சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

வாசகர் மேடை! - அமெரிக்க கைப்புள்ள!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

பதவி போனா என்ன, எங்க ஆள் மாதிரி தனியா ஒரு தீவு வாங்கி அதிபரா ஆயிடலாம் விடுங்க!

? ட்ரம்புக்கு ஜாலியாக ஆறுதல் வார்த்தைகள் சொல்லுங்களேன்...

`தோத்தது நான் இல்ல... என் அட்மின்'னு சொல்லி உங்களை நீங்களே (எங்க எச்.ராஜா பாணியில்) ஆறுதல்படுத்திக்குங்க பாஸ்!

ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

விடுங்க பாஸ்... சண்டையில கிழியாத சட்டையே கிடையாது.

ப.இராஜகோபால், மன்னார்குடி.

T.R.பெரியப்பா Be Like விட்றா ட்ரம்ப், நீ மட்டுமா தோத்துப்போன, நானும்தான் தோத்து தோத்துப் போய்ட்டேன்.

Bala

இது வெற்றிகரமான தோல்வி.

KarthikeyanTwts

கவலைப்படாதே சகோதரா, எங்க அய்யா பிரதமர்தான் காத்து நிற்பார், ஜோ பைடனோடு ப்ரெண்ட்ஷிப் வைப்பார், கவலைப்படாதே சகோதரா...

saravankavi

பதவி போனா என்ன, எங்க ஆள் மாதிரி தனியா ஒரு தீவு வாங்கி அதிபரா ஆயிடலாம் விடுங்க!

parath.sarath

ட்ரம்ப் ஜி... இந்தப் பதவி போனாப் போகுது.. தோஸ்த் கிட்டே சொன்னா எங்க ஊர்ல கவர்னர் ஆயிடப்போறீங்க.

Adhirai Yusuf

இனிமே ஜோ பைடனுக்குதான் மீம்ஸ், ட்ரோல் வரும். பாத்து என்ஜாய் பண்ணுங்க.

shanthini.rajam

? பா.ஜ.க - வேல் யாத்திரை, காங்கிரஸ் - டிராக்டர் யாத்திரை. மற்ற கட்சிகள் என்னென்ன யாத்திரை போகலாம்?

தி.மு.க: இந்தி தெரியாது போடான்னு சர்ட் போட்டு டி-ஷர்ட் யாத்திரை நடத்தலாம்.

balasubramni1

சீமான்: கத்தி கத்தி... கத்தி யாத்திரை.

rajasinghjeyak15

நடிகர் கார்த்தி: ஓய்வு யாத்திரை.

urs_venbaa

தலைவரின் அறிக்கைகள் எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என்பதற்காக `கோனார் தமிழ் உரை’ யாத்திரை நடத்தி ம.நீ.ம. தொண்டர்கள் பிரார்த்தனை செய்யலாம்.

amUzhavana

பாய், தலையணை, பெட்ஷீட், கொசுவத்தி இதையெல்லாம் வெச்சு யாத்திரை நடத்தலாம் தீபா மேடம். யாத்திரையில் நித்திரை நிச்சயம்.

saravankavi

சமத்துவ மக்கள் கட்சி : சரத் குமார் ராதிகாவுடன் `சித்தி யாத்திரை’ செய்தால் பெண்கள் ஆதரவு ஓகோன்னு கிடைக்கும்.

Kirachand1

ரஜினி - ``லக்ஷ்மி, ஸ்டார்ட்... ஸ்டார்ட்...’’

ச.பிரபு, குற்றாலம்

அ.தி.மு.க: காவடி யாத்திரை (டெல்லி).

மு. திருநாவுக்கரசு, வேலூர்

வாசகர் மேடை! - அமெரிக்க கைப்புள்ள!

? ஆஸ்திரேலியத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல என்ன செய்ய வேண்டும்?

ஆர்.ஜே.பாலாஜியின் தமிழ் கமென்ட்ரியைத் தவிர்க்க வேண்டும்!

நா‌.இரவீந்திரன்,

வாவிபாளையம்.

டிரீம் 11-ல விளையாடாம கிரவுண்டுல விளையாடணும்.

மு. திருநாவுக்கரசு, வேலூர்

ஆஸ்திரேலியா அணியை சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா என்றும், ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா என்றும் பெயர் வைப்பதுதான் ஒரே வழி.

ஜெ. கண்ணன், சென்னை

இந்திய கிரிக்கெட் அணிக்கு `மும்பை இண்டியன்ஸ்’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்!

திருச்சி இமான்,

மயிலாடுதுறை

நோ பாலிலேயே சிக்ஸர் அடிக்கும் எடப்பாடியை இந்திய அணியில் சேர்க்கவேண்டும்.

tparaval

மேட்சுக்கு முன்னாடி 11 எலுமிச்சம் பழங்களை நசுக்கி, மந்திரத்தகட்டை, பிட்சில் பதிச்சு வைக்கணும்.

ravikumar.

இத்தொடரில் ஜொலிக்கும் இந்திய வீரர்களை அடுத்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுப்போம்னு அறிவிச்சாலே போதும்.

mani.pmp.

கிரிக்கெட்டில் அரசியலைக் கலக்காமல் திறமையுள்ள வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நம்ம யார்க்கர் நடராஜனைப்போல்.

KarthikeyanTwts

ஆஸ்திரேலிய வீரர்கள் பந்து அடிக்கப் போகும்போது, நம் விக்கெட் கீப்பர் சத்தமா ஒரு தும்மலைப் போடணும்.

amuduarattai6

ஸ்லெட்ஜிங்கை ஒரு பொருட்டாக மதிக்காம இருக்கணும்.

vrsuba

ஆஸ்திரேலிய டீமுக்கு மோடி வாழ்த்து சொன்னா சோலி முடிஞ்சிடும். ட்ரம்புக்கு அதானே நடந்தது?!

absivam

வாசகர் மேடை! - அமெரிக்க கைப்புள்ள!

எஸ்.ஏ.சியைப் பற்றி விஜய் படமெடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

நேற்றைய தீர்ப்பு

அஜித், சென்னை

பொறுப்பா

ஜெரி.D.டார்வி

என்னோடு விலகி இரு

SriRam

டாடி... எனக்கு ஒரு டவுட்டு!

RamAathiNarayen

SAC ன்னே (Super Appa Chandrasekar) Title வைக்கலாம்.

KarthikeyanTwts

நீ கம்முன்னு இருந்தா நான் ஜம்முன்னு இருப்பேன்.

ARiyasahmed

ஒன்ஸ்மோர் சொல்லுங்க டாடி... (கீழே Will agree என்று இங்கிலிஷ் கேப்ஷன் போட்டுடலாம்...)

J P E Meenakshi, Chennai

? பிரியாணிக்கு சீரகச்சம்பா, பாசுமதி எது பெஸ்ட்? பிரியாணி அனுபவத்தைச் சுவையாகச் சொல்லுங்களேன்.

இப்படிக் கேட்டா எப்படி? ரெண்டு பிளேட்... அதுல ஒண்ணு, இதுல ஒண்ணு வாங்கிக் கொடுங்க... சாப்பிட்டுட்டுச் சொல்றேன்.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்

`கைதி’ கார்த்திபோல நாசூக்கு பார்க்காமல் கையில் அள்ளி விழுங்க நாட்டுப்புற சீரகச்சம்பா பிரியாணி; `பையா’ கார்த்திபோல ஸ்டைலாக ஸ்பூனில் கொறிக்க பாசுமதி பிரியாணி.

எம். விக்னேஷ், மதுரை

சீரகச்சம்பாவிற்கு ஒரு மணம் உண்டு பாசுமதியில் அது மிஸ்ஸிங், சீரகச்சம்பா தம் பிரியாணிக்கு நிகர் எதுவுமே இல்லை.

ARiyasahmed

தலப்பாகட்டு ராவுத்தர் பிரியாணி சீரகச்சம்பால நல்லா இருக்காது; திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி பாசுமதில நல்லா இருக்காது.

loosepaiya

மொகலாயர்கள், போர் வீரர்களுக்காக சாதம் வடித்து ஒரு பக்கமும், மட்டன் குழம்பு செய்து ஒரு பக்கமும் வைக்க, வீசிய பெரும்காற்றில் இரண்டும் கவிழ்ந்து, கலந்து பிரியாணியாக மாறியது என ஒரு கதை. எந்த அரிசியோ, பிரியாணின்னா பத்து மைல்கூட நடந்து போய் சாப்பிடுவேன்.

Afrose9500

இப்ப தேவையில்லாம பிரியாணி ஆசையைத் தூண்டிவிட்டு 250 ரூபாய் செலவு. நல்லா இருங்கய்யா..!

absivam

கோஸ், பீன்ஸ், கேரட், உருளை, பட்டாணி, மசாலா எல்லாத்தையும் கடுகு, சீரகம், தாளிப்போட குக்கர்ல வதக்கி சீரகச்சம்பா அரிசியை அலசி அதுல சேர்த்து ரெண்டு விசில் வந்தப்புறம் ஒரு கிளறு கிளறி வெங்காயப் பச்சடியோடு சேர்த்து சாப்பிட்டா... அட அட அட..!

Banumathi babu, Chennai

நீளமா வளந்த பாசுமதியவிட பொடிசா இருக்கும் சீரகச்சம்பாவை வெச்சு பிரியாணி செஞ்சா சுவை அள்ளுமே.

ஜெ ஜான்சி சுப்புராஜ், கடலூர்

சீரகச்சம்பா, அனுபவம் அனுபவம்... இருங்க மிச்சத்தையும் முடிச்சுட்டுச் சொல்றேன்.

பெரியகுளம் தேவா.

பகட்டுக்கு சாப்பிட பாசுமதி,

இஷ்டத்துக்கு வெளுத்துக்கட்ட சீரகச்சம்பா.

டாக்டர் Y கதீஜா, திருவண்ணாமலை

வாசகர் மேடை! - அமெரிக்க கைப்புள்ள!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? புயலுக்குப் பெயர் வைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?

? உதயநிதிக்கு (மூன்றாம் கலைஞர் தவிர்த்து) ஒரு அரசியல் பட்டம் தருவது என்றால் என்ன பட்டம் தரலாம்?

? ‘ஒரு ரூபாய்க்கு விமானப்பயணம்’ போல உங்களுக்குள் இருக்கும் பெருங்கனவைச் சொல்லுங்கள்.

? நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்துவிட்டார். இப்போதுள்ள ஹீரோக்களில் யார் எந்தக் கடவுள் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்?

? அபின் கடத்திய வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு என்று வரிசையாக பா.ஜ.க.வினர் கிரிமினல் வழக்குகளில் கைதாகும்போது எல்.முருகன் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com