சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: தாலாட்டு 2.0

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

`பாகுபலி 3.0’ குஷ்பு - ராஜமாதா, காயத்ரி ரகுராம் - தேவசேனா, நமீதா - தமன்னா,

? அதிகம் சினிமா நட்சத்திரங்களைக் கொண்ட தமிழக பா.ஜ.க., ஒரு திரைப்படம் தயாரித்தால் யார் யார் என்ன கேரக்டர்களில் நடிக்கலாம்?

‘திருவிளையாடல்’ படத்தை ரீமேக் செய்யலாம்! தருமி - ஹெச்.ராஜா, சிவன் - நெப்போலியன், பார்வதி - குஷ்பு, முருகன் - எல்.முருகன், பிள்ளையார் - எஸ்.வி.சேகர்..!

absivam

`அபூர்வ சகோதரர்கள்' படத்தை ரீமேக் செய்து அப்பா கமல், மகன்கள் உயரக் கமல், அப்பு கமலாக நெப்போலியனே நடிக்கலாம். கவுதமி கேரக்டரில் கவுதமியே நடிக்கலாம். நான்கு வில்லன்களாக ராதாரவி, பொன்னம்பலம், ஆர்.கே.சுரேஷ், கஸ்தூரிராஜா நடிக்கலாம். காமெடிக்கு எஸ்.வி.சேகர், செந்தில்!

RamAathiNarayen

கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘நாட்டுப்புறப் பாட்டு பார்ட்-2.’ குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, செந்தில், ஆர்.கே சுரேஷ் என நடிகர் பட்டாளத்தையே களமிறக்கலாம்.

manipmp

`ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ என்று ஒரு படம் எடுத்து, அதில் பா.ஜ.க-வில் தற்போது உள்ள நடிகர், நடிகைகள் அனைவரையும் மொத்தமாக நடிக்கச் சொல்லலாம்.

amuduarattai

கரகாட்டக்காரன்-2. இயக்கம் - கங்கை அமரன். கனகாவிற்கு பதிலாக காயத்ரி ரகுராம். இவரும் மாஸ்டர் என்பதால் கரகாட்டத்தில் ஜொலிப்பார்.

pachaiperumal

`பாகுபலி 3.0’ குஷ்பு - ராஜமாதா, காயத்ரி ரகுராம் - தேவசேனா, நமீதா - தமன்னா,

எஸ்.வி.சேகர் - நாசர், ராதாரவி - கட்டப்பா.

Ntramesh_kpm

வாசகர் மேடை: தாலாட்டு 2.0

? இது இளையராஜா பாட்டு, இது கண்ணதாசன் எழுதியது, இது வைரமுத்து எழுதியது என்று சில பாடல்களைக் கேட்டு ரசித்திருப்போம். ஆனால் அது அவர்களுடையதாக இருக்காது. அப்படி நீங்கள் இனிமையாக ஏமாந்த பாடல்கள் பற்றிச் சொல்லுங்கள்...

‘இதய கோவில்’ படத்தில் `இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ' பாட்டின் ஒவ்வொரு வரியும் முத்தானவையாக இருக்கும். அவை கவிஞர் வைரமுத்துவுக்கே சொந்தம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அது இளையராஜா எழுதிய பாடல்.

 விஜயலக்ஷ்மி, மதுரை.

பாண்டவர் பூமி படத்தில் வரும் `அவரவர் வாழ்க்கையில்’ பாட்டில் உள்ள `நத்தைக்கூட்டின் நீர் போதும் எங்களின் தாகம் தீர்த்துக்கொள்வோம்’ என்ற வரிகளைப் பார்த்து வைரமுத்துதான் எழுதியிருப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனால், எழுதியது சினேகன்.

 உ.தீத்தாரப்பன், மதுரை.

`சேலைகட்டும் பெண்ணுக்கொரு’ பாடல் இளையராஜா இசையில்லையாம், அம்சலேகாவின் இசையில் வந்த பாடலாம்.

 பெரியகுளம் தேவா, திண்டுக்கல்.

இரு கோடுகள் படத்தில் வரும் `புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக’ என்ற பாடலைக் கேட்டு, அதைக் கவிஞர் கண்ணதாசன் எழுதி, மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன் இசையமைத்ததாக நினைத்திருந்தேன். ஆனால், கவிஞர் வாலி எழுதி, வி.குமார் இசையமைத்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது.

 இந்திராணி தங்கவேல், சென்னை

‘வாழ்வே மாயம்’ படத்தின் இசை இளையராஜா என்று நினைத்தால், கங்கை அமரன். இசையே மாயம்..!

SowThanishka

‘காதலன்’ படத்தில் வரும் `ஊர்வசி...’ பாடலை வாலி எழுதியதாக நினைத்திருந்தேன். அது வைரமுத்து எழுதிய பாடல்.

balasubramni1

`கண் போன போக்கிலே கால் போகலாமா’ என்ற பாடலைக் கண்ணதாசன் எழுதினார் என நினைத்தேன். பின்புதான் தெரிந்தது, அதை எழுதியது வாலி என்று.

Paa_Sakthivel

‘அன்புள்ள அப்பா’ திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் அமைந்த ‘அன்புள்ள அப்பா... உந்தன் காதல் கதையைக் கேட்டால் தப்பா’ பாடலை இளையராஜா இசை என்று ஏமாந்ததுண்டு.

 ஆர்.பிரசன்னா, திருச்சி

‘ஆசை’ படத்தில் இடம்பெற்ற `புல்வெளி... புல்வெளி’ பாடலைக் கேட்டதும், இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை அமைத்திருக்கிறார் என்றே வெகுநாள்கள் நினைத்திருந்தேன்.

IamUzhavan

‘ஹே ராம்’ படத்தில் வரும் `இசையில் தொடங்குதம்மா’ பாடலை எழுதியது இளையராஜா என்று சமீபத்தில்தான் எனக்குத் தெரியும்.

Vasanth

வாசகர் மேடை: தாலாட்டு 2.0

? மோடியும் ஸ்டாலினும் சந்தித்தபோது இருவரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

மோடி: நல்லவேளை, தமிழ்நாட்டு நிதியமைச்சர் கூட வரல.

ஸ்டாலின்: நல்ல வேளை, நம்ம நிதியமைச்சரால் கடுப்பான ‘ஒன்றிய நிதியமைச்சர்’ இங்கே இல்லை.

 எம்.கலையரசி, சேலம்

மோடி: வெற்றிவேல்... வீரவேல்...

ஸ்டாலின்: முத்துவேல்... முத்துவேல்...

RamAathiNarayen

மோடி: நல்லவேளை, புத்தகம் ஏதும் கொடுக்கல. சால்வை மட்டும்தான் போர்த்தியிருக்காரு!

ஸ்டாலின்: புத்தகம் கொடுத்தா நீங்க படிக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியாதா?!

RahimGazzali

மோடி: தந்தெ மகானுக்காற்றேம் நான்றி...

ஸ்டாலின் : புரிஞ்சிக்கிட்டேன். திருவள்ளுவர் பாவம், விட்டுருங்க.

pachaiperumal23

ஸ்டாலின்: நாம மம்தாவாக மாறாம இருக்கிறது இவர்கிட்டதான் இருக்கு.

மோடி: இவர் மம்தாவாக மாறுனா ஆய்வுசெய்ய ஆரம்பிச்சிடுங்கன்னு ஆளுநரிடம் சொல்லிட வேண்டியதுதான்.

 அஜித், சென்னை.

? தமிழர்கள் - 50 வருடங்களுக்குப் பிறகு ஒரே வரியில் அடையாளப்படுத்துவது என்றால் எப்படிச் சொல்வார்கள்?

பிரியாணிப் பிரியர்கள்!

 பெ.பச்சையப்பன், கம்பம்

`ஜி'க்கே 'ஷோ' காட்டியவர்கள்!

 ஏ.முருகேஸ்வரி, தென்காசி

ஒருத்தர் மேல பாசம் வெச்சிட்டா பாலாபிஷேகம் செய்றதும், பக்தி வந்துட்டா கோயில் கட்டுறதும் தமிழன்தான்.

 ப.சீனிவாசன், கோடிக்கரை

தமிழுக்காகத் தமிழ்நாடு எனப் பெயர் வைத்தவர்கள்.

THARZIKA

இன்றைய தேதி வரை டாஸ்மாக் கடைகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டிருப்பவர்கள்..!

LAKSHMANAN_KL

`கரண்ட் கட்’டிற்குப் புதுப் புதுக் காரணங்களைக் கண்டுபிடிப்பவர்கள்!

chennappan10

ராமர் சாமிக்கு இல்லத்திலும், பெரியார்

ஈ.வெ.ராமசாமிக்கு இதயத்திலும் இடம் கொடுத்தவர்கள்.

PG911_twitz

குரலற்றவர்களின் குரலாக, விழியற்றவர்களின் வழியாக, கதியற்றவர்களின் நிதியாக இருந்தவர்கள்; இருப்பவர்கள்...

saravankavi

அப்பவும் 50 வருஷம் முன்னாடிதான் தமிழகம் இருக்கும்.

Elanthenral

யாசகம் கேட்டு வந்தோரை `இல்லை’ என்று முகத்தில் அறைந்தாற்போலக் கூறாமல், `போய் வா / பக்கத்து வீட்டைப் பாரு’ என்று நாசூக்காய்க் கூறும் பண்பாடு கொண்டவர்கள்.

bpthilakavathi

? தாலாட்டுப் பாடல்களையே மறந்துவிட்ட சூழலில் டிரெண்டியாக நாலு வரியில் ஒரு தாலாட்டுப்பாடல் சொல்லுங்கள்...

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ...இல்லையொரு `நீட்'டு என்று சொல்லுவோர் யாருமில்லை... இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே... கோச்சிங் கிளாஸ் போகவில்லை. கொண்டு விட வண்டியுமில்லை. பெட்ரோல் விலையேறியதால் வித்துப்புட்டேன் அன்பு மகனே... ஆராரோ ராரோ ஆரிரரோ...

திருமாளம் எஸ்.பழனிவேல்

ஆராரோ ஆரிராரிரோ அலுத்துப்போச்சா? ரகிட ரகிட பாடுறேன் கண்ணே நீயும் கண்ணுறங்கு!

 எம்.விக்னேஷ், மதுரை

வருந்தாதே பாப்பா வருந்தாதே...

ட்விட்டரும் பேஸ்புக்கும்

இருக்கு கவலைப்படாதே...

மோஜ்ஜும் ஜோஷும் இருக்கு

ஃபீல் பண்ணாதே...

 வெ.சென்னப்பன், தருமபுரி.

மாமன் அடித்தாரோ மாஸ்க் அணிந்த மல்லிகையே, அத்தை அடித்தாரோ ஆண்ட்ராய்டு அற்புதமே... அடித்தாரைச் சொல்லி அழு

வீடியோ காலில் திட்டலாம்.

balasubramni1

let me tell u kutti story pay attention listen to me

chellamae bedu waiting go and sleep

soonu baby ayyayoo this time la

bossu callingu baby eyes close u ma...

Kothaichandru82

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? நீங்கள் மிகவும் ஆசைப்பட்டு வாங்கி மூலையில் போட்டு வைத்திருக்கும் கேட்ஜெட் எது, ஏன்?

? ஏதாவது ஒரு சூப்பர்ஹிட் தமிழ்த் திரைப்படத்தின் டைட்டிலை மாற்றி வேறு பெயர் வைக்கலாமென்றால் என்ன பெயர் வைப்பீர்கள், ஏன்?

? உங்கள் வாழ்க்கைக்கு வடிவேலுவின் எந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறீர்கள், ஏன்?

? காலத்துக்கு ஏற்றாற்போல் இன்றைய தலைவர்கள் எந்த விஷயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

? ஹாலிவுட்டின் புகழ்பெற்ற சீரியல் கில்லர் கதாபாத்திரம் ஒன்றில் தமிழ் நடிகர் நடிக்கலாமென்றால் உங்கள் சாய்ஸ் யார்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757,

அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com