Published:Updated:

Evening Post:பூமராங்கான மோடியின் பேச்சு!-கழுகார்: 'கைமாறிய பெருஞ்சொத்து'-பேலியோ:நடிகரின் மனைவி மரணம்

Vikatan Highlights October 31
Listicle
Vikatan Highlights October 31

குஜராத் பாலம் விபத்தும் பூமராங்காக திரும்பிய மோடியின் பழைய பேச்சும், காவல்துறையை பாராட்டிய அண்ணாமலை, மிஸ்டர் கழுகு: திமுக நிறுவனத்துக்கு கைமாறிய பெருஞ்சொத்து,அதிகாரிகளைக் கடிந்துகொண்ட தமிழிசை,பேலியோ டயட்டால் நடிகரின் மனைவி மரணம், 'வாரிசு', துணிவு' -காத்திருக்கும் ஆச்சரிய அப்டேட்


1
குஜராத் விபத்து

குஜராத் பாலம் விபத்து: பூமராங்காக திரும்பிய மோடியின் பேச்சு!

குஜராத் மாநிலம், மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஐ தாண்டி உள்ளது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், மோர்பி பாலம் எவ்வாறு அறுந்து விழுந்தது என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக்குழு மோர்பிக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 2016 -ம் ஆண்டு இதேபோன்ற ஒரு விபத்து மேற்கு வங்கத்தில் நடந்தபோது, மம்தாவின் ஆட்சிக்கு எதிராக மோடி அப்போது எப்படி பேசினார் என்பதை நினைவூட்டி, மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

விபத்தும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும்

விபத்துக்குள்ளான இந்த பாலம் சுமார் சுமார் 150 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக சொல்லப்படும் நிலையில், இதன் பழுதுபார்க்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆதாயம் கருதியும் வருமானத்தை கவனத்தில் கொண்டும் பழுதுபார்க்கப்பட்ட பாலத்துக்கு தகுதிச்சான்றுகூட வாங்காமல் பயன்பாட்டுக்கு திறந்துவிட்டிருக்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

ராகுல் காந்தி

'அரசியலாக்க விரும்பவில்லை'

இந்த நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரிடம் குஜராத் பாலம் விபத்துக்கு யார் காரணம், என நீங்கள் கருதுகிறீர்கள் எனச் செய்தியாளர்கள் இன்று கேட்டபோது, " மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இதை அரசியலாக்குவது அவர்களை அவமதிப்பதாகும். எனவே இந்த சம்பவத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை" என்றார்.

ராகுல் காந்தி இவ்வாறு கூறிவிட்டு அதனை கடந்து சென்றுவிட்டாலும், காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மட்டத்தலைவர்கள், குஜராத் மாநில பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இந்த சம்பவம் மனித தவறால் நிகழ்ந்த ஒரு துயரம் என்றும், இந்த சம்பவத்தில் குஜராத்தில் உள்ள பாஜக அரசு குற்றவாளி என்றும் கூறியுள்ளார். "பிரதமர் மோடியும், குஜராத் முதல்வரும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு வெறும் 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்ததோடு தங்களது பொறுப்பிலிருந்து நழுவிவிட முடியாது" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பூமராங்காக திரும்பிய மோடியின் பேச்சு!

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், " கடந்த 2016 -ம் ஆண்டு இதேபோன்ற ஒரு விபத்து மேற்கு வங்கத்தில் நடந்தபோது, மம்தாவின் ஆட்சிக்கு எதிராக மோடி அப்போது எப்படி பேசினார் என்பதை நினைவூட்டி, " தற்போது மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மோடி

* கடந்த 2016 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தா சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தின் போது பலர் உயிரிழந்தனர்.

* அப்போது பேசிய பிரதமர் மோடி, "தேர்தல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், எப்படிப்பட்ட ஆட்சி இங்கு நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்வார்கள். இது கடவுளின் செய்தி" எனக் கூறி இருந்தார்.

இதைச் சுட்டிக்காட்டி தற்போது கேள்வி எழுப்பி உள்ள திக் விஜய சிங்,

* " 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், கடந்த ஆறு மாதங்களாக மோர்பி பாலம் பழுது பார்க்கப்பட்டது, ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்களிலேயே இடிந்து விழுந்துள்ளது.

* இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோதனையின் போதே நர்மதா கால்வாய் உடைந்து விழுந்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

விரைவில் குஜராத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த பாலம் விபத்து பாஜக-வுக்கு ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குஜராத் பாலம் விபத்து பலி 140 ஆக அதிகரித்துள்ள நிலையில், தவறுக்கு யார் காரணம், இது குறித்து மாநகராட்சி அதிகாரி அளித்த விளக்க உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


2
அண்ணாமலை - காவல்துறை

கோவை கார் வெடிப்பு சம்பவம்: காவல்துறைக்கு அண்ணாமலை திடீர் பாராட்டு!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையை விமர்சித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறை மறுப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், " பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் " எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இதற்கு நேற்று பதிலளித்த அண்ணமலை, "அறிவாலயவாசிகளை காப்பாற்றுவது காவல்துறையின் முதன்மை பணியா?" எனக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று கோவை வந்த அண்ணாமலை, கார் வெடிப்பு நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி பாடி வழிபாடு நடத்தினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, குண்டுவெடிப்புக்குப் பின்னரான காவல்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.

அதனை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
மிஸ்டர் கழுகு

மிஸ்டர் கழுகு: தி.மு.க நிறுவனத்துக்கு கைமாறிய பெருஞ்சொத்து!

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கூவம் ஆற்றையொட்டி சிவனின் பெயரைக்கொண்ட தி.மு.க கவுன்சிலர் ஒருவருக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. அந்த இடத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபைனான்ஸியர் ஒருவரிடம் 2 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தாராம் அந்த கவுன்சிலர்.

அவருக்கு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தி.மு.க புள்ளியின் நட்பும், அவர் மூலம் தி.மு.க நிழலானவரின் தொடர்பும் கிடைத்திருக்கிறது. அந்த தைரியத்தில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
கவர்னர் தமிழிசை

அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு; அதிகாரிகளை கடிந்துகொண்ட தமிழிசை!

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த தமிழிசை, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனை கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நோயாளிகள் மற்றும் அவர்கள் உறவினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஒரு பெண் தன் கணவருக்கு கடும் வயிற்று வலி காரணமாக மூன்று நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும், ஆனால்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
மனைவியுடன் பரத் கல்யாண்

'பேலியோ டயட்'டால் நடிகரின் மனைவி மரணம்!

90களில் பிரபலமான நடிகர் பரத் கல்யாண். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பாரதி கண்ணம்மா' தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருடைய மனைவி பிரியா உடல்நலக்குறைவால் இயற்கை எய்திருக்கிறார்.

பரத் கல்யாண் மனைவி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் அதுகுறித்து அவருடைய நண்பரும், நடிகருமான ரிஷியிடம் பேசினோம்.பிரியாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்கமாக கூறினார்.

அதனை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


6
வாரிசு vs துணிவு

'வாரிசு', `துணிவு' - காத்திருக்கும் ஆச்சரிய அப்டேட்

விஜய்யின் `வாரிசு', அஜித்தின் `துணிவு' இரண்டுமே பொங்கல் விருந்தாக வெளிவருகிறது என்பதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகின்றன.

'வாரிசு' படத்திற்கு தமனும், 'துணிவு' படத்திற்கு ஜிப்ரானும் இசையமைத்து வருகிறார்கள். இதனிடையே 'வாரிசு' படத்தின் சிங்கிள் ட்ராக் கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என பேச்சு கிளம்பியது. விஜய்யின் ரசிகர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்நிலையில்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...