Published:Updated:

Evening Post:மழை:ஸ்டாலின் கண்டிப்பும் களநிலவரமும்-அமைச்சரின் அடடே பேச்சு!-பேலியோ உயிரைப் பறிக்குமா?

Vikatan Highlights November 1
Listicle
Vikatan Highlights November 1

தமிழகத்தில் கனமழை தொடரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் காட்டிய கண்டிப்பும் களநிலவரமும், அமைச்சர் மூர்த்தியின் அடடே பேச்சு, அமைச்சரின் அடடே பேச்சு, இந்தியாவிலும் வரப்போகிறதா அதிபர் ஆட்சி முறை?, பேலியோ டயட் உயிரைப் பறிக்குமா? அஜித் படத்தில் எதிர்பாராத ரீ - யூனியன்!


1
சென்னை மழை

கனமழை: ஸ்டாலின் கண்டிப்பும் களநிலவரமும்! 

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மழை நீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

இன்னொரு புறம் சென்னையில் நேற்று மாலை தொடங்கி கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாநகர மேயர் பிரியா நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவிலும் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.

சென்னையில் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், மாலை தொடங்கி இன்று வரை கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடந்த 72 ஆண்டுகளில் 3 வது முறையாக நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ கனமழை பதிவாகி உள்ளது.

கனமழை காரணமாக நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. வாகனங்களில் சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

சென்னையில் அண்ணாநகர், சூளைமேடு, கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், மதுரவாயல், போரூர், கே.கே.நகர், கிண்டி, ராயப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், சைதாப்பேட்டை, வேப்பேரி, பூக்கடை, புளியந்தோப்பு, பெரம்பூர், கொடுங்கையூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

முதல்வர் ஸ்டாலின்

ஆட்சியர்களுக்கு அறிவுறுத்திய ஸ்டாலின்

இந்த நிலையில், பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது. சென்னையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் பெரும் சவாலாக இருந்தது. தற்போது மழை நீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் கடமை" என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேயர் ஆய்வு

நள்ளிரவில் களமிறங்கிய சென்னை மேயர்

முதலமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகமும் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன. சென்னை மேயர் பிரியா நேற்று நள்ளிரவு நேரத்திலும் நகரில் மழைநீர் தேங்கியுள்ள இடங்கள், அவற்றை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

இரவில் பெய்த பலத்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கினாலும், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், கடந்த 4-5 மாதங்களாக கட்டப்பட்டு வந்த வடிகால் பணிகளின் காரணமாகவும், பல இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்தது.

தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்குவது பற்றிய தகவல் கிடைத்தவுடன் உடனுக்குடன் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் மழை காரணமாக மரம் விழுந்தாலும், கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டாலும், மின்வெட்டு, மின் கசிவு ஏற்பட்டாலும் அதை சரி செய்யவும், சீரமைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். அதே சமயம் நகரின் சில பகுதிகளில், சாலைகளில், தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கத்தான் செய்தன.

இதனிடையே சென்னையில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தண்ணீரோ, வாகனமோ தேங்கி, தடுமாறி நிற்கிறதா என்பதை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

'4 நாட்களுக்கு மழை நீடிக்கும்'

இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இன்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி, கடலூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றுன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


2
பி.மூர்த்தி

மந்திரி பதவி: அமைச்சர் மூர்த்தியின் அடடே பேச்சு! 

தொழுவம் உற்பத்தியாளர் குழு கிடை மாடுகள் மூலம் மதிப்பு கூட்டி தயாரித்துள்ள 20-க்கும் மேற்பட்ட பொருட்களை அறிமுகம் செய்யும் ஆவினப் பொருளாதார மீட்பு விழா சமீபத்தில் மதுரையில் நடந்தது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பி.மூர்த்தி "இது அருமையான நிகழ்ச்சி. சங்க காலத்திலிருந்து கிடை மாடும், கிடை ஆடும் நம் உணர்வோடு ஒட்டி வருது.

கிராமங்களில் ஆடு மாடுகளை குழந்தை போல பாவித்து, தெய்வமாக வழிபடுவாங்க. நானும் ஒரு விவசாயிதான். அப்பல்லாம் கிராமத்துல காலையிலயே விறகடுப்புல சோறு ஆக்குவாங்க. பழைய சோறு சாப்பிட்டா சாயாங்காலம் வரைக்கும் பசிக்காது. .."

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


3
மம்தா பானர்ஜி

இந்தியாவிலும் வரப்போகிறதா அதிபர் ஆட்சி முறை?! - மம்தா சந்தேகமும் பின்னணியும்

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, " நாட்டில் அனைத்து ஜனநாயக அதிகாரங்களும் ஒரு பிரிவினரால் கைப்பற்றப்படுகின்றன. இந்த போக்கு தொடர்ந்தால், நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நோக்கி நகரும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த பேச்சு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது இந்தியாவிலும் அமெரிக்க ஜனநாயகமுறை அதிபர் ஆட்சி வரப்போகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


4
டயட்

பேலியோ டயட் உயிரைப் பறிக்குமா ? மருத்துவர் தரும் விளக்கம்!

பேலியோ டயட்டை பொறுத்தவரை காய்கறிகள், நட்ஸ், இறைச்சி ஆகியவற்றை உட்கொள்ளலாம். ஆனால் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் உணவுகள், பழங்கள் இவற்றைத் தவிர்க்க வேண்டும். கற்கால உணவு முறை என்று பலரும் இந்த டயட்டில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், நடிகர் பரத் கல்யாண் மனைவி பிரியதர்ஷினியும் (43) பேலியோ டயட் முறையைப் பின்பற்றி வந்துள்ளார்.

இதனால் தீவிர உடல் பாதிப்புக்குள்ளான இவர் நேற்று இறந்தார். இவரது இறப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பேலியோ டயட்டில் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பேலியோ டயட்டால் ஏன் மரணம் ஏற்படுகிறது என்பது பற்றி சென்னையைச் சேர்ந்த உணவியல்ஆலோசகரான சங்கீதா ஜெயக்குமாரிடம் பேசினோம்.

அவர் அளித்த விரிவான விளக்கத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
சேமிப்பு

பணத்தைக் கையாளும் கலை... குழந்தைகளுக்கு எப்படி சொல்லித் தருவது..?

ம் பிள்ளைகள் பிற்காலத்தில் பணத்தை சிறப்பாகக் கையாள நாம் அவர்களின் இளம் வயதிலேயே போதுமான பயிற்சி கொடுப்பது அவசியம். பொதுவாக, ஏழு வயதுக்கு மேல் சிறுவர்கள் பணத்தைக் கையாளும் திறனைப் பெறுகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, குறைந்த பட்சம் அந்த வயதிலாவது பணத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்பது நல்லது.

முதலில், சிறிய மதிப்பிலான நாணயங்களைக் கொடுத்து அவற்றை எண்ணுவதற்குப் பழக்குங்கள். முதலில் ஒரு ரூபாய் நாணயங்களை மட்டுமே கொடுத்து அவற்றை எண்ணுவதற்குப் பழக்குங்கள். அதன்பிறகு...

மேலும் விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
அஜித்

கோலிவுட் ஸ்பைடர்: அஜித் படத்தில் எதிர்பாராத ரீ - யூனியன்!

ஜித் ‘துணிவு’ படத்தில் நடித்துக் கொடுத்தவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக் பயணம் போகிறார். வந்த பிறகுதான் அடுத்த படத்திற்கான கதை கேட்கிறார்.

இதற்கு முன்னால் கேட்ட சில கதைகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதச் சொல்லியிருக்கிறார். அது சரியாக வருகிறதா என்று பார்த்துவிட்டு, அதற்கான பதிலைச் சொல்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த வரிசையில் அவரை வைத்து முன்பு படம் இயக்கிய...

கோலிவுட் ஸ்பைடர் தரும் சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...