சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: ஆதீன வாரிசு!

வாசகர் மேடை: ஆதீன வாரிசு!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை: ஆதீன வாரிசு!

முதல் நாளே கொஞ்சம் லேட்டாத்தான் போனேன். வகுப்பறைக்குள் நுழைந்தால் மாணவர்கள் எல்லாம் பரிச்சயமில்லா முகங்களா இருந்தது!

ரோலக்ஸ் பாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாகக் கிடைத்ததைப் போல், வேறு எந்த நடிகர்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

மன்சூர் அலிகானுக்கு சந்தனக்கட்டை பரிசாக அளிக்கலாம்.

கோ.சு.சுரேஷ், கோவை.

தங்கப்பல்லை உடைத்ததற்காக, கமல்ஹாசன் விஜய் சேதுபதிக்கு, நாலு கடை ஏறி இறங்கி, விலையை கம்பேர் பண்ணிப் பார்த்து, 24 கேரட்ல இரண்டு தங்கப்பல் வாங்கித் தரவேண்டும்!

ஜோ.ஆல்பர்ட் சந்துரு

விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அடுத்து மத்திய அரசு ‘விக்கிறோம்’னு அறிவிக்கப்போற பொதுச்சொத்தை கமல் வாங்கி தன் ரசிகர்களுக்குப் பரிசளிக்கலாம்.

அஜித்

இருங்க... காலிங் பெல் அடிக்கிற சத்தம் கேட்குது. ஒருவேளை படம் பார்த்ததுக்காக நன்றி சொல்ல கமல் வந்தாலும் வந்திருக்கலாம்.

IamUzhavan

நடிகர் சந்தானபாரதிக்கு ஒரு நாள் உள்துறை அமைச்சர் பதவியைப் பரிசாகத் தரலாம்.

saravankavi

எஸ்.ஜே.சூர்யா. ‘கிஃப்ட் இருக்கு ஆனா இல்ல’ன்னு சொல்லிக் கலாய்க்கலாம்

balebalu

ராகவா லாரன்ஸுக்கு பேய் ஓட்ட தங்கத்தாலான வேப்பிலைக் கொத்து.

kayathaisathya

அஜித் - மோடி அணியும் அதே தரம், அதே பிராண்ட் கோட்.

சு.அய்யப்பன், நாமக்கல்.

வாசகர் மேடை: ஆதீன வாரிசு!

விஜய்யை எதிர்க்கும் மதுரை ஆதீனமே நேரடியாக சினிமாவுக்கு வந்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

நானும் ரெளடிதான்.

எஸ்.இராஜேந்திரன்

மதுர Vs மதுரை

ராம்ஆதிநாராயணன்

தளபதியை எதிர்க்கும் தம்பிரான்

பெ.பாலசுப்ரமணி

ஆன்மிக ஆத்திரம்

சத்தியமூர்த்தி.G

அழகிய தமிழ் ஆதீனம்

ஆ.மாடக்கண்ணு

ஆதீன வாரிசு

நிலோபர்

பூஜை உனக்காக

ParveenF7

ஆத்தி இது ஆதி

Hyena_Hyena1

விடுமுறைக்குப் பிறகு முதல்நாள் பள்ளி போனபோது நடந்த ஜாலி சம்பவங்களைச் சொல்லுங்களேன்...

ஒரு வருடம் முதல் நாள் எட்டாம் வகுப்பில் படிக்க வேண்டிய நான் என் நெருங்கிய தோழி ஃபெயில் என்பதால் அவளோடு ஏழாம் வகுப்பிலேயே அமர்ந்துவிட்டேன். டீச்சர் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்.

மஹஜூதா

முதல் நாளே கொஞ்சம் லேட்டாத்தான் போனேன். வகுப்பறைக்குள் நுழைந்தால் மாணவர்கள் எல்லாம் பரிச்சயமில்லா முகங்களா இருந்தது! கொஞ்ச நேரம் கழித்துதான் புரிந்தது, பத்தாம் வகுப்பிற்குப் போவதற்குப் பதிலாக பழைய ஞாபகத்தில் ஒன்பதாம் வகுப்பறைக்கே போய்விட்டேன் என்று!

ஆசிக் ஜாரிஃப்

அப்பொழுதெல்லாம் விடுமுறை நாள்களில் நடந்து முடிந்த முழுஆண்டுப் பரீட்சையின் அனைத்துக் கேள்வித்தாள்களுக்கும் பதில் எழுதி எடுத்து வரச் சொல்வார்கள். சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் இடம் விட்டு வைத்திருந்திருப்போம். முதல் நாள் பள்ளிக்கு வந்தவுடன் யார் எழுதியிருப்பார்கள் எனத் தேடி அலைந்து மிஸ் வருவதற்குள் அந்தப் பதிலை எழுதி முடிக்க ஒரு பாடுபடுவோம் பாருங்கள்... இப்பொழுது நினைத்தால் ஜாலியாக இருக்கிறது.

கோ.ராஜசேகர்

பள்ளியில் நடந்த பராமரிப்புப் பணிகள் முடிவடையாததால் சம்பிரதாயத்துக்காக பள்ளியை முதல் நாள் திறந்துவிட்டு அடுத்து ஒரு வாரம் விடுமுறை விட்டதும் செம ஜாலியாக இருந்தது.

modhumayoon

முதல் நாளில் முக்கால்வாசி ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்த மாட்டார்கள். அது கொஞ்சம் சந்தோஷமே!

itz_idhayavan

பள்ளிக்கூடத்திற்குப் போறது ஜாலியா இருந்தாதான் படிச்சு நல்லா வந்திருப்போமே..!

Sivakum31085735

வாசகர் மேடை: ஆதீன வாரிசு!

சசிகலாவை பா.ஜ.க-வில் சேர்த்தால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

அப்போலோ இட்லிக் கணக்கு சரிதான்னு அண்ணாமலை அறிக்கை விடுவாரு...

ஆர்.பிரசன்னா

லூசுப்பையன் பகுதியில் தரமான சம்பவம் நடக்கும்.

அ.ரியாஸ்

காந்தி சமாதியில் இருமுறை தட்டி சபதமேற்பார்!

வி.சி.கிருஷ்ணரத்னம்

ஏற்கெனவே கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பும் வகையில், சேர்ந்த மூன்று மாதத்திலேயே அமைச்சர் அல்லது ஆளுநர் பதவி வழங்கப்படும்.

ப.சீனிவாசன்

`அந்தக் காலத்தில் அம்மாவைப் பார்க்க போயஸ் தோட்டம் வந்தபோதே அவருக்குச் சில ஐடியாக்கள் கொடுத்தேன்!’ என்று ஆரம்பித்து, `நான் கட்சிக்குள் வந்துவிட்டேனல்லவா? இனி மோடிஜிதான் நிரந்தர பி.எம்...’ என்று அளக்க ஆரம்பிக்கலாம்!

ரெ.ஆத்மநாதன்

தாமரை தவழ்ந்தே தீரும்!

நா.இரவீந்திரன்

ஜெயா டி.வி ‘தாமரை டி.வி’ என்று பெயர் மாறும்.

lollumanix

சின்னம்மாஜி என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவார்.

manipmp

ஆயிரம் காமெடி நடந்தாலும், தமிழ்நாட்டிற்கு அது ட்ராஜிடிதான்!

JaNeHANUSHKA

ஆறுமுகசாமி ஆணையம் காலவரையற்ற காலநீட்டிப்பு கேட்கும்!

San8416

உங்களை நீங்களே ஹீரோயின்/ஹீரோவாக உணர்ந்த தருணம்?

என் மாணவி ஒருவர் தன் கணக்கு நோட்டில், ‘வருங்காலத்தில் நான் சரஸ்வதி டீச்சரைப் போல நல்ல ஆசிரியை ஆவேன்’ என்று எழுதி பட்டாம்பூச்சிப் படம் வரைந்து வைத்திருந்ததைப் பார்த்ததும் நான் ஹீரோயினாக உணர்ந்தேன்.

கி.சரஸ்வதி

வேற எப்போ, கல்யாண போட்டோ ஷூட்ல மட்டும்தான்.

விஜயபாஸ்கரன்.ச

ஸ்கூலில் ஐந்தாவது படிக்கும்போது, கராத்தே டெமோ கிளாஸ் வைத்தார்கள். அதைப் பார்த்து உசுப்பேறி ஒரு நண்பனிடம் “ஆ... ஊ... ஏ...” என கராத்தே போட, அவன் பல் உடைந்து ரத்தம் வழிய, எனக்கு சூப்பர் பவர் இருக்கு என என்னையே ஹீரோவா உணர்ந்த தருணம் அது. அதுக்கு அப்புறம் பிரின்சிபல் ரூமில் முட்டிக்குக் கீழ் பின்னி எடுத்து என் சூப்பர் பவரை நூறில் இருந்து ஜீரோவுக்குத் தள்ளியது தனிக்கதை.

ச.பிரபு

ஒரு முறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் என்னை அறியாமலேயே நான் டாங்கர் லாரி முன்பு படுத்து மறியல் செய்தேன். இது அன்று மாலை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது நண்பர்கள் பாராட்ட, என்னையே நான் ஹீரோவாக உணர்ந்தேன்.

க.ரவீந்திரன்

போனவாரம் ஹோட்டலிலிருந்து சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தபோது, சாம்பார், குழம்பு, ரசம் பாக்கெட்டுகளின் முடிச்சுகளைப் பிரிக்க முடியாமல் திணறினர் வீட்டிலுள்ளோர். பிறகு நானே கஷ்டப்பட்டு அனைத்து பாக்கெட்டுகளின் முடிச்சுகளையும் அவிழ்த்தபோது `அட, நானும் ஹீரோதான்’ என உணர்ந்தேன்!

கே.எம்.ரவிச்சந்திரன்

விகடன் ‘டைம் பாஸ்’ இதழ் போட்டியில் வென்று ‘பண்ணையாரும் பத்மினியும்’ படக்குழுவுடன் வடபழனி ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டுவிட்டு சந்தனம், ஸாரி... விஜய் சேதுபதி அருகில் நின்று போட்டோ எடுத்தபோது, நானும் ஹீரோதான் என்ற உணர்வு.

சுந்தரராஜ்

மாணவர்களைப் பல்வேறு போட்டிகளுக்குத் தயாராக்கி, அவர்கள் போட்டியில் வெல்லும் போதெல்லாம், நமக்கு மனசுக்குள் `சாட்டை’ பட ஹீரோ சமுத்திரக்கனி என்ற நினைப்பு வந்துவிடும்.

amuduarattai