சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: ஆ.வியில் ஆவி எக்ஸ்க்ளூசிவ்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

நண்பரோட நாடகங்களில் 30 வருஷமாக நடிச்சிருக்கேன். குடும்பப்பொறுப்பு மிகுந்த என்னிடம் ஒரு சினிமா தயாரித்த அவர், நடிக்கக் கட்டாயப்படுத்தினார்

விஜய் ஒரு பேன் இந்தியா சினிமா நடித்தால் அவருடன் இணைந்து எந்தப் பிறமொழி நடிகர் நடிக்கலாம்? கதையின் ஒன்லைன் எப்படி இருக்கலாம்?

மகேஷ் பாபு. நில ஆக்கிரமிப்பு போல் ‘நிலா ஆக்கிரமிப்பு' செய்யும் கும்பலின் சதிச்செயலை நண்பர்களான விஜய்யும் மகேஷ் பாபுவும் எவ்வாறு நிலவுக்கே சென்று முறியடிக்கிறார்கள் என்பதே கதையின் ஒன்லைன்!

ரிஷிவந்தியா

அமிதாப் பச்சன் - மகன் செல்வாக்கில் அவர் விருப்பமில்லாமல் கட்சி ஆரம்பித்துக் கஷ்டப்படுவது.

வன்னி தங்கம் ராதா

யஷ். கே.ஜி.எப் 2 இறுதியில் கடலில் மூழ்கிய ராக்கியை, சுறா விஜய் காப்பாற்றிவிடுகிறார். இருவரும் கோலாரில் கோலோச்சுகிறார்கள்.

பெ.பாலசுப்ரமணி

விஜய் சென்னையில் விமானப்படை அதிகாரி. அல்லு அர்ஜுன் விசாகப்பட்டினத்தில் கடற்படை அதிகாரி. ஹ்ரித்திக் ரோஷன் மும்பையில் ராணுவ அதிகாரி. முப்படை அதிகாரிகளும் இணைந்து இந்தியாவிலுள்ள அத்தனை தீவிரவாதிகளையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதே ஒன்லைன்.

அஜித்

விஜய்யுடன் சிரஞ்சீவி இணைந்து நடனப்போட்டி சம்பந்தமான படமாக இருந்தால் இருவரும் பின்னிப் பெடல் எடுத்துவிடுவார்கள்.

pudukairavi

வாசகர் மேடை: ஆ.வியில் ஆவி எக்ஸ்க்ளூசிவ்!

‘அல்லு விட்டுடுச்சு’ என்று சொல்லும்படி உங்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம்?

நண்பரோட நாடகங்களில் 30 வருஷமாக நடிச்சிருக்கேன். குடும்பப்பொறுப்பு மிகுந்த என்னிடம் ஒரு சினிமா தயாரித்த அவர், நடிக்கக் கட்டாயப்படுத்தினார். ஆழமான நட்பு என்பதால் அதை முறிக்காமல் உங்களின் இரண்டாவது படத்தில் நடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்தேன். தானே நாயகன், கதை வசனம் இயக்கம் என்றெல்லாம் கண்ணை மூடாமல் உழைத்து, படமும் ரிலீசாகி லட்சக்கணக்கில் கையைச் சுட்டுக்கொண்டவர்.கப்சிப் ஆகிவிட்டார். எனக்கும் அல்லு விட்டுச்சுல்ல?

ஆர்.ராஜகோபாலன்

2015 டிசம்பர் 1. மழை பெய்து கொண்டிருந்தாலும் பைக்கில் வழக்கம்போல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் உள்ள திருமுடிவாக்கம் பகுதியில் இருக்கும் அலுவலகத்திற்குச் சென்றேன். திடீரென்று ஏரியிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு (முன்னறிவிப்பின்றி) அதிகரிக்கப்பட, ஆபீஸை வெள்ளம் சூழ்ந்தது. அப்படியே பூட்டிவிட்டுக் கிளம்ப, வீட்டுக்குச் செல்லும் வழியெங்கும் சாலைகளில் நீர்த்தேக்கம், விடாமல் பிடரியில் அடிக்கும் மழை, மாற்று வழியில் செல்கையில் பாதை தவறி, மறுபடியும் திரும்ப வந்து, வீட்டிற்குச் (ராமாபுரம்) செல்லும் வழியில் அடையாறு நதியை (வெள்ளம் அதிகரித்துக்கொண்டே இருந்தது) கடந்து வீட்டை அடையும் வரை திக்திக் என்று ‘அல்லு விட்டுடுச்சு.' கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் நடு ரோட்டுல நின்னிருப்பேன். இப்போ நினைச்சாலும் அல்லு விட்டுடுது.

ஜெ.நெடுமாறன்

ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கல்லூரிக்கு பி.காம் இறுதித் தேர்வு எழுதப் போக பஸ்ஸுக்குக் காத்திருந்து அது வராமல் முதியவர் ஒருவரின் டூவீலரில் லிஃப்ட் கேட்டு ஏறினேன்.அவர் ஸ்லோவாக ஓட்டி டென்ஷன் ஏற்ற எக்ஸாம் டைமுக்குள் ஹாலுக்குப் போய்ச் சேர்வதற்குள் அல்லு விட்டுடுச்சு.

ParveenF7

ஒவ்வொரு மாதமும், 1-1 மீட்டிங்ல அந்த மாசம் என்னத்த கிழிச்சோம்னு மானேஜர் கேப்பாருன்னு நினைக்கும்போதெல்லாம் அல்லு விடுது!

vrsuba

பேய்கள் இணைந்து அரசியல் கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

சட்டசபைத் தேர்தலில் ராகவா லாரன்ஸை முதல்வர் வேட்பாளராகப் பேய்கள் நிறுத்தும்!

ப.சோமசுந்தரம்

‘கால்' இல்லாததால் சட்டசபையிலிருந்து பேய் எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்புக்கு பதில் ‘வெளி பறப்பு' செய்வார்கள்.

பர்வீன் யூனுஸ்.

பேய்கள் ஆட்சி அமைத்தால் ஆவிகள் மாடல் கொள்கைப் படி ஆட்சி நடத்துவார்கள்.

க.ரவீந்திரன்

பேய்கள் ஆ.வி-க்கு மட்டுமே பேட்டி தருவார்கள்.

செல்லத்துரை

செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் யாராவது சத்தம் போட்டுப் பேசினால், ‘‘எதுக்கு இப்ப மனுஷராட்டம் கத்தறீங்க?’’ அப்படீன்னு தலைமைப் பேய் கேட்க நேரிடும்.

கே.ஆர்.அசோகன்

‘அரசியல் ஒரு சாக்கடை’ என்பதற்கு பதிலாக, ‘அரசியல் ஒரு சுடுகாடு’ என்று சொல்ல வேண்டியிருக்கும்..!

வி.கீர்த்தனா

ஆவி ஆனந்தன், பிசாசு பிரபு, பேய் பேரன்பன், பூதம் பூபாலன், காட்டேரி கார்மேகம், கோஸ்ட் கோவிந்தன் - இப்படியெல்லாம் அடைமொழிகள் வச்சுப்பாங்க...

saravankavi

இறந்துபோனவர்களுக்கு ஓட்டுரிமை கிடைக்கும், உயிரோடு இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது என்ற நிலை வரும். அதனால் பேய் வேஷம் போட்டுக் கள்ள ஓட்டு போடுவார்கள்.

umarfarook

பேய்கள் ஆட்சி அமைச்சதும் முதல்ல செய்யப்போறது பேய்ப்படங்கள் எடுக்குறதைத் தடை செய்யுறதுதான். நாமளும் தப்பிச்சுக்குவோம். வாழ்க பேய்கள்... வளர்க பேயாட்சி...

RavikumarMGR

‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் பாழடைந்த பங்களாக்கள் கட்டித் தரப்படும்’ என்று வாக்குறுதிகள் அரசியல் தலைவர்களால் தரப்படும்.

amuduarattai

பேய்க்கொரு முருங்கை மரம், புளிய மரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்னு கட்சிக் கொள்கையும், தேர்தல் அறிக்கையும் இருக்கும்.

NedumaranJ

‘புளியம் பூ மலர்ந்தே தீரும்' என்று அடிக்கடி ஆவேசமான முழக்கம் கேட்கும்.

balebalu

வாசகர் மேடை: ஆ.வியில் ஆவி எக்ஸ்க்ளூசிவ்!

தமிழ்நாட்டு வருகைக்கு பாரதியார் பாடல்கள், திருக்குறளை மனப்பாடம் செய்வதைத் தாண்டி மோடி என்ன செய்ய வேண்டும்?

சூப்பர் ஸ்டார் பஞ்ச் டயலாக்குகளை மாடுலேஷனோடு பேசினால் அப்ளாஸ் கிடைக்கும்.

 கா.மு.ஃபாரூக், விருகம்பாக்கம்

ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டுக்கு வரும் போது பெரியார், அண்ணா, கருணாநிதி,

எம்.ஜி.ஆர் போன்றவர்களின் கெட்டப்பில் மாறி மாறி வரலாம். கெட்டப்பை மாற்றுவது அவருக்கு ஒன்றும் தெரியாத, முடியாத விஷயமும் அல்ல.

எஸ்.இராஜேந்திரன்

தாயுமானவர் + வள்ளலார் பாடல்களைப் படிக்கலாம். அங்கதான ‘மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும்'னு வருது!

எஸ்.எல்.ஜார்ஜ் அருண்

குஜராத் முதல்வராக முன்பு தமிழகத்தில் டீ விற்ற அனுபவம் எனக்கு உண்டு என்று ஒரு கதையை அவிழ்த்து விடலாம். நம்மாளுகதான் எல்லாத்தையும் நம்புறவங்களாச்சே?

adiraibuhari

இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பொருத்தமானது சாம்பாரா, தேங்காய்ச் சட்னியா, வடைகறியா என்று மேடையில் பேசலாம்.

KVENKAT85644735

‘இந்த இடத்தில் எல்லாமா செல்ஃபி எடுப்பாங்க’ என்று நீங்கள் வியந்த சம்பவம்?

சில ஆண்டுகளுக்கு முன் மவுலிவாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்ததால் அருகில் கட்டப்பட்டிருந்த அதே போன்ற தரமற்ற முறையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி அப்பார்ட்மென்ட்டை வெடி வைத்துத் தகர்த்தார்கள். அப்போது அதன் அருகில் வசிப்போர் சிலர் தங்களது மொட்டை மாடிகளில் நின்று அந்தச் சம்பவத்தை செல்ஃபி எடுத்துக் கொண்டது மனதை வேதனைப்படுத்தியது.

பர்வீன் யூனுஸ்

வரிசை கட்டி கால் கடுக்க நின்னு தடுப்பூசி போட்டுக்கிட்டது கொரோனாவைத் தடுக்கவா, இல்லை, செல்ஃபி எடுக்கவா?

விஜயலக்ஷ்மி

வேகமாகச் செல்லும் ரயிலின் வெளியே உரசுவது போல நின்றுகொண்டு உயிரைப் பணயம் வைத்து செல்ஃபி எடுப்பதைப் பார்த்து வியக்கவில்லை; நொந்துபோனேன்.

KmFarook6

போலீஸ் ஸ்டேஷன்ல குத்தவச்சு உக்காந்திருக்கும்போது, ஏதோ தங்கப்பதக்கம் வாங்குன மாதிரி அங்கேயும் செல்ஃபி.

MirageVj

செல்ஃபி எடுப்பது இருக்கட்டும்..! ஏதாவது ஒரு இடத்தில் செல்ஃபி எடுக்காமல் செல்வதுதான் வியப்பை ஏற்படுத்துகிறது.

Sivakum31085735

மால்களில் உள்ள ரெஸ்ட் ரூம் கண்ணாடியில்!

 க.கீர்த்தனா, சென்னை.

1. ரோலக்ஸ் பாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாகக் கிடைத்ததைப் போல், வேறு எந்த நடிகர்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?

2. விடுமுறைக்குப் பிறகு முதல்நாள் பள்ளி போனபோது நடந்த ஜாலி சம்பவங்களைச் சொல்லுங்களேன்...

3. சசிகலாவை பா.ஜ.க-வில் சேர்த்தால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

4. உங்களை நீங்களே ஹீரோயின்/ஹீரோவாக உணர்ந்த தருணம்?

5. விஜய்யை எதிர்க்கும் மதுரை ஆதீனமே நேரடியாக சினிமாவுக்கு வந்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com