாடி நின்னு படபடப்பாயிடுச்சு. எங்க தொகுதில கூட்டணிக் கட்சி நின்னுது. அவங்க சின்னம் எனக்கு strike ஆகல. படபடப்புல எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட்டுட்டேன். retry option இருக்கான்னு கேட்டேன். திட்டீட்டாங்க.

 கோபி குப்பண்ணா

நாகர்கோவிலில் நடந்த நண்பர் ஒருவர் திருமணத்திற்காகப் போயிருந்தோம். காலை 9 மணிக்கு நல்ல பசியுடன் மண்டபத்தை அடைந்தோம். அங்கே டைனிங் அறையில் யாரும் இல்லை. கல்யாணம் முடிந்த பின் மதியம் 1 மணிக்குப் பிறகுதான் சாப்பாடாம். நாகர் கோவில் ஏரியாவில், திருமணத்தன்று காலை டிபன் தரும் வழக்கம் கிடையாதாம்.

 எஸ்.மோகன்

உடம்பை ஃபிட்டா வெச்சிக்கணும்னு ஜிம்முக்குப் போனா... ஒர்க்அவுட் பண்ணும்போது ஜிம் வாசல்ல உள்ள டீக்கடையிலிருந்து பஜ்ஜி வாசம் வந்து மனச சஞ்சலப்படுத்துறத என்னான்னு சொல்றது?

pachaiperumal23

அன்புமணி: ‘‘பூத்ல நம்மாளுங்க தான் இருப்பாங்கன்னு நான் ஒரு அர்த்தத்துல சொன்னா, தெய்வம் வேற மாதிரி நினைச்சுடுச்சு... எல்லோரும் பால் பூத்ல போய் நின்னுட்டாங்கய்யா!”

NedumaranJ

நோட்டிபிகேஷன்ல போனிகபூர் ட்வீட் வரும்போதெல்லாம் ‘வலிமை’ படத்தைப் பத்திதான் ஏதோ சொல்லப் போறார்னு வேகமாக ஓடிப்போய்ப் பார்த்தால், வேற ஏதோ ஒண்ணு போட்டிருப்பாரு!

THALAAJITH_MAS

ஞாயிற்றுக்கிழமை காலைலயே விளையாடப் போய்ட்டு, மதியம் கறிக்குழம்பு செமயா ஒரு கட்டு கட்டலாம்னு ஆசையா வந்தா... ‘‘காலையில சாப்பிடாமப் போன இல்ல, உன் பங்கு உப்புமா அப்படியே இருக்கு. அத மொதல்ல காலி பண்ணு’’ன்னு சொல்லுவாங்க பாருங்க..!

Rajasekar4795