
கணவனுக்கும் மனைவிக்கும் இரண்டு பதவிகள் பெற வசதியாக, தனித்தனி ரேஷன் கார்டு கேட்டுப் போராடலாம்.
பொன்னியின் செல்வன் போல கல்கியின் `பார்த்திபன் கனவு' நாவலை மீண்டும் படமாக்கினால் அதில் ஹீரோ - ஹீரோயினாக யார் நடிக்கலாம்?
துருவ் விக்ரம் - ஆன்ட்ரியா
S.கருணாகரன், சென்னை.
மலையாளத்தின் நிவின் பாலி, சாய் பல்லவி
ஆர்.ஹரிகோபி
அட, சூர்யா ஜோதிகா ஜோடியைவிடவுமா?! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவங்கதாங்க தெரியறாங்க!
ஜே.கல்யாணி
விக்ரம் - அனுஷ்கா சூப்பர் பொருத்தமாக இருக்கும். ( இருவருக்கும் வரலாற்றுப் படங்களில் நடித்த அனுபவம் உண்டு!)
வி.சாந்தி
பார்த்திபன்: கமல்
விக்கிரமன்: கார்த்தி
குந்தவி: மாளவிகா நாயர்
பொன்னன்: மாதவன்
வள்ளி: வரலட்சுமி
மாரப்ப பூபதி: விஜய்சேதுபதி.
PG911_twitz
என்ன, பார்த்திபன் கனவு நாவலை ஏற்கெனவே படமா எடுத்துட்டாங்களா?
vantiyatevan
மன்சூர் அலிகான் மற்றும் மும்தாஜ் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
KannanN27374016
தன் மகனை அரசனாக்க வேண்டும் என்பதே பார்த்திபன் கனவு கதையின் கரு. ஆக, பார்த்திபனாக மருத்துவர் ராமதாஸ்.
skkaran_68
விஜய்சேதுபதி-சமந்தா நடிக்கலாம்.
NatarajanAS2

தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள தமிழக காங்கிரஸார் இன்னும் எப்படியெல்லாம் நூதனமாகப் போராடலாம்?
கட்சியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறும் போராட்டம் நடத்தலாம்! (அதான் ஆல்ரெடி நடந்துக்கிட்டிருக்குன்றீங்களா..?)
பி.மஹதி
கணவனுக்கும் மனைவிக்கும் இரண்டு பதவிகள் பெற வசதியாக, தனித்தனி ரேஷன் கார்டு கேட்டுப் போராடலாம்.
வி.சி.கிருஷ்ணரத்னம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ஐம்பத்தி இரண்டு மோதல்' என்ற பெயரில் ஒரு படம் எடுக்கலாம்!
இளங்கோ பாலு
அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை இருப்பதைப் போல, தமிழக காங்கிரஸில் பத்துத் தலைமை கொண்டு வர வேண்டும் என சத்தியமூர்த்தி பவன் முன் `ராவணன் மாஸ்க்’ போட்டு அமைதிப் போராட்டம் நடத்தலாம்.
ச.பிரபு
போராட்டம்னா வீட்டை விட்டு வெளியே வரணும், வெயில்ல நிக்கணும், ரோட்டுல நடக்கணும். அட போங்க பாஸ் - இந்திய தேசிய காங்கிரஸ்.
இவர்களே இப்படினா, தமிழகக் காங்கிரஸ் எப்படி இருக்கும்!
IamUzhavan
ஆளுங்கட்சியை அதிகமாகப் புகழ்வது செல்வப்பெருந்தகையா, ஜோதிமணியா என இரு அணிகளாகப் பிரிந்து போராடலாம்.
DevAnandR155
சி.எஸ்.கே அடுத்த சீசனில் கோப்பை வெல்ல ஒரு பிரபலத்தை ஏலத்தில் எடுக்கலாமென்றால் உங்களின் சாய்ஸ் யார்?
பிரசாந்த் கிஷோர்
கா.மு.ஃபாரூக், விருகம்பாக்கம்
மிர்ச்சி சிவா & பிரேம்ஜி அமரன். ஷார்க் டீமின் கேப்டன் & சிறந்த ஃபீல்டர்
க.கீர்த்தனா, சென்னை
சீமான். ‘1983 உலகக் கோப்பையை வெல்ல கபில்தேவுக்கு யோசனைகளைச் சொன்னது நான்தான்’னு மனுஷன் அவிழ்த்து விடுவார். இது மன இறுக்கத்தில் உள்ள தோனியை ரிலாக்ஸ் மூடுக்கு மாற்றி, அவர் நன்றாக ஆடவும், டீமை நன்றாக வழி நடத்திச் செல்லவும் உதவும்.
ஈனோஸ் இப்ராஹீம்
சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன்தான். இப்போதைக்குக் கோப்பையை வெல்ல, ஸாரி வாங்க இந்த லெஜண்ட்தான் சரியான சாய்ஸ்!
பா.து.பிரகாஷ்
வைகைப்புயல் வடிவேலு. போட்டியில் தோற்றாலும் ‘கோப்பை எங்களுக்குத்தான்’ என்று லாஜிக்காகப் பேசிச் சமாளித்துவிடுவார்.இல்லையென்றாலும் அதேபோல் ஒரு கோப்பையை உள்ளூர்ப் பாத்திரக் கடையில் செய்துவிடுவார்.
G.V.செல்வகணேஷ்.
அண்ணாமலை. விக்கெட் கீப்பரா தேர்ந்தெடுத்தோம்னா ஒவ்வொரு பாலுக்கும், ‘அவுட்டா’ன்னு கேட்டுக் கத்திக் கூச்சல் போடுவாரு. குழப்பத்தில் அம்பயர் கை தூக்க வாய்ப்பிருக்கு. பேட்ஸ்மேன் ரெவியூ போனாலும், அம்பயர் கால்னு சொல்லி மூன்றாம் அம்பயர் அவுட் உறுதி செய்ய வாய்ப்பிருக்கு.
JaNeHANUSHKA
ஆர்.ஜே.பாலாஜியை ஏலத்தில் எடுக்கலாம். அவர், ‘எங்களோடு மேட்ச்சை தோக்குறீங்களா? இல்லை, நான் கிரிக்கெட் வர்ணனை செய்யட்டா’ என்று எதிர் அணிகளை மிரட்டியே சி.எஸ்.கே-வை வெற்றிபெற வைப்பார்.
SriRam_M_20
அடுத்து யார் யாரையோ எடுங்க... வேண்டாங்கல. அந்த பேருக்காவது, தமிழ் நாட்டிலிருந்து ஒருவரையாவது எடுங்க.
amuduarattai

‘எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல நீ?’ என நீங்கள் ஏமாறாமல் ஜஸ்ட் மிஸ்ஸான தருணங்கள்?
‘ஒரு லட்சம் எண்ணில் லக்கி எண்ணாக உங்க போன் நம்பருக்கு ஃபிரிட்ஜ் கிடைத்திருக்கு. டிரான்ஸ்போர்ட் பீஸ் பத்தாயிரம் மட்டும் கட்டுங்க’ன்னு போனில் சொன்ன பெண்ணிடம், ‘எனக்கு அதிர்ஷ்டம் மேல் நம்பிக்கை இல்லை. அந்தப் பரிசை நீங்களே வச்சுக்கோங்க’ன்னு சொல்லிட்டேன்.
பெ.பாலசுப்ரமணி
நான் ரொம்ப சூதானமானவன்தான். ஆனா பாருங்க, அந்தப் பதினைந்து லட்சம் மேட்டர்ல உங்களை மாதிரியே நானும் ஏமாந்துட்டேனுங்களே சார்.
அ.பச்சைப்பெருமாள்
உண்மையிலயே விபூதி அடித்த கதை இருக்கு. புகழ்பெற்ற முருகன் கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தோம், சிறப்பு தரிசனக் கட்டணம் நபர் ஒருவருக்கு ₹150. நாங்கள் எட்டுப் பேர். பட்டை, காவி வேட்டி கட்டிய நபர், ₹500 கொடுத்தால் அனைவரையும் அருகில் நின்று சாமி தரிசனம் செய்து, சாமி மாலை வாங்கித் தருவதாகக் கூறினார். என்னைத் தவிர அனைவரும் அவர் பக்கம். அடையாள அட்டை கேட்டேன். ஏதோ பதில் சொல்ல ஆரம்பித்த போது, காவல் அதிகாரிகள் ரவுண்ட்ஸ் வந்ததைப் பார்த்து ஓடி மறைந்துவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தரிசனம் செய்தோம்.
ஸ்வாதி சுசீ
சலூன் கடையில் முடிவெட்டி முடித்தவுடன் தலையை அங்கும் இங்கும் அசைக்கத் தொடங்கினார் சலூன் கடைக்காரர். மசாஜ்னு சொல்லிக் காசு வாங்கிடுவாரோன்னு, ‘அண்ணே, கழுத்து வலி இருக்கு. வேண்டாம்’னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டேன்.
Vasanth920
‘இந்த வருஷம் நிச்சயம் promotion. இந்த கிரிட்டிகல் புராஜெக்ட் மட்டும் முடிச்சுத் தாங்க’ன்னு மேனேஜர் சொல்லும்போது...
vrsuba
ரெய்டும் பெயிலுமாக நாள்களை நகர்த்தும் கார்த்தி சிதம்பரம் பார்க்க ஜாலியாகச் சில கற்பனை வெப் சீரிஸ் பரிந்துரைகள் ப்ளீஸ்?
CHINESE VISA!
லாவண்யா, சென்னை
கோவை பிக்சர்ஸ், வெற்றிவேல் வழங்கும், ‘வந்தான், தேடினான், பிரியாணி உண்டான், போனான்... ரீப்பீட்டு.'
`பெரியகுளம்' தேவா
‘உன் குத்தமா... என் குத்தமா...’ (பெற்ற பாசம் கண்ணை மறைக்க மகனைக் கண்டித்து வளர்க்காத ஒரு தந்தை... மகனால் ரெய்டிலும் பெயிலிலும் சிக்கி அல்லாடும் நகைச்சுவைக் கதை)
கே.முருகன்
அஸ் ஐ'ம் ஸஃபரிங் ஃப்ரம் ரெய்டு!
ரிஷிவந்தியா
ஃப்ரெண்ட்ஸ் ஃப்ரம் சிபிஐ!
நா.இரவீந்திரன்
சிவகங்கை ஃபைல்ஸ்!
LAKSHMANAN_KL
‘சீனா தானா 007’
sudarvizhie
முப்பொழுதும் உன் விசாரணைகள்
saravankavi
`* விக்ரம்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் கமல், சூர்யாவோடு வேறு யார் நடிக்கலாம்?
* தோனி ஒரு தமிழ்ப்படம் தயாரித்தால் அதன் டைட்டில் என்னவாக இருக்கும்? ஹீரோ யார்?
* பா.ம.க தலைவர் ஆகியுள்ள அன்புமணி ராமதாஸுக்கு `மாற்றம் முன்னேற்ற'த்துக்கு பதிலாக ஒரு முழக்கம்...
* பா.ஜ.க-வுக்கு எதிராகப் பேசும் சக ரத்தத்தின் ரத்தங்களைக் கட்டுக்குள் வைக்க ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைக்கு ஐடியாக்கள் ப்ளீஸ்?
* `இந்த நாளை உன் டயரில குறிச்சு வச்சுக்கோ' என `அண்ணாமலை' ரஜினி போல தொடையைத் தட்டி நீங்கள் செய்த ரகளையான சபதம் எது?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!