‘பெரியார் சிலைகளுக்குக் கீழே இடம்பெற்றுள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் நீக்கப்பட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வாதாடி வெற்றிபெற்றிருக்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி. அவரைச் சந்தித்தோம்.

“ ‘நூறு ஆண்டுகள் கழித்து, `இவர் ஒரு புது சாமியார்’ என்று என் சிலையை வணங்க ஆரம்பித்துவிடுவார்கள். அதற்காகத்தான் என் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் கட்டாயம் இருக்க வேண்டும்’ என்று பெரியார் கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை வைத்தோம். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த உண்மையை விளக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. வழக்கு தொடர்ந்தவருக்கு நன்றி’’ என்றவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பெரியாரின் தொண்டரான கருணாநிதிக்கு ராசிபுரத்தில் கோயில் கட்ட, பூமி பூஜையெல்லாம் போடுகிறார்களே?’’

‘‘அருந்ததியர் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கொடுத்ததற்காக கலைஞருக்கு நன்றி தெரிவிக்க, கோயில் கட்டுவதாகச் சொல்கிறார்கள். பூமி பூஜை போட்டதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. எங்கள் அளவுக்கு மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் கட்சிகள் எதுவும் திராவிடர் கழகம்போல் செயல்பட முடியாது.’’

‘‘தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டதும் அவரை வாழ்த்தினீர்கள். ‘ரைட் வுமன் இன் த ராங் பார்ட்டி’ என்று தமிழிசையை நினைக்கிறீர்களோ?’’

‘‘அப்படிச் சொல்ல மாட்டேன். ‘அன்பு மகள் தமிழிசையை வாழ்த்து கிறேன்’ என அவரை வாழ்த்தினேன். அதற்கு, காரணம் இருக்கிறது. நானும் தமிழிசையின் தந்தையான குமரிஅனந்தனும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். அதனால், தமிழிசையை எப்போதுமே என் அன்பு மகள் என்றுதான் சொல்வேன்.

எல்லாவற்றையும்விட அவர் ஒரு பெண். காலம் காலமாக சமூகநீதி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர். அப்படிப்பட்ட ஒருவர் ஆளுநர் பதவிக்கு வந்துள்ளார். ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று நான் பார்க்கிறேன். அதில் பெரியாரின் வெற்றி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி-யால்கூட சமூக விஞ்ஞானத்தைப் புறக்கணித்துவிட முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.”

‘‘தமிழக பி.ஜே.பி தலைவர் பதவிக்கு ரஜினிகாந்த் பெயரும் அடிபடுகிறது. அவர் வந்தால், தமிழகத்தில் தாமரை மலருமா?’’

‘‘இது திராவிட மண், பெரியார் மண். இங்கு ஒருபோதும் தாமரை மலராது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தாமரைக்கு என்ன கதி நேர்ந்தது! வேலூர் தேர்தலின்போது, ‘பி.ஜே.பி-யினர் யாரும் பிரசாரத்துக்கு வராதீர்கள்’ என்று அ.தி.மு.க ஏன் சொன்னது? தலைவராக யார் வருகிறார் என்பது முக்கியமல்ல... எந்தக் கொள்கை இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

இங்கு கொள்கைரீதியான போர் நடந்துகொண்டிருக்கிறது. தனிநபர்களின் பெருமையோ, திறமையோ இங்கு சாதித்துவிட முடியாது. திரையுலகில் ரஜினிகாந்த் பிரபலமானவராக இருக்கலாம். ஆனால், அவர் உட்பட யாரைத் தலைவராகப் போட்டாலும் இந்த மண்ணில் தாமரை ஒருபோதும் மலராது.”

‘‘தமிழ்நாடு பெரியாரின் பூமி என்கிறீர்கள். ஆனால், அத்திவரதர் வைபவத்துக்கு லட்சணக்கில் மக்கள் குவிந்தார்களே?’’

‘‘இது ஒரு பக்தி போதை. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனுக்கு இருக்கும் பலவீனங்களில் ஒன்றான மூடநம்பிக்கை, இன்றும் இருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். மூடநம்பிக்கையையும் எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். போக வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது.

இது பெரியார் மண் என்பதற்கு அடையாளமாக, சமூகநீதி இருக்கிறது. 69 சதவிகித இடஒதுக்கீடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத் திலாவது உண்டா? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி-காரர்களால்கூட, இடஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தில் பேச முடியாத நிலை இருக்கிறது. அதுதான் பெரியார் மண் என்பதற்கான அடையாளம். திருவிழாக் கூட்டத்தை வைத்துக் கணக்குப்போடுவது தவறு.”

‘‘வைணவப் பேராசிரியர் வேங்கடகிருஷ்ணன், நாயை உதாரணம் காட்டி ‘மனிதர்கள் அனைவரும் சமம் கிடையாது’ என்று பேசியிருக்கிறாரே?’’

‘‘சாதியை அவர் நியாயப்படுத்துகிறார். அதுவும் கீழ்த்தரமான ஓர் உதாரணத்துடன். ஒரு நாய் இன்னொரு நாயைத் தொட்டால் குளிப்பதில்லை. ஆனால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைத் தொட்டால் தீட்டு என்கிறான். பொமரேனியன், ராஜபாளையம், கோம்பை என்று நாய்களைப் பார்த்தால் அவற்றின் வித்தியாசம் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். ஆனால், நான்கு மனிதர்களை நிற்கவைத்து, ஒவ்வொருவரும் என்ன சாதி எனச் சொல்ல முடியுமா? ரத்தத்தில் ஐயங்கார் ரத்தம், முதலியார் ரத்தம், நாடார் ரத்தம் என்று ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி ரத்தம் இருக்கிறதா? சாதி பார்த்து அவரவர் சாதிக்காரரின் ரத்தத்தைத்தான் ஏற்றுகிறார்களா?

அந்தப் பேராசிரியருக்கு நோய் வந்தால் தன் சாதிக்கார மருத்துவரிடம் மட்டும்தான் சிகிச்சை எடுத்துக்கொள்வாரா? பேராசிரியரிடம்கூட வர்ணாசிரமச் சிந்தனை, சாதிபேத உணர்வு இருக்கிறது. அப்படியென்றால், பெரியார் இன்னமும் தேவைப்படுகிறார். பெரியார் காலத்தைவிட எங்கள் பணி பல மடங்கு அதிகரித்துள்ளது. சங்பரிவார், பல பிரிவுகளாக இருந்து வேலை செய்கிறார்கள். அதுபோன்றுதான், பெரியாரிய சிந்தனையாளர்கள் தனித்தனியாகச் செயல்படுகிறார்கள்.’’