
ஹீரோவிற்குத் தூக்கம் வரா வியாதி, அதனால் இரவு நேரக் காவலாளி பணியில் உள்ளார். தூங்கிவிட்டால் வில்லன் கொள்ளையடிப்பான்
ஜெயலலிதா வரை பயோபிக் வந்துவிட்டது. அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்குவது என்றால் அண்ணாவாக நடிக்கப் பொருத்தமான நடிகர் யார்?
கமல்
M.S.BASTIN, மதுரை.
இளவரசுவின் உடலமைப்பு, உயரம் சாலப் பொருந்தும்.
குலசை சுயம்புலிங்கம், சென்னை.
அழகம்பெருமாள்
G சத்தியமூர்த்தி, கும்பகோணம்.
பரேஷ் ராவல். இவரும் எம்.பி-யாக இருந்த அனுபவம் மிக்கவர், கதாபாத்திரமாகவே ஒன்றி நடிக்கக்கூடிய நடிகர்.
ஜெ. நெடுமாறன், சென்னை.
நடிகர் நாசர் அறிஞர் அண்ணா வேடத்தில் ‘நச்’செனப் பொருந்துவார்.
ஜெ. ஜான்சி சுப்புராஜ், கடலூர்.
மலையாள நடிகர் ஹரீஷ் பெரோடி
கொ.மூர்த்தி, குட்டலாடம்பட்டி.
நாஞ்சில் சம்பத். தமிழ்ச் செறிவும் குரல் வளமும் உயரமும் சரியாக இருக்கும்.
எஸ்.கே.சௌந்தரராஜன்,
திண்டுக்கல்.
தலைவாசல் விஜய்
மீனலோசனி பட்டாபிராமன்,
சென்னை.
‘சார்பட்டா பரம்பரை’ புகழ் பசுபதி அண்ணாவாக நடித்தால் தூள் கிளப்பும்.
C P Senthil Kumar
உயரம், இருபது வயதிலிருந்து அறுபது வரை மாறும் தோற்றம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, சரளமான பேச்சு என அறிஞர் அண்ணா பாத்திரம் சூர்யாவுக்குப் பொருந்தும்.
roadoram

ஒருநாள் முதல்வர் போல, நீங்கள் ஒருநாள் கவர்னர் ஆனால் என்ன செய்வீர்கள்?
கவர்னர் பதவி என்பதே டம்மிதான் பாஸ், இதில் ஒருநாளில் என்னத்த செய்வது?
த. சிவாஜி மூக்கையா, சென்னை.
ராஜ்பவனைப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடுவேன். அவ்ளோ பெரிய மாளிகையில என்னதான் இருக்குன்னு எல்லாரும் பார்க்கட்டுமே..!
மாணிக்கம், திருப்பூர்.
ரொம்ப நாளா ஊட்டி போகணும்னு ஆசை. குடும்பத்தோடு போயிட்டு வருவேன்!
parath.sarathi
கவர்னருக்கு இவ்வளவு பெரிய மாளிகை எதுக்குன்னு, சென்னையின் பூர்வகுடிகளை அங்க தங்க வச்சிட்டு, தனியா ஒரு 3 BHK பார்த்துக் குடியேறிடுவேன்.
tparaval
தனி ஃபிளைட்ல மதுரைக்குப் போய் ஒரு ஜிகர்தண்டா சாப்பிடுறோம் அப்படியே மறக்காம பிரேம விலாஸ் பால் அல்வா வாங்கிட்டு ரிட்டன் ஆவுறோம்... ஆங்!
bommaiya
ஒரே நாளில் கவர்னர் பவரை யூஸ் பண்ணி 5 வருடமும் பதவியில் நானே கவர்னராக உட்கார முயற்சி செய்வேன், சின்னதா ஒரு ஆர்டினன்ஸ் போட்டு!
Srikaashan
ஒரே நாள். ஒரே கையெழுத்து. ‘ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?’ என்பதன் அடிப்படையில் ஆளுநர் பொறுப்பை நீக்கப் பரிந்துரைப்பேன்.
Kannarka
பட்டமளிப்பு விழாவில் பயன்படுத்தும் எல்லா கலர் கவுனையும் போட்டுப் பார்த்து போட்டோ எடுத்துப்பேன்!
urs_venbaa
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிடுவேன்.
பெ.பாலசுப்ரமணி
அதிக ஆசையெல்லாம் இல்லைங்க... ஈ.சி.ஆர்ல கொஞ்சம் சைக்கிளிங், அப்படியே ரோட்டோரக் கடையில ஒரு ஸ்ட்ராங்கான டீ, வாக்கிங் போறவங்களோட செல்பிக்கு போஸ்... இதெல்லாம் முடிஞ்சுதுன்னா அப்படியே மா.சு ஏற்பாட்டில் நடக்குற தடுப்பூசி கேம்ப்க்கு ஒரு விசிட். அவ்வளவுதான், ஒருநாள் கவர்னரா டிரெண்டிங் ஆயிடுவேன்.
ப.இராஜகோபால்,
மன்னார்குடி.
ஒண்ணும் செய்ய மாட்டேன்... அப்பத்தானே கவர்னர்!
க.கீராசந்த், விருதுநகர்

சாலையோர டீக்கடையில் டீ குடிப்பது, போகிற இடத்தில் செல்பி எடுப்பதைத் தாண்டி மக்களைக் கவர ஸ்டாலினுக்கு ஐடியாக்கள் ப்ளீஸ்...
இப்போதைய டிரெண்ட் ‘மாஸ்க்’ தான்... அதனால முதல்வர் போற வழியில எறங்கி ஜனங்களுக்கு மாஸ்க் விநியோகிச்சா மாஸ்க்குக்கு மாஸ், மாஸுக்கு மாஸுமாச்சி...
bommaiya
பிக் பாஸ் வீட்டில் போய் 10 நாள் தங்கலாம்.
vrsuba
தினமும் 10 வீடுகளில் மார்கழிக் கோலம் போடலாம்.
Vasanth920
அந்த ஆயிரம் இன்னும் வராமலே இருக்கு, அதைக் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்!
ssrichandra5
உதயநிதி நடிக்கும் படத்தை தியேட்டரில் பொதுஜனங்களுக்கு இலவசமாகத் திரையிட்டால் ஸ்டாலின், உதயநிதி இருவரும் மக்களைக் கவரலாம்.
hemalatha.srinivasan
கிறிஸ்துமஸ் அல்லது புது வருடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஒரு ‘சர்ச்சுக்குள்’ புகுந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தலாம்.
krishna.moorthy
ஜல்லிக்கட்டு சீசன் என்பதால் காளையை விரட்டிக்கொண்டோ, ரேக்ளா வண்டியில் சென்றோ மக்களைக் கவரலாம்.
என்.உஷாதேவி, மதுரை.
ஹீரோக்கள் கேட்கும்போதே தூங்காமல் இருக்கும்படி நாலு வரியில் ‘நச்’ கதை சொல்லுங்க பார்ப்போம்...
இசைப்பயணம் பற்றியது என்று ஆரம்பித்து, வாயாலேயே மியூசிக் போட்டுத் தூங்க விடாமல் பண்ணலாம்..!
பெ.பச்சையப்பன்,
கம்பம்.
ஹீரோவிற்குத் தூக்கம் வரா வியாதி, அதனால் இரவு நேரக் காவலாளி பணியில் உள்ளார். தூங்கிவிட்டால் வில்லன் கொள்ளையடிப்பான், பணம் கொள்ளை போகாமல் ஹீரோ எப்படியெல்லாம், தூங்காமல் தடுக்கிறார் என்பதே கதை.ஹீரோயினுக்கு இரவு நேரத்தில் ஹீரோவிற்கு மசாலா டீ விற்பனை செய்யும் கேரக்டர்.
subburu
ஒரு நடிகர், தானே கஷ்டப்பட்டு அலைஞ்சு திரிஞ்சு அறிமுகம் ஆகி, அப்புறம் பெரிய ஹீரோ ஆனதும் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறார், பட்டப் பேர் வேணாம்னு சொல்றார்...
parveenyunus
படத்துல ஹீரோவுக்குத் தூக்கத்துல நடக்கிற வியாதி.இரவு தூக்கத்துல நடந்துபோய் ஒரு கொலை பண்ணிடுறான்.அந்தக் கொலையைச் செய்தது யார் எனக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கே வருகிறது. ஹீரோ எப்படி இதிலிருந்து மீள்கிறான் என்பதே கதை. இதைக் கேட்டால் ஹீரோவிற்குத் தூக்கம் வராது.
Jegatha_new
கதை சொல்லும்போது ஹீரோ தூங்க முயன்றால், ‘சார், வில்லனை ஹீரோ பளார்னு கன்னத்தில அறையுறார்’னு சொல்லிட்டு உணர்ச்சிவசப்பட்டவர்போல நடித்து ஹீரோ கன்னத்தில் ஓங்கி அறையலாம்.
pachaiperumal23
“ரெண்டு நாளா கொஞ்சம் சளி, இருமல். இன்னும் வேக்சின் போடல”ன்னு சொல்லிட்டு அப்புறம் கதை சொல்லிப் பாருங்க. ஹீரோ தூங்குவாரு..?
balebalu
உங்கள் கல்லூரி வாழ்க்கைக் கலை நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..?
கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவாக நடித்தவர் கையில் ஆட்டுக்குட்டியைத் தூக்கியபடி வசனம் பேச, ஆட்டுக்குட்டி மேடையில் புழுக்கை இட, பதறிப்போன மாணவர் ஆட்டுக்குட்டியைக் கீழே இறக்கி விட, அது ஓட, ‘வழி தவறிய ஆடு அது’ என்று மாணவர் சமாளிக்க, ஒரே சிரிப்பலை.
எம். விக்னேஷ், மதுரை.
நாடகத்தில் வசனம் மறந்து விழித்தபோது, இடையில் ஒருத்தி ‘உன்னை வீட்ல தேடுறாங்க’ன்னு மேடையில் வந்து என்னை அழைத்துக் கொண்டு சென்றது...
urs_venbaa
கலைநிகழ்ச்சியில் எடுபிடி வேலைக்குப் போவது ஜாலியானது. எல்லாரும் ப்ரோக்ராமில் பிஸியா இருக்கும்போது, நாம ஹாயா ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்.
manipmp
டிராபிக் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்தவருக்கு பூவரசம் இலை சுருட்டி பீப்பீ செய்து கொடுத்திருந்தோம், காட்சியின்போது பீப்பீ அவிழ்ந்துவிட்டதால், ஆடியன்ஸ் பகுதியில் ஒரே விசில் சப்தம்தான், டிராபிக் கான்ஸ்டபிள் தவிர...
DevAnan
‘ஒரு தலை ராகம்’ சக்கைப் போடு போட்டு டி.ராஜேந்தர் திரைத்துறையில் காலூன்றிய காலம். எங்கள் கல்லூரிக் கலைநிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தார்கள்.மாணவர்கள் பட்டாசு வெடித்து அவரை வரவேற்க, மேடை ஏறிய அவர், “நான் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக் கிறேன். திரைத்துறையில் வெற்றி பெற வேண்டும் என நான் ‘பட்ட ஆசை’ இங்கு ‘பட்டாசாக’ வெடித்தது” என்றார். கைத்தட்டலில் கல்லூரியே அதிர்ந்தது!
ரிஷிவந்தியா,
தஞ்சாவூர்.
நீண்ட நாள்களாகச் சொல்லாமல் தயங்கிய என் காதலை, மேடையைப் பயன்படுத்தி நாசூக்காக வெளிப்படுத்தினேன். மேடையை விட்டு இறங்கியதுமே கசங்கிய பேப்பரில் எழுதிய சம்மத எழுத்துகள் என் கைக்கு வந்து சேர்ந்தது. மறக்கமுடியாத நாள். உலகத்தையே ஜெயித்தது போன்ற பிரமை.
அ.பச்சைப்பெருமாள்,
சென்னை.
கல்லூரியில் நடந்த பாரதி விழாவில், பாரதி வேடமிட்டவர் ஒட்டு மீசை விழுந்துவிட, பார்வை யாளர்கள் எழுப்பிய கரகோஷம் தன் நடிப்புக்குக் கிடைத்ததாக நம்பி, பாரதி (மீசையில்லாத) இன்னும் ஆக்ரோஷமாக வசனம் பேசி நடிக்க, ஒரே கலகலப்புதான்...
பெரியகுளம் தேவா,
திண்டுக்கல்.

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
1. 2022 எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
2. தி.மு.க - நாம் தமிழர் மோதலைத் தவிர்க்க சீமானும் உதயநிதியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
3. இதுவரை ‘கோ பேக்’ சொன்ன ஸ்டாலின், தமிழகம் வரும் மோடியை முதல்வர் என்ற முறையில் எப்படி வித்தியாசமாக வரவேற்று கூல் செய்யலாம்?
4. பல கெட்டப்களில் அசத்திய கமல், 2022-ல் தன் கட்சிப் பிரச்னைகள் தீர்க்க என்ன கெட்டப் போடலாம்?
5. ஒரு வித்தியாசமான ஆசை, ப்ளீஸ்...
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com