
ரயில் பெட்டிகளை தியேட்டராக மாற்றி பயணத்தில் படம் பார்க்கச் செய்வேன்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பிரச்னையைத் தீர்க்க ஒரு ஐடியா சொல்லுங்க.
தமிழகத்தை வட தமிழகம் தென் தமிழகம் என்று பிரித்து வட தமிழகத்தின் முதல்வராக இபிஎஸ்ஸையும் தென் தமிழகத்தின் முதல்வராக ஓபிஎஸ்ஸையும் நியமிக்கலாம்.
balasubramni1
தீபாவை அ.தி.மு.க-வுக்குத் தலைவி ஆக்கிட்டா, இவங்க பிரச்னை தீர்ந்துடாதா?

ராம்ஆதிநாராயணன் தஞ்சாவூர்
நீங்கள் ரெண்டு பேரும் பிடல் காஸ்ட்ரோ - சே குவேரா, மருது சகோதரர்கள், ரெட்டைக்குழல் துப்பாக்கி என்று அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
என்.உஷாதேவி, மதுரை
அதெல்லாம் தேர்தலில் ஜெயிக்கப் போறவங்க பிரச்னை.
பா.ஜெயகுமார், வந்தவாசி
சசிகலா வந்தா முடிஞ்...
brammahbal
இவர்கள் சண்டையில் தினகரன் இடையில் புகுந்து ஆட்டையப்போடப்போறார்.
pachaiperumal23
இருவருக்கும் மந்திரிச்ச தாயத்து வாங்கிக் கட்டி விடலாம்.
urs_venbaa
கரெக்டா சொல்லுங்க... பிரச்னையைத் தீர்க்கணுமா வளர்க்கணுமா?
NedumaranJ
ப்ரண்ட்ஸ், நட்புக்காக போன்ற திரைப்படங்களைத் திரும்பத் திரும்ப போட்டுக்காட்டலாம்.
ARiyasahmed
பங்கப் பிரி, பங்கப்... பிரி
JaNeHANUSHKA
கட்சிக்குள் வேற பிரச்னை வந்திருச்சுன்னா, இவங்க பிரச்னை தானா சரி ஆயிரும்.
KRavikumar39
ஒரே சேர்ல ரெண்டு பேரையும் உட்கார வைக்கவும்.
ananthi.ramakr
? கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்றால், காதலை என்னவென்று சொல்லலாம்?
ஹைபிரிட் பயிர்
eromuthu
கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர்னு சொன்னவர் யார்னு சொல்லுங்க. அவர்கிட்டயே கேட்டுச் சொல்றேன்.
balasubramni1
பிம்பிளிக்கா பிலாப்பி
Kalkimithra3
பயிருக்கு இடும் உரம்
KarthikeyanARM

? தனியார் ரயில் வரப்போகிறது. நீங்கள் ஒரு ரயில் வாங்கினால் என்னவெல்லாம் செய்வீர்கள்?
மாதம்தோறும் ஐந்து புதுமணத் தம்பதியருக்கு கூப்பே இலவசமாகத் தருவேன்.
ஷாலினி ஜெரால்ட், சென்னை
ஒவ்வொரு பெட்டிக்கும் புத்தகங்கள் அடங்கிய அலமாரி.
எஸ். ஜெயப்பிரகாஷ், சேலம்.
என்னோட சொந்தக்காரங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு காசி முதல் ராமேஸ்வரம் வரை ஒரு பெரிய டூர் போவேன்... அப்பாடா, டூர் போய் எவ்வளவு நாளாச்சு..!
ஜெ. ஜான்சி சுப்புராஜ், கடலூர்
படத்தில க்ளைமாக்ஸ்ல வர்ற காதலர்கள் ஒண்ணு சேருவதற்காக, எப்பவும் அரைமணி நேரம் தாமதமாகவே ரயில் கிளம்ப வழி செய்வேன்.
ச.பிரபு சென்னை
கூடவே, ஏதாவது ஸ்டேஷனும் இலவசமா தருவீங்களான்னு கேட்பேன்!
அனன்யா, பொள்ளாச்சி
ரயில் பெட்டிகளை தியேட்டராக மாற்றி பயணத்தில் படம் பார்க்கச் செய்வேன்.
நரேசு தமிழன், சேலம்.
கடல்லயே ரயில் விடுவோம், மோடியை வைத்து டிஜிட்டல் டீக்கடை மற்றும் பக்கோடா போடுவோம்.
லட்சுமி பிரபு, பெங்களூரு
ரயில் பொம்மை வாங்கற அளவுக்குக்கூட இப்ப என்கிட்ட காசு இல்லையே, என்ன பண்ணுறது?
UDAYAKUMARKR202
ஷங்கர் படத்துக்கு வாடகைக்கு விடுவேன்.
bsnathan.nathan
? தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதை வைத்து ஒரு படம் எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
மூடிய தியேட்டரும் நல்லா இருந்த ஊரும்
par_the_nomad
ஹவுஸ்ஃபுல், (மக்கள் தியேட்டருக்கு வரமுடியாமல் ஹவுஸிலேயே முடங்கியிருப்பதால்)
jerry46327240
கவுன்டரைத் திற காட்சி வரட்டும்!
amUzhavan
எச்சரிக்கை, இது எம்ட்டி சேர்கள் உள்ள இடம்!
San8416
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - கொரோனா
krishmaggi
ப்ச்.வருத்தங்கள் பல.
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.
தடங்கலுக்கு வருந்துகிறோம்!
laks.veni
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்
Asokan Kuppusamy
பூட்டிங் டாக்கீஸ்!
aathinarayenan
நீ திறப்பாய் என
KarthikeyanARM
? ரஜினி பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் எப்படியிருக்கும்?

ஒரு எபிசோடுலேயே தலைசுத்திரும்...டெபனட்லி.
sathiyam1967
அச்சச்சச்ச கச்சச்ச அச்சச்சன்னு இருக்கும்.
priya_0706
Eviction அன்னைக்கி வந்து result தேதி பின்னர் அறிவிக்கப்படும்னு சொல்லிட்டுப் போய்டு வாரு.
Boobathybabu
மீன் சட்டியில் செய்த பொங்கல்போல இருக்கும்.
yogbal_anima
எப்போது நிகழ்ச்சி தொடங்கலாம் என விவாதம் மட்டுமே நடக்கும். கடைசிவரை நிகழ்ச்சி தொடங்காது.
pachaiperumal23
இந்த வாரம் நடந்ததை அதுக்கு அடுத்த வாரம் தான் விசாரிப்பாரு. என்ன நடந்துச்சுனு பார்த்தவன், பண்ணுனவன் எல்லா ருக்கும் மறந்துரும்.ஆனா ஒரு நல்லது, சண்ட போட்டா பிக் பாஸ் பூமி சுடுகாடாயிடும்னு சொல்லி, சண்டயே வராம ஆன்மிகமா வழி நடத்து வாரு. அரே ஓ சம்போ.
SowmyRed?

பப்ஜியைத் தடை பண்ணிட்டா ஜி.டி.பி ஏறிடுமா ஜி?
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? யூடியூப்பில் டிஸ்லைக் வராமல் இருக்க மோடி என்ன செய்யலாம்?
? உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்பாடல்?
? கிட்டத்தட்ட லாக்டௌன் முடிந்து நார்மல் வாழ்க்கைக்கு வந்துவிட்டோம். எதை மிஸ் பண்ணுகிறீர்கள்?
? மாஸ்க், சானிட்டைசரை வைத்து மாஸ் ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதாக இருந்தால் எந்த ஹீரோ என்ன டயலாக் பேசுவார்?
? அரியருக்கும் பாஸ் போட்டு மாணவர்களின் மனம் கவர்ந்ததைப்போல மற்ற தரப்பினரையும் கவர எடப்பாடிக்கு ஐடியா சொல்லுங்களேன்.
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.
ஈமெயிலில் அனுப்ப
vasagarmedai@vikatan.com