சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை! - அம்மா ஓ.டி.டி அரம்பிக்கலாமா?

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

அக்கா பொண்ணு கேம் விளையாடிட்டே இருக்கான்னு போன் லாக் போட்டுட்டேன். ஒரு நாள் அவ, ‘லாக் சொல்லு...

? ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என்று ரஜினி அறிவித்தபோது எல்.முருகன், எடப்பாடி, ஸ்டாலின், கமல் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

கமல் - நாமளும் இதையே செஞ்சிருக்கலாமோ?

ஸ்டாலின் - நல்லாக் கிளப்புனாருய்யா பீதிய!

எடப்பாடி - அப்பாடி!

parath.sarathi

முருகன் - நீ வருவாய் என நானிருந்தேன்!

எடப்பாடி மற்றும் ஸ்டாலின் - நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு!

கமல் - தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்.

parama.paramaguru.

எல் முருகன் - ‘‘வட போச்சே...’’

கமல் - ‘‘நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ?’’ ஸ்டாலின் & எடப்பாடி - ‘‘அப்பாடா, இப்ப தான்யா நிம்மதியா இருக்கு...’’

SowThanishka

எடப்பாடியும் ஸ்டாலினும் ‘அப்பாடா... தப்பிச்சுட்டோம்’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். எல் முருகனும் கமலும், ‘அய்யோடா... தப்பிச்சுட்டாரே’ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

saravankavi

எல்.முருகன்: மறுபடியும் ரஜினியை அரசியலுக்கு வரவைக்க ரஜினி யாத்திரை நடத்தலாமா?

balasubramni1

எடப்பாடி: அண்ணன் ரஜினியின் ‘அண்ணாத்தே’ படம் 100 நாள் ஓட எல்லா உதவியும் அரசு செய்யும்.

மு. கணபதி, சென்னை

வாசகர் மேடை! - அம்மா ஓ.டி.டி அரம்பிக்கலாமா?

? ‘அட, நம்மளைவிட நம்ம குழந்தை புத்திசாலியா இருக்கே’ என்று நீங்கள் வியந்த சம்பவம்? (சுருக்கமாக...)

என் மகள் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது அவள் ஆசிரியர், ‘நான்கு பக்கம் நீரால் சூழ்ந்திருந்தால் தீவு’ என்று வரைபடத்தில் விளக்கியிருக்கிறார். வரைபடத்தை முழுதாகப் பார்த்துவிட்டு, ‘உலகம் முழுதுமே நீரால் சூழ்ந்திருக்கிறது. அப்படியானால் உலகமே ஒரு தீவுதானே’ என்று ஆசிரியரைக் கேட்டதை என்னிடம் சொன்னபொழுது, ‘என் மகள் என்னைவிட புத்திசாலி’ என்று உணர்ந்தேன்.

S.Malathi கடலூர்

முதல்ல கல்யாணம் ஆகட்டும்!

MigaMike

ஆரண்ய காண்டத்தில் வரும் `என் அப்பாவைவிட உன் அப்பா புத்திசாலிடா' டயலாக்கை நான் சொன்னப்ப, உடனே அவன் தாத்தாகிட்டே போய் `என் மகனைவிட உன் மகன் புத்திசாலிடான்னு சொல்லு தாத்தா’ன்னு சொன்னான்!

SeSenthilkumar

‘சிக்கன் காரமா இருக்கும்... தண்ணி வச்சிக்கோ’ன்னு சிப்பரைக் கொடுத்துச்சு பாசக்கார பயபுள்ளை...

HariprabuGuru

சம்பவம் இல்லை, ஆனா என் நாலு வயது மகள் கேட்ட ஒரு கேள்வி. ‘மனுசங்களைப் படைச்சது சாமிப்பா’ அப்படினு நான் சொன்னேன். அதுக்கு அவுங்க கேட்ட கேள்வி, ‘அப்போ சாமிய யார் படைச்சா?’

jollytweetz

அக்கா பொண்ணு கேம் விளையாடிட்டே இருக்கான்னு போன் லாக் போட்டுட்டேன். ஒரு நாள் அவ, ‘லாக் சொல்லு... நான்தான் ஓப்பன் பண்ணுவேன்’னு கேட்டா.

நான் ‘லாக்லாம் யாருக்கும் சொல்லக் கூடாது’ன்னு சொன்னதுக்கு, ‘நீ நாளைக்கே செத்துப் போய்ட்டா லாக் தெரியாம போனை நாங்க என்ன பண்றது’ன்னு கேட்டுட்டா!

ival_Sagi

புதிதாக வாங்கிய மொபைலில் 24 மணிநேர அடிப்படையில் இருந்த கடிகாரத்தை 12 மணி நேரக் கடிகாரமாக மாற்ற நான் எவ்வளவோ முயன்றும் முடியாதபோது, மகள் எளிதில் மாற்றினாள்.

IamUzhavan

‘‘டோலக்பூரை எல்லா ஆபத்திலேர்ந்தும் காப்பாற்றும் சோட்டா பீம் கிட்ட சொல்லி ஏன் கொரோனாவை ஒழிக்கக் கூடாது’’ன்னு கேட்டான் பாருங்க பையன் ஒரு கேள்வி. ‘நம்ம சின்ன புத்திக்கு இது தோணாமப்போச்சே’ன்னு வியந்தேன்.

vrsuba

எல்லாரும் செய்யிறாங்க நாமும் செய்வோம் என்று கைதட்டி விளக்கேற்றச் சொன்னேன். “என்ன டாடி இது... ‘சில்லியா’ இருக்கு...” என்று எட்டு வயதே நிரம்பியவள் கேட்டபோது.

krishmaggi

நான் யூடிபில் வேகமாக டைப் செய்து வீடியோக்களைத் தேடும் போது, 5 வயது மகன் வாய்ஸில் பேசி எளிதில் தேடியதைப் பார்த்து வியந்திருக்கிறேன்!

San8416

எப்படிக் கலைச்சுக் கொடுத்தாலும் அழகா க்யூபை சால்வ் பண்ணிடறாங்க.

நமக்குத்தான் தெரிய மாட்டேங்குது!

h_umarfarook

அவள் அடிக்கடி ‘உங்களுக்கு ஒன்னும் தெரியலைப்பா...’ என்று கூறும்போது உணர்வேன்.

krishmaggi

மொபைல் போன்ல இருக்குற ‘Notes’ உபயோகிச்சு படமும் வரைய முடியும்ங்கிறதை பாப்பாதான் கத்துக் கொடுத்தாள்.

RamuvelK

செல்போனில் ‘பின்நம்பரை' மாற்றுவது எப்படி என்பதை, என் மகள் எனக்குத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்த சம்பவத்தை நினைக்கும்

போதுதான்...

இரா.வசந்தராசன், கல்லாவி

? இன்னும் பத்தாண்டுகளுக்கு உங்களுக்கு வயது கூடாது, இதே வயதுதான் என்றால் எப்படியிருக்கும்?

ரிடையர் ஆகும் நிலையில் இருந்தால் இன்னும் ஒரு 10 ஆண்டு சம்பளத்தை வாங்கி ஜாலியாக அனுபவிக்கலாம். கல்யாண வயதில் இருந்தால், இன்னும் ஒரு 10 ஆண்டு பேச்சிலர் வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

எஸ். மோகன், கோவில்பட்டி

இன்னும், இன்னும் 10 ஆண்டுகள் வயது குறையாமல் இருக்க வாய்ப்பு இருக்கா சார்...?

பாலு இளங்கோ, வேலூர்.

இப்போதுதான் 50 வயதில் Leggins அணிய ஆரம்பித்தேன். என் மருமகள் வர 5-6 வருடம் ஆகும். அப்போது இருவரும் கலர் மாற்றி மாற்றி அணியலாம். பெரிய வித்தியாசம் தெரியாதுதானே?

எஸ் விஜயலெட்சுமி கண்ணதாசன், சென்னை

பிறந்த நாள் டிரீட் செலவு மிச்சம்.

eromuthu

மத்ததெல்லாம் பிரச்னை இல்லை. வீட்டம்மா என்னைவிட நாலு வயசு கூடுதலாயிடுவாங்க. அது மட்டும்தான் சிக்கலாயிடும்.

roadoram

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். என் குழந்தையோடு இருக்கும் ஆண்டுகளில் இன்னும் பத்தாண்டு கூடும் என்பதால்.

umakrishh

ஆறு மாசம் லாக் டௌனே அலுத்துப் போச்சு. இதல ஒரே வயசுல 10 வருஷம் லாக் டௌனா? தாங்காது சாமீ. அடுத்த கட்ட நகர்வுகள்தான் எப்போதும் சுவாரஸ்யம்.

Sundar140

இன்னும் பத்து வருஷம் வயசு ஏறாது சரி. பிரச்னையும் அப்படியே இருக்கும்னா இந்த ஆட்டத்துக்கு நான் வரல சாமி.

pachaiperumal23

இப்பவே எனக்கு 52 வயசுன்னு சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க...இன்னும் பத்து வருஷத்துக்கு எவ்வளவு பேர் என்னைப் பார்த்துப் பொறாமைப்படப்போறாங்களோ தெரியலடா மாதவா?

poonasimedhavi

‘நவீன மார்க்கண்டேயனே'ன்னு எனக்கு நானே ஃப்ளெக்ஸ் வச்சுக்குவேன்..!

LAKSHMANAN_KL

அப்போ இன்னும் பத்து வருஷத்துக்கு நமக்குக் கல்யாணம் ஆகாதா! 90s kids

ManivannanVija2

அப்பவும் இந்தப் பாழாய்ப் போன மனசு, ‘ச்சே... இந்த வாய்ப்பு நாம 18 வயசுல இருக்குறப்ப வந்திருக்கலாமே’ என ஏங்கி இந்த வாய்ப்பையும் கோட்டை விட்டுவிடும்.

valarselvan

வாசகர் மேடை! - அம்மா ஓ.டி.டி அரம்பிக்கலாமா?

? சினிமாவை விட்டு விலகுபவர்கள் அரசியலுக்கு வருவது வழக்கம். அதேபோல் அரசியலை விட்டே விலகிய தமிழருவி மணியன் சினிமாவில் நடிக்க வந்தால் அந்தப் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

தனிமையே என்னைத் தாலாட்ட வருவாயா

ஆ. மாடக்கண்ணு,

பாப்பான்குளம்

அரசியல் வேண்டாம் போடா!

Veeraiah Rajkumar

ஊருக்கு நல்லது சொல்லமாட்டேன்

வைரபாலா, மன்னார்குடி

நான் எங்கே போவேன்!

SeSenthilkumar

ஊமைக் காயங்கள்

Suyambu26745699

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.

not_imp_name

என் உயிருள்ளவரை

Mcom_tea_master

நம்பினார் கெடுவதுண்டு

VaithianathanS3

ர/பெ. ரணசிங்கம்

(ரஜினி பெயர். ரணசிங்கம்)

RajaAnvar_

கெட்ட பய சார் இந்தக் காளி

urs_venbaa

? வாசகர் கேள்வி : மதுவிலக்கைத் தீவிரமாக அமல்படுத்தினால் அந்த வருவாயை ஈடுகட்ட தமிழக அரசுக்கு உங்கள் யோசனை என்ன...?

பிரபல நடிகர்கள் வருடத்துக்கு ஒருமுறை கட்டாயம் அரசுக்கு கால்ஷீட் கொடுக்கணும் என்று சட்டம் போட்டு, அவர்களை வைத்துப் படமெடுக்கலாம். செலவு போக, கிடைக்கும் வருமானம் கஜானாவை வெயிட்டாக்கும்.

RahimGazzali

மணல் மாஃபியா கும்பலை சீர்படுத்தினாலே அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரிக்கும்.

pachaiperumal23

வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றும் பெரு முதலாளிகளின் சொத்துக்களை அரசுடைமையாக்கலாம்.

manipmp

House tax,water tax மாதிரி மது விலக்கு வரி என்று வாங்கலாமே... வரி செலுத்தும் ஒவ்வொருவரும் கேள்வி கேட்பார்கள்.

Laviher3

பிரியாணி கடை வியாபாரம் சக்கை போடு போடுகிறது. அம்மா பிரியாணி உணவகம் என்ற பெயரில் நாடெங்கும் கடைகள் திறந்து சுவையான பிரியாணியை விற்று பெருத்த லாபத்தை ஈட்டலாம்.

parveenyunus

திண்டுக்கல் சீனிவாசனை வச்சு ஸ்டேண்ட் அப் காமெடி பண்ணலாம். அதன் மூலமா செம கல்லா கட்டலாம். ஏன்னா, இப்ப அவர்தான் டிரண்ட்.

sheik_twitts

ஒரு கிலோ மட்டன் ரூபாய் 200 என தமிழக அரசே விற்றால் நல்ல வசூல் பார்க்கலாம். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் சாதாரணமாக 100 கோடி ரூபாய் டச் ஆகும்.

billumohan83

‘அம்மா ஓடிடி’ தளத்தை ஆரம்பித்து புதுப் படங்களை ஒளிபரப்பு செய்யலாம்.

IamJeevagan

வாசகர் மேடை! - அம்மா ஓ.டி.டி அரம்பிக்கலாமா?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சிறையில் இருந்து வெளிவரும் சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனால் என்ன நடக்கும்?

? உங்களுக்கு வந்ததில் சிறப்பான ஒரு வாட்ஸ்அப் வதந்தியைச் சொல்லுங்களேன்.

? ஆளாளுக்குச் சொல்றாங்களே, இந்த ‘வேற லெவல்’னா என்னப்பா?

? இளையராஜாவும் ரஹ்மானும் ஒரு படத்துக்குப் பின்னணி இசை அமைத்தால் அந்தப் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?

? வாசகர் கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் மு.க.ஸ்டாலினும், மு.க.அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்? - ராம் ஆதிநாராயணன்

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com