சினிமா
பேட்டிகள்
Published:Updated:

வாசகர் மேடை: ஜேம்ஸ்பாலா 007

ஜேம்ஸ்பாலா 007
பிரீமியம் ஸ்டோரி
News
ஜேம்ஸ்பாலா 007

எதற்கெடுத்தாலும் மழுப்பலாகவே பதில் கூறும் என் பாட்டியை ‘மழுப்பி’ன்னு பலபேர் கூப்பிடக் கேட்டிருக்கிறேன்.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது தமிழ் சினிமாவில் பொருத்தமானவர் யார்?

மனோபாலா - கூலிங் கிளாஸ், தொப்பி அணிந்து அவர் நடந்து வரும் அழகில், ஜேம்ஸ்பாண்ட் லுக் தானே வந்துவிடும்.

 என்.உஷாதேவி

அதர்வா! பொருத்தமான உடலமைப்பு இருப்பதால், சண்டைக்காட்சிகளில் ஜொலிப்பார்.

 இரா.வசந்தராசன்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் ஆண்டனி பொருத்தமா இருப்பார்!

 பாரதிமுருகன்

அகில உலக சூப்பர் ஸ்டார் `சிவா’ இருக்கும்போது, ஸாரி... இன்னொருவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

 "லொள்ளு" மாணிக்ஸ்

விஜய் சேதுபதி - அநேகமாக எல்லா ரோலையும் செய்துவிட்டார், இதையும் செய்துவிட்டுப் போகட்டும்.

 `பெரியகுளம்' தேவா

விகடன் `வலிமை' அப்டேட் ஸ்டில்ஸை எல்லாம் பார்க்கும்போது... `தல' அஜித் தமிழகத்து ஜேம்ஸ் பாண்டாகத்தான் கண்களுக்குத் தெரிகிறார்..!

LAKSHMANAN_KL

டபுள் ஏஜென்ட் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க அரவிந்த் சாமிதான் மிகவும் பொருத்தமானவர்.

SriRam_M_20

ஜேம்ஸ்பாண்ட் என்றாலே ஹாலிவுட்டில் வயதானவர்கள் தான். அப்படி பார்த்தால் நம்மிடையே இவ்வளவு வயதிலும் உடலை இரும்பாக வைத்திருக்கும் சரத்குமார் தானே சரியான தேர்வாக இருக்க முடியும்.

pachaiperumal23

விக்ரம். உடம்பு வாகு, ஸ்டைலான பேச்சு பக்காவாப் பொருந்தும்.

balebalu

வாசகர் மேடை: ஜேம்ஸ்பாலா 007

செல்லமாகக் கூப்பிடுவதில் நீங்கள் கேட்ட வித்தியாசமான ‘செல்லப்பெயர்’ எது?

எதிர் வீட்டுக் குழந்தையின் செல்லப் பெயர் `உங்கு மிட்டாயி' (பெயர்க்காரணம் தெரியவில்லை).

 ஆர். பிரசன்னா

குழந்தையாக இருந்தபோது ‘ஊ’ எனத் தீயைப் பார்த்து பயந்ததால் 80 வயது மாமா இன்றும் ‘ஊ மாமா’ என்றுதான் அழைக்கப்படுகிறார்.

 . மல்லிகா குரு

எதற்கெடுத்தாலும் மழுப்பலாகவே பதில் கூறும் என் பாட்டியை ‘மழுப்பி’ன்னு பலபேர் கூப்பிடக் கேட்டிருக்கிறேன். பாட்டிக்கு இப்போது வயது 102.

 ஆர்ஜே.கல்யாணி

அழகான செல்லப் பேரு என் பிரெண்ட் பொண்ணோடது. மழவில் (மழைவில் - வானவில்).

 கி.சரஸ்வதி

எங்கள் கிராமத்தில் ஒருவரின் செல்லப்பெயர் பீரங்கி. அவர் தும்மல் போட்டால், ரொம்ப சத்தமாகப் போடுவார். அதனால்தான் அவருக்கு அந்தப் பெயர்.

- Subramanian Subburu facebook

சாப்பிடும்போதும் படிக்கும்போதும் எப்போதும் நிற்காது ஓடிக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுப்பையனை அவன் அம்மா ‘நிக்கு...நிக்கு...’ எனச் சொல்லிச் சொல்லியே தற்போது `நிக்கு' அவனது செல்லப் பெயராகிவிட்டது.

 ப.ராஜகோபால்

என் தோழி, எப்பொழுதும் தனக்கோ, பிறருக்கோ எந்தப் பிரச்னை என்றாலும் கலங்காமல் `No problem' என்று அதற்குத் தீர்வு கண்டுபிடிப்பாள். அவளைச் செல்லமாக நாங்கள் கூப்பிடுவது `நோப்பி.' இப்பொழுது அவள் ஒரிஜினல் பெயரே யோசித்தால்தான் நினைவுக்கு வருகிறது.

 விஜயலக்ஷ்மி

`புட்டு.' எங்க பெரியப்பா பையன் சிறு வயதில் என்ன சாப்பிட்டாய் என்று எப்ப கேட்டாலும் புட்டு என்பானாம். அதனால் 50 வயதான பிறகும் இப்பவும் அந்தப் புட்டு என்ற பெயர் நிலைத்து நிற்கிறது.

 எ .முகமது ஹுமாயூன்

நண்பர் - உயிர் நண்பர், என்ன வித்தியாசம்?

``கொஞ்சம் கஷ்டமா இருக்கு... பணம் வேணும்டா மாப்ளே...’’ என்பான் நண்பன்! ``செலவுக்குப் பணம் தேவைப்படுது மாப்ளே...’’ என நம் சட்டைப் பையிலிருந்து உருவி எடுத்துக் கொள்வான் உயிர் நண்பன்..!

 கே.எம். ரவிச்சந்திரன்

போனில் நிஜப் பெயரைப் போட்டு நம்பர் சேவ் பண்ணி வெச்சிருந்தா அது நண்பன். அதுவே பட்டப்பெயர் போட்டு நம்பரை சேவ் பண்ணி வெச்சிருந்தா உயிர் நண்பன்.

 Khatija Begum

நண்பன் பாதி வழியில் ஏறி, தான் இறங்க வேண்டிய இடத்தில் டிராப் பண்ணச் சொல்லுவான்... வீட்டுக்கு வரச் சொல்லி ஏறிக்கொண்டு, தான் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிக்கொள்வான் உயிர் நண்பன்...

 சரவணன்

நண்பன்ல ஏதுங்க நல்ல நண்பன்? கெட்ட நண்பன்? நண்பன்னாலே உயிர வாங்குறவனுங்க தான்!

pbukrish

நண்பர்தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸுக்குப் போகும் போது உயிர் நண்பராக உருமாறிவிடுகிறார்.

Vasanth920

சிங்கிள் டீ, வடையோடு போனால் - நண்பர்; ‘சியர்ஸ்’ சொல்லி, ‘மட்டை’யாக்கினால் - உயிர் நண்பர்!

மூ. மோகன் facebook

நண்பன் வீட்டுக்குப் போய் நண்பன் வீடுங்கற மாதிரி நடந்துகிட்டா அவர், `நண்பர்.’ நண்பன் வீட்டுக்குப் போய் என் வீடுங்கிற மாதிரி நடந்துகிட்டா அவர், `உயிர் நண்பர்.’

ireen722

உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு நச்னு ஒரு ஐடியா...

வீரர்கள் ஐ.பி.எல் ஆடுவதில் ஆர்வம் காட்டுவதால் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் இனிமேல் ஐ.பி.எல்லே நடக்காது என்று பி.சி.சி.ஐ அறிவிக்கலாம்.

 பெ.பாலசுப்ரமணி

கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்கலாம். யார் ரன் அடிக்கவில்லையென்றாலும் அவர் மட்டுமே தனித்து நின்று ரன் முழுவதையும் அடித்து வெற்றியைத் தேடித் தந்திடுவார்!

 எம்.இராஜேந்திரன்

அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு கோப்பை கிடைக்க மூலகாரணமாக இருக்கும் ஒருவருக்கு `பிரதமர் பதவியை விட்டுக்கொடுப்பதாக’ நம்ம ஜி அறிவிக்கலாம்.

PG911_twitz

எம்.ஜி.ஆர், பிரபாகரன் போன்றோர் ஐடியா கேட்ட சீமானிடம் கேட்கலாம்.. செம ஐடியாக்கள் கொடுப்பார்.. ஆனால் காலா காலத்துக்கும் சொல்லிக் காட்டுவார்

ParveenF7

எதிரணி அனைவருக்கும் ஜி ஆசீர்வாதம் பண்ண வேண்டும். இந்திய அணி மட்டும் ஆசீர்வாதம் வாங்கக்கூடாது.

amuduarattai

அமித்ஷா கிட்ட பொறுப்பை ஒப்படைத் தால் மற்ற நாட்டு முக்கிய வீரர்களை அந்த அணியை விட்டு விலகச் செய்திடுவார்! ஈஸியாக நாம் ஜெயித்துவிடலாம்.

h_umarfarook

பேசாம தோனியிடம் தனது ஓய்வை ரத்து செய்துவிட்டு இந்த உலகக் கோப்பையில் ஆடுமாறு சொல்லலாம். ஃபேர்வல் மேட்சும் வச்ச மாதிரி இருக்கும்.

IamJeevagan

வாசகர் மேடை: ஜேம்ஸ்பாலா 007

மொபைல் கேம் விளையாடுபவர்களிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?

வீட்டில் கேரம் போர்டு இருக்கும், கூட விளையாட ஆளும் இருக்கும். ஆனா மொபைலில் கேரம்போர்டு விளையாடுவாங்க.

 ஆசிக் ஜாரிஃப்

அழைத்தால், ‘இதோ ஐந்து நிமிடத்தில் முடிந்து விடும்’ என்பார்கள். அரை மணி நேரம் ஆனாலும் ஆடிக்கொண்டே யிருப்பார்கள்.

 எம்.கலையரசி

அவங்க மட்டும் விளையாடிட்டே இருக்குறது. பக்கத்துலயே இருக்குற நமக்கும் கொஞ்ச நேரம் கொடுக்கலாம்ல.

RamuvelK

குடும்பமே ஹாலில் பேசிக்கொண்டிருக்கும் போது, தனி ரூமில் அமர்ந்து விளையாடிட்டு இருப்பாங்க.

urs_venbaa

இது ஒரு விளையாட்டா, விட்டுத்தொலைன்னா... உனக்குப் பொறாமை, உனக்கு விளையாடத் தெரியலைன்னு பதில் பேசறது.

valarselvarani

வாசகர் மேடை: ஜேம்ஸ்பாலா 007

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால் எஸ்.பி.பியாக நடிக்கப் பொருத்தமான நடிகர் யார்?

2. ஒரு பிரச்னையைக் கையாள்வதில் கணவனுக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?

3.‘அல்லுவிட்டுப்போச்சு’ என்கிறார்களே, உங்கள் வாழ்க்கையில் அல்லுவிடும்படி நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை சுருக்கமாகக் கூறுங்களேன்...

4. ஜெயக்குமார், நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி - மூவரும் ஒரு படத்தை ரீமேக் செய்து நடிப்பது என்றால் எந்தப் படங்களை ரீமேக் செய்து நடிக்கலாம்?

5. கோபத்தைக் கட்டுப்படுத்த உருப்படியான டிப்ஸ் ப்ளீஸ்...

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com