சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: ராஜா பாதி... ரஹ்மான் மீதி!

ரஹ்மான்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஹ்மான்

ரஹ்மானையும் ஒரே ஒரு பேய்ப் படத்தில் பேய்க்கு பயப்படுகிற கேரக்டரில் நடிக்க வைத்திடுங்க...

? திரைக்கதை எழுதியுள்ள ரஹ்மான், படத்தில் நடிக்கவும் ஆரம்பித்தால் அவர் என்ன வேடங்களில் நடிக்கலாம்?

இந்த வயதில் அவர் கதாநாயகனாகவா நடிக்க முடியும். ஏதாவது இந்திப் படத்தில் கதாநாயகிக்கு அப்பாவா நடிக்கலாம். தமிழ்ப்படத்தில் கதாநாயகியின் அப்பா என்றால் அருவா மீசை வேணும்! - எஸ். மோகன், கோவில்பட்டி

கார்ப்பரேட் கம்பெனி ஓனராக நடிக்கலாம். அவ்வை. கே. சஞ்சீவிபாரதி, கோபி

‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாடல் வரும் ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தை ரீமேக் செய்து எம்.ஜி.ஆர் கெட் அப்பில் நடிக்கலாம். - Kirachand4

சச்சின் டெண்டுல்கரின் பாத்திரத்தில் நடிக்கலாம். குரலையும் இவரே தந்துவிடலாம்! -SeSenthilkumar

கிராமத்து ஹீரோவாக நடிக்கலாம்.. ‘ஈச்சி.. எலுமிச்சி...’ போன்ற பாடல்களுடன்! -Laviher3

ரஹ்மானையும் ஒரே ஒரு பேய்ப் படத்தில் பேய்க்கு பயப்படுகிற கேரக்டரில் நடிக்க வைத்திடுங்க... jerry

வடிவேலு மாதிரி காமெடி வேடத்தில்நடிக்கலாம். முகத்தை எவ்வளவு நாள்தான் உம்முனு வச்சுருக்குற மாதிரியே இருக்கிறது! MUBARAKAM12

இசைஞானி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கலாம். இசைஞானி காஸ்ட்யூமில் இவரை யோசித்துப் பாருங்களேன். பக்காவா இருப்பார். pachaiperumal23

ஹீரோயின் அப்பா ரோல். அதிகம் பேசாமல் கவனிக்கலாம். - எஸ். விஜி கண்ணதாசன், சென்னை

வாசகர் மேடை: ராஜா பாதி... ரஹ்மான் மீதி!

? ‘போட்டோ எடுக்கிறேன் பேர்வழி’ என உங்கள் நண்பர்கள் உங்களைப் படுத்தி எடுத்த ரகளை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

‘போட்டோ எடுக்கறேன் பேர்வழி’ன்னு என்னை முன்னாடி நிக்க வச்சுட்டு செல்ஃபியா எடுப்பானுங்க பய புள்ளைக. - கி.சரஸ்வதி, ஈரோடு

காலேஜ் பைனல் இயர். விரும்பும் பெண்ணை (அந்த நேரம் வரை லவ்வைச் சொல்லல) நான் முன்னால் நடக்க, என் பின்னால் அவள் வர்றப்ப ஜோடியாக வர்ற மாதிரி அவளுக்கே தெரியாமல் போட்டோ எடுத்துத் தரச் சொன்னேன், நண்பனிடம். ஒரு மாசம் ஆச்சு. ம்ஹும். கடைசியா லவ்வை ஓகே பண்ணிதான் ஒன்னா நின்னு போட்டோ எடுத்தேன். - saravankavi

+2 படிக்கும் போது எங்க வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்குப் பின்னால் இருக்கும் குளக்கரையில் படமெடுக்கக் கூடினோம். ஃப்ளாஷ் வரல ஃப்ளாஷ் வரலைன்னு ஒரே போஸை 10 முறைக்கு மேல் எடுத்தான் அதே குட்டியூண்டு கமலராசன். பகலில் ஃப்ளாஷ் தேவையில்லையாமே! SeSenthilkumar

பாப்பாவைப் பிறந்தநாள் கேக் முன்னாடி உட்காரவைத்து, மாறி மாறி போட்டோ எடுத்துட்டே இருந்தோம். வெகு நேரம் காத்திருந்து, பொறுமையிழந்து, அவளே கேக்கை வெட்டிவிட்டாள். RamuvelK

முதன்முறையாக வைரமுத்து அவர்களை நான் சந்தித்த தருணத்தைச் சிறப்பாக எடுக்குறேன்னு சொல்லி டிஜிட்டல் கேமராவில் எடுத்தபோது போட்டோவாக இல்லாமல் வீடியோவாக என் நண்பன் எடுத்தது... balasubramni1

நடிகர் சிம்பு எங்க ஊருக்கு ஷூட்டிங் வந்தாரு. என் நண்பன் கிட்ட ‘நான் சிம்பு பக்கத்துல போறேன், என்னய ஒரு போட்டோ எடு’ன்னு சொன்னேன். ‘சரி’ன்னு சொன்ன அவன், என்னய மட்டும் எடுத்து வச்சிருந்தான். Vasanth920

பிலிமை நாங்களே டெவலப் செய்கிறோம் பேர்வழி என்று முயன்று எடுத்த மொத்த போட்டோக்களையும் காலிபண்ணி, என்னோட திருமணத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் பண்ணுன நண்பர்களை இப்போ நினைத்தாலும் நன்றி சொல்லத் தோணும்! poonasimedhavi

அத்தனை நேரம் அம்பது ஆங்கிளில் விதவிதமாய் போஸ் கொடுத்திருந்தாலும், கண் மூடிய போட்டோவை மட்டும் கரெக்டா கழுவி எடுத்திருப்பான். - manipmp

ஆனந்த விகடன் அட்டையில் என் போட்டோ வர போட்டோ அனுப்பணும்னு என் நண்பனிடம் சொல்ல, ‘‘டேய், விகடன் நம்பர் ஒன் பத்திரிகைடா. போட்டோவும் நம்பர் ஒன்னா இருந்தாதான் போடுவாங்க’’ன்னு என்னை ரகளை செய்து எடுத்த போட்டோ விகடனில் வந்திருந்தது கண்டு என் பிறவிப் பயனை அடைந்தேன். - Kirachand4

தடுப்பூசி போட்டுக்கொண்டபோது, என் போனை நண்பனிடம் கொடுத்து போட்டோ எடுக்க வைத்தேன். வீடு திரும்பிப் பார்த்தால்... அந்தப் பாவி, என் இடது கை மேல் பகுதியை மட்டும் எடுத்திருக்கிறான். KrishnaratnamVC

இதுபோல் பாதிக்கப்பட்ட எவரோ ஒருவர்தான் ஜுனியர் விகடனில் ‘போட்டோ தாக்கு’ என்ற தலைப்பை வைத்திருக்க வேண்டும்! Arun_Ramadassan

ஒரு கூட்டத்துக்குத் தலைமை வகித்தேன்... எனக்கு முன் இருந்த மேசையில் வாழைப்பழம், ஊதுபத்தி வைத்திருந்தனர்.நான் சற்று கண்மூட, எடுத்த ‘கிளிக்', அதிர்வை உண்டாக்கி விட்டது. போட்டோவில் நான் கொரோனாவில் இறந்து சாத்தி வைத்ததுபோல இருந்தேன்! - ச.புகழேந்தி, தஞ்சாவூர்

? ஓடிடியில் ஒளிந்துகிடக்கும் பல மொக்கைப் படங்களைப் பார்த்துவிடாமல் இருக்க ஒரு ஜாலி ஐடியா சொல்லுங்கள்.

தற்போதைய சூழலில் ‘இது விவசாயம் பற்றிப் பேசும் தமிழ்ப் படமா’ என்று தெரிந்துகொண்டாலே தப்பித்துவிடலாம். -
Vasanth920


தூக்கம் வரும் நேரத்தில் படம் பார்க்கலாம். படம் நல்லா இருந்தால் தூக்கம் வராது. படம் கன்ட்டினியூ ஆகும். இல்லையேல் தூக்கம் கன்ட்டினியூ ஆகும். - balasubramni17

சூப்பர் படம்னு ட்விட்டர்ல போட்டுடணும், மறுநாள் சூப்பர்னு ஒரு குரூப் கிளம்பும். மொக்கைப் படம்னு கண்டுபுடிச்சிரலாம். - sundartsp2

படத்தோட 18வது நிமிஷத்துல இருந்து 25வது நிமிஷம் வரை பாருங்க. கதை என்னன்னே புரியலையா? படம் மொக்கைனு முடிவு செஞ்சிடலாம்! absivam

வயிறு முட்ட பொங்கல் சாப்பிட்டுட்டு ஓடிடி-யை ஓபன் பண்ணணும்... நல்ல படம்னா நாமே கவனிச்சுப் பார்ப்போம்... மொக்கைப் படம்னா பொங்கல் நம்மை கவனிச்சுக்கும்..! - LAKSHMANAN_KL3

ஆனந்த விகடன் OTT கார்னரில் 2 ஸ்டார் வாங்கின படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். - RamuvelK

? கொரோனாத் தடுப்புக்கு வித்தியாசமான விழிப்புணர்வு வாசகம் சொல்லுங்களேன்.

வைரஸை வைரலாகப் பரப்ப வேண்டாமே! - எம் விக்னேஷ், மதுரை

வாழ்க்கை நீட்டிக்க மாஸ்க்கை மாட்டிக்க. - வைரபாலா, மன்னார்குடி

தள்ளி இரு பங்காளி, கிட்ட வந்தா பிரச்னை. -கி.சரஸ்வதி, ஈரோடு

மாஸ்க் இன்றி மாஸ் ஏது? அன்புக்கரசி பாலசுப்பிரமணியன்

கூடி வந்(வாழ்ந்)தால் கோடி கொரோனா. - ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

அலையில் இருந்து மீளஅலையாது இரு..! - LAKSHMANAN_K6

மூக்குக்குக் கீழே முகக்கவசத்தை இறக்கவும் வேண்டாம்; கொரானா வந்து இறக்கவும் வேண்டாம்! - SeSenthilkumar

வாய்க்குப் போடு பூட்டு, இல்லையேல் உடலுக்குப் போட வேண்டி வரும் முழுப் பூட்டு... valarselvan

முகமூடியை மாட்டு... கொரோனாவை ஓட்டு... yuvarajas

கர்ணனே கவசத்தைக் கழற்றியதால் இறந்தான்! - SeSenthilkumar

வாசகர் மேடை: ராஜா பாதி... ரஹ்மான் மீதி!

? கமலின் ‘விக்ரம்’ ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இதுவரை போடாத ஒரு கெட்டப்பை இதில் அவர் போடலாம் என்றால் உங்களின் சாய்ஸ் என்ன கெட்டப்?

ஹெலன் கெல்லர். (கண் பார்வையற்ற, காது கேளாத, வாய் பேசமுடியாத தோற்றத்தில் வியக்க வைக்கலாம்) - தருண்

‘விக்ரம்' படத்தின் டைட்டிலுக்கேற்ப நடிகர் விக்ரமாக கெட்டப் மாற்றி கமல் நடிக்கலாம். விக்ரமே அசந்துபோவார். - ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்

ரஸ்ஸல் குரோவின் `கிளாடியேட்டர்' கெட்டப்..! - LAKSHMANAN_KL

பலசரக்குக்கடை அண்ணாச்சியாக நடிக்க வைக்கலாம். - jerry46327240

அமேசான் நிறுவனர் ஜெஃப்பாக, ஆளவந்தான் கெட்டப்பில் சிறிய மாற்றம் செய்தால் போதும். RamuvelK

ஜார்ஜ் புஷ் வேடத்தில் நடித்துவிட்டார். அடுத்து ஒபாமா/ டிரம்ப்/ ஜோ பைடன் கெட்டப்பில் நடிக்கலாம். balasubramni1

கைலாசா நாட்டு அதிபர் நித்தியானந்தா கெட்டப்பில் ஓவராகவே கலக்கு கலக்கலாம்.அவருக்கு வசதியான வசனங்களைப் பேசலாம். - ப.த.தங்கவேலு, பண்ருட்டி

மோடி கெட்டப்பைப் போடலாம். -SriRam_M_20

பரம்பரை சித்த வைத்தியர்களாக, வயதுவாரியாய் நான்கைந்து கெட்டப்களில் நடிக்கலாம். - sarathitup48

வாசகர் மேடை: ராஜா பாதி... ரஹ்மான் மீதி!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எல்.முருகன், குஷ்பு, ஹெச்.ராஜா ஆகியோரின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

 ஒரு ஹீரோவின் படத்தை ரீமேக் செய்து ஹீரோயின் நடிக்கலாம் என்றால் எந்த ஹீரோவின் படத்தை ரீமேக் செய்து எந்த ஹீரோயின் நடிக்கலாம்?

 அட, கமலும் சீமானும் ஒரு படம் சேர்ந்து நடிக்கலாமே. நாலுவரியில் கதையும் நச்சென்ற டைட்டிலும் சொல்லுங்கள்.

 இப்போது மோடிக்கு ஒரு திருக்குறளோ, பாரதியார், ஔவையார் பாடலோ சொல்லுங்களேன்!

 ‘இப்படியெல்லாமா ஊர்ப்பெருமை பேசுவாங்க’ என்று உங்களை வியக்கவைத்த சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்களேன்...

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com