
அஜித் ‘அவள் வருவாளா’ காலகட்டத்தில்.
? யாரையும் புண்படுத்தாமல் திரைப்படம் எடுப்பது எப்படி?
படம் இருட்டில் எடுக்கப்பட்டு யாரும் வசனம் பேசாத வகையில் இருக்கணும்.
eromuthu
அப்படின்னா ஹெச்.ராசாவைத்தான் இயக்குனரா போடணும். அவர்தான் யாரையும் திட்டி புண்படுத்தமாட்டார்.
pachaiperumal

புண்படுத்துவது போன்ற காட்சிகள் மனிதர்களைப் பண்படுத்தவே என்று டைட்டில் கார்டு போடலாம்.
syedbuhari.
சப்-டைட்டில்கூட போடாம யாருக்கும் புரியாத புதிரான புது மொழியில படம் எடுத்தா யார் மனதும் புண்படாது.
RamAathiNarayen
கமலின் ட்வீட்களை அப்படியே படமாக. யாருக்கும் படம் புரியவே புரியாது.
SriRam_M_
எல்லாரையும் எடிட்டிங் டேபிளுக்கே கூட்டிட்டுப் போய் எடிட் செய்தால் நல்ல படமாய் எடுக்கலாம்.
urs_venbaa
? ‘புன்னகை அரசி’, ‘புன்னகை இளவரசி’ என்று நடிகைகளுக்குத்தான் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். நடிகர்களில் ‘புன்னகை அரசன்’ பட்டத்தை யாருக்குக் கொடுக்கலாம்?

அந்தக்காலத்து வாகை சந்திரசேகர். ‘ரெண்டு கன்னம் சந்தனக்கிண்ணம்’ பாட்டைப் பாருங்க. அவ்வளவு வெள்ளந்தியான சிரிப்பு.
தீபா, சேலம்
அஜித் ‘அவள் வருவாளா’ காலகட்டத்தில்.
பா ஜெயக்குமார், வந்தவாசி
தெத்துப்பல் தெரிய, வசியச் சிரிப்பு சிரிக்கும் ‘மைக்’ மோகன்தான்.
என்.சாந்தினி, மதுரை
சிரிப்புக்கே சிரிக்கக் கற்றுக்கொடுத்த நாஞ்சில்மைந்தன் என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு பாடல் முழுவதும் விதவிதமா சிரிச்சு அசத்துவார் பாருங்க.
pachaiperumal23
பட்டிமன்றத்தைச் சிரிப்புக் கருத்துகளால் கலகலக்க வைக்கும் நடுவர் சாலமன் பாப்பையாவுக்கே புன்னகை அரசன் பட்டம்.
Kirachand1
கன்னத்தில் குழி விழும் சின்னத்தம்பி பிரபு.
Kirachand1
வி.கே.ராமசாமியின் புன்னகைகூட ஓகே.
nanbanvela
? எட்டு மாதங்களாக யாரும் செல்லாத மெரினா கடற்கரைக்குப் பேசும் சக்தி வந்தால் என்ன பேசும்?

இப்பொழுதுதான்
நான் காத்து வாங்குகிறேன்...
Elanthenral
என்ன மக்கா... நல்லாருக்கீங்களா..? வாய்யா வாய்யா வந்து கால் நனைச்சுட்டுப் போய்யா!
saikibrahim
இதுதான் தனிமையில இனிமை காண்கிறதா.அட அட, அடடா! மல்லாக்கப் படுத்து விட்டத்தை பார்க்கறதுகூட தனி சுகமாய்த்தான்யா இருக்கு!
ramkumar_vea
இனிமே யாராச்சும் இந்தப்பக்கம் தர்மயுத்தம்னு சட்டைப்பையில அவங்க தலைவர் படத்தோட வரட்டும். வாரிச்சுருட்டிக் கொண்டுபோயிடுறேன். என்னா நடிப்புடா சாமி?
pachaiperumal

நானும் Work from home-லதான் இருக்கேன்.
urs_venbaa
பீச் போட்டோஷூட் எடுங்க. ஆனா நீங்களே குப்பையைப் போட்டு, அதை நீங்களே எடுக்கிற மாதிரி மட்டும் போட்டோஷூட் எடுக்காதீங்க.
RamuvelK
‘ மீதி கேள்விகள் அடுத்த வாரம்...’
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்’ ரஜினியை உண்மையிலேயே ஆண்டவன் சந்தித்தால் என்னதான் சொல்வார்?
? பிரபாகரன் முதல் எஸ்.பி.பி வரை சீமான் சொல்லும் ‘கதைகளை’த் தொகுத்துப் புத்தகமாகப் போட்டால் என்ன டைட்டில் வைக்கலாம்?
? ஒருவேளை தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்து குஷ்பு முதல்வர், ஹெச்.ராஜா துணைமுதல்வர் என்றால் எப்படி இருக்கும்?
? உங்களால் மறக்க முடியாத ஒரு தீபாவளி சம்பவத்தை மிகச்சுருக்கமாகச் சொல்லுங்கள்
? அண்ணா வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கினால் அண்ணாவாக யாரை நடிக்க வைக்கலாம்?
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com