Published:Updated:

ஈரோடு: பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்ட விஏஓ... மறைந்திருந்து மடக்கிப் பிடித்த போலீஸ்!

கைது
News
கைது

பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் செய்து தர முடியும் என்று அருண்பிரசாத் கூறியதாகத் தெரிகிறது.

Published:Updated:

ஈரோடு: பட்டா மாறுதலுக்கு ரூ.10,000 லஞ்சம் கேட்ட விஏஓ... மறைந்திருந்து மடக்கிப் பிடித்த போலீஸ்!

பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் செய்து தர முடியும் என்று அருண்பிரசாத் கூறியதாகத் தெரிகிறது.

கைது
News
கைது

ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்த செம்மாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தந்தைக்குச் சொந்தமான அரை ஏக்கர் நிலத்தின் பட்டாவை தன்னுடைய பெயருக்கு மாற்றக் கோரி வேமாண்டம்பாளையம், லாகம்பாளையம் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலரான மொடக்குறிச்சியைச் சேர்ந்த அருண்பிரசாத்தை அணுகினார். பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் செய்து தர முடியும் என்று அருண்பிரசாத் கூறியதாகத் தெரிகிறது.

கைது செய்யப்பட்ட விஏஓ அருண்பிரசாத்
கைது செய்யப்பட்ட விஏஓ அருண்பிரசாத்

லஞ்சம் தர விரும்பாத கார்த்திக் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாரளித்தார். அதன்பேரில் ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் நோட்டுகளை கார்த்திக் வசம் போலீஸார் கொடுத்தனுப்பினர். அந்தப் பணத்தை நேற்று இரவு அருண்பிரசாத்திடம், கார்த்திக் கொடுத்தபோது மறைவிடத்திலிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். பின்னர் அவர் ஈரோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது
கைது

கைதுசெய்யப்பட்ட வி.ஏ.ஓ அருண்பிரசாத் கடந்த 2021-ல் தான் பணியில் சேர்ந்தார். 2 ஆண்டுகள் பூர்த்தியடையாததால் தற்காலிகமாக அப்பணியில் இருந்தார். தற்போது லஞ்ச ஒழிப்பு போலீஸில் சிக்கியதால் அவர் பணி நிரந்தரம் ஆக வாய்ப்பில்லை என போலீஸார் தெரிவித்தனர்.