
‘ராஜாவின் பார்வையிலே’ இதில் ‘விஜய்’யாக விராட் கோலியும், ‘அஜித்’தாக தோனியும் நடிக்கலாம்.
‘தல’ தோனி சினிமாவில் நடிக்க வந்தால் எந்த அஜித் பட கெட்டப்பில் நடிக்கலாம்?
விஸ்வாசம்
கே.விஸ்வநாதன், கோயம்புத்தூர்
‘வீரம்’ பட வேட்டி சட்டை கெட்டப் வேற லெவல்.
பா ஜெயக்குமார்
பேசவேண்டிய நேரத்தில் மட்டும் பேசி வித்தியாசமான வக்கீலாக அசத்திய, நேர்கொண்ட பார்வை கேரக்டர். தோனியும் இக்கட்டான நேரத்தில் நேர்த்தியாக ஆடுவார்.
சுஸ். துருவ்
எப்பவும் ஆக்ஷன், ரன் சேசிங்னு பரபரப்பாவே இருக்கணுமா என்ன? ஜாலியான தோனியை நாமளும் ஜாலியா ரசிச்சுப் பார்க்க, ‘காதல் மன்னன்’ அஜித் கேரக்டரில் நடிக்கலாம்.
JaNeHANUSHKA
பழைய நீளமான ஹேர் ஸ்டைலோட பரமசிவன் படத்தில் நடிக்கலாம். பிரகாஷ்ராஜ் கேரக்டரில் சச்சின் நடிச்சா இன்னும் சூப்பரா இருக்கும்.
KarthickMh
‘ராஜாவின் பார்வையிலே’ இதில் ‘விஜய்’யாக விராட் கோலியும், ‘அஜித்’தாக தோனியும் நடிக்கலாம்.
krishmaggi

உங்கள் பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் நடந்த ஜாலியான சம்பவம்..?
பள்ளியில், நான் தேர்வு எழுதும் போது, ஆசிரியர் நான் எழுதுவதைப் படிக்க முற்பட, நான் விடைத்தாள் மீது கைவைத்து அதை மறைத்தேன். அவர், நான் ஏதோ பிட் வைத்திருப்பதாக நினைத்து, சோதித்துப் பார்த்தார். ‘ஒன்றுமேயில்லையே... எதற்காக மறைந்தாய்?’ எனக் கேட்டார். ‘நீங்கள், நான் தப்புத்தப்பா எழுதுவதைப் படிக்கக் கூடாதுன்னு சார்!’ என்றேன். பலமாகச் சிரித்தபடியே என்னை விட்டு அகன்றார்!
வி.சி. கிருஷ்ணரத்னம்
31-3-2005 பணி மூப்பு காரணமாக ஓய்வுபெறவிருந்த நான் என்னுடைய 58 வது வயதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மின்துறை கணக்கியல் தேர்வுத் தாள்-1, 2 தேர்வுகளை. 27-12-2004-ல் எழுதி 7-3-2005-ல் வெளிவந்த தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றேன்.
க.ரவீந்திரன்
நான் பிளஸ் டூ படிச்சப்ப... ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, மேக்ஸ் பேப்பர் லீக்காச்சுன்னு. பசங்க எல்லாம் ஊரு புல்லா சுத்திக்கிட்டு இருக்கோம். எல்லா ஜெராக்ஸ் கடையிலேயும் அவ்ளோ கூட்டம். நாங்க ஒரு அஞ்சு ப்ரெண்ட்ஸ். இதுதான் வரப்போற கொஸ்டீன் பேப்பர்னு சொல்லி, நம்பகமான ஒருத்தா் கொடுத்தார். அஞ்சு பேரும் ஒரு ப்ரெண்டு வீட்டுல உட்கார்ந்து மாங்கு மாங்குன்னு ரெண்டு நாள் படிச்சு எக்ஸாம் ஹால் போய் கொஸ்டின் பேப்பரை வாங்கிப் பார்த்தா... எங்களுக்குக் கிடைச்சதுல இருந்து ஒண்ணுகூட வரல...
அ.வேளாங்கண்ணி
கொண்டுபோன பிட் ஒண்ணுகூட தேர்வில் கேட்டதில்லை. தேர்வு முடியும் வரை அதை பத்திரப்படுத்தி வெளியே கொண்டு வருவது கள்ளக்கடத்தலுக்கு நிகரானது.
manipmp
BSc(Maths)ல் Vector Calculus எனக்குப் பிடிபடாத சப்ஜெக்ட். கேள்விகளின் வரிகளை மாற்றிப்போட்டு விடை எழுதியிருந்தேன். மற்ற பாடங்களைவிட அநியாயத்துக்கு அதிக மதிப்பெண் பெற்று பாஸாகியிருந்தேன். அதிக மார்க்கின் மர்மம் இன்றுவரை எனக்கு விளங்காத ஒரு புதிராகவே உள்ளது.
HARIGOPI20
திராவிட மாடலுக்கும் மோடி மாடலுக்கும் நச்சுனு ஒரு வித்தியாசம் சொல்லுங்க!
ஒரே கட்சி ஒரே குடும்பம் ~ திராவிட மாடல்
ஒரே நாடு ஒரே தேர்தல் ~ மோடி மாடல்
பாலா சரவணன், சென்னை
பெரியார் தாடிக்கும், மோடியின் தாடிக்கும் உள்ள வித்தியாசம்தான்.
எஸ்.இராஜேந்திரன்
முதல்வர் சாமி கும்பிட கோயிலுக்குப் போகாமல் முதல்வர் மனைவி மட்டும் சாமி கும்பிட கோயிலுக்குப் போனால் அது திராவிட மாடல். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை ஏற்றிக்கொண்டே மசூதிகளில் சிவலிங்கங்களைக் கண்டுபிடித்தால் அது மோடி மாடல்.
ராம்ஆதிநாராயணன்
மோடி மாடல் - போட்டோ ஷூட்
திராவிட மாடல் - செல்ஃபி
W.ரோமிரோ
செப்டம்பர் 17 பிறந்த தமிழரைப் பின்பற்றினா அது திராவிட மாடல்.
செப்டம்பர் 17 பிறந்த குஜராத்தியைப் பின்பற்றினா அது மோடி மாடல்.
ஆசிக் ஜாரிஃப்
திராவிட மாடல் உபிகளே (உடன்பிறப்புகளே) பலம்! மோடி மாடல் உபியே (உத்தரப்பிரதேசமே) பலம்!
pbukrish
அண்ணாவை நம்புறது திராவிட மாடல்.... அண்ணாமலையை நம்புறது மோடி மாடல்...
RavikumarMGR
உலகின் பெரிய ஸ்டேடியம் கட்டி மோடி பெயரைச் சூட்டினால் அது மோடி மாடல். பெரிய நூலகம் கட்டி அண்ணா பெயரைச் சூட்டினால் அது திராவிட மாடல்.
Vaigaisuresh9
மோடி மாடல் கால் தேய நடக்க விட்டுச்சு. திராவிட மாடல் ‘நீ காசே கொடுக்க வேண்டாம் பஸ்ல ஃப்ரீயா போ’ன்னு சொல்லுது.
karuppi_twits
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - திராவிட மாடல்
அந்த முட்டாய் எந்தக் கடைல இருக்கு - மோடி மாடல்
sine_theta_
‘பத்தல பத்தல’ கமலின் எசப்பாட்டுக்கு எதிர்ப்பாட்டை அண்ணாமலை எழுதினால் என்ன வரிகள் இடம்பெற்றிருக்கும்?

வருது வருது அட
விலகு விலகு
ஐ.டி ரெய்டு வருது
(ஆண்டவா)
எழுது எழுது
ஒரு பாட்டு எழுது
ஜீயை புகழ்ந்து எழுது
(ஆண்டவா)
அ.ரியாஸ்
பத்தல பத்தல.
போதும் போதும்னு
போட்டோமே வரியை,
நேருவோட தப்பாலே
நேந்து விட்டோம் மக்களை...
‘பெரியகுளம்’ தேவா
பத்தல பத்தல படகும் பத்தல
படகு போக தண்ணியும் பத்தல
தண்ணிய உடுறாடேய் இல்லனா
படகும் போகாதே
பெ.பாலசுப்ரமணி
எப்போதுமே பிக்பாஸ், சினிமான்னு இருந்தாக்க
நாறிப்புடும் கட்சி தேர்தல் வந்தாக்க
ஒய்யாரமா தளுக்கா எப்போதுமே இருந்தாலே
நிர்வாகியெல்லாம் மாற்றுக்கட்சிக்கு போயிடுவாங்க தன்னாலே..!
SriRam_M_20
உன்ன நெனச்சேன்
பாட்டு படிச்சேன்
தகரமே மய்யத் தகரமே...
(கட்சி) ஆசை வந்து உன்னை ஆட்டி வைத்த பாவம்
மய்யமோ பாவம் ஓரம்...
rishivandiya
நிலாவுக்குப் போகும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் நிலாவில் இறங்கியவுடன் என்ன செய்வீர்கள்?
கொஞ்ச நேரம் உட்கார்ந்திட்டு கிளம்ப வேண்டியதுதான். இல்லாட்டினா ரவைக்கு சோத்துல தண்ணீர் ஊத்தி வச்சிருவங்க வீட்டுல. அப்புறம் காலையில பழைய சோறைத்தான் திங்கணும். இதெல்லாம் தேவையா?!
சிவம்
வடை சுடுகிற பாட்டி, அடுப்பு எரிக்க என்ன எரிபொருள் உபயோகிக்கிறாங்கன்னு தெரிந்து கொள்வேன். அது எளிமையாக, சிக்கனமாக இருந்தால் நாமும் கடைப்பிடிக்கலாமே!
கே. கீதா
`ஓ...’ன்னு அழ ஆரம்பிப்பேன். பூமியில் முதன்முதலாக வந்து இறங்கியதும் அதைத்தானே செய்தேன்!
அஜித்
செல்போன் டவர் கிடைக்குதான்னு பார்ப்பேன்.
ராம்கி
நான் வந்து சேர்ந்துவிட்டேன் என்று பேமிலி வாட்ஸ்அப் குரூப்புக்கு தகவல் அனுப்புவேன்.
PG911_twitz
“வெண்பூமியே வெண்பூமியே விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த நிலவுலகத்தில் யாரும் பார்க்கும்முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்”
என்று பாட்டு பாடுவேன்.
IamUzhavan
கூட வந்திருப்பவர்களுடன் பேசி ஏரியா பிரிச்சு மார்க் பண்ணி காணிக்கல் நடுவேன்.
NedumaranJ
மூன் கி பாத் ஆரம்பித்து மக்களுடன் உரையாடுவேன்.
vrsuba
1. விஜய் ஒரு பேன் இந்தியா சினிமா நடித்தால் அவருடன் இணைந்து எந்தப் பிறமொழி நடிகர் நடிக்கலாம்? கதையின் ஒன்லைன் எப்படி இருக்கலாம்?
2. ‘அல்லு விட்டுடுச்சு’ என்று சொல்லும்படி உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம்?
3. பேய்கள் இணைந்து அரசியல் கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?
4. தமிழ்நாட்டு வருகைக்கு பாரதியார் பாடல்கள், திருக்குறளை மனப்பாடம் செய்வதைத் தாண்டி மோடி என்ன செய்ய வேண்டும்?
5. `இந்த இடத்தில் எல்லாமா செல்ஃபி எடுப்பாங்க’ என்று நீங்கள் வியந்த சம்பவம்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!