
ஷெர்னி - சவால்களைச் சந்திக்கும் பெண் வனத்துறை அதிகாரி வித்யா பாலன் பாத்திரத்திற்கு நயன்தாரா.
ஃபேஸ்புக் நிறுவனம் ‘மெட்டா’ என்று பெயர் மாற்றியதைப்போல் வாட்ஸ் அப்புக்குத் தமிழில் பெயர் சூட்டலாம் என்றால் என்ன பெயர் வைக்கலாம்?
வடிவேலுவின் மதுரைத் தமிழ் ஸ்டைலில் ‘என்னாப்பூ?’
absivam
‘திண்ணை’ன்னு வைக்கலாம். அந்தக் காலத்துத் திண்ணைதானே இந்தக் காலத்து வாட்ஸ்ஆப்பு?!
bommaiya
விட்டா ஆளையே கிறுக்கனாக்கிடுவாங்க என்பதைக் குறிக்கும் வகையில் ‘விட்டா’ என்று பெயர் சூட்டலாம்!
ranjanikovai
பெரும்பாலான நம் நேரத்தை விழுங்குவதால்... ‘நேரந்திண்ணி’ன்னு வைக்கலாம்..!
LAKSHMANAN_KL
‘மெசேஜ்’ தட்டிக்கொண்டே இருப்பதால், ‘தட்டா.’
kayathaisathya
வாட்ஸ் அப்புக்குத் தமிழ்ல ‘என்னா இப்ப’ன்னு வச்சா செமயா இருக்கும்ல!
கி.சரஸ்வதி, ஈரோடு.

இன்னும் தமிழில் ரீமேக் செய்யப்படாத ஒரு மலையாள/இந்திப் படத்தைச் சொல்லுங்கள். அதில் நடிக்கப் பொருத்தமானவர்கள் யார்?
ஷெர்னி - சவால்களைச் சந்திக்கும் பெண் வனத்துறை அதிகாரி வித்யா பாலன் பாத்திரத்திற்கு நயன்தாரா.
விஜயலக்ஷ்மி, மதுரை
தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே // சூர்யா - சாய்பல்லவி.
அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்
‘பட்லா’ இந்திப்படம்... அமிதாப் பச்சன் செய்த ரோலை, ரஜினி செய்தால் செம பொருத்தமாக இருக்கும்..!
YavanaI
‘Dear Zindagi’ இந்திப்படம். ஷாருக் கான் கேரக்டரில் விக்ரமும், அலியா பட் கேரக்டரில் கீர்த்தி சுரேஷும் நடித்தால் பொருத்தமாக இருக்கும்..!
LAKSHMANAN_KL
Kumbalangi Nights ரீமேக் பண்ணலாம். தனுஷ், பாபி சிம்ஹா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி.
Bharath
‘ஷோலே’ ரீமேக்கில் கார்த்தி, ஜெயம் ரவி நடிக்கலாம்.
pachaiperumal23
‘டங்கல்’ படத்தின் ரீமேக்கில் அமீர்கானாக விக்ரம், அவரின் மகள்களாக ரித்திகா சிங் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கலாம்.
SriRam_M_20
லகான் - ஆர்யா.
R.அருண்குமார், கும்பகோணம்.
தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய ‘செம்மீன்’ மலையாளப் படம். விஜய்சேதுபதி ஹீரோவாகவும், ராதிகா ஆப்தே ஹீரோயினாகவும் நடித்தால் பொருத்தமாக இருக்கும்.
இந்திராணி தங்கவேல், சென்னை.
‘எது எதையோ கண்டு பிடிக்கிறீங்க. இதுக்கு ஒரு கருவி கண்டுபிடிங்க’ என்று நீங்கள் ஆசைப்பட்டு ஆதங்கப்படும் விஷயம் என்ன?
கைக்குழந்தை எதற்காக அழுகிறது என்பதைக் கண்டறியும் கருவியை தகப்பன் களுக்காகக் கண்டுபிடித்துத் தரலாம்!
சிவம், திருச்சி.
ஒவ்வொரு முறை மசூதிக்கு தொழுகைக்குப் போய் விட்டு வரும் போதும் செருப்பை எங்கே கழற்றிப் போட்டோம் என்று தேடுவதற்குள் மண்டை காய்ந்துவிடுகிறது. அதை எளிதில் தேடிக் கண்டுபிடிக்க ஒரு கருவி.
எ.முகமது ஹுமாயூன்,
நாகர்கோவில்.
கொரோனாவுக்கே மருந்து கண்டுபிடிச்ச பயபுள்ளைங்க இந்தக் கொறட்டையை நிறுத்துறதுக்கு மருந்து கண்டுபிடிக்கலையேன்னு தான் ஆதங்கமா இருக்கு.
ப. ராஜகோபால்,
மன்னார்குடி.
சீமான் சொல்லும் கதைகளில் எது உண்மை என்பதைக் கண்டறியும் கருவி.
Ko Rajasekar
குக்கர் விசில் சத்தத்திற்கு மாற்றாக ஒன்று முதல் பத்து வரை சொல்லும் ஒரு கருவி கண்டுபிடிங்க. நான் ஆசைப்படும் ஆதங்க விஷயம்.
வானதி ஜவஹர்,
பேளம்பட்டி
கடன் வாங்கிய நண்பர்கள் மனசைக் கண்டறிய உதவும் கருவி. கடனைத் திருப்பித் தரவே கூடாதுன்னு முடிவுல இருந்தா செருப்பையாவது தேயாமல் காப்பாத்திக்கலாம்.
SowThanishka
ஒருவரின் தாடியை ஸ்கேன் செய்தால் அவர் தாடியை வளர்ப்பது ‘நாட்டுக்காகவா’, இல்லை ‘வீட்டுக்காகவா’ன்னு கண்டறியும் கருவி.
balasubramni1
இந்தக் கலர் புடவை நம்மிடம் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ள ஒரு கருவி.
urs_venbaa
கரண்ட் பில்லை லைவ்வாக ஆன்லைனில் காட்டும் கருவி. அதைப் பார்த்துக்கொண்டே, லைட், ஃபேன் போன்றவற்றை தேவைக்கேற்ப இயக்கலாம்.
KRavikumar39
திருகாணி கழண்டு விழுந்தால் எளிதில் கண்டறியும் கருவி. டிடக்டிவ் மாதிரி தேட வேண்டியிருக்கு..
urs_venbaa
விகடனார் வாசகர் மேடை கேள்விகளுக்கு என்ன பதில் எதிர்பார்க்கிறார் என்று கண்டு பிடித்துச்சொல்லும் கருவி.
Kirachand4
சென்னை ரோடுகளில் எங்கெங்கு பள்ளம் உள்ளது என்பதைக் கண்டறியும் கருவி.
UDAYAKU
MARKR202
அம்மா உணவகம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் ஸ்டாலின், உதயநிதி பெயர்களை எந்தத் திட்டத்துக்கு வைக்கலாம்?
தினம் தினம் சளைக்காமல் சென்னையின் வெள்ள பாதிப்புப் பகுதிகளுக்கு விசிட் அடித்துவரும் முதல்வர் ஸ்டாலின், சீக்கிரமே தமிழகம் முழுவதும் வெள்ள வடிகாலுக்கு நிரந்தரத் தீர்வு தரும் திட்டம் தீட்டி, ‘ ஸ்டாலின் வெள்ள வடிகால் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்!
mohan.moorthy
‘ஸ்டாலின் சுயம்வர திட்டம்’னு ஒண்ணு ஆரம்பித்து அரசே என்னைப் போன்ற 90s கிட்ஸ்களுக்குத் திருமணம் செய்து வைக்கலாம்.
balasubramni1
உதய் உஷார் திட்டம்: வீட்டுக்கு ஒரு சிசிடிவி வழங்கும் திட்டம்!
LAKSHMANAN_KL
உதயநிதி பேரன்கள் பென்ஷன் திட்டம். முதியோருக்கு வழங்கப்படு வதைப் போலவே பேரன்களுக்கும் பென்ஷன்.
sarathitup4
தமிழர்கள் பிரியாணிப் பிரியர்கள் என்பதால் குறைந்த விலையில் நிறைந்த சுவையில் ‘தளபதி பிரியாணி’ என்ற பெயரில் வழங்கலாம்.
ப. சீனிவாசன், கோடிக்கரை.
உதயநிதி செங்கல் சூளை திட்டம்.
அ.வேளாங்கண்ணி,
சோளிங்கர்.
உதயநிதி உரத் திட்டம் (கட்சிக்கு உரமாக இருப்பதால்!)
பாஸ்கர், தஞ்சாவூர்.

‘நாங்கெல்லாம் அந்தக் காலத்துல’ என்கிற தற்பெருமைக் கதைகளில் நீங்கள் கேட்ட குபீர் கதை எது?
“நாங்கெல்லாம் அந்தக் காலத்துல கட்சி உறுப்பினர்னு சொன்னாலே போதும். அவ்வளவு மரியாதை. சீட்டும் ஓட்டும் தேடி வரும்...’’ என்று வயதான காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் சொன்னது.
saravankavi
எங்க அப்பத்தா அந்தக் காலத்துலே 100 பவுன் நகையோட கல்யாணம் செஞ்சு வந்ததா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. சரி, அந்த நகையெல்லாம் எங்கேன்னு கேட்டேன். அதுலதாண்டா இந்தக் குடிசையும், காடும் வாங்கினோம்னு சொன்னாங்க! பிஞ்சுபோன குடிசைக்குள்ள கல்யாணத்தை நடத்திட்டு கணக்குக் காட்ற!
absivam
தீபாவளிக்கு நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் தியேட்டரில் படம் பார்க்க நடந்தே போய்ட்டு வருவேன்னு சொன்ன கதை...
urs_venbaa
‘நானெல்லாம் அந்தக் காலத்தில் ஒரு அணா எடுத்துட்டுப் போனா... ஒரு மாசத்துக்கு வீட்டுக்குத் தேவையான பொருள்களை எல்லாம் வாங்கிட்டு, காலணா மிச்சம் கொண்டு வருவேன்..!’
LAKSHMANAN_KL
அம்மா வழி உறவினர் ஒருவர் ‘நான் அந்தக் காலத்துல திருப்பதிக்கு நடந்தே போயிருக்கேன்’ என்பார். பல வருடங்கள் கழித்து ஏதோ பேச்சு வரும் போது, ‘இத்தனை வயசாகியும் இதுவரை திருப்பதிக்குப் போனதே யில்லை’ என்று உளறிவிட்டார்.
RavikumarMGR
அந்தக் காலத்திலேயே கலைஞர் பாக்கெட்ல இருந்து பேனாவை எடுத்து எழுதும் அளவிற்குப் பழகியிருந்தேன்னு சீமான் சொன்னதைக் கேட்ட போது...
h_umarfarook
ஓட்டப்பந்தயத்தில் ஒரு எட்டு கோட்டுக்கு அந்தப்பக்கம் வச்சிருந்தா இந்நேரம் போலீஸ் எஸ்.ஐ ஆகியிருப்பேன்.
manipmp
கமல் சொல்லும் ‘எம்ஜிஆர் மடியில் தவழ்ந்த கதை’ எல்லாம் தற்பெருமை பேசும் குபீர் கதைதானே?
JEYANTHYKIRA17
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
1. திடீரென்று உங்களுக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால் முதலில் என்ன செய்வீர்கள்?
2. ஒரு கமல் படத்தை ரஜினி நடித்தால் நல்லாருக்குமே என்றால், என்ன படம்?
3. மழை பெய்தால் ஆளாளுக்கு மழைக்கவிதை எழுதுகிறார்கள். எங்கே, வெயிலைப் பத்தி ஒரு கவிதை எழுதுங்க பார்ப்போம்!
4. ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் `நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட என்ன செய்யலாம்?
5. ‘நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்’ என்பதற்கு உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம், சுருக்கமாகச் சொல்லுங்கள்...
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.
இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com