கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: மாஸ்(க்) டயலாக்!

வாசகர் மேடை
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மேடை

நாம செத்துட கூடாதுன்னு நினைச்சி மாஸ்க் போடுறத விட.. நம்மளால எவனும் செத்துடக் கூடாதுன்னு நினைச்சி மாஸ்க் போடு

? மாஸ்க், சானிட்டைசரை வைத்து மாஸ் ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசுவதாக இருந்தால் எந்த ஹீரோ என்ன டயலாக் பேசுவார்கள்?

* நாம செத்துட கூடாதுன்னு நினைச்சி மாஸ்க் போடுறத விட.. நம்மளால எவனும் செத்துடக் கூடாதுன்னு நினைச்சி மாஸ்க் போடு...அதான் கெத்து

#சிம்பு

Elanthenra

* ரஜினி : மாப்பிள்ளை அவருதான் ஆனா அவரு போட்டிருக்கிற மாஸ்க் என்னதில்ல

Kirachand

வாசகர் மேடை: மாஸ்(க்) டயலாக்!
வாசகர் மேடை: மாஸ்(க்) டயலாக்!

? யூடியூப்பில் டிஸ்லைக் வராமல் இருக்க மோடி என்ன செய்யலாம்?

* லைக் 1, லைக் 2ன்னு ரெண்டு ஆப்சன் மட்டும் கொடுக்கலாம்.

brammahbal

* லைக் போடுபவர்களுக்கு ஜிஎஸ்டி இல்லை, டிஸ்லைக் போடுபவர்களுக்கு ஜிஎஸ்டி உண்டு எனச் சொல்லலாம்.

h_umarfarook

* வீடியோ ரிலீஸ் பண்ணாம இருக்கலாம்.

Thaadikkaran

* மொதல்ல நிர்மலா சீதாராமனைப் பேசச் சொல்லிட்டு, அப்புறமா ஜீயைப் பேசச் சொல்லலாம்... நிர்மலா மேடம் பேசும்போதே எல்லாரும் டிஸ்லைக் பட்டனை அழுத்தி டயர்டு ஆயிடுவாங்க... ஜீ பேசும்போது டிஸ்லைக் வராம தப்பிச்சிடலாம்..!

KLAKSHM

* “லைக் இன் இந்தியா” திட்டத்தை அறிமுகப்படுத்தி வேலையில்லா இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, மோடி வீடியோவுக்கு லைக் போடும் வேலை வழங்கலாம்.

pbukrish6

* ஈஸி... யூ டியூபுக்குத் தடை போட்டுட்டு அதே மாதிரி ஒரு இந்திய ஆப் ஒன்ன உருவாக்கி அதுல டிஸ்லைக் பட்டனே இல்லாம உருவாக்கலாம்!

KarthikMSomasundaram

* இந்தியைப் பிடிக்குமெனில் dislike பட்டனை அழுத்தவும் எனில் ஒரு தமிழரும் அழுத்தமாட்டாங்க.

urs_venbaa

* டிஸ்லைக் பட்டனை அழுத்தினால் வீடியோ முதலில் இருந்து வருவதுபோல ‘செட்’ பண்ணிடலாம். ‘மறுபடியும் முதல்ல இருந்தா...’ என்று எல்லோரும் வெறுப்படைந்து அதில் கை வைக்க மாட்டார்கள்.

krishmaggi

வாசகர் மேடை: மாஸ்(க்) டயலாக்!

? உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்பாடல்?

* நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

தெய்வம் ஏதுமில்லை

திருத்தங்கல்

* “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” பாடல்.

பீ என் நரசிம்ம மூர்த்தி சென்னை

* “பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்” துவண்டுபோன இதயங்களுக்குத் தோள் கொடுக்கும் பாடல்.

balasubramni1

* தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

San8416

* மறுவார்த்தை பேசாதே... என் காதலிக்கும் எனக்கும் சண்டை முடிந்து சமாதானம் ஆகும் போதெல்லாம் நான் அவளுக்கு டெடிகேட் பண்ணும் பாடல் என்பதால்.

SriRam_M_

* இது ஒரு பொன்மாலைப் பொழுது-நிழல்கள்.

எப்போது கேட்டாலும் பாசிட்டிவ் எனர்ஜி

manipmp

* யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க...

sudarvizhie

* தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு.

ARiyasahmed

* ``பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே...” பாடலில் “அத்தனை செல்வமும் உன்னிடத்தில். நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்?” என்ற வரிகளைக் கேட்கும்போது மனம் நொறுங்கிப் போகும்!

absivam

* கனவிதுதான்;

நிஜமிதுதான்;

உலகினிலே என்னை

யார் வெல்லுவார் இனி

யார் வெல்லுவார்..!

ஓஓஓ....

absivam

* “வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்து தான் பார்க்கணும்

போர்க்களம் மாறலாம்

போர்கள் தான் மாறுமா

shifaRazvi

* அச்சம் என்பது மடமையடா பாடல் ஒன்றே போதும், சோகம் நம்மை அண்டாது எப்போதும்!

mohamed.humayoon

* வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்

Ashokan kuppusamy

* ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

ananthi.ramakrishnan.

* உதிரிப்பூக்கள் படத்தில் வரும் ‘அழகிய கண்ணே ‘ பாடல். என் பால்ய வயதிலேயே வாழ்வைப் பற்றிய. இனம் புரியாத ஏதோ ஒரு ஞானத்தை உள்ளுக்குள் விதைத்துச் சென்ற இசை.

மகா திருப்பூர்

? கிட்டத்தட்ட லாக்டௌன் முடிந்து நார்மல் வாழ்க்கைக்கு வந்துவிட்டோம். எதை மிஸ் பண்ணுகிறீர்கள்?

* கோ கொரோனா கோ-ன்னு மணியாட்டிட்டே, விளக்குப்பிடிச்சு விளையாடுனதை...

tparaval

* ஆளாளுக்குக் கண்டுபிடித்துச் சொன்ன மருத்துவக் குறிப்புகளை.

rajasinghjeyak1

* ‘ஒருநாள் ஒருவர்’ எனக் கணக்கு வைத்து, என்னுடன் தொடர்பில் இருந்த ஒவ்வொருவருடனும் பேசி மகிழ்ந்தது!

KRavikumar39

* முழுநாளையும் லுங்கி பனியனில் கழித்தது.

ARiyasahmed

* கிடாக்கறி வாங்குவதற்காக ஒருநாளுக்கு முன்பே பணம் கொடுத்து முன்பதிவு செய்த சாகசங்களை.

vanhelsing1313

* ட்ரோன் மூலம் படமாக்கப்பட்டு வெளிவரும் நகைச்சுவை வீடியோக்களை!

sudarvizhie

* டிராபிக் ஜாம் இல்லாத, வாகனப்புகை இல்லாத வொர்க் ப்ரம் ஹோம்தான் மிஸ்ஸாயிடுச்சு.

RamuvelK

* லாக்டௌன்தான் முடிவுக்கு வந்திருக்கு, கொரோனா முடிவுக்கு வரலையே! முன்பைவிட இப்போதான் அதிக பயம் வருது.

h_umarfarook

* கொரோனாவை சாக்காக வைத்து நாள் ஒன்றுக்கு ஐந்து முறைக்கு மேல் சாப்பிட்டதை...!

chitrasekar.

* விகடனில் ஒரு லாக்டௌன் கதை கூட வரவழைக்க முடியாமல் போனதுதான்!

பா து பிரகாஷ், தஞ்சாவூர்

? அரியருக்கும் பாஸ் போட்டு மாணவர்களின் மனம் கவர்ந்ததைப்போல மற்ற தரப்பினரையும் கவர எடப்பாடிக்கு ஐடியா சொல்லுங்களேன்.

* சென்னை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞரின் பெயரைச் சூட்டி, தி.மு.க-வினரைக் கவரலாம்..!

laks veni

* அந்த 15 லட்சம் ரூபாயை வாங்கிக் கொடுத்தால் போதும்!

நா‌.இரவீந்திரன், வாவிபாளையம்.

* கட்டாத இ.எம்.ஜ. தவணைகளைக் கட்டியதாக அறிவித்து மேலும் ஆறு மாதத்திற்குத் தவணை கட்டாமல் விலக்கு அளிப்பதும்... பிறகு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பதும்...

சாதிக் காரைக்குடி

* 90’s kids கல்யாணம்.

இத மட்டும் பண்ணிட்டா தமிழ்நாட்டோட நிரந்தர முதல்வர் ஒரே சாமி எடப்பாடி சாமி தான்.

mohankumarmk41/

* இப்படி ஐடியா கேட்டு... ஐடியா கேட்டு எடப்பாடியாரை அடுத்த முதலமைச்சர் ஆக்காமல் ஆ.வி தூங்காது போலிருக்கிறது... இந்த விளையாட்டுக்கு நாங்க வரல சாமி. ஆளை விடுங்க!

poonasimedhavi

* சசிகலா வெளியே வரப்போறாங்க. தஞ்சைதரணியின் தன்னிகரில்லாத தலைவியே வான்னு பிளக்ஸ் வெச்சி பாவமன்னிப்பு கேளுங்க சார். பாவம் குறையும். பாவத்திலேயே பெரிய பாவம் நம்பிக்கை துரோகம்தான் சார்.

pachaiperumal23

* 2016 தேர்தல் வாக்குறுதியாக ஜெ அறிவித்த ஸ்மார்ட் போன் இலவசம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றினாலே போதும் ஆன்லைன் வகுப்பிற்குப் பயன்பட்டிருக்கும்!

h_umarfarook

* அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் காலை மாலை என இரு வேளைக்கும் இரண்டு லிட்டர் பால் இலவசமாகத் தரலாம்.

SriRam_M_20

* ஸ்டாலின்தான் ரொம்ப ஆசைப்படுறாரே, முதல்வன் படத்தில வர மாதிரி அவரை ஒரு நாள் முதல்வராக்கிவிடலாம்.

SriRam_M_20

* ஓ.டி.டி-யில் பணம் கட்டி இணைப்பு வாங்கிப் படம் பார்க்க முடியாத மக்களுக்கு அரசு செலவில் அதைச் செய்துகொடுக்கலாம்.

parveenyunus

வாசகர் மேடை: மாஸ்(க்) டயலாக்!

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? கட்சியில் இருப்பவர்கள் அத்தனைபேருக்கும் பதவி கொடுப்பதற்காக பா.ஜ.க-வில் கல்வியாளர்கள் அணி, அறிவுஜீவிகள் அணி என்றெல்லாம் புதுசு புதுசாக அணிகளைத் தொடங்குகிறார்கள். வேறு என்னென்ன அணிகளை உருவாக்கலாம் என்று பா.ஜ.க-வுக்கு ஐடியாக்கள் சொல்லுங்களேன்.

? கமல்ஹாசன் ஒரு பேய்ப்படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? வேலையே தெரியாத ஒருவர் வேலை தெரிவதைப்போல நடிக்கும்போது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?

? பேய்ப்படங்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

? பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களைப் பார்த்தால் என்ன தோன்றும்?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.

ஈமெயிலில் அனுப்ப vasagarmedai@vikatan.com