சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

வாசகர் மேடை: எல்லாத்தையும் நிறுத்துங்க... நிறுத்துங்க...

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி

ஹோட்டல் சாப்பாடு பார்சல்களில் எது சாம்பார் எது காரக் கொழம்புன்னு ஒவ்வொரு முறையும் கண்டுபிடிக்கத் திணறும்போது

‘கற்றது கைம்மண்ணளவு’ என்று வாழ்க்கையில் எப்போது உணர்ந்தீர்கள்?

பத்திரிகைக்கு அனுப்பும் ஜோக்குகளைப் படித்து என் ஏழு வயது மகன் `இதெல்லாம் ஒரு ஜோக்காப்பா' என்று சொல்லும்போது.

 ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

பள்ளிக்கூடம் பக்கமே செல்லாத பெண்மணி என் வீட்டில் வேலை செய்தார் பெங்களூரில், அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, இங்கிலீஷ் என்று பொளந்து கட்டியபோது.

 குடந்தை பத்மா

நூலகம் சென்று டிஎன்பிஎஸ்சி/யூபிஎஸ்சி தேர்வுக்குப் படிக்க ஆரம்பித்த பிறகுதான்... சாமி... எம்மாம் புக்கு...!

SowThanishka

ஹோட்டல் சாப்பாடு பார்சல்களில் எது சாம்பார் எது காரக் கொழம்புன்னு ஒவ்வொரு முறையும் கண்டுபிடிக்கத் திணறும்போது...  

bommaiya

இல்லத்தரசி வீட்டில் இல்லாத ஒரு நாளில், இட்லி அவித்து உண்ட பின் இட்லித் துணியை அலசியபோது.

selvachidambara

என் குழந்தைகள் நான் கற்றுக்கொடுத்த ஏபிசிடி கற்றுக்கொண்டு பிறகு நான் பேசும் ஆங்கிலத்தைத் திருத்தியபோது உணர்ந்தேன்.

Malli_official

சென்சார் குழாயில் கையைக் கழுவ... தண்ணீர் திறந்துவிடும் கைப்பிடி... எங்கேன்னு தேடிய போது.

Kirachand4

எனது ஆன்ட்ராய்டு போனில் எப்படிஸ்கிரீன் ஷாட் எடுக்கணும்னு என் மகன் எனக்குக் கற்றுத்தந்த தருணத்தில்.

adirai.buhari.1

வாசகர் மேடை: எல்லாத்தையும் நிறுத்துங்க... நிறுத்துங்க...

ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி மூவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

பாம் மூன்று! வலி ஒன்று!

SowThanishka

பாடித்திரிந்த பறவைகளே...

bommaiya

ஃபேன்கள் ஜாக்கிரதை

tendulquer

கொஞ்சம் இசை நிறைய ஜாலி

Kirachand4

இசை எனும் விசை

 ஜெ.ஜான்சி சுப்புராஜ், கடலூர்

அனிருத்தையும் சேர்த்துக்கொண்டால் ‘புது வசந்தம் 2’ எடுக்கலாம்.

 ச.பிரபு, குற்றாலம்

பாட்டும் நானே, பாவமும் நானே

 எஸ். மோகன், கோவில்பட்டி

இசைக்கா நொடிகள்

velu.kumar.

இ(தி)சை மாறிய பறவைகள் என்று வைக்கலாம். 

 இந்திராணி தங்கவேல், சென்னை

ரஜினியும் மோடியும் கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் அடுத்து யார் கலந்துகொண்டால் செமையா இருக்கும், ஏன்?

குக்கு வித் கோமாளி டீம் கலந்துகொண்டால் செம என்டர்டெயிண் மென்ட்தான் போங்க.

 ஜெ.மாணிக்ஸ்

நிர்மலா சீதாராமன். காட்டையும், பியர் கிரில்ஸ்ஸையும் குத்தகைக்கு விட்டு நிதி திரட்டும் வல்லமை பெற்றவர். 

PG911_twitz

கொரோனாவால் வெளிநாடு எங்கேயும் போகாமல் வருத்தத்துடன் இருப்பதால் மறுபடியும் மோடியையே அனுப்பி வைக்கலாமே.

balasubramni18

கமலை அனுப்பலாம். அதுவும் ஆகஸ்ட் 2-ம் தேதி போனார்னா பாபநாசம் 2-க்குப் பயன்படுத்திக்கலாம். 

bommaiya

ராமராஜன். பாட்டு பாடியே சிங்கம் புலியெல்லாம் அடக்குவது எப்படின்னு கிரில்ஸ்ஸுக்கே பயிற்சி கொடுக்கலாம்.

balebalu

சசிகலா. 4 வருஷம் சிறைவாசம் சென்றவருக்கு, 4 நாள் வனவாசம் அட்டகாச மான புத்துணர்ச்சியை அளிக்கும்..!

LAKSHMANAN_KL

நடிகர் சிவகுமார். 108 காட்டு விலங்குகளின் பெயரை மனப்பாடமா மூச்சு முட்ட நிகழ்ச்சியில் சொல்ல ஆரம்பிக்க, டிஸ்கவரி சேனலே கிடு கிடுக்கும். 

balebalu

துயிலன். அட நான்தாங்க... அரசியல்வாதி, நடிகருக்கு அப்புறம் ஒரு சாமானியனான எனக்கும் அந்த வாய்ப்பைக் கொடுக்கச் சொல்லுங்க. சாமானியர்களின் பார்வை படாமல் எந்த நிகழ்ச்சியும் ஹிட்டடிப்பதில்லை. 

PG911_twitz

ராகுல் காந்தி... வில்லேஜ் குக்கிங் சேனல் மூலம் கலந்துகொண்டு பிரபலமானதுபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வேர்ல்டு பேமஸ் ஆகலாம்.

 வெ.சென்னப்பன்.

வாசகர் மேடை: எல்லாத்தையும் நிறுத்துங்க... நிறுத்துங்க...

யாராவது ஒரு இயக்குநரிடம், ‘ஐயா, இதை உங்க படத்தில் முதல்ல நிறுத்துங்க’ என்று கோரிக்கை வைப்பது என்றால் எந்த இயக்குநரிடம் என்ன சொல்வீர்கள்?

ஷங்கர் சார், சி.ஜின்னு ஒண்ணு இருக்குறதையே மறந்துட்டு ஒரு படம் எடுங்களேன்... ப்ளீஸ்

RavikumarMGR

ராகவா லாரன்ஸ்... பேய் பயத்துல எதிர்ப்படுற எல்லாப் பொண்ணுங்க இடுப்புலயும் எறி உக்காந்துக்கிறத நிப்பாட்டச் சொல்லுவேன்... ஆமா, லைட்டா பொறாமைதான்...!

bommaiya

மிஷ்கின் - சண்டைக்காட்சிகளில் ஹீரோவும், வில்லன்களும் ரோபோக்கள் மாதிரி சண்டை போடுறதை நிறுத்தச் சொல்லுங்க பாஸ்..!

LAKSHMANAN_KL

கௌதம் மேனன் - அவரோட வாய்ஸ் ஓவரை நிறுத்தச் சொல்லணும்.

balasubramni1

ராகவா லாரன்ஸிடம் இருந்து

பேயைக் காப்பாற்றச் சொல்லணும்.

urs_venbaa4

கார்த்திக் சுப்புராஜ். இனியும் ஈழம் பற்றிய படம் எடுத்தால் எங்களால் தாங்க முடியாது சாமி.

Vasanth920

ஹரி - பனைமரம் பாவம். அதை வெட்டிச் சாய்க்குறதை நிறுத்துங்க.

IamUzhavan

மணிரத்னம் சாரிடம்... `நைட் எபக்ட் காட்சிகளில் கூடுதலாக லைட்டுகளை உபயோகப்படுத்திக் காட்சிப்படுத்தவும். ஸ்கிரின்ல டார்ச் அடித்துப் பார்க்க வேண்டியதுள்ளது.'

pachaiperumal23

இயக்குநர் பாலா. வெளிநாட்ல போய் ஒரு சாங்காவது எடுங்க சார்!

Saisudhar1

ஏ. ஆர். முருகதாஸ் சார், சமீபகாலமாக நீங்கள் எடுக்கும் படத்துக்கு ஹீரோயின் எதற்கு?

Vasanth920

பார்த்திபன். வசனங்களில் வார்த்தை விளையாட்டு இல்லாமல் படம் கொடுங்க சார்.

Saisudhar11

சமுத்திரக்கனி. கருத்தைச் சொல்லிச் சொல்லியே கருத்து கந்தசாமி ஆகிடாதீங்க.

 என். பாக்கியலட்சுமி, மதுரை

மிதாஸ் போல் தொட்டதெல்லாம் பொன் ஆகும் சக்தி நமக்குக் கிடைத்தால் வாழ்க்கையில் என்னென்ன காமெடிகள் நடக்கும்?

அதற்கு போவிட் - 19 என்று பெயரிட்டு அதிலிருந்து விடுபட போவாக்சின், போவிஷீல்ட் மருந்து கண்டுபிடிப்பார்கள்.

 ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்

நமக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் தொட்டு வைப்போம். 

 எ .முகமது ஹுமாயூன், நாகர்கோவில் 

தங்கத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்பதால்... கே.ஜி.எஃப். சேப்டர் 1, 2-ஐப் பார்க்கும் ஆர்வம் மக்களுக்குக் குறையலாம்..!

LAKSHMANAN_KL

வீட்டு மேல் இருக்கு சோலார்,

என் வீடுதான் தங்கக் கோலார்னு டிஆர் மாதிரி வசனம் எல்லாம் பேசலாம். 

balasubramni1

ஒருத்தனும் சோறு திங்க முடியாது.

YAADHuMAAGE7

தொட்டுவிடாதே தங்கமாயிடும் என்ற வாசகம் ஒவ்வொரு போக்குவரத்து வாகனத்திலும் கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும். 

bommaiya

நம்மளையும் `பொன்னார்'னு கூப்பிடும் வாய்ப்பு உண்டாகும்..!

LAKSHMANAN_KL

தக்காளி தங்கமா மாறிடும். 

ஒரு சட்டினி அரைக்க நினைச்சது குத்தமான்னு தோணும்.

vrsuba

எல்லாரும் நகைக்கடை திறந்துடுவாங்க.

indhu.kumarappan

வாசகர் மேடை: எல்லாத்தையும் நிறுத்துங்க... நிறுத்துங்க...

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஜாலியான பட்டம் கொடுப்பது என்றால் என்ன கொடுக்கலாம்?

2. உங்கள் பள்ளி வாழ்க்கை, உங்கள் குழந்தைகள் பள்ளி வாழ்க்கை - இரண்டுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

3. கவுண்டமணியைச் சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இருவரும் சேர்ந்து நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

4. ‘இதை ஏன் செய்றாங்க?’ என்று உங்களுக்கு நீண்டநாளாக இருக்கும் சந்தேகம் என்ன?

5. வித்தியாசமான ரியாலிட்டி ஷோ ஐடியா சொல்லுங்கள்...

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி : வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப

vasagarmedai@vikatan.com