சினிமா
தொடர்கள்
Published:Updated:

வாசகர் மேடை: மாத்துவோம்... டைட்டிலை மாத்துவோம்!

அன்பே சிவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே சிவம்

பத்து மணிக்கு மேல் ஆரம்பிக்கும் நாடகத்திற்கு எட்டு மணியில் இருந்தே ‘இன்னும் சற்று நேரத்தில் நாடகம் ஆரம்பிக்க இருப்பதால்’னு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்வது.

‘அன்பே சிவம்’ படத்தை ரீமேக் செய்தால் இப்போது யார் நடிக்கலாம்?

கமல் கேரக்டரில் சூர்யாவும், மாதவன் கேரக்டரில் ஜெயம் ரவியும் நடிக்கலாம்!

ப.சோமசுந்தரம்

நாசர் - தனுஷ்.

கே.ஆர்.அசோகன்

சிவகார்த்திகேயன் + விஜய்சேதுபதி இருவரும் சேர்ந்து நடித்தால் வெற்றி நிச்சயம்..!

கே. இந்து குமரப்பன்

சேலஞ்சிங்கான கமல் கேரக்டரை விக்ரமும், மாதவனின் நவநாகரிக இளைஞன் கேரக்டரை டொவினோ தாமஸும் செய்தால் அம்சமாக இருக்கும்..!

LAKSHMANAN_KL

கமல் கதாபாத்திரத்தில் சியான் விக்ரமும், மாதவன் கதாபாத்திரத்தில் மணிகண்டனும் நடித்தால் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும்!

sudarvizhie

கமலாக பகத் பாசில்;

மாதவனாக ஹரீஷ் கல்யாண்.

RaghurajanR

வாசகர் மேடை: மாத்துவோம்... டைட்டிலை மாத்துவோம்!

உள்ளூர்த் திருவிழாக்களில் உங்களுக்குச் சிரிப்பு மூட்டும் விஷயம் எது?

விசித்திர வாக்கியத்தோடு ஊருக்குள் முளைக்கும் பிரமாண்ட கட் அவுட்கள்.

அஹமத்

பத்து மணிக்கு மேல் ஆரம்பிக்கும் நாடகத்திற்கு எட்டு மணியில் இருந்தே ‘இன்னும் சற்று நேரத்தில் நாடகம் ஆரம்பிக்க இருப்பதால்’னு ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்வது.

பெ.பாலசுப்ரமணி

கோயிலில் ‘முதல் விபூதி’ யாருக்கு என்று, கோயில் கமிட்டிக் குழுவில் வரும் பிரச்னை..!

மணிமேகலை பாலு

திருவிழா தெருக்கூத்து நடைபெறும். கெட்டிக்காரன்(பபூன்)முதலாவதாக மேடையில் தோன்றுவார். அப்போது ஊர் இளசுகள், உயிருடன் தவளைகளைப் பிடித்து பேப்பரில் பல பொட்டலங்களாகக் கட்டி வெகு சிரத்தையுடன் மாலையாகக் கோத்து கெட்டிக்காரன் கழுத்தில் அணிவிப்பார்கள். அவரைப் பிரித்துப் பார்க்கச் சொல்வர். அவரும் அப்பாவியாகப் பிரிக்க... தவளைகள் குதித்து ஓட... அவர் அலற... மொத்தக் கூட்டமும் விழுந்து விழுந்து சிரிக்கும்.

S.பற்குணன்

லேட்டஸ்ட் குத்துப் பாடல்களாய்ப் போட்டு கும்மிக்கொண்டிருக்கும் ரேடியோ செட் அருகே குழுமும் பெருசுகளின் டார்ச்சரால் திடீரென்று எம்.ஜி.ஆரும், சிவாஜியும் பாட ஆரம்பிப்பார்கள். கடுப்பான கலரிங் விடலைகள் பாய்ந்து வருவார்கள். இரு தரப்புப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ‘ஊ சொல்றியா மாமா...’வுக்குப் பிறகு

எம்.ஜி.ஆர் ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ என்று பாடுவார்.

எம்.கலையரசி

மற்ற தினங்களில் யாராலும் கவனிக்கப்படாத ஊர்த் தலைமைப் பெரிசுகள் அன்று மட்டும் பட்டு வேட்டி அங்கவஸ்திரம் ஜரிகைத் தலைப் பாகையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பரிவட்டம் கட்டி விழாவைத் தொடக்கி வைக்கும் காட்சியில் சிரிப்பை அடக்க முடியாது.

க.சுந்தர்

எங்கள் கிராமத் திருவிழாவில் சேத்தாண்டி என்ற நேர்த்திக்கடனுக்கு குழந்தைகள் உடலில் சேற்றைப் பூசிக்கொண்டு தெருவெங்கும் உலா வருவார்கள். பெரியவர்களைப் பார்த்து குழந்தைகள் வெட்கப்பட்டு ஓட, நாங்கள் சிரிக்க என்று ஒரே ரகளையாக இருக்கும்.

என்.சாந்தினி

திருவிழா நடத்த நன்கொடை வேணும்னு வாங்கிட்டுப் போயி அரசாங்கத்திடம் தந்து விடுவார்கள். அட, அரசாங்கம்னா டாஸ்மாக்குங்க!

absivam

ஒலிபெருக்கியில் அறிவிப்பாளர், செந்தமிழில் பேசுவதாக நினைத்து, செய்வினையையும் செயப்பாட்டுவினையையும் கலந்து கட்டி அடிச்சு விடுவார். கேட்டால், சிரிப்பு அடக்க முடியாது.

KRavikumar39

அத்தை மகள் முளைப்பாரி எடுத்து, ஒற்றைக்கண்ணால் நம்மைக் கூட்டத்தில் தேடிப் பார்க்கும்போது மனதில் ஏற்படும் களிப்புடன் முகத்தில் உருவாகும் சிரிப்புக்கு ஈடு இணை ஏது!

krishram0001

ஜோசியத்தில் இது நடக்கும் எனக் கூறி இன்றுவரை உங்கள் வாழ்க்கையில் நடக்காத சம்பவம் எது?

தொடையில் மச்சமிருப்பதால் வெளிநாடு போகும் வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்கள். நடக்கவேயில்லை. இருந்தாலும் எனக்கொரு சந்தேகம். இமிக்ரேஷனில் இதெல்லாமா பார்ப்பார்கள்?

செல்லத்துரை

கண்டிப்பாக வேலை மாற்றம் கிடையாது என்று சொன்ன அடுத்த வாரமே எனக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்து ஏமாற்றத்தை அளித்தது.

மாலதி, மைசூரு

‘கார் வாங்குவீர்கள்’ என்று ஜோசியத்தில் சொன்னார்கள். இதுவரை நடக்கலை. பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பார்த்தால் இது நடக்காமல் இருப்பதே நல்லது எனத் தோன்றுகிறது.

எஸ்.ஏ.விஜயலக்ஷ்மி

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் வீட்டுக்கு வரும் ஜோதிடர், என் அம்மாவிடம் தவறாமல் கூறுவது, ‘இந்த வருடம் இந்தப் பெண்ணின் படிப்பு தட்டும் (வருடா வருடம் பெயிலாவேன்)’ என்று பி.ஏ. முடிக்கும்வரை கூறினார். ஆனால் இது பலிக்கவே இல்லை.

இந்திராணி தங்கவேல்

ராணுவத்திற்கான உடல்தகுதித் தேர்வில் தேர்வாகி, மருத்துவத் தேர்வுக்குச் செல்லும்போது பல் சொத்தை இருக்க, ஜோசியர் ஒரு மையைக் கொடுத்து ‘இதனை உடலில் ஒரு இடத்தில் தடவிச் சென்றால் பல் சொத்தை தெரியாது. நிச்சயமாகத் தேர்வு செய்யப்படுவாய்’ என்றார். மருத்துவத் தேர்வில் நான் தேர்வு பெறவே இல்லை.

வீ.வைகை சுரேஷ்.

அரசாங்க வேலை, அழகான மனைவி, அறிவான குழந்தைகள், அரண்மனை போல வீடு, ராஜ வாழ்க்கை... இதுல ஒன்னு நடக்கலைன்னா பரவாயில்லை, ஒன்னுகூட நடக்கலைன்னா எப்படி?

saravankavi

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குக் கெடா வெட்டுக்குப் போயிருந்தபோது, “தம்பி பெரிய அறிவாளி. இந்த உலகமே ஒருநாள் பாராட்டப்போகுது”ன்னு கைரேகையைப் பார்த்துச் சொன்னார். ஆனால் தினம் இப்ப பொண்டாட்டிகிட்ட திட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன்.

IamUzhavan

தம்பி அருமையா படிப்பாருன்னு ஒரு ஜோசியர் சொன்னார். அவரு என் தம்பியதான் சொல்லிருப்பாரு போல...

Saisudhar1

வாசகர் மேடை: மாத்துவோம்... டைட்டிலை மாத்துவோம்!

பழைய படங்களைப் பார்த்து பார்த்துப் பாராட்டும் ராமதாஸ், சினிமாவுக்கு வந்தால் எந்தப் படத்தில் நடிக்கலாம்?

‘தவமாய் தவமிருந்து’ படத்தில் ராஜ்கிரண் கேரக்டரில் நடிக்கலாம்.

கு.வைரச்சந்திரன்

பாட்டாளியின் வெற்றி

(இது 1960-ல் வெளிவந்த படம்)

ஆர். பிரசன்னா

‘முதல்வன்’ படத்தில் ரகுவரன் கேரக்டரில் முதல்வராக ராமதாஸும், அர்ஜுன் கேரக்டரில் ஒருநாள் முதல்வராக அன்புமணியும் நடிக்கலாம். (ராமதாஸுக்கு தானும் முதல்வர் ஆன மாதிரியும் ஆச்சு... அன்புமணியை முதல்வர் ஆக்கின மாதிரியும் ஆச்சு)

ராம்ஆதிநாராயணன்

பட்ஜெட் பத்மநாபன்...!(ஐயாவுக்கு ‘பட்ஜெட்’ என்றாலே தனி குஷிதான்..!)

பாலு இளங்கோ

‘வேதம் புதிது’ சத்யராஜ் கேரக்டரில் நடிக்கலாம். ‘நான் கரை ஏறிட்டேன், நீங்க எப்ப ஏறப் போறீங்க’ டயலாக்குக்குப் பொருத்தமா இருப்பாரு மனுஷன்.

RavikumarMGR

பழைய படங்களைப் பார்த்து பார்த்துப் பாராட்டும் ராமதாஸ், சினிமாவுக்கு வந்தால் எந்தப் படத்தில் நடிக்கலாம்?

‘தவமாய் தவமிருந்து’ படத்தில் ராஜ்கிரண் கேரக்டரில் நடிக்கலாம்.

கு.வைரச்சந்திரன்

பாட்டாளியின் வெற்றி

(இது 1960-ல் வெளிவந்த படம்)

ஆர். பிரசன்னா

‘முதல்வன்’ படத்தில் ரகுவரன் கேரக்டரில் முதல்வராக ராமதாஸும், அர்ஜுன் கேரக்டரில் ஒருநாள் முதல்வராக அன்புமணியும் நடிக்கலாம். (ராமதாஸுக்கு தானும் முதல்வர் ஆன மாதிரியும் ஆச்சு... அன்புமணியை முதல்வர் ஆக்கின மாதிரியும் ஆச்சு)

ராம்ஆதிநாராயணன்

பட்ஜெட் பத்மநாபன்...!(ஐயாவுக்கு ‘பட்ஜெட்’ என்றாலே தனி குஷிதான்..!)

பாலு இளங்கோ

‘வேதம் புதிது’ சத்யராஜ் கேரக்டரில் நடிக்கலாம். ‘நான் கரை ஏறிட்டேன், நீங்க எப்ப ஏறப் போறீங்க’ டயலாக்குக்குப் பொருத்தமா இருப்பாரு மனுஷன்.

RavikumarMGR

ஏற்கெனவே வெளியான ஒரு படத்தின் டைட்டிலை மாற்றலாம் என்றால் எந்தப் படத் தலைப்பை எப்படி மாற்றுவீர்கள்?

பாபா படத்து டைட்டிலை ‘பாவம்பா’ என்று மாற்றலாம். ஏன்னு எல்லோருக்கும் தெரியும்.

செந்(தில்)வேல்

‘முத்து எங்கள் சொத்து’ படத்தின் பெயரை ‘முத்து எங்கள் சொத்து இல்லை’ என்று மாற்றுவேன். (சொத்து வரிதான் கன்னாபின்னான்னு ஏறிடுச்சே.. எதுக்கு வம்பு...!)

ஆர். பத்மப்ரியா

‘காஷ்மீர் பைல்ஸ்’ படத் தலைப்பை ‘பா.ஜ.க பைல்ஸ்’ என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.

ஏ.கணேசன்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தோட டைட்டிலை ‘டைட்டில் எதுவும் கிடைக்கலை’ன்னு மாற்றுவேன்.

அஜித்

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை ஒரு காவல் நிலையத்தில் மட்டுமே வைத்துப் படமாக்கப்பட்டதால் ‘ஒத்த லொகேஷன்’ என்று தலைப்பை மாற்றலாம்.

ஈனோஸ் இப்ராஹீம்

படம் தொடங்கியது முதல் முடிவு வரை வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு... ஒரு இடத்திலும் தொய்வு இல்லாது படம் முழுக்க குதூகலம்... சுந்தர்.சி பின்னாடி தான் எடுத்த படத்துக்கு வைத்த ‘கலகலப்பு’ என்ற டைட்டிலை தன் முதல் படமான ‘உள்ளத்தை அள்ளித்தா’வுக்கு வைத்திருக்கலாம்.

யூனுஸ்

டி.ஆரின் வீராசாமி படத்திற்கு ‘அய்யோ ஆளைவிடுசாமி’ என்று பெயர் வைப்பேன்.

amuduarattai

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் தலைப்பை ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்று மாற்றுவேன்.

PG911_twitz

‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் தலைப்பை ‘ஜமீன் பங்களாவும், காண்ட்ராக்டர் நேசமணியும்’ அப்படின்னு மாற்றிடலாம்.

pasakkarapaiyan

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com

1. ‘இதுக்கெல்லாமா வீட்டில் சண்டை நடக்கும்?’ என்று நீங்கள் புலம்பும்படியான ஒரு சுவாரஸ்ய சம்பவம்..?

2. மோடியைப் புகழ்ந்த இளையராஜா, அதைப் பாட்டாகவே பாடினால் அந்தப் பாட்டு எப்படியிருக்கும்?

3. டப்பிங் படங்களின் ஆதிக்கத்தை முறியடிக்க நம் முன்னணி தமிழ் நடிகர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்கள்.

4. அண்ணாமலை - திருமாவளவன் விவாதம் நடந்தால் என்ன பேசுவார்கள்? நாலு வரிகளில் நறுக்குன்னு சொல்லுங்க...

5. சசிகலாவிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம் என்றால் என்ன கேட்பீர்கள்?

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!