சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை - அன்‘பேய்’ சிவம்!

கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்ஹாசன்

பேய் இல்லன்னு யாருங்க சொன்னா... இருந்தா நல்லா இருக்கும்னுதாங்க சொல்றோம்.

? கமல்ஹாசன் ஒரு பேய்ப்படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

* பேயைப்போல் ஒருவன்

absivam

* பேய் இல்லன்னு யாருங்க சொன்னா... இருந்தா நல்லா இருக்கும்னுதாங்க சொல்றோம்.

_ perfect_idiot

* மர்ம பீதி மய்யம்

RamAathiNarayen

* அன்`பேய்’ சிவம்!

KLAKSHM14184257

* சாதிலீலாவதி! (சாதிதான் பேய் என்று சொல்லும் நகைச்சுவைத் திரைப்படம்)

SeSenthilkumar

* கடைசில என்னையும் பேய்ப் படம் எடுக்க வச்சிட்டிங்களேடா…

SowThanishka

* அந்த 100நாள்கள் (பிக் பாஸ் வீட்டில் பேய்)

Raj11357122

* பஞ்ச பூதம் (ஆண்டவருக்கு அஞ்சு கெட்டப்)

sarathitup4

* பேய் தூஜே கே கேலியே

pachaiperumal23

* அசரீரி ராகங்கள்

KrishnaratnamVC

* பேய்பாஸ் 1,2,3 என டைட்டில் வைக்கலாம்

பா.ரேஷ்மா திருவண்ணாமலை

* ஆவிசண்முகி

ஆர்.அஜிதா கம்பம்

வாசகர் மேடை - அன்‘பேய்’ சிவம்!

? பேய்ப்படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

* பேய்தான்.

RomanticRaj

சத்தம் வருதுன்னு தெரிஞ்சும் மூடினு படுக்காம அதப் போயி நோண்டி ஏத்து வாங்கினு வர்றது.

sreenathbaLa

* பயத்தைக் காட்ட நெனச்சா அதை மட்டுமே காட்டணும். தேவையில்லாத comedy add பண்ணிக் கடுப்பேத்துறது புடிக்காது.

SakthiKVignesh

* பேய் தன்னோட பிளாஷ்பேக்க சொன்னதுமே பேயிடம் இருந்த கெத்து காணாமப் போயிடும்.

Elanthenral

* பேய்னாலே ஒரு பெரிய பங்களாவைக் காட்டறது... ஏன், பேய் சிறிய வீடுகளில் இருக்காதா?

RamAathiNarayen

* பார்ட் 1, 2, 3 என அடுத்தடுத்து எடுத்து அந்தப் பேய்க்கான மதிப்பையே குறைப்பது.

IamUzhavan

* ரஜினி, விஜய் படங்கள் மாதிரி பேய்ப் படம் ரிலீஸ் ஆனா, குழந்தைகள் கூட்டிட்டுப் போகச் சொல்லுதுங்க. அந்த அளவுக்கு அல்லு விட்டுப் போச்சு.

parveenyunus

? கட்சியில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் பதவி கொடுப்பதற்காக பா.ஜ.க-வில் கல்வியாளர்கள் அணி, அறிவுஜீவிகள் அணி என்றெல்லாம் புதுசு புதுசாக அணிகளைத் தொடங்குகிறார்கள். வேறு என்னென்ன அணிகளை உருவாக்கலாம் என்று பா.ஜ.க-வுக்கு ஐடியாக்கள் சொல்லுங்களேன்.

* நோட்டாவுக்கு எதிராக வாக்கு சேகரிக்கும் ‘நோட்டாவுக்கு டாட்டா அணி’ என்று ஒன்றை ஆரம்பிக்கலாம்!

absivam

* அடிதடி வீரர்கள் அணி

மகிழி M.நிஹ்மத் அலி, அடியக்கமங்கலம்

* பிரியாணி மாஸ்டர் அணி உருவாக்கினா பிரியாணிக்காக சண்டை போட தேவையில்லை.

weknowth827

* “கடுப்பேத்துறார் மை லார்ட் அணி”

ManivannanVija2

* மொழி பெயர்ப்பு அணி (வட இந்தியத் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்யும்போது அதற்கு மொழிபெயர்க்கும் சாக்கில் புதிய அருஞ்சொற்களைத் தமிழ் மொழிக்கு அறிமுகப்படுத்தும் அணி)

NedumaranJ

* தமிழ்நாட்டுல மொத்தக் கட்சியே ஒரு அணி லெவெல்லதான் இருக்கு. அணிக்குள்ள அணி பிரிக்க ஐடியாவா..? அட போங்க சார்.

. poonasimedhavi

வாசகர் மேடை - அன்‘பேய்’ சிவம்!

* வாயால் வடை சுடும் அணி ஏற்கெனவே இருக்கிறது. அதனால் வாயால் போண்டா சுடும் அணி, சமோசா சுடும் அணி, பானிபூரி அணி என்று அறிமுகப்படுத்தலாம்.

Ntramesh_kpm

* அசிங்கப்பட்டோர் அணி (வாயை வச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி, பின் அதற்கு மன்னிப்பு கேட்டு அசிங்கப்பட்டுக்கொள்வோர் அணி!)

JaNeHANUSHKA

* மற்ற கட்சிகளிலிருந்து அதிருப்தியாளர்களை பா.ஜ.க-வுக்கு இழுப்பதற்காகவே “இங்க வாங்க வாங்க’’ என ஓர் அணி இருப்பது ரொம்ப முக்கியம்.

VaithianathanS3

? வேலையே தெரியாத ஒருவர் வேலை தெரிவதைப்போல நடிக்கும்போது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

* ஒருநாள் மாட்டாமலா போவான்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் அந்த ஒருநாள் வருவதற்குள் டீம் லீடராவே ஆயிருவான்போல.

IamUzhavan

* நம்மள விட இவன் நல்லா நடிக்கறானே...

RahimGazzali

* என்னடா கை அசையுது, கால் அசையுது, மூக்கு அசையுது, முழி அசையுது, உடம்பு மட்டும் பசை போட்ட மாதிரி உறஞ்சு நிக்குது?

ச.பிரபு சென்னை

* இவனுக்கு இதே ‘வேலையா’ போச்சு.

வி.ஜெய்கணேஷ், எர்ணாகுளம்.

* வக்கத்தபய வானத்தைப் பார்த்தானாம், வாயால வடை சுட்டு வர்த்தகம் பண்ணினானாம்!

rajasingh.jeyakumar.

* பேசாம இவன் ‘வேலை தெரியாது போடா’ன்னு எழுதின டிஷர்ட்டை மாட்டிக்கலாம்

Adhirai Yusuf

* சிவாஜியையும், கமலையும் மிக்ஸ் பண்ணி நடிக்கிறியேடா...யார்ரா நீ?

RamAathiNarayen

* நான் முதற்கொண்டு எல்லோரும் இப்படி இருந்தால், `அப்போ அந்த வேலையெல்லாம் உண்மையிலேயே செய்யுறது யாரு?’ன்னு தோணும்.

ravikumar.krishnasamy

? பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களைப் பார்த்தால் என்ன தோன்றும்?

* அது நம்மளை நோக்கி வருது. எல்லாரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க.

எம். விக்னேஷ், மதுரை

* கொரோனா மாமா.. நீ எங்கயிருக்க..... (ஆமா.. அதே ரிங்டோன்)

அ.வேளாங்கண்ணி, வேலூர்

* பயபுள்ளக்கு கொரோனா வந்துட்டுப் போயிருக்குமோ!

Dr.செல்வகணேஷ், தென்காசி

* அட கொரோனாவே!

ThangababuK

* மாஸ்க் போடாதவங்க செல்போனை ஒரு நாளைக்கு அவங்ககிட்ட இருந்து புடிங்கி வைக்கிற தண்டனை கொடுக்கணும், அப்பதான் மாஸ்க் போடுவாங்க.

SriRam_M_20

* மாஸ்க் போடாம மாஸ் காட்டுததா நினைக்கிறாங்களாக்கும். நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்

வேலம்மாள் முத்துக்குமார் பணகுடி

* அவங்க ஏரியால கொரோனா இல்லைன்னு தோணும்.

AsalManiklp

* எப்ப இருமுவாங்களோன்னு பயமா இருக்கும்!

San8416

வாசகர் மேடை - அன்‘பேய்’ சிவம்!
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? சசிகலா முதல்வர். பன்னீர்செல்வமும் பழனிசாமியும் துணைமுதல்வர்கள் என்றால் என்ன நடக்கும்?

? இந்த ஐபிஎல் தொடரில் உங்களைக் கடுப்பேற்றும் விஷயம் எது?

? டென்ட் கொட்டாய், ஷாப்பிங் மால் தியேட்டர், ஓ.டி.டி - வித்தியாசங்களைக் கவிதையா சொல்லுங்க பார்ப்போம்!

? இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸப், மெசேஞ்சர் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டு ‘இனி கடிதம்தான் எழுதவேண்டும்’ என்றால் என்ன செய்வீர்கள்?

? உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் ஒன்லைன் சொல்லுங்க.

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com