சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: பன்னீர் பஸ்பங்கள்!

விஜய் - கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் - கமல்

மதுரைக்குக் கபடி ஆட வரும் விஜய் அங்கு ‘டான்’ கமலுடன் மோதுகிறார். அவரின் மகளாக ஸ்ருதி, விஜய்மீது காதல் கொள்கிறார்.

வெப் சீரிஸ், மெகா சீரியல் - என்ன வித்தியாசம்?

வெப்சீரிஸ் - இழுவை

மெகா சீரியல் - அழுகை

பாலா சரவணன், சென்னை

வெப்சீரிஸ்: எபிசோடு 1, எப்சோடு 2 என இழுப்பார்கள்.

மெகா சீரியல்: வருடக்கணக்காய் இழுப்பார்கள்.

 க.கீர்த்தனா, சென்னை

வெ.சீ - அம்மாவோடு பார்க்க முடியாது.

மெ.சீ - அம்மாவால் பார்க்காமல் இருக்க முடியாது.

அஹமத்

சினிமாவில் நடிக்க சரியான சான்ஸ் கிடைக்காவிட்டால் வெப் சீரிஸ்.

சினிமாவில் நடிக்க சான்ஸே இல்லையென்றால் மெகா சீரியல்!

எம்.இராஜேந்திரன்

வெப் சீரிஸ் - ஹோட்டல் சாப்பாடு மாதிரி வெரைட்டியா இருக்கும்.

மெகா சீரியல் - வீட்டுச் சாப்பாடு. அரைச்ச மாவையே அரைச்ச மாதிரி இருக்கும்!

ப.சோமசுந்தரம்

மெகா சீரியல்: சமையல் வேலையை விட்டுட்டுப் பாக்குறது.

வெப் சீரிஸ்: ஆபீஸ் வேலையை விட்டுட்டுப் பாக்குறது!

KarthickMemes

மெகா சீரியல் : இதுக்கு இல்லையா சார் ஒரு endu?

வெப் சீரிஸ்: ஆமா, இதுக்கு எவ்வளவு rentu?

dudeDaSong

கமலும் விஜய்யும் இணைந்து நடித்தால் என்ன கதை, என்ன தலைப்பு?

‘தேவர் மகன்’ திரைப்படத்தை ரீமேக் செய்யலாம்.

 ஷண்முகம், சேவாக்கவுண்டனூர்

படத்தின் தலைப்பு - வால்வே மாயம்.

கதை: கமல் பேத்தியின் இதய ஆபரேஷன் போது டாக்டர் வால்வு பொருத்தாமலேயே பொருத்தியதுபோல் ஏமாற்ற, போலீஸ் அதிகாரியான விஜய்யும் கமலும் இணைந்து எப்படி கார்ப்பரேட் மருத்துவமனைகளின் ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார்கள் என்பது.

செல்லத்துரை

சலங்கை ஒலி - 2

கதக், பரதக் கலை குரு கமலிடம் வித்தை கற்ற சிஷ்யன் விஜய், வெஸ்டர்ன் டான்ஸில் எப்படி பட்டையைக் கிளப்பி உலகப்புகழ் பெறுகிறார் என்பதே கதை. க்ளைமாக்ஸில் குரு சிஷ்யன் இருவரும் இணைந்து கிளாஸிகல் வெஸ்டர்ன் டான்ஸை ஆடி வரலாற்றில் இடம் பிடிக்கின்றனர்.

ரிஃபாத்துன்னிஷா

மதுரைக்குக் கபடி ஆட வரும் விஜய் அங்கு ‘டான்’ கமலுடன் மோதுகிறார். அவரின் மகளாக ஸ்ருதி, விஜய்மீது காதல் கொள்கிறார். ஸ்ருதியைக் கரம் பிடித்தாரா விஜய் என்பதே கதை. தலைப்பு: ‘மதுரநாயகம்’

krishmaggi

வாசகர் மேடை: பன்னீர் பஸ்பங்கள்!

அண்டர் கவர் ஆபரேஷன் போலீஸ் அதிகாரிகளின் அட்ராசிட்டிகள் - சிறுகுறிப்பு வரைக

தலைமறைவாக இருந்துவிட்டு, கதாநாயகிக்கு ஒரு பிரச்னை என்றதும் சரியாக ஆஜர் ஆகி குற்றவாளியைப் பிடிப்பதும், அதன் பின்பாக பிடித்தவரையே தன்னுடைய சட்டைப் பாக்கெட்டில் உள்ள அடையாள அட்டையை எடுக்க வைப்பதெல்லாம் அதகளமான அட்ராசிட்டிகள்.

வீ.வைகை சுரேஷ்

வில்லன் பண்ற எல்லா அயோக்கியத்தனமும் பண்ணிட்டு, ‘நான் அண்டர் கவர் ஆபரேஷன் ஆபீஸர்’னு விறைப்பா காலர் தூக்கும்போது பண்ற அட்ராசிட்டி இருக்கே... அப்பப்பா!”

பா.து.பிரகாஷ்

எவ்வளவு நேரமாகச் சுட்டுக் கொண்டிருந்தாலும் துப்பாக்கியில் குண்டுகள் தீரவே கூடாது.

ஹரி கிருஷ்ணன்

மொத வேலையாக எல்லாரிடமும் ‘நான் ஒரு சீக்ரெட் மிஷன்ல இருக்கேன், இதுக்கு மேல எதுவும் கேக்காத’ன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் சொல்லி முடிக்காம விட மாட்டார்கள்.

ச.பிரபு

இடுப்புக்குப் பின்னால் துப்பாக்கி வச்சிருப்பாங்க. உட்காரும்போது உறுத்தாதா?

manipmp

எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் தமிழக பா.ஜ.க-வினரின் ‘பிரியாணி அண்டா’ கவர் ஆபரேஷன்தான்..!

LAKSHMANAN_KL

எனக்குத் தெரிந்து அண்டர் கவர் ஆபரேஷனில் இருந்தது என் பசங்கதான். நான் செய்வதெல்லாம் அவங்கம்மா காதுக்குப் போயிரும்.

KRavikumar39

அவர் அந்தப் பணியில் இருப்பது, அவரைச் சுற்றி உள்ள எல்லாருக்கும் தெரியும். ஆனா அவங்களை ரொம்ப நேசிக்கிற அம்மாகிட்டயும் காதலிகிட்டயும் மட்டும் சொல்ல மாட்டாங்க.

vanhelsing1313

ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையைத் திரைப்படம் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

மம்மி இல்லாம டம்மி

 பா.கார்த்திகேயன், குன்றத்தூர்

துணிவான பணிவு

 சு.அய்யப்பன், நாமக்கல்

ராசியில்லா ராஜா

 நா.குழந்தைவேலு, சென்னை

மௌனம் சம்மதமில்லை

ஆர்.பிரசன்னா

தேனியின் தேய்பிறை

அ.பச்சைப்பெருமாள்

பண்பானவன் பணிவானவன் பதவி போனவன்

எஸ்.ஏ.விஜயலஷ்மி

பொறுத்தார் பூஜ்யமாவார்

மு.நடராஜன்

பன்னீர் பஸ்பங்கள்

வன்னி தங்கம் ராதா

காலமெல்லாம் தர்மயுத்தம்

கே.கருணாநிதி

வந்தால் இரண்டாவதாகத்தான் வருவேன்.

amuduarattai

உதயநிதி: டைட்டில் என்னவேணா வச்சிக்குங்க, படத்தை மட்டும் நான் ரிலீஸ் செஞ்சுக்குறேன்!

pbukrish

ராணுவத்துக்குத் தற்காலிக ஆட்கள் எடுப்பதுபோல் பிரதமர், ஜனாதிபதி, முதல்வர், ஆளுநர் பதவிகளுக்கும் தற்காலிக ஆட்கள் எடுத்தால்..?

வாசகர் மேடை: பன்னீர் பஸ்பங்கள்!

பிரசாந்த் கிஷோருக்கு லாபம்தான்.

வெ.சென்னப்பன்

பெஸ்ட் பிரதமர் அகாடமி, அசத்தல் ஆளுநர் அகாடமி போன்ற விளம்பரங்கள் நாடு முழுவதும் அள்ளும்!

நெல்லை குரலோன்

இப்போதே இவர்களையெல்லாம் தற்காலிகமாகத்தானே எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள்தான் நிரந்தரம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்.

சா.செல்வராஜ்

அப்புறம் ஆளுங்கட்சியிலே அதிருப்தியாளர்களே இருக்க மாட்டாங்க!

லீலாராம்

இன்ஜினீயரிங் ஸ்டூடன்ட் மாதிரி தெருவுக்குப் பத்துப் பிரதமர்கள் இருப்பார்கள்!

நா.இரவீந்திரன்

அண்ணாமலை தனது பெயர் பின்னால் Ex.IPS என்று போட்டுக்கொள்வதுபோல தற்காலிகப் பணிக்கு வந்து சென்ற அனைவரும் தங்கள் பெயர்கள் பின்னால் Ex.PM, Ex.CM, Ex.President, Ex.Governor என்று போட்டுக்கொள்வார்கள்.

SowThanishka

முதல்வர்கள் பிரதமராக, ஆளுநர்கள் ஜனாதிபதியாகப் பதவி உயர்வு கோரிப் போராட்டம் நடத்துவார்கள்.

PG911_twitz

இப்போதாவது, இதில் ஒரு பதவி எனக்குக் கிடைக்குமா: ஹெச்.ராஜா.

JaNeHANUSHKA

யூ மீன் பி.எம் பாத், சி.எம் பாத், ஜனாதிபதி பாத் & கவர்னர் பாத்?!

h_umarfarook

‘ஒருநாள் தற்காலிக முதல்வர் பதவி மட்டும் எனக்குச் சிக்குச்சுன்னா?’ என்று சீமான் வசனம் பேசுவார்.

balasubramni1

யூடியூப் tagline... நீங்களும் பிரதமர் ஆகலாம்... Hi friends... எப்படி பிரதமர் ஆகலாம்னு பார்க்கலாம் வாங்க... இப்படி நிறைய யூடியூப் வீடியோக்கள் வரும்...

Laviher3

1. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பயோபிக் எடுத்தால் நடிப்பதற்குப் பொருத்தமானவர் யார்? டைட்டில் என்ன வைக்கலாம்?

2. ‘ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சது இல்ல’ என சமீபத்தில் உங்களை யோசிக்க வைத்த நிகழ்வு எது?

3. மழை - தேநீர் - மிளகாய் பஜ்ஜி போல குளிர்காலத்துக்கு ஒரு காம்போ சொல்லுங்கள்!

4. கிரிக்கெட்டில் இந்த டபுள் சைடு ஆடுபவர்களின் அட்ராசிட்டீஸ் பிளீஸ்!

5. காங்கிரஸ் மொழிபெயர்ப்பாளர் தங்கபாலுவும் பா.ஜ.க மொழி பெயர்ப்பாளர் ஹெச்.ராஜாவும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com