கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

மோடியும் ராகுலும் இணைந்து நடிக்கும் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம் என விகடன் வாசகர் மேடையில் கேள்வி கேட்கப்படும்.

? தலைவர் இல்லாத காங்கிரஸுக்கு மோடி தலைவரானால் எப்படி இருக்கும்?

காந்திஜிக்கும், நேருஜிக்கும் பிரமாண்டமாகக் கோயில்கள் கட்டுவார் மோடிஜி!

ராம் ஆதிநாராயணன், தஞ்சாவூர்

அப்பவும்... ஊடகங்கள் முன் வாயை மூடித்தான் பேசுவார்..!

laks veni

காங் கீ பாத் நிகழ்ச்சி நடத்துவார்.

ஜீனத் யூசுப், அதிராம்பட்டினம்

ஒவ்வொருவருக்கும் 15,00,000 ரூபாய் தருவது சாத்தியம் என்று ப.சிதம்பரம் பேட்டி கொடுப்பார்.

அனந்தகிருஷ்ணன், சென்னை

வாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி!

ராகுல் காந்தியும் மோடியும் இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் இருந்து காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவார்கள் என்று கே.எஸ்.அழகிரி பேட்டி கொடுப்பார்.

balasubramni1

எனது கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்ற மோடிக்கு வாழ்த்துகள்.

- டாக்டர் ராமதாஸ்

தைலாபுரம்

விழுப்புரம் மாவட்டம்

தமிழ்நாடு

pachaiperumal23

மோடியும் ராகுலும் இணைந்து நடிக்கும் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம் என விகடன் வாசகர் மேடையில் கேள்வி கேட்கப்படும்.

Afrose9500

? பிரியாணி பற்றி நாலு வரியில் நறுக் கவிதை சொல்லுங்க, பார்ப்போம்!

“காணி நிலம் கொடு என்றான் பாரதி...

பிரியாணியும் சேர்த்துக் கொடு என்று சொன்னான் கட்சித் தொண்டன்!”

விஜய் சொர்ணமுத்து

“கிராமத்துக் கறி விருந்திலும் நகரத்து நாகரிக விருந்திலும் தவறாமல் இடம் பிடிக்கும்...

அனைத்துத் தரப்பு மனிதரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் அதிசயம்...

பிரியாணி!”

ஜானகி, கோட்டையூர்

“சாதி பேதமின்றி ரம்ஜான் பக்ரீத் காலங்களில் எல்லோரையும் ‘பாய்’ பிரெண்ட் தேட வைக்கும் அதியற்புத அமுதம்...”

ஜலாலுதீன், தாராபுரம்

“பிரியமானவர்களின்

மீதான மொத்தப் பிரியத்தையும் உன் பக்கம்

இழுத்துக்கொண்டதால்

பிரியாணி ஆனாயோ”

star_nakshatra

“பிரியாணி

எனும் போதினிலே

தேன் வந்து

பாயுது நாவினிலே!”

RamAathiNarayen

“முழுப்பூசணிக்காயை மறைக்க முடியாத சோற்றில்,

சிக்கன் பீஸை மறைத்து வைப்பதே பிரியாணி.”

SriRam_M_20

“அந்தக்கடை இந்தக்கடை

என்பார் இதுவரை

திண்டுக்கல் பிரியாணி

ருசியறியாதோர்.”

pachaiperumal23

“பிரியாணியை அறிந்திருக்கவில்லை

அந்த நாள்களில்.

அறிந்திருந்தால் முனிவர் தவம் கலைக்க

மேனகா, ரம்பா, ஊர்வசி எல்லாம் எதற்கு?”

elbensia

“ஒரு மணியடித்தால்

கண்ணே உன் ஞாபகம்

உண்ணா விரதத்தில்

வேண்டும் உன் தரிசனம்!”

balebalu

? சீமான் இப்போது படம் இயக்கினால் என்ன டைட்டில் வைப்பார்?

ஆஸ்திரேலிய கிளி பேச்சு கேட்கவா

எம்.விக்னேஷ், மதுரை

வாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி!

வாய்ப்பில்லை ராஜா

krishmaggi

தமிழ் DNA

IamUzhavan

ஊஹானில் புஹாஹா

h_umarfarook

கதை சொல்லும் அண்ணனும், கைதட்டும் தம்பிகளும்

RahimGazzali

தம்பி 2

ARiyasahmed

? அக்டோபரில் பள்ளிகள், நவம்பரில் கல்லூரிகள் திறப்பு - உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

“என்னமோ போடா சீனா...”

சாமந்தி, வேலூர்

‘ஸ்கூல்/காலேஜ் வர மாட்டேன், சார்!’ என்று டி-ஷர்ட் போடத் தோன்றுகிறது.

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

“கதவைத் திற...

கொரோனா வரட்டும்”

க .சுபஸ்ரீ, உடுமலை

“இனி லீவுக்கு மழையைத்தான் நம்பணும் வேறென்ன பண்ணுறது.”

பா ஜெயக்குமார், வந்தவாசி

“செங்கோட்டையனுக்குத் தோன்றாததா நமக்குத் தோணப் போவுது?”

பா து பிரகாஷ், தஞ்சாவூர்

“பள்ளி மிஸ்களை மிஸ் செய்யப்போகிறோம் என்னும் பீலிங்தான்...

அதையேன் தம்பி கேக்குறீங்க?!”

tparaval

“போங்கய்யா போயி பிள்ளைகளை ஆன்லைனில் படிக்க வைங்க.” (கமல் பாணியில் படிக்கவும்)

pachaiperumal23

“யூனிபார்முக்கு மேட்ச்சா மாசத்துக்கு 2 செட் மாஸ்க்னு மொத்தமா 25மாஸ்க் ஜஸ்ட் ரூ12,500ல நாங்களே தரோம்னு சொல்வானுகளே... அத நினைச்சாத்தான் பக்குனு இருக்கு!”

pbukrish

? உங்கள் ஊர்த்திருவிழாவில் நடந்த ஜாலியான சம்பவம் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்...

சாமி பார்க்கத் திருவிழாவிற்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு சாமியைத் தவிர எல்லாவற்றையும் பார்ப்பதே அலாதி ஜாலிதான்.

எம். விக்னேஷ், மதுரை

அன்னதானத்துக்கு அடிதடி போடுவது.அன்றைக்கு சாப்பாடு வாங்குவது இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வாங்குவதுபோல் பெருமையானது.

urs_venbaa

மஞ்சள் நீராட்டு விழா அன்னைக்குத்தான் மாப்பிள்ளை வீடு பார்க்க வந்திருந்தாங்க. அமைதியா வீட்டை விட்டு வெளியே வராம இருந்தேன். பொண்ணு வந்திருக்குன்னு ஒரு குரலை நம்பி வெளியே போய் பத்து, பதினைஞ்சு பேர் வளைச்சு தண்ணி ஊத்தவும் மாமனார் காரிலிருந்து இறங்கவும் சரியாக இருந்தது.

HariprabuGuru

கோயில் திருவிழாவில் சாமிவந்து ஆடுவது வழக்கம். பொதுவாக ஒருவர் சாமியாடுவார். அவர் இறந்ததால் இந்த வருடம் அவர் மகன்.இவரோ சிறு பிள்ளை. பல நேரத்தில் சாமி வந்ததுபோல ஆடாமல் சிரித்துக்கொண்டிருக்க ஊரே சிரித்தது அதைப் பார்த்து. எல்லோருக்குமே தெரியும் அதுபொய் என்று இருந்தாலும் வழக்கமாம்.

GumbalaS

பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பொதுத் தேர்வில் ‘குனித்த புருவம்’ மனப்பாடப்பகுதி கேட்டிருக்க, தூரத்தில் எங்கள் ஊர் திருவிழாவில் ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடல் கேட்க, நாங்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

Aruns212

பத்து ரூபாய்க்கு மூணு வளையம் வீசி பார்லே ஜி பிஸ்கட் ஜெயிச்சது.

manipmp

சின்ன வயசுல மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு, கரும்புள்ளி வெள்ளைப்புள்ளி குத்தி, இடுப்புல வேப்பிலை செருகி, காணிக்கை வாங்கப்போனபோது, ஒரு நாய் துரத்தி, தெருத்தெருவா என்னை ஓட விட்டது.

RamuvelK

கலர் கலராய் கூலிங் கிளாஸ் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொண்டு இதயக்கனி எம்.ஜி.ஆர் போல வலம் வந்தது.

balakrishnan.k

ங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

வாசகர் மேடை: கதை சொல்லும் அண்ணன்... கைதட்டும் தம்பி!

? எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக அறிவித்தபோது டி.டி.வி.தினகரனின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருந்திருக்கும்?

? எந்த முன்னாள் கிரிக்கெட் வீரர், இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம், ஏன்?

? விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், துருவ் விக்ரம் என்று வாரிசு நடிகர்கள் இணைந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? பிக்பாஸ் வீட்டுக்குப் புதிதாக ஒரு ரூல் போடலாம் என்றால் நீங்கள் என்ன விதியைச் சொல்வீர்கள்?

? இந்தியாவில் யாருக்காவது நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் யாருக்குக் கொடுக்கலாம், ஏன்?

உங்கள் பதில்களை

அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை,

ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை,

சென்னை 600 002.

இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com