சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: இப்படி இருக்கணும் 2022

சீமான் - உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான் - உதயநிதி

வங்கியில் என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் லோன் வழங்க வேண்டும் - விஜய் மல்லையாவுக்கு கொடுத்த ஸ்கீமில்!

2022 எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

2020, 2021 ஆண்டுகளைப் போல் இல்லாமல் இருந்தாலே போதும்...

கே.விஸ்வநாத், பெங்களூர்

ஓஹோன்னு சிரிக்க வைக்காட்டியும், ஓன்னு கதறி அழ வைக்காம இருந்தால் சரி!

வேலுசாமி, கோவை

இந்த ஆண்டாவது ஃப்ளைட்ல ஏறிப் பார்த்துடணும்.

 ப. சீனிவாசன்

வங்கியில் என்னைப் போன்ற சாமானியர்களுக்கும் லோன் வழங்க வேண்டும் - விஜய் மல்லையாவுக்கு கொடுத்த ஸ்கீமில்!

 ஆ. மாடக்கண்ணு

மோடி உலகம் முழுவதையும் சுற்றும் ஆண்டாக இருக்க வேண்டும். (அப்படினா உலகத்தில் எங்கேயும் கொரோனா இல்லைன்னு அர்த்தம்!)

IamUzhavan

ஒமைக்ரான், டெல்மைக்ரானுக்கு அடுத்து ஏதும் வராமல் நாம் பாட்டுக்கு கேக்ரான் மேக்ரான்னு சுத்திக்கிட்டிருக்கிற மாதிரி இருக்கணும்!

h_umarfarook

ஏழு பேரை விடுவிக்கும் அதிகாரம் உள்ள அந்த நபரைக் கண்டுபிடிக்கும் ஆண்டாக இருக்க வேண்டும்.

Vasanth920

தி.மு.க - நாம் தமிழர் மோதலைத் தவிர்க்க சீமானும் உதயநிதியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

உதயமான்

 எல்.மூர்த்தி, கோவை

செந்தமிழனின் செங்கல்

 பெ.பாலசுப்ரமணி

‘நாம் திமுக’ என்ற டைட்டிலில் படத்தில் நடிக்கலாம்.

 கி.சரஸ்வதி

சீறி வாடா சேகுவேரா!

 கொ.மூர்த்தி

களமாடிய பொழுதுகள்

 ‘பெரியகுளம்’ தேவா

புரியாத உறவு. புரிஞ்சா வரவு.

 கதிஜா ஹனிபா

ஒரு கல்! ஒரு காலணி!

 எ .முகமது ஹுமாயூன்

உதயா உதயா உளறுகிறேன்..

SowThanishka

மாயாண்டி குடும்பத்து நண்பேண்டா!

h_umarfarook

உதய் & சீமான் இணைந்து மிரட்டும் ‘தம்பி ஒரு கதை சொல்லட்டா...’

Lakshmi98598036

#தண்டவாளங்கள்

(இணைந்து நடித்தாலும் இணைய வாய்ப்பில்லாததால்)

jerry46327240

வாசகர் மேடை: இப்படி இருக்கணும் 2022

ஒரு வித்தியாசமான ஆசை, ப்ளீஸ்...

ஒரு வாரம் விகடன் வாசகர்மேடையில் ஐந்து கேள்விகளிலும் என் பதில் பிரசுரமாகணும் ! கூடவே ஒரு ஜோக்கும், வலைபாயுதேவிலும் வந்தா இன்னும் சந்தோஷம்.

 A ஆசிக் ஜாரிஃப்

வேகமாக ஒரு சக்கரம் பின்னோக்கிச் சென்று, நான் படித்த கல்லூரி மாணவியாக பதினாறு வயதினிலே ‘மயில்’ போல மாறி விட வேண்டும். நினைக்கவே so sweeeeeeet.

usha.muthuraman

கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் மாஸ்க் அணிந்து மூச்சு திணறுகிறது. ஒருநாள் முழுவதும் மாஸ்க் அணியாமல் சைக்கிளில் ஊர் சுற்றி வர ஆசை.

 செல்லத்துரை

புத்தாண்டு அன்று பாட, ‘இளமை இதோ இதோ’ பாடலுக்கு மாற்று கண்டுபிடித்து, நோபல் பரிசு வாங்க வேண்டும்...

 ஆர். பிரசன்னா

‘இது அந்த படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது’ என்று யாரும் சொல்லாதபடி அட்லீ ஒரு படத்தையாவது இயக்க வேண்டும். (பேராசைதான்!)

 க.மோகனசுந்தரம்

தான் தொடங்காத கட்சிக்கு, ரஜினி என்ன பெயர் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் என்பதை அறிய ஆசை.

 பா.ஜோதிமணி

கிறிஸ்டியானோ ரொனால்டோவை காட்டிலும் என்னை அதிகம் பேர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்ய வேண்டும்.

 என்.உஷாதேவி

நள்ளிரவில் நாய் தொல்லை இன்றி பைக்கில் செல்ல ஆசை!

manipmp

புதுப்புது வைரஸ்களுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள், அடுத்து வரும் வைரஸுக்கு நான் பெயர் சூட்ட வேண்டும் என வித்தியாசமான ஆசை!

sasitwittz

அந்த 15 லட்சம் இந்த ஆண்டாவது எனக்குக் கிடைக்கணும்.

S. கருணாகரன்,

சென்னை

ஒவ்வொருவர் கையிலும் ஒரு செல் என்பது மாறி, ஒரு நூல் என்று படிக்கும் மாற்றம் வர வேண்டும்.

சி.பி.ஷபீ, சென்னை

வாசகர் மேடை: இப்படி இருக்கணும் 2022

பல கெட்டப்களில் அசத்திய கமல், 2022-ல் தன் கட்சிப் பிரச்னைகள் தீர்க்க என்ன கெட்டப் போடலாம்?

கமல் கமலாகவே தீர்க்க முடியாத பிரச்னைகளை எந்த கெட்டப்பில் வந்து தீர்த்து விட முமயும்?

 எஸ்.இராஜேந்திரன்

கமலுக்கு பாரதியை பிடிக்கும், மகாகவி வேடம் போட்டு, ‘சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ’ என பாடலாம்.

 வித்யா வாசன்

கட்சித் தலைவரிலிருந்து, செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சித் தொண்டராகவும் அவரை அந்தந்த பொறுப்பு களில் அவராகவே ‘நியமித்து’க் கொண்டு செயல்பட வேண்டி யுள்ளதால் ‘தசாவதாரம்’ போல பல கெட்டப்களைப் போட்டு வலம் வரலாம்.

 க.விஜயபாஸ்கர்

அவரின் அன்புத் தோழர் ரஜினி கெட்டப் போடலாம். பிரச்னைகளுக்கான தீர்வு பின்னர் அறிவிக்கப்படும்னு அறிக்கை விட்டு, பிரச்னைகளைக் கொஞ்சம் தள்ளிப் போடலாம்!

Saisudhar1

‘இந்தியன்’ தாத்தா கெட்டப் போட்டு கட்சியில் உள்ள கருப்பு ஆடுகளைக் களை எடுக்கலாம். அப்படியே ‘இந்தியன் 2’ படத்தையும் நடிச்சிக் கொடுத்திடலாம்!

pbukrish

மேஜர் சுந்தரராஜன் கெட்டப் போட்டு அவர் ஆங்கிலம் பேசி அதையே தமிழாக்கம் செய்வது போல கமல்ஹாசன் ட்வீட்களுக்கு அவரே விளக்கம் கொடுக்கலாம்.

Asokan Kuppusamy

வட்டச்செயலாளர் வண்டுமுருகன் கெட்டப் போடலாம். அவர் கமலைவிட வெற்றிகரமான அரசியல் வாதிதானே!

ரகுபதி, பழனி

இதுவரை ‘கோ பேக்’ சொன்ன ஸ்டாலின், தமிழகம் வரும் மோடியை முதல்வர் என்ற முறையில் எப்படி வித்தியாசமாக வரவேற்று கூல் செய்யலாம்?

தயிர் வடை ரச வடை ருசி என்பார் ‘வாயால் சுட்ட வடை’ அறியாதவர்...

ஆவோ ஜி!

 ராம்ஆதிநாராயணன்

‘மோடிதான் வராரு; ஜி.எஸ்.டி. நிலுவை தரப் போறாரு!’னு தொண்டர்களை கோஷமிடச் செய்யலாம்!

 வி.சி. கிருஷ்ணரத்னம்

நீங்க வந்தா மட்டும் போதும் ஜி! (வேற ஒண்ணும் தத்து பித்துன்னு செஞ்சுட வேணாம்னு அர்த்தம்)

 எம் விக்னேஷ்

பிரதமரின் தமிழகப் பயணத்தை கவர் செய்ய, தமிழக அரசு சார்பில் கூடுதல் போட்டோகிராபர்களை நியமித்து அசத்தலாம்!

 நா.இரவீந்திரன்

‘‘ஈமெயில் கண்ட தங்கமே...

டைனோசரைக் கொஞ்சிய சிங்கமே...

கருப்புப் பணத்தை பண்ணினாய் பங்கமே...

மனதின் குரல் பேசும் பிரசங்கமே...

திருக்குறள் இயம்புகையில் நீயும் ஒரு தமிழ்ச் சங்கமே..!’’

என்று ஏர்போர்ட்டில் பதாகை காட்டி, ஒலி அறிவிப்பு செய்யலாம்.

JaNeHANUSHKA

‘50 நாள்களில் நிலைமை சரியாகிவிடும். இல்லையென்றால், என்னை எரித்துவிடுங்கள்’ என கர்ஜித்த சிங்கமே வருக... வருக!

bommaiya

*****

1. ராஜேந்திர பாலாஜியின் எஸ்கேப் புராணத்தைப் படமாக்கினால் ரா.பா-வின் வேடத்தில் நடிக்கப் பொருத்தமான நடிகர் யார்?

2. மோடி பொங்கல்தான் மிஸ்ஸாகிவிட்டது. ‘மோடி தீபாவளி’ கொண்டாட தமிழக பா.ஜ.க.வினர் என்னென்ன வெடிகளை ரெடி செய்யலாம்?

3. எது எதற்கெல்லாமோ ‘தினம்’ கொண்டாடுகிறார்கள், இதை ஏன் கொண்டாடுவதில்லை என்று நீங்கள் பரிந்துரைக்கும் ‘தினம்’?

4. ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்று நீங்கள் சமீபத்தில் யோசித்த தருணம்?

5. ஒத்திவைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சிக்கு நம் திரைப்பட நட்சத்திரங்கள் புத்தகம் கொண்டுவருவதென்றால் என்னென்ன தலைப்புகளில் இருக்கலாம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com