
பூரிச்சாமி - முதல்வர் பதவி கிடைத்ததிலிருந்து புன்னகையுடனும் பூரிப்புடனும் வலம் வருவதால்.
? ஊர்ப்பெயர்களை மாற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு நல்ல பெயரை மாற்றிவைக்கலாம் என்றால் என்ன பேர் வைக்கலாம்?
திரிஞ்ச பாலுக்குத் தீர்வு தந்த தீரன்
balasubramni1
சோ’க்கிழார்!
நா.இரவீந்திரன், வாவிபாளையம்.
ஜோதிடர் - பழனிசாமி.
(அரசின் ஆஸ்தான அதிகார ஜோதிடர்)
ம.பாமா தேவி தேனி
ஆண் மோனாலிசா
pachaiperumal23

பூரிச்சாமி - முதல்வர் பதவி கிடைத்ததிலிருந்து புன்னகையுடனும் பூரிப்புடனும் வலம் வருவதால்.
JaNeHANUSHKA
குமாரசாமி - மூன்று நாள்களில் கொரோனா ஒழியும் என்று தப்புக்கணக்குப் போட்டதால்.
NedumaranJ
மாற்றச் சொன்னதை மாற்ற வேண்டாம் என மாற்றி மாற்றம் கொண்டு வந்த மாற்றசாமி!
pbukrish
Undoசாமி
KarthikeyanARM
ஃப்ரூட்காட்
udayakumar.kr
? விக்ரம் - த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ஆளுக்கு ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுங்களேன்...

விக்ரம்: நான் நிஜம். என்னை நெருங்காதே..!
துருவ்: நான் உன் நிழல். நீ மட்டுமல்ல, யாருமே என்னை நெருங்கமுடியாது..!
Ayyan M Akasnandan
நான் பிதா
நீ மகன்
balamurugan1412
விக்ரம் : directorக்காக
என்னையே மாத்துனவன்டா
துருவ் : எனக்காக
directoரையே மாத்தினவன்டா
Laviher3
த்ருவ் விக்ரம் - i am a very bad man.
விக்ரம் - if you are bad, i am your dad.
krishmaggi
வி : அஞ்சு பைசா திருடுனா தப்பா..
து.வி : ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு இருக்கப்ப சல்லித்தனமா அஞ்சு பைசா திருடுனா தப்புதான்.
HariprabuGuru
விக்ரம் - இதெல்லாம் உனக்கு செட் ஆகாது விட்று.
த்ருவ் விக்ரம் - இதே மாதிரி உங்கள எத்தன பேர் சொல்லிருப்பாங்க, நீங்க விடலயே..?
nandhu_twitts
? அதிரடி அறிவிப்புகளால் ‘அடேங்கப்பா’ போட வைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சுயசரிதையைப் படமாக எடுத்தால் என்ன பெயர் வைக்கலாம்?
வணக்கம்டா மாப்ள அமெரிக்காவிலிருந்து
balasubramni1
புக் ஆப் லை!
Thaadikkaran
அஞ்சான்! அசரான்!! அடங்கான்!!!
ஏ.எம்.கற்பகநந்தன், தென்காசி
? ஆன்லைன் கிளாஸ் எடுக்க தமிழ் சினிமாவின் எந்த டீச்சர் சரியாக இருப்பார், ஏன்?
நம்ம All in all அழகு ராஜா
சசிக்குமார்.
venkstesa

சுந்தரகாண்டம் பாக்கியராஜ் சார். மாணவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் பாடம் நடத்துவதிலிருந்து கவனம் சிதறாதவர்.
ஏ.முருகேஸ்வரி, தென்காசி
மதுவந்தி...
( கணக்குப் பாடம் தவிர்த்து )
Adhirai Yusuf
திருமதி பழனிச்சாமி சுகன்யா. நாம வீட்டுக்குள்ளே இருந்தாலும், சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி சொல்லித் தருவாங்க.
ananthi.ramakrishnan
டி.ராஜேந்தரை டீச்சராகப் போடலாம். ரைமிங்கா பேசி, ரொம்ப டைமிங்கா வகுப்பு நடத்துவார்.
vc.krishnarathnam
இருந்திருந்தா, மேஜர் சுந்தர்ராஜன்தான் சரியான சாய்ஸ்.. “இட்ஸ் எ இம்பார்ட்டன்ட் லெசன்.. இது ஒரு முக்கியமான பாடம்’’னு தமிழ் - இங்கிலிஷ் ரெண்டு மீடியத்துக்கும் புரியற மாதிரி ஒரே தடவைல சொல்லிக் குடுத்திருப்பார்!
KarthikMSomasundaram
சூதுகவ்வும் விஜய்சேதுபதி. வளவளன்னு பேசாம ஐந்து மெயின் பாயின்ட் மட்டும் நோட் பண்ணி அழகா கிளாஸ் எடுப்பார்!
pbukrish
இயக்குநர் ஹரி, ஒரு வருஷம் எடுக்க வேண்டிய பாடத்தை ஒரே வாரத்துல ஸ்பீடா எடுத்து முடிச்சிருவார்!
RavindranRasu
கமல் கிளாஸ் எடுத்தா, யாரையும் பேச விடாம சமாளிச்சுடுவார்!
karthik_thinks
மலர் டீச்சர்
MASTER_LOKI
ஜெனிபர்(ரேகா) டீச்சர்தான். படிக்காத முரட்டு சத்யராஜையே படிக்க வைத்தவர்.
pachaiperumal23
வடிவேலு - பாடி லாங்குவேஜ் மூலம் எந்த லாங்குவேஜையும் கற்பிக்க வல்லவர்.
vrsuba
மான்கிபாத், காணொலின்னு பல வகுப்பு எடுத்த அனுபவம் இருக்கு. அதனால மோடி நடத்தலாம். மோடி நடிகர் இல்லையே என்று யாரும் சொல்ல முடியாது.
saravankavi
நடிகை ஜோதிகா. காக்க காக்க, ராட்சஸி போன்ற படங்களில் ஆசிரியராக நடித்த அனுபவமுள்ளதால்.
UDAYAKUMARKR202
? 2020-ம் ஆண்டை ஒற்றை வரியில் விளக்குவதைப்போல ஒரு திருவாசகம் சொல்லுங்கள்...
புதிய டொண்டி டொண்டியில் #கொரோனா டீம் வேர்ல்டு சேம்பியன்
bala_bodi
உலக உயிர்கள் விடுபட்டும் மனித உயிர்கள் அடைபட்டும் இருந்த ஆண்டு!
Neera_Twitz
1. போதும்
2. முடியல
3. அவ்வ்
4. அழுதுடுவேன்
5. வேண்டாம்
6. ஆணியே
ChPaiyan
நூறு சதவிகித தேர்ச்சி ஆண்டு
Uma Mayil
மந்தநிலையில் இருந்த பொருளாதாரம், மேலும் ‘நொந்த’நிலைக்குச் சென்ற ஆண்டு..!
laks.veni
வருமானம் போய், தன்மானம் இழந்து, அவமானத்தைத் தந்த ஆண்டு... உனக்கு என்னடா எங்க மேல காண்டு?!
Ravikumar Mgr
ஜோசியர்கள் சொன்னது எல்லாம் பொய்யா கோபால்
balasubramni1
₹#@_@$€*&^*&°^=®÷
(ஒண்ணும் புரிஞ்சுக்க முடியலை)
h_umarfarook
அனைவருக்கும் காலர் ட்யூன் திட்டம் அமல் படுத்தப்பட்ட ஆண்டு.
ARiyasahmed
இங்க நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும்... இப்படிக்கு, கொரோனா.
Ntramesh_kpm
நெகட்டிவ், பாசிட்டிவ்
ஆல் பாஸ், இ-பாஸ்...
gmuruganandi
2020 ஒரு பிக்பாஸ். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!
prabacurren
leap year அல்ல
RIP year
manipmp

சிறை மீள்வாரா சின்னம்மா?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? ‘கொரோனாலாம் எனக்கு கோன் ஐஸ் மாதிரி’ என ஊரடங்கிலும் ஊர் சுற்றும் அஜாக்கிரதை ஆசாமிகளுக்கு ஒரு பெயர் சூட்டுங்கள்.
? எல்லோரும் சமூகப்படங்களைத்தான் ரீமேக் செய்கிறார்கள். சரித்திரப் படங்கள் மற்றும் புராணப்படங்களை ரீமேக் செய்தால் யார் எந்தப் படத்தில் நடிக்கலாம்.
? சசிகலா சிறையிலிருந்து வந்தவுடன் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?
? 50 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் எந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் எப்படி மாறியிருக்கும்?
? ‘வாழ்ந்தால் இவரைப்போல வாழணும்’ என்று நீங்க இப்ப நினைக்கிற ஆள் யார், ஏன்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.
ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com