சினிமா
Published:Updated:

வாசகர் மேடை: லாக்டௌன்@சொர்க்கலோகம்

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

எப்போதும் தண்டாயுதத்துடன் காட்சியளிக்கும் எமன் மாஸ்க் போட்டு ‘மாஸ்’ஸாகக் காட்சியளிப்பார்.

? சொர்க்கலோகத்தில் லாக்டௌன் வந்தால் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

அவரவரும் அவரவர் சொர்க்க வாசலிலேயே அமர்ந்திருக்க நேரிடும். அவரவர் சொர்க்கத்திலேயே நடைபயில்வர். - இந்திராணி தங்கவேல், சென்னை

மொதல்ல சொர்க்கலோகம்னா அது எப்படி இருக்கும்னு சொல்லுங்கய்யா... இப்ப இருக்கிற நெலைமையில நோய்த் தொற்று பயம் இல்லாமல் இருக்கறதே சொர்க்கம் மாதிரிதான் தோணுது.. - aravankavi

‘மூன்று நாள்களில் ஊரடங்கு முடிவுக்கு வரும்’ என்று அறிவித்து இந்திரன் பல்பு வாங்குவார். PG911_twitz

முருகனால் உலகைச் சுற்றிவர முடியாது என்பதால், அவரது வாகனமான மயிலுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். - IamUzhavan

எமன் டு சிவன்: சுவாமி, இந்த அற்ப மானிடப் பதர்களால் சொர்க்கலோகத்திலும் கொரானா பரவிவிட்டது, கோவாக்சின் தடுப்பூசி டெண்டர் விட தங்கள் கையெழுத்து பெற வந்திருக்கிறேன். - pbukris6

எப்போதும் தண்டாயுதத்துடன் காட்சியளிக்கும் எமன் மாஸ்க் போட்டு ‘மாஸ்’ஸாகக் காட்சியளிப்பார். - kavi chennappan

எண்ணெய்க் கொப்பரைகளில் கபசுரக் குடிநீர் காய்ச்சி எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படும். - pasumpon.elango?

நடன மாதர்கள் நான்கு மணி நேரம் மட்டுமே தங்கள் ஆட்டத்தை வைத்துக்கொள்வார்கள். - f muthooshm

பகல் பத்து மணிக்கு மேல் சோம பானத்தின் விலை இரு மடங்காக உயரும். - chennappan10

அனுமன் எளிய மக்களுக்குப் பறந்து பறந்து பார்சல் சாப்பாடு கொடுப்பார். Vasanth

அங்கு காந்தி இருப்பார். ‘ஊரைச் சுற்றாதே... ராட்டையைச் சுற்று’ என்பார். - ஆர்.கல்யாணி, நெல்லை

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படாது. -
எம் விக்னேஷ், மதுரை


`சொர்க்கமே என்றாலும் அது நம்மலோகம் போல வருமா'ன்னு உலா போவாங்க! - பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

வாசகர் மேடை: லாக்டௌன்@சொர்க்கலோகம்

? முதல்வர் பதவியும் கிடைக்காமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கிடைக்காமல் வெறுத்துப்போயிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கினால் என்ன பெயர் வைக்கலாம்?

உருமாறிய அ.தி.மு.க. - ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

தர்ம யுத்த தமிழர்கள் முன்னேற்றக் கழகம் - சதீஷ் குமார், ராணிப்பேட்டை

அவிஓக - அம்மா விசுவாசிகளின் ஓபிஎஸ் கழகம். - Paa_Sakthivel

கககஅதிமுக - கட்டம் கட்டப்பட்டோரால் கட்டமைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். - pbukrish

அ.இ.அ.சி.தி.மு.க - அனைத்து இந்திய அம்மா சின்னம்மா திராவிட முன்னேற்றக் கழகம். - SriRam_M_20

அம்மா பணிவு முன்னேற்றக் கழகம் - செந்தில், புதுவை

நெம்பர் 2-க்குப் பேர் போனவர் என்பதால் நெம்பர் 2 கட்சின்னே பேர் வச்சிக்கலாம். - பாரதிமுருகன், மணலூர்ப்பேட்டை

வாசகர் மேடை: லாக்டௌன்@சொர்க்கலோகம்

? தமிழ் சினிமாவைப் பார்க்கும்போது, ‘அட, இந்த கேரக்டரில் அவர் நடித்திருக்கலாமே?’ என்று நீங்கள் நினைக்கும் பிறமொழி நடிகர் யார்?

‘பருத்திவீரன்’ கார்த்தி கேரக்டரில் திலீப், செவ்வாழை @ சித்தப்பு சரவணன் கேரக்டரில் டைரக்டர் லால், கஞ்சா கருப்பு டக்ளஸ் கேரக்டரில் சுராஜ் வெஞ்சரமூடு. - jerry

‘ராஜா ராணி’ படத்தில் ஆர்யாவுக்குப் பதிலாக பகத் பாசில் நடித்திருந்தால் பட்டையைக் கிளப்பியிருப்பார்! எக்ஸ்பிரஷன் எக்ஸ்பிரஸா இருந்திருக்கும்! - absivam

‘விக்ரம் வேதா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக அமீர்கானும், மாதவனுக்கு பதிலாக ஷாருக்கானும் நடித்திருக்கலாம். - SriRam_M

`வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக மோகன்லால் நடித்திருக்கலாம். `யாரைக் கேட்கிறாய் வரி...மாமனா மச்சானா?' என்று மலையாளம் கலந்த தமிழில் கர்ஜித்தால் சிவாஜியே சொர்க்கத்திலிருந்து அப்ளாஸ் செய்வார். - RamAathiNarayen

‘விருமாண்டி’ படத்தில் பசுபதி கதாபாத்திரத்தில் மம்மூட்டியும் நெப்போலியன் கதாபாத்திரத்தில் மோகன்லாலும் நடித்திருக்கலாம். கமல், மம்மூட்டி, மோகன்லால் ஒரே படத்தில் என்ற சாதனையும் வந்திருக்கும். - balasubramni

`பாகுபலி' கட்டப்பாவாக அமிதாப்பச்சன். - ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

`முதல்வன்' படத்தில் அர்ஜுன் கேரக்டரில் பிரபாஸ். - ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

`ஒத்த செருப்பு’ பார்த்திபனாக நானா படேகர். - பாலு இளங்கோ, வேலூர்.

‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் பிரபு - கார்த்திக் ரோலில் மம்மூட்டி - மோகன்லால் நடிச்சிருந்தா வேற லெவல் ஹிட் ஆகியிருக்கும். பிந்தூ ப்ரியன், கேரளா

இந்த அமெரிக்க மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் எல்லாம் நம்ம மகேஷ் பாபு சாரை யூஸ் பண்ணியிருந்திருக்கலாம். ரா.பிரசன்னா மதுரை

`குரங்கு பொம்மை' விதார்த் கேரக்டரில் 'ஃபேமிலி மேன்' மனோஜ் பாஜ்பாய்..! - laks veni

? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து எஸ்கேப் ஆனவர்களை வைத்து கமல்ஹாசன் டிவி நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் அது எப்படி இருக்கும்?

கட்சியிலிருந்து விலகியவர்கள் தங்கள் கட்சி அனுபவங்களைக் கலகலப்பாகச் சொல்லும் ‘கலக்கப் போவது யாரு?' நிகழ்ச்சியை கமலுடன் ஸ்ரீபிரியாவும் சினேகனும் நடுவர்களாக இணைந்து நடத்தலாம். - ஆர்.அருண்குமார், கும்பகோணம்.

புத்தம் புது நிகழ்ச்சியாக லைவாக கண்ணாமூச்சி விளையாட்டு. கமல் கண்ணைக் கட்டிக்கொண்டு யாரைத் தொடுகிறாரோ அவர்கள் அவுட். - எஸ். மோகன், கோவில்பட்டி

‘சொல்வதெல்லாம் குற்றம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தலாம். எஸ்கேப் ஆனவர்கள் ஒரு அணி, கமல் ஒரு அணி. சிறப்பு விருந்தினர் நாட்டாமை சரத்குமார். -f amuduarattai

Real big B... HOUSE MATES தமக்குள் சண்டையிட்டு வெளியேறுவதைப் பார்த்திருப்போம். இது big B அவர்களையே வெளியேற்றும் தருணம். - f AchariyaLenin

‘குக் வித் பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கமல் ‘கட்லட்' செய்யச் சொன்னா ‘கமர்க்கட்’டும், ‘மட்டன் பிரியாணி' செய்யச் சொன்னா ‘ரிப்பன் பக்கோடா’வும் செய்து அசத்துவார்கள். -f YPfO0d4ys9oU5h2

‘நீதியா, மீதியா?’ என்ற நிகழ்ச்சியை நடத்தலாம்! ஒருபக்கம் கமல் மட்டும் உட்கார்ந்திருக்க, கழண்டுபோன மற்றவர்கள் எல்லாம் மறுபுறம் சொற்போர் நடத்தலாம்! - absivam1

? ஐ.பி.எல்லும் பாதியில் நின்னாச்சு. இந்த ஓய்வு நேரத்தில் எந்தெந்த ஐ.பி.எல் வீரர்கள் என்னென்ன டைம்பாஸ் செய்யலாம்?

ஹர்பஜன் சிங் மற்றொரு தமிழ்ப் படத்தில் நடிக்கலாம்! - அனிருத் சுதர்சன், மும்பை

டேவிட் வார்னர்: ரஜினி போல ஏற்கெனவே டிக்டாக் போடுவதால் ‘அண்ணாத்த’ படக்குழுவுடன் டிஸ்கஸ் பண்ணலாம். - சி. கார்த்திகேயன், சாத்தூர்

வாஷிங்டன் சுந்தர், சாவி அவர்களின் 'வாஷிங்டனில் திருமணம்' நாவலை, சக ஐபிஎல் வீரர்களின் உதவியுடன், ‘மேடை நாடகமாக' போடலாம்! - பாலு இளங்கோ, வேலூர்.

கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்டியாவும் விதவிதமான டாட்டூக்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தலாம். - PG911_t

ஷிகர் தவான் வீட்டில் யாரையாவது பந்து போடச் சொல்லி கேட்ச் பிடித்து தொடையைத் தட்டி மீசையை முறுக்கி தம்ஸ்அப் காட்டி விளையாடலாம். - balasubramni1

ஜடேஜா எல்லாருக்கும் சேர்த்து அவரே ஃபீல்டிங் பண்ணுற திறமை இருக்குறதனால, அவர வச்சு ‘தசாவதாரம்’ இரண்டாம் பாகம் எடுத்தா நல்லா இருக்கும். - Itz_MirageVj

ரியான் பராக் - தெரு ஃப்ரண்ட்ஸோடு கோலி, கில்லி விளையாடி பயிற்சி எடுத்துக்கிட்டா, கிரிக்கெட்லயும் அதே போல் வித்தியாசமாக பௌலிங் பேட்டிங் செய்து புகழ் பெறலாம். JaNeHANUSHKA3

ஓய்வு நேரத்தில் இருக்கும் இம்ரான் தாஹிர் அவர் ஊரையே தினமும் ஒரு ரவுண்டு சுற்றி டைம்பாஸ் செய்யலாம். chennappan10

வாசகர் மேடை: லாக்டௌன்@சொர்க்கலோகம்

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சினிமா, அரசியல் என்று பயணம் செய்திருக்கும் சீமான் சின்னத்திரைக்கு வந்தால் என்ன நிகழ்ச்சி செய்யலாம்?

? அந்தக் காலத்து ஹீரோயின்கள் நடிப்பில் உங்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் மூன்று விஷயங்களைச் சொல்லுங்கள்.

? ஃபேஸ்புக், ட்விட்டர் பதிவு எழுதவும் லாக்டௌன் வந்தால் எப்படி இருக்கும்?

? விஜய், அஜித் மேஜிக்மேனாக நடித்தால் படத்தில் என்ன மேஜிக் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

? மம்தா பானர்ஜியை சமாளிக்க மோடிக்குச் சில யோசனைகள் சொல்லுங்களேன்...

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com