Published:Updated:

Evening Post: ஆளுநர்:அதிரடி காட்டும் திமுக-சொத்தை விற்ற சின்னத் தலைவி- பாடப்புத்தகத்தில் சர்ச்சை

Vikatan Highlights November 2
Listicle
Vikatan Highlights November 2

தமிழக ஆளுநருக்கு எதிரான கூட்டறிக்கையைத் தொடர்ந்து திமுக மேற்கொண்டுள்ள அடுத்த அதிரடி, ஒரு நாள் மழையிலேயே சென்னை தத்தளிப்பதாக விமர்சனம், குஜராத் விபத்து கடவுளின் விருப்பமாம், கிசுகிசு: சொத்தை விற்ற சின்னத் தலைவி, பாடப்புத்தகத்தில் சர்ச்சை, கோலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் ஜோடிகள்!


1
ஆளுநர் ரவி

எச்சரிக்கை... பதிலடி... ஆளுநருக்கு எதிராக அதிரடி காட்டும் திமுக!

மிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநிலத்தை ஆளும் திமுக அரசுடன் அவர் தொடர்ந்து மோதல் போக்கை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆளுநருக்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்ட திமுக, அடுத்த அதிரடியைத் தொடங்கி உள்ளது.

சர்ச்சைகளின் மையமாக திகழும் ஆளுநர் மாளிகை

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் மாளிகை இன்றுவரையில் சர்ச்சைகளின் மையமாகவே இருந்துவருகிறது.

* தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை மாத கணக்கில் கிடப்பில் போட்டுவைத்திருக்கும் ஆளுநர் ரவியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது.

* 'நீட்' விலக்கு மசோதாவை நீண்ட இழுபறிக்குப் பின்னரே, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

* மேலும் ரவி பேசிவரும் பல கருத்துக்கள் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கும் தி.மு.க அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கும் எதிரானவையாக இருக்கின்றன.

* தமிழ்நாட்டின் இயல்புக்கு மாறாக அவர் பேசிவருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஆளுநரின் கேள்வியால் கொந்தளித்த திமுக

கோவை கார் வெடிப்பு

இந்த நிலையில், கோவையில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்க காலதாமதம் செய்தது ஏன் என்று ஆளுநர் ரவி பேசியது தி.மு.க தரப்பை கொந்தளிக்க வைத்தது.

இதற்கு உடனடியாக திமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில், ஆளுநருக்கு பதிலடி கொடுத்து தலையங்கம் வெளியானது.

* " ஆளுநர் பொறுப்பில் இருப்பவருக்கு முதலில் எங்கே எதைப் பேச வேண்டும் என்ற புரிதல் முதலில் இருக்க வேண்டும்.

* இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டதா? ஒரு மாதம் ஆகிவிட்டதா? ஒரு வாரம் ஆகிவிட்டதா? மூன்றாவது நாளே தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கை மாற்றிவிட்டார் முதலமைச்சர். இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்?

* தமிழ்நாடு காவல் துறை போட்ட அதே முதல் தகவல் அறிக்கையைத் தான், என்.ஐ.ஏ.வும் போட்டுள்ளது. எனவே, எந்த தடயமும் அழிக்கப்பட்டாதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் இன்னொரு 'அண்ணாமலை'யாக ஆக வேண்டாம்" எனக் கூறப்பட்டிருந்தது.

பதவி விலக கோரி கூட்டறிக்கை

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், 'எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல' என்று ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆளுநரின் இந்த கருத்துக்கு எதிராக திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட வைத்தது.

* அதில், " இதனை விடப் பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பா.ஜ.க. தலைமையை மகிழ்விக்க ஆர்.என்.ரவி இப்படிப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லட்டும்.

* மாறாக, அப்பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

முரசொலியில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முரசொலி தலையங்கம்

மேலும் ஆளுநருக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில், 'இங்கே' 'இது' வேண்டாம்! என்ற தலைப்பில் இன்று வெளியான முரசொலி தலையங்கத்தில்,

* " ஆளுநர் பேசும் ஆரிய வேதங்கள்-வர்ணாசிரமம் தமிழ்நிலத்தில் வேகாது. ஆளுநர் பேசும் பேச்சுகள், அவர் பேசியாக வேண்டிய பேச்சுகள் அல்ல.

* வேண்டுமென்றே திட்டமிட்டே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடனே இத்தகைய பேச்சுகளை வலியப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

* இவருக்கு இத்தகைய சிந்தனைகள் தொடக்க காலத்திலேயே இருந்திருக்குமானால் அவர் ஐ.பி.எஸ். என்ற பணிக்கே சென்றிருக்க மாட்டார்.

ஆளுநர் பேசுவது ஆரிய வேதங்கள், அத்வைதம், உபநிஷத், ஐதீகம், சனாதனம், வர்ணம், வர்ணாசிரமம் ஆகியவை ஆகும். இவை இங்கு வேகாது" எனக் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் அடுத்த அதிரடி

இந்த நிலையில், ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருவதற்கு பதிலடியாகவும், ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியைத் திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்திருக்கிறது.

இதற்காக ஆளுநரைத் திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட, தனது கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. இது தொடர்பாக திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்.பி-களுக்கு திமுக பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆளுநருக்கு எதிரான திமுக-வின் இந்த 'மூவ்' அரசியல் அரங்கில் பரபரப்பாக பார்க்கப்பட்டாலும், மத்திய அரசின் முழு ஆதரவு இருக்கும் வரையில் ஆளுநர் ரவி அத்தனை சுலபத்தில் திமுக அரசுக்கு கொடுக்கும் குடைச்சல்களை கைவிடப்போவதில்லை. இதனால், வரும் நாட்களில் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் இன்னும் தீவிரமாகலாம்!


2
சென்னை மழை

"ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது; கூடுதல் நடவடிக்கைகள் வேண்டும்!"

மிழ்நாட்டில் அடுத்த 3 நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்ததது.

சென்னையில் நேற்று முழுவதும் கனமழை காரணமாக சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் உடனே வடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க..


3
குஜராத் பாலம் விபத்து

குஜராத் மோர்பி பாலம்: "விபத்து கடவுளின் விருப்பத்தால் நடந்தது!" 

குஜராத்தில், கடந்த ஞாயிறு அன்று சாத் பூஜை கொண்டாட்டத்தின்போது, புதுப்பிக்கப்பட்ட 150 ஆண்டுகள் பழைமையான மோர்பி கேபிள் பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில், பாலத்திலிருந்த 500-க்கும் மேற்பட்டோரில் சுமார் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தால் மக்கள் சோகத்தில் மூழ்கிய அதே சமயம், குஜராத் அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

மேலும், அரசின் அனுமதியோ, தரம் தொடர்பான பரிசோதனையோ இன்றி, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...


4
கிசுகிசு

கிசுகிசு: சொத்தை விற்ற சின்னத் தலைவி!

'வேண்டாம் விபரீதம்' என முன்னாள் உளவுப் புள்ளி உஷார்படுத்திய பிறகே, தென் மண்டல விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்தாராம் இலைக் கட்சியின் துணிவுப் புள்ளி.

பத்துக்கும் மேற்பட்ட மாஜிக்கள் உத்தரவாதம் கொடுத்து அழைத்தபோதும், முன்னாள் உளவுப் புள்ளி சொன்ன கருத்தையே ஏற்று விழாவுக்கு வராமல்....

கிசுகிசு பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் சீக்ரெட்களை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


5
பள்ளிப் பாடப்புத்தகம் ( ட்விட்டர் )

A ஃபார் அர்ஜூனா... B ஃபார் பலராமா... பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஏபிசிடி வரிசை!

உத்தரப்பிரதேசத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்று ஆங்கில எழுத்துகளிலிருந்து வரலாறு, புராண அறிவை வழங்கும் நோக்கத்துடன் அல்பபெட்ஸை (Alphabets) வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படும் சம்பவம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

A என்ற எழுத்துக்கு `ஆப்பிள்' என்று படித்திருப்போம். ஆனால் சற்று வித்தியாசமாக A என்ற எழுத்துக்கு `அர்ஜூனா' எனப் பள்ளியின் பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும்...

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க...


6
கொலைசெய்யப்பட்ட பெண் - கைதுசெய்யப்பட்ட அரவிந்த்

காதல் திருமணத்துக்கு பின்னும் முன்னாள் காதலனுடன் தொடர்பு - கர்ப்பிணி கொலை வழக்கில் அதிர்ச்சித் தகவல்

ரோடு மாவட்டம், நசியனூர் அருகிலுள்ள ராயபாளையம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவரின் மனைவி பிருந்தா (24). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த காதல் திருமணத்துக்கு பிருந்தாவின் தாயார் ஆதரவு தெரிவித்த நிலையில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கர்ப்பமான பிருந்தா, வயிற்றில் 4 மாதக் குழந்தையுடன் கடந்த 27-ம் தேதி வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க...


7
காதல் ஜோடிகள்

'தொலைந்துபோன என்னைக் காப்பாற்றிய தேவதை!' - கோலிவுட்டின் லேட்டஸ்ட் காதல் ஜோடிகள்!

கோலிவுட் நட்சத்திரங்களுக்கு இது காதல் டு கல்யாண சீசன் போலிருக்கிறது. ஆதி- நிக்கி கல்ராணி ஜோடியைத் தொடர்ந்து இன்னும் பல ஜோடிகளுக்கு காதல் கைகூடி கெட்டிமேள சத்தம் கேட்கவிருக்கிறது.

பாரிஸ் ஈஃபில் டவரின் முன்பாக சோஹேல், கேன்டில் லைட்கள் சூழ 'என்னைத் திருமணம் செய்துகொள்' என ரொமாண்டிக்காக புரபோஸ் செய்த போட்டோவை ஹன்சிகா பதிவிட்டிருந்தார்...

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க..